Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sutri Sutri Varuvean
Sutri Sutri Varuvean
Sutri Sutri Varuvean
Ebook333 pages3 hours

Sutri Sutri Varuvean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழன் எக்ஸ்பிரஸில் நான் எழுதிய இரண்டாவது தொடர் இது!

முதல் தொடர் ‘தொடத் தொட தங்கம்.’ நல்ல வெற்றி பெற்று விஜய் டிவியில் ‘மாயவேட்டை’எனும் பெயரில் ஒரு மெகா தொடராகவும் ஜொலித்தது. அதைத் தொடர்ந்து நான் எழுதிய தொடர்தான் ‘சுற்றிச் சுற்றி வருவேன்’

பொதுவில் நான் தொடர்களைப் பொருத்தமட்டிலோ நாவல்களிலோ ஒரே விதமான விஷயங்களைச் சுற்றி வருபவனல்ல.

தொடருக்குத் தொடர் கதைக் களத்தை மாற்றிக் கொண்டே போவேன். சரித்திரம், சமூகம், குடும்பம், மர்மம் என்று வேறுவேறு தலங்களில் நான் பயணப்பட்டாலும் மர்மக் கதைகளில் எனது பயணத்தை வாசகர்கள் பெரிதும் வரவேற்பதை உணர்கிறேன்.

அந்த வகையில் இந்த தொடரையும் மர்மம் எனும் தலத்தில் அமைத்து அதனுடன் கொஞ்சம் போல மாந்திரீகத்தையும் சேர்த்து இதை எழுதினேன். ரசாயணம், பெளதிகம் போல மாந்திரிகமும் ஒரு பாடம். அதை கற்றுக்கொள்ள முயன்ற ஒருவரின் கதை இது அவரது சந்ததிகள் அதனால் படும் பாட்டையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் இதில் சொல்லியிருந்தேன்.

வழக்கம்போல் வரவேற்புக்கு பஞ்சமில்லை. வார இதழில் எந்த ஒரு விஷயத்தின் வெளிப்பாடும் பளிச்சென்று தூக்கலாக இருக்கும். எனவே தொடர் அற்புதமாக வெளிப்பட்டது. வாசக உலகமும் விரும்பி வரவேற்றது.

கொஞ்சம் போல மண்வாசனையையும் இதில் சேர்த்துக் கொண்டேன். எல்லாமே நல்லவிதத்தில் அமைந்து பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. மனித வாழ்வில் எவ்வளவோ மர்மங்கள் உண்டென்றும் இல்லையென்றும் விவாதங்கள்... அது ஒரு தொடர்கதை. முற்றிலும் முடிவான விடையை யாரும் சொன்னதில்லை. சித்தர்களின் கூற்றுப்படி கண்டவர் விண்டிலராய், விண்டவர் கண்டிலராகவே அவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கைதான் இதில் பிரதானம்.

இப்படியெல்லாம் நடக்குமா? அது சாத்யமா? என்று கேட்காமல் நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்து இதை எழுதினேன். ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் எந்த அணியில் பேசுகிறாரோ அதற்கு வலுசேர்ப்பதற்காக ஆதாரங்களை அடுக்குவார். இறுதியில் நடுவர்தான் தீர்ப்பு வழங்குவார். இந்த கதையைப் பொருத்தமட்டில் வாசகர்கள்தான் நடுவர்கள்.

அவர்கள் ஒப்புக்கொள்ளலாம், விலக்கியும் வைக்கலாம். இந்த தொடரைப் பொறுத்து என் பணி விறுவிறுப்பாகக் கதையை எழுதியதுதான்... இந்த கதைக்கு நேர் எதிரான கருத்து கொண்ட சிந்தனைகளை உடைய படைப்பையும் நான் எழுதியிருக்கிறேன்.

எனது வளர்ச்சியின் அடிநாதமாக திகழும் அன்னை மீனாட்சியின் பெருங்கருணைக்கும் பேரருளுக்கும் நான் என்றும் உரியவன்.

அவளது செழுங்கருணையால் எனது பயணம் தொடரும்.

பணிவன்புடன்,
இந்திரா சௌந்தர்ராஜன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580100704600
Sutri Sutri Varuvean

Read more from Indira Soundarajan

Related to Sutri Sutri Varuvean

Related ebooks

Related categories

Reviews for Sutri Sutri Varuvean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sutri Sutri Varuvean - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    சுற்றி சுற்றி வருவேன்

    Sutri Sutri Varuvean

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    என்னுரை

    தமிழன் எக்ஸ்பிரஸில் நான் எழுதிய இரண்டாவது தொடர் இது!

    முதல் தொடர் ‘தொடத் தொட தங்கம்.’ நல்ல வெற்றி பெற்று விஜய் டிவியில் ‘மாயவேட்டை’எனும் பெயரில் ஒரு மெகா தொடராகவும் ஜொலித்தது.

    அதைத் தொடர்ந்து நான் எழுதிய தொடர்தான் ‘சுற்றிச் சுற்றி வருவேன்’ பொதுவில் நான் தொடர்களைப் பொருத்தமட்டிலோ நாவல்களிலோ ஒரே விதமான விஷயங்களைச் சுற்றி வருபவனல்ல. தொடருக்குத் தொடர் கதைக் களத்தை மாற்றிக் கொண்டே போவேன். சரித்திரம், சமூகம், குடும்பம், மர்மம் என்று வேறுவேறு தலங்களில் நான் பயணப்பட்டாலும் மர்மக் கதைகளில் எனது பயணத்தை வாசகர்கள் பெரிதும் வரவேற்பதை உணர்கிறேன். அந்த வகையில் இந்த தொடரையும் மர்மம் எனும் தலத்தில் அமைத்து அதனுடன் கொஞ்சம் போல மாந்திரீகத்தையும் சேர்த்து இதை எழுதினேன்.

    ரசாயணம், பெளதிகம் போல மாந்திரிகமும் ஒரு பாடம். அதை கற்றுக்கொள்ள முயன்ற ஒருவரின் கதை இது அவரது சந்ததிகள் அதனால் படும் பாட்டையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் இதில் சொல்லியிருந்தேன். வழக்கம்போல் வரவேற்புக்கு பஞ்சமில்லை. தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் எந்த ஒரு விஷயத்தின் வெளிப்பாடும் பளிச்சென்று தூக்கலாக இருக்கும். எனவே தொடர் அற்புதமாக வெளிப்பட்டது. வாசக உலகமும் விரும்பி வரவேற்றது.

    கொஞ்சம் போல மண்வாசனையையும் இதில் சேர்த்துக் கொண்டேன். எல்லாமே நல்லவிதத்தில் அமைந்து பாராட்டுக்களை பெற்றுத்தந்தது.

    மனித வாழ்வில் எவ்வளவோ மர்மங்கள் உண்டென்றும் இல்லையென்றும் விவாதங்கள்... அது ஒரு தொடர்கதை. முற்றிலும் முடிவான விடையை யாரும் சொன்னதில்லை. சித்தர்களின் கூற்றுப்படி கண்டவர் விண்டிலராய், விண்டவர் கண்டிலராகவே அவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    நம்பிக்கைதான் இதில் பிரதானம்.

    இப்படியெல்லாம் நடக்குமா? அது சாத்யமா? என்று கேட்காமல் நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்து இதை எழுதினேன்.

    ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் எந்த அணியில் பேசுகிறாரோ அதற்கு வலுசேர்ப்பதற்காக ஆதாரங்களை அடுக்குவார். இறுதியில் நடுவர்தான் தீர்ப்பு வழங்குவார். இந்த கதையைப் பொருத்தமட்டில் வாசகர்கள்தான் நடுவர்கள். அவர்கள் ஒப்புக்கொள்ளலாம், விலக்கியும் வைக்கலாம். இந்த தொடரைப் பொறுத்து என் பணி விறுவிறுப்பாகக் கதையை எழுதியதுதான்... இந்த கதைக்கு நேர் எதிரான கருத்து கொண்ட சிந்தனைகளை உடைய படைப்பையும் நான் எழுதியிருக்கிறேன். இத்தொடரைப் பொறுத்த வரையில் தமிழன் எக்ஸ்பிரஸ் ஆசிரியரும், எனது அருமை நண்பருமான திரு. சிவா அவர்களின் பங்கு மகத்தானது. சிவா ஒரு அற்புதமான சிந்தனையாளர். என்னை மிக ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி வழி நடத்தினார். அவருக்கும் அருமை ஓவிய நண்பர் ஸ்யாமுக்கும் என் நன்றிகள்.

    ஓவிய நண்பர் திரு. ஸ்யாம் நன்கு வளர்ந்து, தனக்கென ஒரு இடம் பிடித்துவிட்ட ஓவியர். அயராத உழைப்பாளி. எங்கள் கூட்டணியில் பல தொடர்கள் வந்துவிட்டன. அதில் இதுவும் ஒன்று. திருமகள் பதிப்பகம் இதை சிறப்போடு வெளியிட்டுள்ளது. வாசக உலகமும் நன்கு வரவேற்கும் என்று நம்புகிறேன். எனது வளர்ச்சியின் அடிநாதமாக திகழும் அன்னை மீனாட்சியின் பெருங்கருணைக்கும் பேரருளுக்கும் நான் என்றும் உரியவன். அவளது செழுங்கருணையால் எனது பயணம் தொடரும்.

    பணிவன்புடன்,

    இந்திரா சௌந்தர்ராஜன்

    1

    ஜெச்சாச்சு... ஜெயிச்சாச்சு...

    உத்திரம் இருந்தால் அது நடுங்கும். அப்படி ஒரு சந்தோஷக் குரலோடு போர்ட்டிகோவிலிருந்து உள்ளே பாய்ந்து கொண்டிருந்தான் ஏழுமலை. பின்னாலேயே அமரிகையாக நடந்தபடி உள் நுழைந்துக்கொண்டிருந்தான் பிரகலாதன்.

    ஏழுமலையின் குரல் , சமையல் கட்டிலிருந்த ரஞ்சிதத்தை முந்தியை துடைத்தபடி ஹாலுக்கு இழுத்திருந்தது.

    ஏற்கனவே அவளுக்கு சுடர் முகம். அதில் மேலும் மேலும் சுடர்கள் சேர்ந்தது போல ஒரு ஜாஜ்வல்யம். ஊடே அனுக்குட்டி வந்து அம்மா புடவைக்குள் புகுந்துகொண்டு நிற்க உள்ளே வந்த பிரகலாதன், ஹால் சோஃபாவில் பொத்தென்று விழுந்தான்.

    அண்ணாந்து லஸ்தர் லாம்ப்பை பார்த்தபடி பெருமூச்செறிந்தான். சட்டைப் பட்டன்களையும் கழற்றி விட்டுக்கொண்டு பெருமூச்சுவிட்டான்.

    அம்மா கேஸ் ஜெயிச்சிடுச்சும்மா. ஐயாக்கு என்ன பேசறது, எதைப் பேசறதுன்னே தெரியல. தீர்ப்பக் கேட்டதும் இருந்தே இப்படித்தாம்மா இருக்காரு...

    ஏழுமலை எடுத்துக் கொடுக்க ரஞ்சிதம் பிரகலாதனைப் பார்த்தாள். பார்வையில் பனிப்பு சேர ஆரம்பித்திருந்தது. சந்தோஷமாக ஒரு துளி கன்னக்கதுப்பில் பிரண்டு மாராப்புச் சுருக்கத்தில்பட்டு விரவியும் போயிற்று.

    ரொம்ப சந்தோஷம் ஏழுமலை... என்னங்க நீங்க பேசுங்களேன்...ரஞ்சிதத்தின் எதிர்பார்ப்பிற்கேற்ப வாய் திறந்தான் பிரகலாதன்.

    என்னத்த பேச ரஞ்சிதம்? தர்மம் ஜெயிச்சுடிச்சு. அவ்வளோதான்...

    அப்போ நான் நம்பின தெய்வங்கள் கைவிடலை; அப்படித்தானே?

    என் முயற்சி என்னை கைவிடலைன்னு நினைக்கிறேன். நீ தெய்வம்னு நினைச்சா நினைச்சுக்கோ. என்ன இப்போ கெட்டுப் போச்சு?

    அம்மா, தீர்ப்பு கேட்டு அந்த தாமரைக்கண்ணன் குதிச்ச குதிப்பு இருக்கே... அடேங்கப்பா... ஏழுமலை இடையில் புகுந்து நினைப்பைக் கொஞ்சம் கோர்ட்டுக்கு வளைத்தான்.

    ஐயையோ... அவங்க வந்திருந்தாங்களாக்கும்?

    பின்ன... ஜட்ஜ்மென்ட்டும் அதுவுமா வராம போவாங்களா? அந்த தாமரைக்கண்ணன், அவனோட மாமா அதான் அந்த ஒத்தக்கண்ணன் துளசி, அப்புறமா தாமரைக்கண்ணன் பசங்க கிருஷ்ணன், ரமேஷ்னு ஒரு கூட்டமேல்ல வந்திருந்திச்சு...

    இவர்கிட்ட எதாச்சும் வம்பு பண்ணாங்களா?

    பண்ணியிருப்பாங்க. ஆனா, ஐயா அதுக்கு இடம் கொடுக்கலை. தீர்ப்பக் கேட்ட உடனேயே கிளம்பி விறுவிறுன்னு வெளியே வந்துட்டாரு. அவங்க கத்தக் கத்த காதுல வாங்கிக்கலை. இத்தனைக்கும் வக்கீல், தீர்ப்பு நமக்கு சாதகமா முடியும்னு சொல்லலை. எதிரிக்குத்தான் சாதகமாகியிருக்கிறதா சொல்லியிருந்தாரு. அவருக்குப் பயம். ஒருவேளை எதிரா வந்துட்டா நான்தான் முன்னையே சொன்னேனேன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்ல?

    ஏழுமலை நிஜமான சந்தோஷத்தோடு பேசினான். அவன் குரலில், ஊழிய விசுவாசம் பளிச்சிட்டது. முப்பது வருஷமா அந்த வீட்டில் இருக்கிறான்.

    பண்ணையாக இருந்த வீடு... இன்று பங்காளிச் சண்டையால் மொண்ணையாகி சிதறிச் சின்னாபின்னமாகிவிட்டது!

    பொன்னுக்கு பூ வாங்கிய நாயக்கர் குடும்பம் என்றால் மதுரைப் பக்கத்தில் மிகப் பிரசித்தி.

    முழுப் பூவுக்கு கால் பவுன் தருவாளாம் நாயக்கர் மனைவி ஞானமணி கோகிலம்! சித்ரா பௌர்ணமிக்கு பௌர்ணமி, கழுதைப் பாலில் ஊறிக் குளித்துவிட்டு பொன்னும் பட்டும் தரித்துக் கொண்டு தங்க விசிறியோடு கைகள் அசைய அம்மணி நடந்து வரும்போது பூ போடுவார்களாம்.

    அப்படி ஒரு செல்வாக்கு.

    ஆண்டுதோறும் மகர சங்கராந்தியையொட்டி மாடு பிடி நடக்கும். ஊடே செம்மண் கரட்டு நிலத்தில் ஈட்டிப் பாய்ச்சலும் நடக்கும். புஜம் பெருத்த ஆடவர் கூட்டம், ஒரு மாதம் முன்பே ஈட்டி பாய்ச்ச பயிற்சி எடுக்கத் தொடங்கிவிடும். அந்தப் பயிற்சியின் உச்சத்தில் போட்டியன்று எவனொருவன் நாயக்கரம்மாவின் பூ முடி போட்ட தூரத்தையும் தாண்டி ஈட்டி பாய்ச்சுகிறானோ அவனுக்கு பாய்ச்சிய தூரத்துக்கு நிலம் சொந்தம்.

    இப்படியாக வாரி வழங்கிய நிலங்களுக்கு மட்டும் ஒரு அளவேயில்லை.

    அப்படி அள்ளி மண்ணைக் கொடுக்கும்போது நாயக்கரம்மா நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டாள். பின்னாளில் தனது சந்ததியினர் இதே மண்ணுக்காக அதுவும் நூறு இருநூறு ஏக்கருக்காக கோர்ட்டு படியேறி வெட்டு குத்துகளில் கூட ஈடுபடுவார்கள் என்று...

    அரச குடும்பம் ஜமீனாகி, ஜமீனும் மிராசுவாகி இன்று எல்லாமே பெருங்காய டப்பா வாசம் போல வெறும் நினைவுகள்...

    அவ்வளவுதான்!

    ஊரே இருந்தது. நாயக்கர் கோட்டை என்று அதற்குப் பேரும் இருந்தது. எல்லாம் போச்சு. நேர் வாரிசான பிரகலாதனுக்கு அல்ப சொல்பமாக ஒரு முன்னூறு பவுன் நகை, ஒரு டவுன் பங்களா கூடவே மதுரைக்கு மேற்கில் நாகமலை புதுக்கோட்டை எல்லாம் தாண்டி ஒரு 93 ஏக்கர் நிலம் என்று மிச்சங்கள் வந்து சேர்ந்தன.

    அதிலும் ஒருவன் குறுக்கில் வந்து சேர்ந்தான்.

    பொன்னுக்கு பூவாங்கிய நாயக்கரின் கள்ள உறவில் வந்தவன். தாமரைக்கண்ணன் என்பது அவன் முழுத் திருநாமம். நாயக்கரை அவனும் தாத்தா என்றான்.

    தாத்தா சொத்து பேரனுக்குதான் சொந்தம். அதிலும் அந்த 93ஏக்கர் தனக்கே சொந்தம் என்று கோர்ட்டில் நெட்டி முட்டினான். ஆதாரங்களையும் அள்ளி வைத்தான்.

    தன் தந்தைதான் இறுதிக் காலத்தில் நாயக்கர் தாத்தாவை நல்லடக்கம் செய்தவர் என்பதில் இருந்து உண்மையில் அவரது நேர் பேரன் நான்தான் என்பது வரை...

    பிரகலாதனும் விடவில்லை.

    இது கெளரவப் பிரச்சினை என்று கோர்ட்டில் பதிலுக்கு முட்ட இதோ தீர்ப்பு வந்து அந்த 93 ஏக்கரும் பிரகலாதனுக்கு சொந்தம் என்றாகிவிட்டது.

    இதில் ஜெயித்தால்தான் எதிர்காலமே என்று ஆகிவிட்ட பிரகலாதனுக்கும் ரத்தத்தில் குளுகோஸ் பாயத் தொடங்கிவிட்டது.

    கோர்ட்டுக்கு கிளம்பிப் போகும்போது சொரசொரப்பான தாடையோடு போன பிரகலாதன், உற்சாகமாக ஷேவ் செய்து கொள்ள ஆரம்பிக்கிறான்.

    காபியோடு வந்து கலகலப்பாக நிமிர்கிறாள் ரஞ்சிதம்.

    ஏங்க இனி இதுக்கு மேல எதுவும் பிரச்சினை வராதே.

    புரியலை ரஞ்சிதம். என்ன கேட்கறே நீ?

    இல்ல. உங்க பங்காளி சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் பண்ணுவாரா?

    ஊஹும்! மாட்டான். அதுக்கெல்லாம் மனசுல தில்லும், கைல நல்ல சில்லறையும் வேணும். எல்லாத்தையும் தான் பேராசைப்பட்டு இந்த கேஸ்லயே விட்டுட்டாங்களே!

    அப்ப இனி நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை...

    நிச்சயமா... முதல் வேலையா நிலத்தை இன்ச் சுத்தமா அளந்து வேலி போடப் போறேன்.

    அப்புறம்?

    என் ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு உயிர் வரப் போகுது ரஞ்சிதம், உயிர் வரப்போகுது...

    அப்ப அவ்வளவையும் பிளாட் போட்டு விக்கப் போறோமா?

    ஆமா, அனு ரியல் எஸ்டேட்னு பேர். ஒரு கிரவுண்ட் சாதாரணமா ஒரு லட்ச ரூபா வெச்சா கூட ஏக்கருக்கு இருபது லட்சம்... கணக்குப் போடு... 93 ஏக்கருக்கு எவ்ளோ?

    ரஞ்சிதம் பதில் கூறாமல் வாயைப் பிளந்தாள். கூடவே சந்தேகச் சக்கரமும் கொஞ்சம் கண்ணில் சுற்றியது.

    ஆமா அந்த ரேட்டுக்குப் போகுமா?

    பைத்தியம். பக்கத்துல பாலாஜி நகர்னு ஒரு இடம் இருக்கு. அங்க ஒன்னரை லட்சத்துக்கு இடம் இல்ல...

    ப்படியா?

    நீ வேணா பாரு... எப்படிப் பறக்குதுன்னு...

    - சொன்னபடி ஹாலில் உள்ள தாத்தா ஜங்கம நாயக்கர் படம் அருகே போய் நின்று அவரைப் பார்த்தான்.

    இனி அவர் நினைவில்...

    நாயக்கர் வம்சத்தில் சம்ஸ்கிருதத்தை கரைத்துக் குடித்திருந்தவர் ஜங்கம நாயக்கர். அதற்காக சிரோன்மணி பட்டமும் வாங்கியவர்!

    ஒரு காலத்தில் அந்த 93 ஏக்கர் நிலமும் பெருங்காடாக இருந்தது. நிறைய புளிய மரங்கள் மிரட்டலாக தலைவிரித்துக் கிடந்தன. நரியும் முயலும் நூற்றுக்கணக்கில் திரியும் ஒரு விசேஷக் காடாகிவிட்ட அங்கே ஒருநாள் ஒரு பாறை மேட்டின் மேல் ஒரு சேர மூன்று கருட பட்சிகள் வந்து அமர்ந்தன.

    மூன்றுமே மூன்று இடங்களில் அமர்ந்துவிட்டு எழுந்து பறந்துபோயின. இதை வேட்டை நிமித்தம் வந்த ஜங்கம் நாயக்கர் பார்த்து விட்டு அது உட்கார்ந்த இடத்தை நெருங்கிப் பார்த்தபோது ஒரு அதிசய ஒற்றுமை தெரிந்தது. ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகளில் அந்தப் பட்சிகள் அமர்ந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. பாறை மேல் அந்த முக்கோணப் பரப்புக்குள் ஒரு பாம்புச் சட்டையும் கிடந்தது! நல்ல நீளமான சட்டை. நாயக்கரோடு வந்த பெரியண்ணன் என்பவன் அளந்துகூட பார்த்தான். சட்டை துளிகூட கிழிபடாமல் அதன் வாய்ப்பகுதி கூட தெரிந்தது. அதை ஒட்டி தீர்க்கமான நாமக்குறி.

    ஆண்டே... இது நல்ல பாம்பு சட்டை. இத்தா நீள சட்டையை நான் என் ஆயுசுல பார்த்ததில்லைஎன்றான்.

    நாயக்கர் யோசிக்கத் தொடங்கினார். பாம்புச் சட்டையை பார்க்கவா கருட பட்சிகள் வந்து போயின?

    ஆண்டே... இத நல்ல பாம்புன்னு நினைச்சுப் பட்சிங்க வந்து உக்காந்திருக்கும். சட்டைன்னு தெரிஞ்ச உடனே திரும்பி போயிருக்கும்என்று பெரியண்ணன், நாயக்கரின் மனக்கேள்விக்கு தகுந்தாற்போல் பதிலும் சொன்னான்.

    அப்பொழுது குருவிக்காரி ஒருத்தி குவளைப் பூ கொண்டையோடு பாட்டு பாடியவண்ணம் அந்தக் காட்டின் ஒற்றையடிப்பாதை ஒன்றில் போய்க் கொண்டிருந்தாள். அவளது பாட்டும் குரலும் நல்ல இனிமை.

    ‘மாசம் மாசி இதாம்

    மாசி இதில் மகம் வந்தா...

    பேசும் என் வேல்சாமி

    பெருந்தேரும் அதில் ஓடும்...

    ஓடும் அதன் உச்சியிலே

    ஒரு பட்சி உட்கார்ந்தா

    உட்கார்ந்த வேளையிலே

    ஒரு மகவும் உருவாகும்...’

    ஒரு விதமாய்ப் பாடியபடி போன அவளது குரல், நாயக்கரை, கவ்வி இழுத்தது, லவங்க வாசம் கமழும் வாயோடு அவளைக் கூவியழைத்தார். அவளும் அள்ளிச் சுருட்டிக்கொண்டு ஓடிவந்தாள்.

    அந்தக் காலமல்லவா!

    ஆறடி தூரத்தில் நின்று அப்படியே மண்டியும் போட்டு கையைக் கட்டிக்கொண்டாள்.

    என்னதே பாட்டு இது... மாசி, மகம், வேல்சாமி, தேருன்னு...நாயக்கர் விசாரிக்கலானார்.

    ஐயா... உங்கள நான் காணலீங்கோ... அதான்...

    அடச்சே... மூசி! பாட்டுக்கு அர்த்தம் கேட்டேன் நான். ஆமா நீ யாரு...? நாயக்கரிடம் அன்பான அதட்டல்?

    அவள் குனிந்த தலை நிமிராமல் பதில் சொல்லலானாள்.

    சாமி... நான் சக்கம்பட்டிக்காரி. கம்பளத்தாருங்கோ... மருதைக்கு குறி சொல்லப் போறேன்ற. அலுப்பு தெரியாம இருக்கப் பாடிக்கிட்டே போவோம்.

    அதுசரி நீ போக என் காடுதான் கிடைச்சிச்சா?

    பாழுங்காடுதானே சாமி... இதால போனா பாதி தூரம் குறையும் அதான்!

    ஓஹோ... அது என்ன பாட்டு?

    ச்ச்சும்மா... ஒளறுதேன்.

    அப்படித் தெரியலியே... சந்தக் கட்டு அதுல நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சிச்சே...?

    அவர் கேட்ட விதம் பார்த்து நிமிர்ந்தாள். அருகில் பாம்புச் சட்டையோடு பெரியண்ணன் தெரிந்தான். அவளுக்குப் பச்சை குத்திய நெற்றி. கீழே நாவல் பழமாட்டம் கண்கள். அதில் சொரேலென்று ஈட்டி பாய்ந்தது போல ஒரு வித அதிர்ச்சியும், ஆச்சரியமும் பாய்ந்ததில் முகமே மாறிப்போனது.

    மூசி... கேக்கேன்ல?

    சாமி. இதென்ன கார்கோடன் சட்டை?

    கார்கோடன் சட்டையா?

    ஆமா... ரொம்ப விசேஷமுங்க இது. இத வெச்சு பூச பண்ணா நினைச்சது நடக்கும்.

    என்ன ஒளறுதே... குப்பச்சட்டைவே இது...

    ஐயோ... இத கருட பட்சியே தீண்டாதே.

    -அவள் முக்கியமான விஷயத்திற்கு வந்தாள்.

    என்ன சொல்லுதே?

    ஆமாஞ்சாமி. எங்க எடுத்தீக இதை?

    இந்தக் காட்டுலதான்.

    அப்ப இந்தக் காட்டுலதான் கார்கோடன் இருக்கான்.

    காடுன்னா பாம்பும் தேளும் இருக்கத்தானே செய்யும்?

    உக்காம். ஆனா கார்கோடன் இருந்தாக்க அது காடுல்ல கோயில்...

    யார் சொன்னது?

    கம்பளத்தா சொன்னாக்கா அம்பலத்தா சொன்னாப் போல...

    அடுத்த நொடி, அவள் தன் வெள்ளிப் பூண் போட்ட கருநீல ஒரு அடிக் குச்சியை நெற்றி நடுவே வைத்துக் கண்கள் இடுங்க தீவிரமாக யோசித்தாள். சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து நாயக்கரை பார்த்துச் சொன்னாள்:

    சாமீ... இது பெருங்கோயில். மந்திரமும், தந்திரமும் மதுராயி யந்திரமும் புதையுண்ட திருக்கோயில். கும்புட்டு உழுந்தாக்கா கோடி கோடி தரும். இதை நம்பாட்டி வீண் வம்பு வழக்குதான்... வரிசையாய் சாவுதான்...

    -அரட்டினாள்.

    2

    அந்தக் கம்பளத்தாளின் பேச்சு, நாயக்கரை கொமட்டிலேயே குத்தியது.

    ஏ... என்ன உளறுதே மருதாயி... எந்திர, மந்திர, தந்திரமுன்னு...

    தன் பட்டுச்சட்டை தரித்த மார்பை ஒரு தூக்கு தூக்கியபடி அவளை அமட்டினார். அவள் உடனே உடம்பை சற்று குறுக்கிக்கொண்டாள். மிகவும் ஒடுங்கி சத்தியம் பேசுற நாக்கு ஆண்டே இது. பேசுறதும் நானில்ல, அந்த சக்கம்மா என்றாள்.

    எந்தச் சக்கம்மா?

    எங்க குலதெய்வம்! மலைக்கோயில்ல மப்பா குந்தியிருக்கிற மகராணி அவ. மண்டியிட்டு தொழுதாக்கா என் மனசுக்குள்ள ஏறிவந்து உங்க மனசை அப்படியே படிப்பா, மூணுகாலத்தையும் முன்னால் முடிச்சவித்து வைப்பா.

    சந்தமாய் அடுக்கிக் கொண்டே போனாள் அந்தப் பெண். ஆமோதிப்பாய் பார்த்தான் பெரியண்ணன்.

    ஆமாம் எஜமான்! கம்பளத்தார் வாக்கும், அந்தக் கடவுளோட வாக்கும் ஒண்ணும்பாங்க என்றான்.

    பெரியண்ணனுக்கு தெரிந்த விஷயம் நாயக்கருக்குத் தெரியாமல் போனதற்கு காரணம் உண்டு.

    நாயக்கருக்குப் பத்து வயதாகும்போதே லண்டன் நகரம் அவரை அபகரித்துக் கொண்டுவிட்டது. அதன்பின் சாலிடாக 12 வருஷங்கள் அவர் மதுரையை நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதன்பிறகும் கூட அவ்வப்போதுதான் நாயக்கர் கோட்டைக்கு வந்து போனார்.

    கல்கத்தா, பம்பாய், சென்னப்பட்டினம் என்று பிறகு நகரங்களில் கழிக்கப்பிடித்தது. ஆனால் மதுரை வந்து கூடப் பொறுப்புகளை ஏற்கப் பிடிக்கவில்லை. அதை எல்லாம் கார்வார்களும், கட்டாமணிகளும் தான் பார்த்து வந்தனர்.

    ஜங்கம நாயக்கரின் அப்பா வைஜெயந்தி நாயக்கரின் பரலோக பிராப்திக்குப் பிறகு ஜங்கமர் கோட்டை வாசியாகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அப்பொழுதும் கூட கொடைக்கானல் மலையைத் தேடிப் போய் அங்கே பூப்பந்து விளையாடி மகிழத்தான் பிடித்ததேயொழிய அப்பன், பாட்டன் போல் தர்பார் செய்யப் பிடிக்கவில்லை.

    யாராவது ‘ஆண்டே’என்றாலோ, காலில் விழுந்தாலோ கன்னம் நொதிக்க அறையலாமா என்று தோன்றும்.

    It's a very bad culture,.,, Innocence, Innocenceஅன்று வெள்ளைக்காரனாட்டமே தோள் திமிறக் கத்துவார். அதனால் நாயக்கர் கோட்டையில் சில சின்னப் புரட்சிகளும் நடந்தன. குதிரை உலா, யானைப்பவனி, முற்றத்து தரிசனங்கள் என்கிற மூதாதையர் சமாச்சாரங்களை ஜங்கமர் உதறித் தள்ளிவிட்டு எல்லோரோடும் சகஜமாகக் கலந்து பேச ஆரம்பித்தார்.

    அப்புறம்தான் சனிபிடிக்க ஆரம்பித்தது.

    யாராவது கண்ணைக் கசக்கினால் உடனே ஜங்கமரும் கலங்கிப் போவார். கை காலில் இருப்பதைக் கழட்டித் தந்துவிடுவார்.

    இதை சில கட்டம் வரை தாங்கிய ஜங்கமர் நாயகி ஞானமணி கோகிலம், பெரியகுளம் பக்கம் அல்லிபாரித்த நல்லூர் ஜமீனைச் சேர்ந்தவள். ஜமீன் வழக்கங்களில் ஊறித் திளைத்தவள். எனவே ஜங்கமருக்கு கட்டம் கட்ட ஆரம்பித்தாள்.

    மனுஷர் மக்களைக் கண்டா மசியறாரு. அவரை மசியாம பாத்துக்கிட வேண்டியது உன் பொறுப்பு, பெரியண்ணாஎன்று பெரியண்ணனை துணைக்கு வைத்தாள்.

    ரவையில்

    Enjoying the preview?
    Page 1 of 1