Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tick... Tick... Lipstick!
Tick... Tick... Lipstick!
Tick... Tick... Lipstick!
Ebook88 pages1 hour

Tick... Tick... Lipstick!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பரத் மற்றும் சுசிலாவின் விறுவிறுப்பான அடுத்த கட்ட விசாரணை. அழகான சிறிய அன்பளிப்பில், அழிக்கப்படும் அழகிகள். அந்த அழகான அன்பளிப்பு என்ன? அந்த அன்பளிப்பினால் அழகிகளின் வாழ்வில் ஏற்பட்ட விபரீதம் என்ன? அந்த இயக்கத்தின் மூலகாரணத்தை கண்டறிய பரத் மற்றும் சுசிலா மேற்கொள்ளும் முயற்சிகள் நாமும் அவர்களுடன் பயணித்து தெரிந்து கொள்வோம் கொலைக்கான மூலக்காரணத்தை...

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580100908044
Tick... Tick... Lipstick!

Read more from Pattukottai Prabakar

Related to Tick... Tick... Lipstick!

Related ebooks

Reviews for Tick... Tick... Lipstick!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tick... Tick... Lipstick! - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    டிக்... டிக்... லிப்ஸ்டிக்!

    Tick... Tick... Lipstick!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    தடுக்கித் தடுக்கி வந்தன அலைகள். ஜால்ரா போட்டன படகுகள்.

    வானத்தின் மையத்தில் கோபச் சூரியன் வெப்பமான வெளிச்சம் பெய்து கொண்டிருக்க... தொலை தூர மரங்கள் கப்சிப் என்று தங்கள் இலைகளை அதட்டி வைத்திருந்தன.

    லைட் ஹவுஸ் அருகில் சாந்தோம் மணல்வெளியில் அந்த மத்தியானத்தில் கூட்டம் அதிகமில்லை. ஒரே ஒரு டூரிஸ்ட் பஸ்சின் ஜனங்கள் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்தார்கள்.

    வேன் மேலே ஸ்டாண்ட் நிறுத்தி அதன் மேலே ஸ்டில் கேமரா, வியர்வையில் நனைந்த பனியனுடன் ஃபோட்டோ கிராபர் நெற்றியில் கர்சீப் கட்டி படு டென்ஷனாய் இருந்தான்.

    கீழே வாடகைக் குதிரைகள் இரண்டு. ஒன்று வெள்ளை, மற்றது பிரௌன். ஒன்றில் அந்த மாடல் இளைஞன் அமர்ந்திருந்தான். விரல்களால் பின்னந்தலையைக் கலைத்து விட்டுக் கொண்டான். உதடுகளை ஈரம் செய்து கொண்டான். தலையில் ஸ்பெஷல் தோசை அளவுக்கு ஓலையில் பின்னின தொப்பி வைத்திருந்தான். பின்னணி மணல் வெளியில் முப்பது வர்ணக் குடைகள் நடப்பட்டிருந்தன.

    மற்றொன்றில் அந்த மாடல் பெண் ஜீன்ஸ் அணிந்து, மேலே டைட்டாய் தனது தங்கையின் டி ஷர்ட் அணிந்திருந்தாள். மேல் வரிசைப் பற்களில் ஒன்று சிங்கப்பல். அவள் முகத்திற்கு அது அழகை ப்ளஸ் செய்தது. கூந்தல் மானாவாரியாகக் காற்றில் அலைந்து கொண்டிருந்தது. முகத்தின் குறுக்கே வந்து விழும் கற்றைகளை நளினமாக எடுத்துவிட்டுக் கொண்டிருந்தாள்.

    விளம்பர ஏஜென்சியின் இளைஞன் சோக தாடி வைத்துக் கொண்டு, பற்ற வைக்காத சிகரெட் ஒன்றை விரல்களில் வைத்துக் கொண்டு எல்லோருக்கும் குறிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தான்.

    அவனுக்குத் தேவை ஒரு ஷாம்பு தயாரிப்பாளரின் பேப்பர் விளம்பரத்துக்கான ஒரே ஒரு கலர் ஸ்டில்! அதற்கான ஏற்பாடுகளோ சினிமா ஷூட்டிங் போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

    ஜீவா, ரெடியா? என்றான் தலையை உயர்த்தி புகைப்படக்காரனைப் பார்த்து.

    அவன் லென்ஸ் வழியாக இப்படிப் பார்த்து, அப்படிப் பார்த்து, வெள்ளைக் குதிரை ஒரு ரெண்டு இன்ச் பின்னாடி போனாத் தேவலை... என்றான்.

    குதிரைக்குச் சொந்தக்காரன் பீடி சுவாரசியத்தைப் புறக்கணித்து தன் செல்லப் பிராணியிடம் அதன் பாஷையில் பேசி, வயிற்றில் தட்டி... பின்னால் நகர்த்தினான்.

    ஓக்கேயா ஜீவா?

    ஓக்கே...

    சிகரெட் பற்ற வைக்க நேரமில்லாதவன் குதிரைப் பெண்ணிடம் வந்து மால், ஒரு கையை அவர் கையோடக் கோர்த்துக்கறே. இன்னொரு கையால ஃபிளையிங் கிஸ் கொடுக்கிற மாதிரி போஸ் தர்றே... முகத்திலேயும், கண்லயும் உற்சாகம் வழியணும்.

    சொன்னபடி அவள் செய்து ஒரு ஒத்திகை பார்த்துக் கொண்டு, பிறகு போட்டோகிராஃபர் ஆக்‌ஷன் என்றதும் மறுபடி செய்ய... க்ளிக் என்று பதிவானார்கள். அதே காட்சியமைப்பை ஆறு முறைப் பதித்துக் கொண்டு, பிறகு ஒரு திருப்திக்கு வந்தான் அவன்.

    போதும் என்றதும் அவர்கள் புறப்பட ஆயத்தமானார்கள் குடைகளை மடக்கிச் சேகரித்தார்கள். கேமிராவை, ஸ்டாண்டை வேனிலிருந்து இறக்கினார்கள்.

    மாலதி குதிரையில் இருந்துக் குதித்தாள்.

    நான் போகலாமா சார்? என்றாள் கூந்தலைச் சுருட்டிக் கொண்டையாக்கிக் கொண்டபடி.

    நாளைக்கு எதுவும் வொர்க் இல்லை. நாளன்னைக்கு ஏஜன்சிக்கு வந்துடறியா?

    சரி என்றாள். ட்ரெஸ் மாத்திக்க இடம் இல்லை. நேரமும் இல்லை. நாளன்னைக்கு வர்றப்போ யூனிட் டிரெஸ்சை எடுத்துட்டு வந்துடறேன் சார்... புறப்பட்டாள்.

    தன் கைப்பையைச் சுழற்றிக் கொண்டு சற்றுத் தள்ளி மோட்டார் பைக்கில் அமர்ந்து கொண்டு, சூயிங்கம் மென்று கொண்டிருந்தவனைச் சமீபித்தாள்.

    என் வொர்க் முடிஞ்சுது சிவா. இனிமே இன்னிக்குப் பூரா நான் ஃப்ரீதான். எங்கே வேணாலும் போகலாம்... கமான்.

    பசிக்குதா சொல்லு?

    யானைப் பசி.

    அப்போ முதல்ல ஒரு ரெஸ்ட்டாரெண்ட் என்றான்.

    பைக்கின் பின்னால்

    Enjoying the preview?
    Page 1 of 1