Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aahayathil Aarambam
Aahayathil Aarambam
Aahayathil Aarambam
Ebook164 pages1 hour

Aahayathil Aarambam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

இதுவரை நான் எவ்வளவோ கிரைம் நாவல்கள் எழுதியிருந்தாலும், என்னைப் புதிதாகச் சந்திக்கிற வாசகர்கள் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசும் சில நாவல்களில் ’ஆகாயத்தில் ஆரம்பம்‘ ஒரு நாவல்.

‘கிரைம் கதைகள் படிக்கும்போது அதில் குற்றம் செய்பவர்கள் பயன்படுத்தும் யுக்திகளைப் பார்த்து அதேப்போல மக்கள் குற்றம் செய்ய மாட்டார்களா? குற்றம் செய்பவர்களுக்கு வழிமுறைகளைக் கற்றுத் தருவது போலாகாதா?’

இந்தக் கேள்வி என்னையும், என் போன்று கிரைம் கதைகள் எழுதுகிற எழுத்தாளர்களையும் எல்லாப் பேட்டிகளிலம் தவறாமல் கேட்கப்படும் கேள்வி.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் என்னைக் கேட்டபோது நான் சொன்ன பதில் :

“இன்றைக்கு சினிமாவும், தொலைக்காட்சியும் மக்களை முழுமையாக ஆக்கிரதித்துக் கொண்டுள்ளன. அவைகளில் காட்டப்படும் விஷயங்களைவிட பெரிதாக எழுத்தில் சொல்லி விடுவதில்லை. நாட்டில் எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் பத்திரிகைகளில் விரிவாக செய்திகள் போடுகிறோம். தொலைக்காட்சிகளில் காட்டுகிறோம். உதாரணமாக ஒரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் சிலர் ரகசியமாக சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றார்கள். அந்த சுரங்கத்தை புகைப்படம் எடுத்து அம்புக்குறி போட்டு எப்படித் தப்பினார்கள் என்று விரிவான விளக்கம் பத்திரிகைகளில் வந்தது. இதுவே தொலைக்காட்சி செய்திகளில் காட்டப்பட்டு காவல்துறை அதிகாரிகள் நடித்துக் காட்டினார்கள். இதைப் பார்க்கும், படிக்கும் கைதிகள் சுரங்கம் தோண்டி தப்பிக்கலாம் என்று தூண்டப்பட்டால்? அதற்காக செய்தியை மக்களிடம் மறைக்க முடியுமா? நடக்கும் சம்பவங்களை அப்படியே சொல்ல வேண்டியது மீடியாக்களின் கடமை. அதனால் கதைகள் படித்து குற்றம் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள் என்பது நியாயமில்லாத குற்றச்சாட்டு!"

பட்டுக்கோட்டை பிரபாகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545351
Aahayathil Aarambam

Read more from Pattukottai Prabakar

Related to Aahayathil Aarambam

Related ebooks

Related categories

Reviews for Aahayathil Aarambam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aahayathil Aarambam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஆகாயத்தில் ஆரம்பம்

    Aagayathil Aarambam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை

    ன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்.

    இதுவரை நான் எவ்வளவோ கிரைம் நாவல்கள் எழுதியிருந்தாலும், என்னைப் புதிதாகச் சந்திக்கிற வாசகர்கள் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசும் சில நாவல்களில் ’ஆகாயத்தில் ஆரம்பம்‘ ஒரு நாவல்.

    ‘கிரைம் கதைகள் படிக்கும்போது அதில் குற்றம் செய்பவர்கள் பயன்படுத்தும் யுக்திகளைப் பார்த்து அதேப்போல மக்கள் குற்றம் செய்ய மாட்டார்களா? குற்றம் செய்பவர்களுக்கு வழிமுறைகளைக் கற்றுத் தருவது போலாகாதா?’

    இந்தக் கேள்வி என்னையும், என் போன்று கிரைம் கதைகள் எழுதுகிற எழுத்தாளர்களையும் எல்லாப் பேட்டிகளிலம் தவறாமல் கேட்கப்படும் கேள்வி.

    ஒரு தொலைக்காட்சி பேட்டியில் என்னைக் கேட்டபோது நான் சொன்ன பதில் :

    இன்றைக்கு சினிமாவும், தொலைக்காட்சியும் மக்களை முழுமையாக ஆக்கிரதித்துக் கொண்டுள்ளன. அவைகளில் காட்டப்படும் விஷயங்களைவிட பெரிதாக எழுத்தில் சொல்லி விடுவதில்லை. நாட்டில் எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் பத்திரிகைகளில் விரிவாக செய்திகள் போடுகிறோம். தொலைக்காட்சிகளில் காட்டுகிறோம். உதாரணமாக ஒரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் சிலர் ரகசியமாக சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றார்கள். அந்த சுரங்கத்தை புகைப்படம் எடுத்து அம்புக்குறி போட்டு எப்படித் தப்பினார்கள் என்று விரிவான விளக்கம் பத்திரிகைகளில் வந்தது. இதுவே தொலைக்காட்சி செய்திகளில் காட்டப்பட்டு காவல்துறை அதிகாரிகள் நடித்துக் காட்டினார்கள். இதைப் பார்க்கும், படிக்கும் கைதிகள் சுரங்கம் தோண்டி தப்பிக்கலாம் என்று தூண்டப்பட்டால்? அதற்காக செய்தியை மக்களிடம் மறைக்க முடியுமா? நடக்கும் சம்பவங்களை அப்படியே சொல்ல வேண்டியது மீடியாக்களின் கடமை. அதனால் கதைகள் படித்து குற்றம் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள் என்பது நியாயமில்லாத குற்றச்சாட்டு!

    இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டுள்ள பூம்புகார் பதிப்பகத்திற்கும், முதலில் பிரசுரித்த மாலைமதி இதழுக்கும் என் அன்பும், நன்றியும்.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    ரா

    த்திரியின் ரகசியம் துவங்கியிருந்தது. ஊரெல்லாம் தலைக்கு மேல் வெளிச்சம் போட்டுக் கொண்டது. எது எதற்கோ சௌகரியமாகிய இருளுடைய மொழியாக பூச்சிகளின் சபா ஏறாத சங்கீதம். மேகத்தின் சரசத்தில் பலவீனமான சந்திரன்.

    தட் தட் தட் என்று 350 பவர் புல்லட்டில் அவன் வந்து கொண்டிருந்தான். வண்டியின் புல்ஸ் ஐ வரைந்து கட்டுப்படுத்தப்பட்ட ஹெட் லைட் வெளிச்சம், பம்பரின் இரண்டு சைடுகளிலும் உபரியாக சிவப்பு வெளிச்சங்கள் தவிர, அவன் உதட்டிலும் ஒரு குட்டி டேஞ்சர் வெளிச்சப்பொட்டு ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் மிதந்து வந்து கொண்டிருந்தது.

    மதிய மழையில் மிச்சங்கள் இரண்டு பக்கமும் சிதறி விலகிக் கொள்ள... வண்டியின் வேகம் குறைத்து அந்த குறுகலான சந்தில் திருப்பினான். தூக்கத்தை துறந்து லொல் என்று ஓடிப்போன நாய் கொஞ்ச தூரம் துரத்தி விட்டு நின்று விட்டது. விளக்குக் கம்பத்தின் ஓரத்தில் குழந்தையை உட்கார்த்தி வைத்து விட்டு கையை கட்டிக் கொண்டு தாய் காத்திருந்தாள். சீக்கிரம்...

    அதைக் கடந்து தெருவின் கடைசிக்கு வந்து கொண்டிருந்தான். சில வீடுகளில் டியூப்லைட் எரிந்து பிள்ளைகள் உரக்க பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். குடிசை வாசலில் கயிற்றுக் கட்டிலில் சால்வைப் போர்வைக்குள் எவனோ தற்காலிகமாக செத்துப் போயிருக்க...

    அவன் அந்த வீட்டின் முன் நிறுத்தினான். வீட்டின் மாடிக்கு வெளியிலிருந்து புறப்பட்ட படிகளுக்கான பைக்கை வைத்தான். விசில் சத்தம் படிகளில் ஏறினபோது கீழ் வீட்டின் கதவு திறக்கப்பட்டு ராமானுஜம், தம்பி என்றார்.

    மறுபடி இறங்கி வந்து, என்ன?

    உனக்கு போன் வந்துச்சிப்பா. இதோ பாரு, இந்த நம்பரை உடனே கூப்பிடச் சொன்னாங்க.

    சீட்டை வாங்கிப் பார்த்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். சரி என்று நகர்ந்தவனை, தம்பி, இன்னிக்குத் தேதி அஞ்சு என்றார்.

    சுத்தமா மறந்துட்டேன். என்று பாண்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்து விரித்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். பாக்கி காலைல வாங்கிக்கிறேன் என்று விலகி, படிகள் ஏறினான்.

    அந்தச் சலவைத் தாளை இரண்டாக மடிக்க மனமில்லாமல் அதை அப்படியே எடுத்துக் கொண்டு உள்ளே போய் கதவை தாழிட்டுக் கொண்டார் ராமானுஜம்.

    கதவை திறந்து கொண்டு அறைக்குள்ளே வந்தவன் ஷுக்களை உதறிவிட்டு, மேஜை மீதிருந்த அக்காய் ஸ்டீரியோ பிரம்மாண்டத்தை ப்ளே செய்தான் சிவப்பு சதுரங்களின் நடனத்துடன் இசையை பிசிறு பிசிறாய் பிரித்து இது வயலின். இது கிடார், இது காம்ப்போ என்று சொல்லிக் கொண்டிருக்க... ஜட்டி மட்டும் உடம்பில் வைத்துக் கொண்டு அறையுடன் ஒட்டின பாத் ரூமுக்கு நடந்தான்

    ஈரக் கால்களோடு திரும்பி வந்து பாக்கெட் எடுத்து உதட்டால் சிகரெட் இழுத்துக் கொண்டு கட்டிலில் மல்லாக்க விழுந்தான். கண்களை மூடிக்கொண்டு கால்களால் இசைக்கேற்ப தாளம் போட்டுக் கொண்டிருக்க... கழற்றி வைத்திருந்த ரிஸ்ட் வாட்ச் கிக்... கிக்... கிக்... என்றது. பார்த்தான் 8-00.

    எழுந்து பின்பக்கம் உலோக தகடெல்லாம் பொருத்தப்பட்ட ஜீன்ஸ் மாட்டிக் கொண்டு, முழுக்கை பனியன் மாட்டிக்கொண்டான். ஸ்டாண்டிலிருந்து ஸ்கார்ஃப் எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டு, டேப்பை நிறுத்தி புறப்பட்டான். பைக்கை ஸ்டார்ட் செய்யுமுன் பாக்கெட்டில் அந்தச் சீட்டை ஒருதரம் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

    முக்கிய சாலைக்கு வந்ததும் சீறினான்.

    அவன் கிரண்.

    கிருஷ்ணன் என்ற பெயரைத் தொழிலுக்கு லாயக்கில்லாத பெயர் என்று செப்பனிட்டு கிரண் என்றாக்கியது முஸ்தபா. முஸ்தபா இவன் வாழ்க்கையில் இருபதாவது வயதில் அறிமுகமானவர். கிருஷ்ண-கிரணின் பூர்வாங்கம் நதி போல புதிரானது.

    கறுப்பான ஒரு குண்டு அம்மாள் நினைவில் இருந்தாள். இட்டிலி, ஆப்பக்கடை நினைவில் இருந்தது.’யாரு பெத்த பிள்ளையோ, அழகா இருக்கியேடா ராசா... உன்னை வந்து புறக்கணிக்கிறாங்களே...|என்று அவள் அடிக்கடி புலம்பினது நினைவில் வந்தது. யார் அவர்கள்? எப்படிப் புறக்கணித்தார்கள்? நினைவில் இல்லை. பள்ளிக்கூடத்தில் அப்பா பேர் கேட்ட போது விழித்தது. பசங்கள் விளையாட்டில் சேர்க்காமல் விலகியது. வாத்தியார் வரிசையாக பையன்களை அடித்த போது எல்லோரும் அம்மாவை அழைக்க இவன் மட்டும்’அய்யோ| என்றது... லேசாக நினைவில் தங்கியிருக்கிறது.

    அந்த அம்மாள் எப்போது செத்தாள்? அப்புறம் எங்கெங்கே இருந்தான் என்பதற்கு அவனிடமே சரியான விவரங்கள் இல்லை. வாழை மட்டையில் மேஜை துடைத்திருக்கிறான். பார்பர் ஷாப்பில் டீ வாங்கி வந்து, முடி அள்ளிப் போய் குப்பை தொட்டியில் கொட்டியிருக்கிறான். சினிமாவுக்கு கறுப்பு டிக்கெட் விற்று கழுத்தில் கர்சீப் கட்டிப் பழகியிருக்கிறான். ரோஸி வீட்டில் மட்டும் நாலு வருஷம் இருந்து, டீச்சரும், சாரும் பள்ளிக்கூடத்துக்குப் போக, பாப்பாவுக்கு ஜட்டி மாட்டி, யானை விளையாட்டு விளையாடி, தூங்க வைத்து, மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு ரகசியமாய் சினிமா போய்... மீசை பூத்து, உடம்பு நெடுக்கில் வளர்ந்து, ரோஸி டீச்சரின் கவனத்தைக் கவர்ந்து அந்த ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் அறை சுத்தம் செய்கையில்,’கிருஷ், இங்கே பாரேன்....| என்று டீச்சர் அழைக்க, திரும்பினால் சேலை நழுவி... அச்சச்சோ... எச்சில் விழுங்க, கைகள் நடுங்க...’சின்னப் பையா, எவ்வளவு அழகா வளர்ந்துட்டே? இறுக்கத்தில் பயந்து போய், கிறங்கிப் போய், கற்றுத்தரப்பட்டான். ஆர்வமாய்க் கற்றுக் கொண்டான். அந்தோணி சாருக்கு அரசல் புரசலாய்த் தெரிந்து போக, புடவையின் ஆட்சியில் தைரியத்தை விற்று விட்ட அவரால், அவள் ஊரில் இல்லாத சமயம் இவன் மேல் திருட்டு பழி போட, மொத்து மொத்தென்று மொத்தி, திசை பக்கம் திரும்பாதே என்று விரட்டத்தான் முடிந்தது.

    ஓசி ரயிலில் முஸ்தபா அறிமுகம். அப்புறம் தான் கிரண் ரொம்ப உருப்படாமல் போனது. உலகத்தில் கெட்ட விஷயங்கள் பூரா அறிந்து கொண்டான். வெறும் விரலால் சோடா திறந்து, ஹாப் விஸ்கி ராவாக கவிழ்த்து, புகை புகையாய் நரம்புக்கு போதை ஏற்றிக் கொண்டு விலாசம் விலாசமாய் அலைந்து, இரண்டு கோர்ஸ் பென்சிலின் குத்திக் கொண்டு எல்லாம்... எல்லாம்... கற்றான்.

    கிரணின் முழுங்காலுக்கருகே உள்ள ஆழமான தழும்பு துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது. தம்பிக் கோட்டைக்கு அருகாக சேறான கடற்கரையோரத்தில் தோணியிலிருந்து மூட்டையை தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு, முழங்கால் வரைச் சகதியில் துரிதமாக ஓடுகையில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் தந்த பரிசு. அப்படியும் சிக்காமல்

    Enjoying the preview?
    Page 1 of 1