Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mattravai Un Madiyil
Mattravai Un Madiyil
Mattravai Un Madiyil
Ebook118 pages1 hour

Mattravai Un Madiyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு ரயில் பயணத்தின்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் டேவிட் என்பவன் இறக்கிறான். அவனுக்கு எதிர்சீட்டில் கதிர். அந்நிலையில் கதிர், டேவிட்டிடம் உள்ள நாற்பத்தைந்து லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை எடுத்துக்கொண்டு செல்கிறான். இதில் செபாஸ்டின் மற்றும் மனோகர் என்பவர்கள் யார்? அவர்களுக்கும் இந்த வைர கல்லுக்கும் என்ன தொடர்பு? இந்த வைரக்கல் டேவிட்டுக்கு சொந்தமானதா? ஹேமா எதற்காக கதிரை காதலிப்பதாக ஏமாற்றுகிறாள்? கதிர் வைரக்கல்லை எங்கு பதுக்கி வைத்திருப்பான்? இதில் 'மடியில்' என்பதன் சுவாரஸ்யம் என்ன? ஹேமா போலீஸாருக்கு உதவிசெய்ய காரணம் என்ன? இறுதியில் கதிரின் நிலை... நாமும் ஆவலுடன் மடியில்...

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580100907009
Mattravai Un Madiyil

Read more from Pattukottai Prabakar

Related to Mattravai Un Madiyil

Related ebooks

Reviews for Mattravai Un Madiyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mattravai Un Madiyil - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    மற்றவை உன் மடியில்

    Mattravai Un Madiyil

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    நாவல் பயணிகள் கவனத்திற்கு

    சாலைப் பயணத்தின்போது பயணிகள் இளைப்பாற சாலை ஓர பூங்காக்கள் அமைக்கப்பட்டிருப்பதை கவனித்திருக்கலாம். அதைப்போல... இந்த நாவல் பயணத்தின்போது உற்சாகம் ஊக்குவிக்க நாவலோர பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே... ம்கூம். சஸ்பென்ஸ்.

    1

    அந்த பனியுதிர் காலத்தின் காலையில்...

    ஒரிஜினல் வெளிச்சம் சில மணிநேரங்களுக்கு அந்தப்பக்கம் இருக்க... அதன் தேய்ந்துபோன கார்பன் காப்பி உலாவியது.

    நேரம் பார்த்தவர்கள் கெடிகாரம் 7 என்று தவறான தகவல் தருவதாக வியந்தார்கள்.

    வானம் தன் கறுப்புத் துணியை நிதானமாய் சலவை செய்துகொண்டிருக்க... தெறித்த நுரைகளாய் சின்னச் சின்ன பறவைகள்.

    மடிகனத்த பசுக்கள். பளிச்சிடும் டீக்கடை பாய்லர்கள். ரேடியோவில் பக்திப்பாடல்கள் தொந்தி குறைக்க ஓட்டங்கள் புள்ளிவைத்து கோலங்கள். சாணி உருண்டைமேல் பறங்கிப்பூ. இடுக்குவழியே உள்ளே விழும் தினசரிகள், காதலிக்குக் கத்திக்குத்து - கள்ளக்காதல் எதிரொலிகள்.

    கதிரேசன் மெல்ல நடந்தான்.

    தோளில் சற்று உப்பலான தோல்பை மாட்டியிருந்தான். தலை கலைந்து - முகம் எண்ணெயில் மிதக்க இரவெல்லாம் பயணம் செய்திருந்தான். முழங்கையில் பிளாஸ்த்திரி இருந்தது. உதட்டின் ஓரத்தில் இன்னொரு சின்ன பிளாஸ்த்திரி.

    கதிரேசன் உடம்பில் காலைக் குளிருக்கான சன்னமான நடுக்கம் இருந்தது. கார்ட்ராய் என்னும் முரட்டுத்துணியில் பாண்ட் அணிந்திருந்தான். அரைக்கை சட்டை அதில் ஒரு கையில் விளிம்பில் சின்னதாய் ரத்தக்கறை.

    சட்டை பாக்கெட்டில் இருந்து காகிதம் எடுத்தான்.

    உற்றுப்பார்த்துதான் படிக்க முடிந்தது.

    எதிரே லைட் போட்டுக்கொண்டு ஸ்கூட்டர் ஓட்டிவந்தவன் நிறுத்தினான்.

    இதுதானே ஐந்தாவது அவென்யு

    இல்லை. இது திருவான்மியூர் பீச்ரோடு. நேராகச் சென்றால் மூன்றாவது அவென்யு வரும். அதற்கு முன்னதாகவே லெஃப்டில் திரும்பினால் ஐந்தாவது அவென்யு.

    நன்றி

    பதினைந்து நிமிடம் கழித்து ஆகாயம் தன்னை சுத்தமாய் பல்துலக்கி முடித்திருக்க... கதிரேசன் அந்த பிரம்மாண்டமான பங்களாவின் வாசலில் இருந்த காவலாளியை நெருங்கினான்.

    என்ன வேண்டும்?

    மிஸ்டர் பூபேஷ்குப்தாவின் பங்களாதானே இது?

    ஆமாம்.

    அவரைச் சந்திக்கவேண்டும்.'

    காவலாளி இப்போது அவனை அலட்சியம் தொட்டுக்கொண்டு இன்ச் இன்ச்சாய் பார்த்தான்.

    நீ யார்?

    என் பெயர் கதிரேசன். பெங்களூரிலிருந்து வருகிறேன்.

    சரி, என்னவேண்டும்? டொனேஷனா?

    கதிரேசனின் நாக்கு துடித்தது. முட்டாள்! இந்த நிமிஷத்தில் என் மதிப்பு என்ன தெரியுமா உனக்கு? ஆயிரம் ரூபாய் டிப்ஸ் தரட்டுமா உனக்கு? தரமாட்டேன். பணமாக இல்லை. காட்டிக்கொள்ளவும் போவதில்லை.

    எனக்குத் தேவை ஒழுகாத ஒரு கூரை.

    இல்லை. மிஸ்டர் பூபேஷ்குப்தாவின் நண்பர் கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார் சந்திக்கச்சொல்லி,

    எங்கே காட்டு என்றவன் சொன்னபோது எரிச்சலுற்றான்.

    இப்போது என்னை உள்ளே அனுமதிக்கப்போகிறாயா இல்லையா?"

    இரு தம்பி. அத்தனைச் சுலபமில்லை. நீ சொல்லும் காரணம் என்னைத் திருப்திபடுத்தினால் ஒழிய என் முதலாளியை நீ சந்திக்க முடியாது என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் தனது கூண்டுக்குச்சென்று ஸ்டூலில் அமர்ந்துகொண்டு சிகரெட் எடுத்தான் கக்கத்தில் தடியும், இடுப்பில் கத்திகொண்ட உறையும் வைத்திருந்த காவலாளி.

    கதிரேசன் கம்பிக்கதவுக்கு அப்புறத்தில் பார்த்தான்.

    சற்றுதூரத்தில் இருந்தது பங்களா.

    வழிநெடுக கார்ப்பாதை தவிர்த்து பச்சைப்பசேல் என்று புல்வெளி. ஓரத்துச்செடிகளை ராட்சச கத்திரிகோல்கொண்டு ஒருத்தன் சென்சார் செய்துகொண்டிருந்தான். இரண்டு அழகான நாய்கள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டிருந்தன. போர்டிகோவில் அயல்நாட்டுக் கார் வானத்தின் மேகத்தை தன் மூக்கில் பிரதிபலித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. பெரிய சைஸ் சாக்லேட்போல அதே வர்ணத்தில் பங்களா.

    முதல்மாடியில் கணமான கறுப்புக் கண்ணாடிகள் அணித்த அகலமான ஜன்னல்கள். விசாலமான சிட் அவுட்டில் உத்தரத்தில் இருந்து தொங்குகிற கூடை இருக்கை.

    கதிரேசன் தன் கண்களை மூடிக்கொண்டான்.

    அந்தக்கூடை இருக்கையில் முன்னும் பின்னும் அசைந்துகொண்டு, உதட்டில் பைப் வைத்திருக்கும் கதிரேசன் - தன் செகரெட்டரி கொண்டுவந்து தரும் வயர் இல்லாத டெலிபோன் வாங்கி லண்டன் கால் பேசிமுடித்துவிட்டு கேட்கிறான், மிஸ் ரோஸி, பாங்கிலிருந்து ஏழு லட்சத்தை ட்ரா செய்துவிட்டீர்களா? காரை ரெடிசெய்யச் சொல்லுங்கள். ஒன்பது மணிக்கு நான் கான்பரென்சில் இருக்கவேண்டும்.

    கதிரேசன் காரின் ஹாரன் ஒலிகேட்டு வந்தான்.

    காவலாளி கம்பிக் கதவுகளைத் திறப்பதற்காக உட்புறத்தில் காத்திருந்த காரின் பின் இருக்கையில் இருத்தவரைப் பார்த்ததுமே தீர்மானித்தான்.

    இவர்தான் பூபேஷ்குப்தா.

    ராஜவர்மா சொல்லியிருக்கிறார். "தலைமுடிகள் செம்பட்டை நிறத்தில் செயற்கையாய் டை செய்யப்பட்டிருக்கும். கோட்சூட்டில்தான் இருப்பார். மீசை இருக்காது. சிகரெட்டை ஹோல்டரில் வைத்துத்தான் குடிப்பார். தங்க பிரேம் கண்ணாடியின் காதுகளுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1