Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaiyil Piditha Minnal
Kaiyil Piditha Minnal
Kaiyil Piditha Minnal
Ebook492 pages4 hours

Kaiyil Piditha Minnal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'கையில் பிடித்த மின்னல்' தலைப்பிலேயே ஓர் ஆர்வத்தைத் தூண்டும் நாவலாசிரியர் இந்திரா செளந்தர்ராஜன் கதைக் களமாக தென்காசியைத் தெரிவு செய்ததோடு கவிநயத்துடன் ஆங்காங்கே குற்றால மலையின் எழில் மிகு தோற்றத்தையும், நெல்லை வட்டாரத் தமிழின் இனிமையை கதை மாந்தர்களின் வாயிலாகவும் ஏற்றமுறக் கூறியிருப்பது இவருக்கே உரிய சிறப்பு.

கதை நாயகனின் காதலுக்காக ஏங்கும் முறைப்பெண். தாலி கட்டிய அமெரிக்க மனைவி இவர்களுக்கு இடையே ஜெயரூபன்-நம் நாயகன் படும்பாடு... தாய்நாடு திரும்பிய மகனின் திருமணச் செய்தி அறிந்து துவண்டு போகும் பெற்றோர்... இவர்களுக்கு இடையே ஜோதிடர் மகன் அர்ஜுனனின் பகுத்தறிவு வாதம் என தனக்கே உரித்தான முறையில் கதையை கொண்டு சென்றுள்ளார். இடையே அமெரிக்க நாயகியின் மரணம். அதில் மறைந்திருக்கும் மர்மம் என மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது நாவல்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351975
Kaiyil Piditha Minnal

Read more from Indira Soundarajan

Related to Kaiyil Piditha Minnal

Related ebooks

Related categories

Reviews for Kaiyil Piditha Minnal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaiyil Piditha Minnal - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கையில் பிடித்த மின்னல்

    Kayil Piditha Minnal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    1

    ன்றைய தென்காசி வானத்திடம் ஏகத்துக்கும் மேகக் கொட்டாரம்!

    கொஞ்சம் காலம் தப்பி வந்திருந்தாலும் அடப்பமாகவும், அழுத்தமாகவும் தெரிந்தபடியால் நிச்சயம் ‘இந்த முறை சீசன் பிரமாதமாக அமையப் போகிறது என்று கணக்கு போட்டபடி மழை வானத்தையே பார்த்தபடி இருந்தார் காசிலிங்கம்.

    திரிகூட மலைக்கே தலைப்பாகை கட்டியது போல அதன் உச்சியிலெல்லாம் மேக வளையங்கள்!

    காற்றிலும் மருந்தைக் கரைத்தது போல ஒரு வித சன்னமான மூலிகை வாசம்.

    இழுத்து மூச்சுவிட்டால் இதயம் நூறு வருஷத்துக்கும் மேல் திணறலின்றி ஆரோக்கியமாக இயங்கும் போலத் தோன்றியது, அந்த நொடிகளில்.

    இந்த ஒரு மலையிடம் மட்டும் வாயுவும், வருணனும், சூரியனும் சந்திரனும் ஏகத்துக்கும் காதல் கொண்டு ஆளாளுக்கு அதனிடம் கொஞ்சி விளையாடுகிற மாதிரி எல்லாம் ஒருவித எண்ணம் காசிலிங்கத்துக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

    தமிழ் படித்த பேராசிரியர், ரசிகமணியின் மாணவர், பின் வேறு எப்படி சிந்திப்பாராம்?

    அவர் உட்கார்ந்திருக்கும் பால்கனியில் இருந்து பக்கவாட்டுச் சாளரம் வழியாகப் பார்க்கும்போது குற்றால அருவியின் பொங்குமாங் கடலும் அதன் தெறிப்பும் தரை நோக்கிச் சரியும் பால் நீரின் பருத்த விழுதும் ‘குளிக்க வரலையா காசி...?’ என்று கேட்கிற மாதிரி கூட இருந்தது.

    முன்னால் மேடாவில் விஞ்ஞானி அப்துல் கலாமின் சுயசரிதையான ‘அக்னிக் சிறகுகள்’ புத்தகம்.

    அதில் பத்துப் பக்கம் கூட போயிருக்க மாட்டார். பொதிகை மலையும், குற்றால அருவியும் ‘படித்தது போதும், எங்களைப் பார்’ என்கிற மாதிரி அவரைப் பிடித்துக் கொண்டு விட்டன.

    நடுவில் அவர் மனைவி சிவகாமி காபி தம்ளரோடு வந்து விட்டுப் போயிருந்தாள்.

    மேடாவில் அது ஆடை கட்டி ஆறியே போய் விட்டிருந்தது.

    ரசிப்பதை ஒரு தவம் போல நினைப்பவர் காசிலிங்கம். அதிலும் குற்றாலம் எழிலை ரசிக்கத் தொடங்கி விட்டால் உலகமே அன்னியமாகி விடுகிறது.

    இது தெரிந்துதானோ என்னவோ மீண்டும் பால்கனிப் பக்கம் வந்த சிவகாமி ஆறிப்போன காபியைப் பார்த்துவிட்டு பெருமூச்சு விடத் தொடங்கினாள்.

    சரிதான்... நான் குடிக்க காபி கொண்டுகிட்டு வந்து வெச்சது கூட தெரியலியாக்கும்?

    இதமான குரலில்தான் சலித்துக் கொண்டாள். காசிலிங்கம் மெல்ல அவள் பக்கம் திரும்பினார்.

    என்ன சிவகாமி... ஒரு காபிதானே ஆறிப்போச்சு. போனா போகட்டும் விடு... என்றார்.

    காபி ஆறிப்போனா விட்டுடலாம்.. ஆனா இங்க பல விஷயங்கள் ஆறிப் போயிடும் போல இருக்கே? சிவகாமி சொன்னபடியே அவர் அருகில் அமர்ந்தாள்.

    தெரியும்... நீ எங்க ஆரம்பிச்சு எங்க வரப்போறேன்னு.. உனக்கு கொஞ்ச நாளா உன் பையனோட கல்யாணப் பைத்தியம் ஆட்டிக்கிட்டு இருக்குது. ஆமா அவன் படிச்சு முடிக்க வேண்டாமா...?

    "அட என்னங்க நீங்க... ஏதோ காலேஜீக்குப் போனோம், ஒரு பட்டம் வாங்கினோம்னு இருந்தா போதாதா, பட்டத்துக்கு மேல பட்டம்னு வாங்கி இவன் என்னத்தப் பண்ணப் போறான்.

    நம்ம மரவாடிகளைப் பார்த்துக்க, கூட்டிக் கழிக்கத் தெரிஞ்சா போதுமே?"

    சிவகாமியின் பேச்சில் பாமரத்தனம் கும்மி அடித்தது. காசிலிங்கத்துக்குள் அதன் காரணமாக துளி கோபம் கூட புரண்டெழுந்தது.

    என்ன சிவகாமி நீ.. நம் பரம்பரைல யாரும் படிக்காத படிப்பை எல்லாம் நம்ம மகன் ஜெயரூபன் படிக்கணும்னு நான் ஆசைப்பட்டுக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கூட்டிக் கழிக்கத் தெரிஞ்சா போதும்கிறியே... இப்படிப் பேசறது உனக்கே நல்லா இருக்கா..?

    கொஞ்சம்போல சீறினார். இனி அவரிடம் பேச முடியாது, பேசினாலும் பேச்சு பேச்சாக இருக்காது. எனவே ஆறிய அந்த காபித் தம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவ ஆரம்பித்தாள்.

    படி இறங்கிக் கீழே வந்த பொழுது அவள் அண்ணன் மகள் ஷண்மதி டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். சிவகாமியைப் பார்த்துவிட்டு எழுந்து வந்து காபி தம்ளரை வேகமாகத் தான் வாங்கிக் கொண்டாள்.

    காபி எடுத்துகிட்டு மாடிக்கு போனீங்களாக்கும். உங்களை படியே ஏறக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்கல்ல அத்தை?

    அவள் குரலில் செல்லக் கோபமும் வாஞ்சையும் கொப்பளித்தது.

    அது இல்ல ஷண்மதி.. இப்படி காபி கொடுக்கப் போற சாக்குலயாவது ஜெயனப் பத்தி பேசலாம்னு பாத்தேன். அது என்னமோ தெரியில, நான் எப்ப அவனைப் பத்தி பேச வாயெடுத்தாலும் அது தப்பாவே போயிடுது...

    அவளிடம் வருத்தம் இழையோடியது. என்ன அத்த நீங்க... அத்தான் நான் அடுத்த வாரம் இங்க வரப்போறாருல்ல. அப்ப அவர்கிட்டேயே பேசறத விட்டுட்டு...

    அவள் சொன்ன மறுநொடி சிவகாமி முகம் மத்தாப்பானது.

    என்ன சொல்றே ஷண்மதி. அவன் வரப்போறானா. உனக்கு எப்படித் தெரியும்?

    இப்பத்தான் அத்தானோட ஈமெயிலைப் பார்த்தேன். அத்தான் இப்ப பஃப்பல்லோ நியூயார்க்குங்கற ஊர்ல இருக்காராம். அங்கதான் நயாகரா ஃபால்சும் இருக்குது. பரிட்சை எல்லாம் முடிஞ்சு போச்சாம். உம் சொல்ல மறந்துட்டேனே அங்கையே ஒரு வேலையைக் கூட பாத்துகிட்டாராம். மாசம் லட்ச ரூபா சம்பளமாம்! விலாவரியா மெயில் கொடுத்திருக்கார். அப்படியே வரும்போது உங்களுக்கு பெரிய ஷாக் கொடுக்கப் போறாராம்!

    ஷண்மதியின் குரலில் உற்சாகம் துள்ளியது.

    அவனுக்கெதுக்கு அங்க வேல... இங்க இருக்கற மரவாடிங்கள யார் பார்த்துக்குவாங்களாம்? சிவகாமி திரும்பவும் வெட்டிக் கவலைப்படத் தொடங்கினாள்.

    ஐய்யோ அத்தை... வேல வேண்டாம்னு சொல்லிட்டா அந்த பிரச்னை முடிஞ்சிச்சு. இதுக்குப் போய் அலட்டிக்கிறீங்களே...

    என்னமோடியம்மா... அவனை திரும்பி போகவிடாம பண்ண வேண்டியது உன் கைல தான் இருக்கு.

    சிவகாமி சொன்னதன் பொருள் ஷண்மதிக்குள் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்தது.

    கவலைப்படாதீங்க அத்தை... இந்த தடவை அத்தான் என்கிட்ட இருந்து தப்பவே முடியாது...!

    ஷண்மதி சொல்லும் விதத்தில் ஆயிரம் மாத்திரை அழுத்தம்.

    நயாகரா சீறிக் கொண்டிருந்தது.

    உலகின் ராட்சஸ அருவிகளுக்கெல்லாம் நான்தான் தாய் என்கிற மாதிரியான சீற்றம். அருவியை ஒட்டிப் பார்க்கில் ஒரு டின் கோக்கை ருசித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜெயரூபன்.

    பெயருக்கேற்ப நல்ல ரூபலாவண்யனாகத்தான் இருந்தான்.

    ‘க்ளிக்’ அவனை... க்ளிக்கி முடித்த சந்தோஷத்தோடு உம்... நெக்ஸ்ட் போஸ்... என்று அவனை அடுத்தடுத்த இடங்களில் நிறுத்தி ஷிட் செய்வதில் கவனமாக இருந்தான் ஒரு பெண்.

    போதும் தேவி... கொஞ்சம் நீ நில்லு. உன்னை நான் எடுக்கறேன்... என்றபடி கேமராவை அவளிடமிருந்து பிடுங்கினான் ஜெயரூபன்.

    நோ ஜெய்... என்னை போட்டோ பிடிக்காதே. நான் நிறைய நாள் உயிர் வாழணும்னு ஆசைப்படறேன். என்று சிரித்தான் அவன்.

    அப்ப நான் மட்டும் சீக்கிரம் சாகணும்கறது உன் ஆசையா?

    அவன் அப்படி திருப்பிக் கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

    சட்டென்று கலங்கினாள்.

    சாரிடா... வெரி வெரி சாரி... என்றபடியே அவன் கையில் இருந்த கேமராவைப் பிடுங்கித் திறந்து ஃபிலிமை சரேலென்று உருவினாள்.

    ஏய்ய்... என்ன இது. நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். அவன் கத்தினான். நிறைய வெள்ளையர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

    அங்கே ஒரு பொது இடத்தில் கத்துவதெல்லாம் மிக நியூசென்ஸான விஷயம். உருவி எடுத்த ஃபிலிம் ரோலை டஸ்ட் பாக்ஸ் எங்கே என்று தேடிப் பார்த்து அதில் போட்டு விட்டுத்தான் திரும்பி வந்தாள்.

    அவன் முகத்தில் மெல்லிய கோபம்.

    என்ன தேவி... இது..?

    ‘என்ன தேவி இதுன்னா... நீதானே சொன்னே போட்டோ எடுத்தா ஆயுள் குறைஞ்சுடும்னு..."

    அது எங்க ஊர்ல நிலவற ஒரு மடத்தனமான நம்பிக்கை.

    பட் ஐ பிலீவ் தட்... நல்லவேளை நீ நடுவுல ஞாபகப்படுத்தினே...

    வாட் நான்சென்ஸ்... இட் ஈஸ் ஹைலி இடியாட்டிக்.

    அப்ப எதுக்கு அதை என்கிட்ட சொன்னே?

    நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். இந்த மாதிரி நூறு நம்பிக்கைகள் அங்க இருக்கு தெரியுமா?

    இங்க அந்த மாதிரி ஒரு நம்பிக்கை கூட இல்ல ஜெய். அது தெரியும்தானே உனக்கு?

    அதனால தான் இந்த அமெரிக்கா செல்வச் செழிப்போட பிரமாதமா இருக்கு...

    ஜெயரூபனின் பதில் அவளுக்குக் கோபத்தைத் தான் தந்தது. முறைத்துப் பார்த்தாள்.

    ஏற்கனவே தக்காளிச் சிவப்பு. இப்போது அதில் ஜொலிப்பு கூடிப்போனது.

    எதுக்கு முறைக்கறே?

    உன் மண்ணைப் பத்தி நீயே இப்படி மட்டமா பேசலாமா?

    ஏய்... உள்ளதைச் சொன்னேன்டா. அது மட்டமா இருக்கறதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

    "நோ ஜெய்.. என் அம்மா இந்தியா பத்தி குறிப்பா தமிழ்நாடு பத்தி, எஸ்பெஷலி குற்றாலம் பத்தி நிறையவே சொல்லியிருக்காங்க.

    அங்க நிலவற நம்பிக்கைள்ல நிறைய உண்மை இருக்கு. இந்தியாவுக்கு பெரிய பாரம்பரியம் இருக்குடா. இந்த அமெரிக்காவுக்கு அப்படி ஒண்ணுமே இல்லை.

    கொலம்பஸ்ங்கற ஒரு ஊர் சுத்தியால கண்டுபிடிக்கப்பட்ட சாதாரண மண் இது.

    வெயில், குளிர் எதுலையுமே இங்க ஒரு நிதானம் கிடையாது. எல்லாமே அப் நார்மல். ஆனா குற்றாலம் அப்படி இல்லை தெரியுமா உனக்கு?"

    நயாகராவின் கரையில் நின்று கொண்டு குற்றாலத்துக்கு பொழிப்புரை சொன்ன அந்த அமெரிக்கப் பெண்ணை ஏராள ஆச்சரியங்களோடு பார்த்தான் அவன்.

    என்னடா பாக்கறே?

    பாக்காம... நீ எல்லா விஷயத்துலயும் என்னை அசத்தறே. தேவி...

    எப்படி?

    "அமெரிக்காவுல பிறந்திருந்தாலும் தேவிங்கற உன் பேர் எனக்கொரு ஆச்சரியம். ஒரு பெரிய டாக்டருக்கு மகளா இருந்தும் பழமைகளை நேசிக்கிற உன் குணம் அடுத்த ஆச்சரியம்.

    இன்னும் இந்தியாவை ஒருமுறை கூட நீ பார்த்ததில்லை. ஆனா அந்த மண்ணைப் பத்தி நிறைய தெரிஞ்சு வெச்சுக்கிட்டு அதுமேல காதலா இருக்கியே அது பெரிய ஆச்சரியம்..."

    "போதும்... போதும்... விட்டா நீ தமிழ் பேசறது ஆச்சரியம், பொட்டு வெச்சுக்கறது ஆச்சரியம்னு அடுக்கிட்ட போவே... நானும் எத்தனை தடவை தான் இதை கேக்கறது.

    பை த பை நம்ம கல்யாணம் போட்டோவை உன் வீட்டுக்கு அனுப்பிட்டியா?"

    அந்த கேள்வி முன்னில் மட்டும் சற்று மௌனம் கொண்டு அவளை மலங்க மலங்கப் பார்த்தான்.

    அனுப்பலியா?

    இல்ல...

    ஒய்...?

    நேர்ல போய் ஷாக் கொடுக்கலாம்னு!

    அந்த ஷாக் ஏதாவது விபரீதத்தை உருவாக்கிட்டா?

    இல்ல தேவி... ஏதாவது ஒரு விபரீதத்தை நானும் நீயும் சந்திச்சு தான் தீரணும். அது அப்ப இருக்கட்டுமே...

    அதைக்கேட்ட தேவி மௌமாகி நயாகரா சரிவைப் பார்த்தாள்.

    நீர் குதித்து ஆறாகப் பெருகி ஓடும் இடத்தில் சிறிய கப்பல் ஒன்று பார்வையாளர்களை ஏற்றிக் கொண்டு அருவிக்குள்ளேயே நுழைந்து அதன் பாய்ச்சலை அருகில் இருந்து காட்டிக் கொண்டிருந்தது.

    ‘இப்படித்தான் ஜெயரூபனும் தங்கள் திருமணத்தை காட்டப் போகிறானா?’

    தேவி... ஜெயரூபன் அவள் தோளைத் தொட்டான். அவள் திரும்பாமலே சொல்லு! என்றாள்.

    என் வீட்டுல ஒண்ணும் சொல்லமாட்டாங்க. அம்மாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.

    உம்...!

    பிடிக்கலேன்னாலும் ஐ டோன்ட் பாதர். உன்னை நான் கைவிட மாட்டேன்.

    அப்ப அவங்க...

    எல்லாத்தையும் காலம் சரி செய்துடும் தேவி. நம்பு...

    அவள் உடனே திரும்பினாள்.

    இந்த பாசிடிவ் அப்ரோச் தாண்டா வேணும். என்றாள்.

    சரி கிளம்பலாமா?

    ஷ்யூர்!

    இருவரும் அங்கிருந்து புறப்படத் தொடங்கினார்கள். எதிரில் ஒரு வெள்ளைக்கார கிழவர்! கையில் ஒரு பெரிய லென்சுடன் யாராவது தன்னிடம் கைரேகை பார்க்க வரமாட்டர்களா என்கிற ஏக்கத்தோடு பார்த்தபடி இருந்தார். கொஞ்சம் இந்தியாவை ஞாபகப்படுத்தினார்.

    அவரைத் தாண்டும்போது ஒருவித பரிதாபம் தேவியிடம் முண்டியது.

    ஜெய்... இவருக்கு ஒரு டாலர் இருந்தா கொடேன்...

    நோ டியர்.. நான் பிச்சை வாங்கமாட்டேன். வுட் யூ ஷோ யுவர் லெஃப்ட் ஹேண்ட். ஐ வில் டெல் யுவர் ஃபார்ச்சூன்.

    அந்த மனிதர் சுய மரியாதையோடு பேசியது அவளுக்கு பிடித்துப் போனது.

    தன் சிவந்த கையை நீட்டினாள்.

    லென்ஸால் அந்த வெள்ளைக்காரரும் ஊடுருவத்தொடங்கினார்.

    அடுத்த கணமே அவர் முகத்தில் அசாத்ய மாற்றங்கள்!

    2

    ரங்கிப் பழம் போல இருந்த அந்த பால்மிஸ்ட்டின் முகம் போன போக்கே ஜெயரூபனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    அவன் தேவியின் கையை மடக்கிப் பார்த்து முடித்துவிட்டேன் என்கிற மாதிரி அவளை ஏறிட்டான். பின பெருமூச்சு விட்டான். இறுதியாக ஆல் த பெஸ்ட்... ஹேவ் ஏ நைஸ் அண்ட் ஹேவ் ஏ பிளசண்ட் லைஃப்! என்று பொதுப்படையாகப் பேசி ஒரு கஷ்டச் சிரிப்பு சிரித்தான்.

    தேவியோட கைரேகை என்ன சொல்லுது? –ஜெயரூபன் குறுக்கிட்டு விஷயத்துக்கு இழுத்தான்.

    இட் ஈஸ் எ வெரி பெக்கூலியர் ஹேண்ட்!

    தட் மீன்ஸ்...?

    இவங்க பிறப்பே ரொம்ப வித்யாசமா இருக்கணும்.

    ‘எனக்கு சொல்லத் தெரியலை... நான் மார்லன் ரூஸோவோட தியரிபடி ரேகை பார்த்து பலன் சொல்றவன். ரூஸோ ஒரு கிரேட் மேன். ஒரு தூக்கு தண்டனை கைதியோட கையைப் பார்த்துட்டு உனக்கு இன்னும் நாப்பத்தி நாலு துல்லியமா சொன்னவர். அதன்பிறகு அப்படித்தான் நடந்தது..."

    சரி அதுக்கென்ன இப்போ?

    ஒண்ணு மட்டும் சொல்றேன்...

    என்ன?

    "இயற்கையின் நியதிப்படி இவங்க பிறக்கலை. இவங்க பிறப்பும் சரி, இறப்பும் சரி நிச்சயமா வழக்கமான ஒண்ணா இருக்காது.

    நான் வயித்துப் பிழைப்புக்கு ஜோசியம் பாக்கற ஜோசியனில்லை. இதை ஒரு ஆராய்ச்சியா செய்துகிட்டு இருக்கேன். உங்க அட்ரஸைத் தர முடியுமா?"

    என்னென்னமோ சொல்றே.. அட்ரஸை வேற கேக்கறே... எதுக்கு?

    நான் தொடர்ந்து உங்களோட டச்ல இருக்க விரும்பறேன். இவுங்க வாழ்க்கை போற போக்கை பார்க்கணும்.

    சாரி... உங்கிட்ட கையை நீட்டினதுக்கு காரணம் ஒரு ஜெனரல் க்யூரியாசிட்டி தட்ஸ் ஆல். இதுக்கு மேல நீங்க எதையும் சொல்ல வேண்டாம். தேவி கமான் லெட் அஸ் மூவ்...

    ஜெயரூபன் அந்த பால்மிஸ்ட்டிம் இருந்து கத்திரித்துக் கொண்டு தேவியோடு நடக்கத் தொடங்கினான்.

    நயாகராவின் பாய்ச்சல் இரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது. நாலாபுறமும் ஜனத்திரள்! கார்டனில் ரோஜாவை பாடனி புரட்சியால் எல்லா நிறங்களிலும் பயிரிட்டு மலர்த்திக் காட்டியிருந்தார்கள்.

    அங்கெல்லாம் பலரது ஹேண்டி வீடியோ கேமராக்கள் வாரிச் சுருட்டிக் கொண்டிருந்தன. அவர்களை பார்த்தபடியே நடந்த தேவி,

    என்ன ஜெய்... எதுக்காக அவன்கிட்ட இருந்து என்னை இவ்வளவு வேகமாக இழுத்துகிட்டு வரே... அவன் சம்திங் எதையோ சொல்ல வந்த மாதிரி தெரிஞ்சது. என்றபடி ஒரு ராட்சஸ மர நிழலின் ஃபைபர் நாற்காலியில் போய் உட்கார்ந்தாள்.

    பதில் சொல்லாமல் சிரித்தான் ஜெயரூபன்.

    என்ன சரிக்கறே?

    சிரிக்காம...? அமெரிக்கா இந்தியா ஆக்கிட்டு வருது தேவி.

    எப்படி?

    அங்கதான் பப்ளிக் பிளேஸ்ல இப்படி ஜோசியக்காரங்க தொல்லை இருக்கும். இப்படித்தான், இதே மாதிரிதான் காம்ப்ளிகேடிவா ஏதாவது சொல்வாங்க. நம்மால சும்மா இருக்க முடியாது. நோண்டி நோண்டிக் கேப்போம்... அப்புறம் பரிகாரம் பண்ணிட்டா சரியாயிடும்னு சொல்லி பூஜை, தாயத்துன்னு ரவுண்ட் பண்ணுவாங்க. ஸ்கௌண்ட்ரல்ஸ்

    ஒன் செகண்ட்... நோண்டி நோண்டின்னா?

    தட் மீன்ஸ் திரும்பத் திரும்ப...

    அப்ப ஏன் அந்த வார்த்தையை சொன்னே?

    இது என்ன கேள்வி தேவி. தமிழ் ஒரு வள்ளல் மொழி. ஒரு விஷயத்தை நாங்க பல மாதிரி சொல்வோம்...

    "ஓ...! அம்மாகிட்ட பேசும் போது இதே பிராப்ளம் தான். ரொம்ப கோபம் வந்த ஏண்டி என் உசுரை வாங்கறேன்னுவாங்க. அது எப்படி ஜெய் உயிரை வாங்க முடியும்? is it a buying thing?

    தேவி தன் பேச்சில் கைரேகையை விட்டு விலகினாள். மொழியின் போக்கில் இருக்கும் குழப்பத்தில் போய் நின்று சிரித்தாள். அவன் ரசிக்கத் தொடங்கினான். ஆனால் அந்த பால்மிஸ்ட்டோ அவளையே பார்த்தபடி இருந்தான்!

    சற்று தள்ளி ஒரு வெள்ளைக்கார ஜோடியை ஒருவன் பென்சிலால் கோட்டுச் சித்திரமாக வரைந்து கொண்டிருந்தான்.

    அதிகபட்சம் அரை மணி நேரம்.

    ஒரு தாளில் அவர்களை வரைந்து அவர்களிடம் தந்துவிட்டு அவர்கள் தரும் டாலர்களை வாங்கிக் கொள்பவன்.

    நயாகராவின் கரையிலும் விதவிதமான பிழைப்புகள். உலகம் முழுக்க மனிதர்கள் ஒரே மாதிரிதான் இருப்பார்களோ?

    நாரிமன் புல வாட்!

    நூல் பிடித்த மாதிரியான வீதிகள். ஒரு முத்து மணி அளவு பள்ளமும் இல்லாத தார்ச்சாலைகள். இரு பக்கங்களிலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்துண்டங்களைப் போல பிசிறில்லாத வீடுகள், வீட்டைச் சுற்றி அற்புதம் என்னும்படியான தோட்டங்கள்...

    அதில் ஒரு வீட்டு முன் நின்ற காரில் இருந்து இறங்கினார்கள் தேவியும், ஜெயரூபனும்...

    சிகாகோ தட்டைப் பொமரேனியன் ஒன்று வேலிக்கப்பால் இருந்து தன் வயலட் விழிகளால் தேவியைப் பார்த்து விட்டு ஒரு செல்லக் குலைப்போடு ஓடிவரத் தொடங்கியது.

    தொடர்ந்து வீட்டின் ரோஸ்வுடின் டோர் திறக்கப்படும் சப்தம். ஒரு ஐம்பது வயதுத் தோற்றத்தில் தாய் மல்லிகா, நமது ஊர் நைட்டியில் வெளிப்பட்டு புன்னகையோடு இருவருக்கும் வரவேற்பு சொன்னாள்.

    தேவி ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொள்ள, காதோரம் ரகசியமாக எப்படிடா இருந்தது ஹனிமூன்? என்கிற கேள்வியோடு அவளை அணைத்தபடி உள்ளே செல்லத் தொடங்கினாள் மல்லிகா.

    ட்ராயிங் ரூமில மெலிதான விளக்கு வெளிச்சம். மூவரும் சோபாவில் அமர்ந்தார்கள். இதமான ஏ.சி. குளிர். சந்தோஷமாக பேச ஆரம்பித்தாள் தேவி.

    ஒவ்வொரு செகண்டும் என்ஜாய் பண்ணோம் மாம்...

    சந்தோஷம். பை த பை நீங்க இந்தியா போக டிக்கட் கன்ஃபர்ம் ஆகிடிச்சு. ஜஸ்ட் இப்பதான் ட்ராவல் ஏஜென்சில இருந்து டிக்கட் வந்தது. எழுந்து சென்று டிக்கட்டை எடுத்து வந்து போட்ட மல்லிகாவை உற்சாகமாகப் பார்த்துச் சிரித்தபடி அதை எடுத்துக்கொண்டான் ஜெயரூபன்.

    அப்புறம்? மல்லிகா உட்கார்ந்தபடியே கேட்ட தொனியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

    எவ்ரி திங் கோயிங் வெரி வெல் ஆன்ட்டி.

    அத்தைன்னு சொல்லுங்க ஜெயா. இவளைக்கூட அம்மான்னு சொல்லுடிங்கறேன். மாம் மாம்னு தினம் என் உயிரை வாங்கறா...

    ஜெய்... ஜெய்... பாத்தியா. இப்படித்தான் புரியாத பாஷைல மீனிங்லெஸ்ஸா அப்பப்ப பேசுவாங்க...

    அதுக்கு நிறைய மீனிங்ஸ் இதுக்கு தேவி. உனக்கு அது புரியல. இந்தியா வந்து பார்த்தா அசந்து போயிடுவே...

    அசந்துதான் போகணும் ஜெய். வாட் எபவுட் யுவர் பிளான்?

    நீங்க என்ன கேக்கறீங்க அத்தை. நான் அங்கேயே தங்கிடுவேனோன்னு பயமா இருக்கா?

    நோ... நோ... நீங்க அங்கேயே தங்கிடணும் ஜெய். அதான் எனக்கு வேணும். இந்த அமெரிக்க வாழ்க்கை என்னோட போகட்டும். இவளாவது ஒரு முழு இந்தியத் தமிழ் வாழ்க்கை வாழட்டும்னு பாக்கறேன்...

    "அதனாலதான் எங்க காதலுக்கு எந்த எதிர்ப்பும் காட்டலையோ நீங்க... இங்க என்ன ட்ரபுள் உங்களுக்கு?

    ட்ரபுள்... வெறுமைதான்! இழுத்தாள் மல்லிகா. பின் கூல்ட்ரிங்ஸை தந்தபடியே,

    "நான்னு இல்ல... இங்க எந்த ஒரு இந்தியக் குடும்பத்தையும் போய்ப் பாருங்க. அவங்க வீட்ல எல்லாம் இருக்கும். கார், ஏ.சி. ப்யூட்டிஃபுல் அட்மாஸ்ஃபியர், ரிச்சான பேங்க் பேலன்ஸ்னு எல்லாமே இருக்கும்.

    ஆனா எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரி ஒரு உணர்ச்சியோட தான் எல்லாரும் இருப்பாங்க.

    இங்க மனுஷன் ஒரு எந்திரம் ஆயிட்டான். ஓடிக்கிட்டே இருக்கணும். நின்னா தெருவுக்கு வந்துடுவோங்கற பயம் கூடவே இருக்கும். எல்லாமே இங்க ஆர்ட்டிஃபீஷியல். துடைச்சு வெச்ச மாதிரி ஒரு சுத்தம் இருந்துட்டா போதுமா? இதயம்னு ஒண்ணு இருக்கே. அதுக்கு உயிர்த்துடிப்பான விஷயங்கள் தானே பிடிக்கும்? குப்பையோ, கூளமோ அந்த விஷயத்துல இந்தியா ஒரு கிரேட் கன்ட்ரி ஜெயா. இதை அங்க இருக்கறவங்கள விட இங்க இருக்கறவங்களால தான் அழுத்தமா சொல்ல முடியும்."

    மல்லிகாவின் நீண்ட விளக்கம் தேவியை, பெருமூச்சில் தள்ளியது. அவள் தந்த ரியல்ஃபரூட் ஜீஸை உறிஞ்சியபடியே, மாம் நீங்க இதை எத்தனை தடவை சொல்வீங்க. எனக்கு கேட்டுக் கேட்டு சலிச்சுப் போச்சு... என்றாள்.

    ஹாய்...! இடையிட்டது ஒரு குரல். அறை ஒன்றிலிருந்து வெளிப்பட்டபடி இருந்தான் ஒரு வெள்ளைக்கார வாலிபன். கொஞ்சம் போல இந்தியச் சாயல். ஆனால் அசாத்ய உயரம், பருமன், பூனைக்கண்கள் வேறு...

    ஹாய் ஷரண்... நீ எப்ப வந்தே?

    அவனைப் பார்த்த நொடி தேவியிடம் உற்சாகப் பீறிடல்.

    சாரி தேவி... என்னால உன் கல்யாணத்துக்கு வர முடியல. என் பாஸ் அப்ப என்ன ஆஸ்திரேலியாவுலையே கட்டிப் போட்டுட்டான் என்ற அவன் தேவியை இழுத்து அணைத்துக் கொண்டான். பின் ஜெயரூபனையும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டான்.

    தேவி இவர்...?

    என் அண்ணன் ஷரண். கலிஃபோர்னியாவில சிவில் என்ஜினீயரா இருக்கான். நான் கூட சொல்லியிருக்கேனே ஜெய்... மாம், என்ன நீ ஷரண் வந்ததை கூட சொல்லாம இந்திய புராணம் படிக்க ஆரம்பிச்சுட்டே...

    தேவி அண்ணனை இழுத்து அணைத்துக் கொண்டே அம்மாவிடம் செல்ல கோபம் காட்டினாள்.

    ஆமாம்... இவன் இன்னிக்கு வந்ததுக்கு வராமலேயே இருந்துருக்கலாம். எதுக்காக இப்ப வந்திருக்கான் இந்த இடியட். போகச் சொல்லு இவனை...

    மல்லிகா பளிச்சென்று கோபத்தைக் காட்டினாள். அவள் ஏன் அவன் வந்திருப்பதைப் பற்றி முன்பே சொல்லவில்லை என்பது ஜெயரூபனுக்குப் புரிந்து போயிற்று.

    அவனோ சிரித்தான்.

    அம்மாவுக்கு நானும் அப்பாவும் உங்க கல்யாணத்துல கலந்துக்கலைங்கற வருத்தம். அதான் கத்தறாங்க. இட்ஸ் ஓகே நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்கள சரி பண்ணிடுவேன். நீ கவலப்படாதே தேவி. என்ற ஷரண் தன் பாக்கட்டில் இருந்து ஒரு டைமண்ட் லாக்கெட்டை வெளியே எடுத்தான். ஜெயரூபனின் கழுத்தில் அதை போட்டுவிட்டு, இட்ஸ் மை வெட்டிங் பிரசன்ட். என்றபடி கை குலுக்கினான்.

    ஜெயரூபனுக்கு சற்று சிலிர்ப்பாக இருந்தது.

    தேங்க்யூ ஷரண்... என்றான்.

    ஷரண் அப்பா இப்ப எங்க இருக்கார்...?

    ஏதோ ஒரு தொலைதூரத்து உறவினரைப் பற்றி கேட்கின்ற மாதிரி கேட்டாள் தேவி.

    ஐ டோன்ட் நோ தேவி. லாஸ்ட் வீக் ஃபீனிக்ஸ்ல இருந்து பேசினார். அலபாமால ஒரு கான்ஃப்ரென்ஸ் இருக்கு, அதுக்கு போய்கிட்டு இருக்கேன்னார். இங்க உனக்கு போன் பண்ணலையா?

    இல்லடா... தேவி சொன்ன விதத்தில் வருத்தம் பலமாகவே தெரிந்தது. மல்லிகாவின் முகத்திலும் அதன் எதிரொலிகள்... கூடவே மின்னலைப் போல கவலை ரேகைகள்.

    அத்தை நீங்க எதுக்கு கவலைப்படறீங்க. அவசரமா கல்யாணத்தை பண்ணிகிட்டது என் தப்பு. என்று சூழலை மிதப்படுத்தப் பார்த்த ஜெயரூபனைப் பார்த்து பலமாகவே வருந்தத் தொடங்கினாள் மல்லிகா.

    "அவசர கல்யாணமோ இல்ல திட்டமிட்ட கல்யாணமோ அது அதுக்குண்டானபடி நடக்கணும் ஜெயா. எனக்கும் சரி... என் பெண்ணுக்கும் சரி, அந்த விதத்துல கொடுப்பினை இல்லை. நாங்க கல்யாணம் பண்ணிக்கும் போதும் எங்கள சுத்தி யாருமே இல்ல. ஒரு வெள்ளைக்காரரை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கறேனேங்கற கோபம் என் குடும்பத்துக்கு... ஏதோ பேருக்கு கல்யாணம் செய்துகிட்டோம். கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு வர்ற மாதிரியான ஒரு சாதாரண சம்பவமா அது ஆயிடுச்சு.

    எந்திர உலகமில்லியா... எல்லாமே இங்க எந்திரத்தனமாதான் இருக்கும். ஆனா எது வேணும்னாலும் எந்திரத்தனமா நடக்கலாம். கல்யாணம் மட்டும் அப்படி நடக்கவே கூடாது ஜெயா. ஒரு பெண்ணோட வாழ்க்கைல ஒரே ஒரு முறை நடந்து அவ வாழ்க்கையையே மாற்றி அதுக்கு ஒரு பெரிய அர்த்தத்தை கொடுக்கற அற்புத நிகழ்ச்சி அது.

    அது நம்ம ஊர்ல நடக்கற மாதிரி சொந்த பந்நங்கள் சூழ்ந்த நிலைல வடை பாயசம் விருந்தோட தான் நடக்கணும்..."

    மல்லிகா பேசப்பேச ஜெயரூபனுக்குள் வியப்பு பெருகிக் கொண்டே போனது. அவளது இந்தியத் தாக்கமும், ஏக்கமும் துல்லியமாகப் புரிந்தது.

    ஒரு மணிக்கு பத்து விவாகரத்து நடக்கும் ஒரு மண்ணில் இருந்து கொண்டு அவள் அப்படிப் பேசுவதின் அர்த்தமும், ஆழமும் ஜெயரூபனுக்குள் சிலிர்ப்பையும் மூட்டியது.

    அத்தை கவலைப்படாதீங்க... இங்க நடந்த கல்யாணம் ஒரு ஒத்திகைதான். தென்காசி போன பிறகு உங்க விருப்பப்படி கோலாகலமா ஒரு கல்யாணத்தை நம்ம சாஸ்த்ர சம்பிராதயப்படி பண்ணிப்பேன். உங்களுக்கு இன்விடேஷன் வரும். நீங்க, ஷரண், உங்க கணவர் எல்லாம் அப்ப கட்டாயம் வந்து கலந்துக்கறீங்க... ஓகே?

    கட்டை விரலை உயர்த்தியபடி கேட்ட ஜெயரூபனை சந்தோஷம் பொங்கப் பார்த்தாள் மல்லிகா.

    ரொம்ப சந்தோஷம் ஜெயா... நீங்க இப்படி சொல்றதைக் கேட்கறப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷப்படறேன். நிச்சயமா நாங்க குடும்பத்தோட கலந்துக்க அப்ப வந்துடுவோம். பை த பை நம்ம ஊர் வழக்கப்படியே சீர் வரிசை எல்லாம் கூட கொண்டு வருவேன். உங்க வீட்ல அதைப் பார்த்துட்டு என்ன எல்லாம் ரொம்பக் குறைவா இருக்கு. எங்க ஸ்டேட்டசுக்கு இது போதாதுன்னு சண்டை எல்லாம் போடணும். அப்பதான் அது கல்யாணம்...

    மல்லிகாவின் பதிலில் ஆசையும், பாசமும் பொங்கி பிரவாகித்தது.

    ஷரண் மட்டும் ஏதோ கேட்க ஆசைப்பட்டவன் போல், மிஸ்டர் ஜெயரூபன்... என்றபடி ஜெயரூபனை தன் பக்கம் திருப்பினான்.

    உங்களை ஒண்ணு கேட்கலாமா?

    ஷ்யூர் ஷரண்...

    ஊருக்குப் போய் சாஸ்தரப்படி கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்ற நீங்க, இங்க அவசர அவசரமா எங்க தேவி கழுத்துல எதுக்கு தாலிய கட்டக் காரணம்?

    கேட்க வேண்டிய கேள்வியைத்தான் கேட்டான் ஷரண்.

    ஜெயரூபன் மனதில் அடுத்த நொடி ஷண்மதி தட்டாமாலை சுற்றத் தொடங்கினாள்.

    3

    னதுக்குள் முண்டிக்கொண்டு எழும்பிய ஷண்மதி ஜெயரூபனுக்குள் பெரிய திணறிலையே உருக்கினாள்.

    ஷரண் மிகக் கூர்மையானவன்!

    ஜெயரூபனை ஆழமாகக் கவனித்தான்.

    அவன் சொல்ல முடியாதபடி ஒரு சிக்கலில் இருப்பது மட்டும் பளிச்சென்று தெரிந்தது.

    என்ன மிஸ்டர் ஜெயரூபன்... நான் ஏதாவது தர்ம சங்கடமான கேள்வியை கேட்டுட்டேனா...?

    அதெல்லாம் ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல... நீங்க கேட்டதும் நியாயமான கேள்விதான்... ஜெயரூபன் பதிலில் சுருதி இறங்கிவிட்ட ஒரு தினுசான சமாளிப்பு.

    அட என்னடா நீ... காதலிக்கும்போது அன்பும் ஆசையும மட்டும்தாண்டா எப்பவும் கூட இருக்கும். அப்போ அறிவும் திட்டமிடலும் குறைவாத்தாண்டா இருக்கும். இது புரியாம நீ கேள்வி கேட்டா மாப்பிள்ளை சங்கடப்படத்தானே செய்வார்?

    மல்லிகா கச்சிதமாக இடையில் புகுந்து வக்காலத்து வாங்கினாள்.

    என்ன மாம். உங்க அனுபவத்தை அப்படியே தேவிக்கும் பொருத்திப் பார்க்கறீங்களா?

    ஷரண் தாமதிக்காமல் அம்மா மல்லிகாவையும் மடக்கி வளைத்தான். அதில் ஒருவித குத்தல் கூட ஒளிந்திருந்தது.

    மல்லிகா ஒரு கணம் அறை விழுந்தது போல ஆகி, பதிலுக்கு அவனை வெறித்தாள்.

    மிக சந்தோஷமாக துவங்கிய ஒரு சந்திப்பும் பரஸ்பரப் பேச்சுக்களும் ஷரண் கேட்ட கேள்வியால் மெல்ல வேறு

    Enjoying the preview?
    Page 1 of 1