Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kekkathey - Kidaikkathu!
Kekkathey - Kidaikkathu!
Kekkathey - Kidaikkathu!
Ebook86 pages48 minutes

Kekkathey - Kidaikkathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வஸந்தி என்னும் பெண், பரத் என்கின்ற வழக்கறிஞருக்கு தொலைபேசியில் அழைத்து, தன் வீட்டில் பேய் இருப்பதாகவும், யாரோ தங்களை மிரட்டுவதாகவும் அதற்கு உதவுமாறும் கூறுகிறாள். அவர்கள் வீட்டில் இருக்கும் மர்மம் என்ன? பரத், அவர்களுக்கு எவ்வாறு உதவினான்? கேட்டது கிடைத்ததா? காண்போம் பட்டுக்கோட்டை பிரபாகரின் நடையில்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580100908217
Kekkathey - Kidaikkathu!

Read more from Pattukottai Prabakar

Related to Kekkathey - Kidaikkathu!

Related ebooks

Reviews for Kekkathey - Kidaikkathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kekkathey - Kidaikkathu! - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கேட்காதே - கிடைக்காது!

    Kekkathey - Kidaikkathu!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    Ruby-உங்கள் நாய்க்குட்டியின் பெயர் இல்லை. நாயர் கடை டீயும் இல்லை. சிவப்பு நிறக்கல் கெம்பு

    அலுவலகத்தில் தன் மேஜையில் பரத் குனிந்திருந்தான். குறுக்கெழுத்துச் சிக்கலில் மும்முரமாய் இருந்தான். பல்லிடுக்கில் பென்சில்.

    மேலிருந்து கீழ் 18-ல் பென்சில் முனையை வைத்து ஆழமாக சிந்திக்க... கூர் உடைந்துபோனது.

    டெலிபோன்.

    எடுத்தான்.

    ஹலோ, மிஸ்டர் பரத் இருக்காரா? லிப்ஸ்டிக் போட்ட குரல்.

    இருக்காரு.

    அவர்கூட பேசணுமே...

    பேசுங்க.

    ஓ, நீங்கதானா?

    சொல்லுங்க மேடம்.

    நான் உங்களை சந்திக்கணும்.

    என்ன விஷயமா?

    எங்க குடும்பத்திலே ஒரு பிரச்னை.

    என்ன?

    எல்லாத்தையும் போன்லயே சொல்லிடட்டுமா?

    வேண்டாம்; என் வீடு தெரியுமா?

    ராஜாஜி ஹால் மாதிரி அவ்வளவு பாபுலரா?

    விலாசம் தெரியுமான்னு கேட்டேன். மேடம், எனக்கு இடக்கு பிடிக்காது.

    ஜோக்குக்குத்தானே சொன்னேன்! இங்கிதமும் பிடிக்காது போலிருக்கு. சரி; அட்ரஸ் சொல்லுங்க, குறிச்சுக்கிறேன்.

    குறித்துக்கொண்ட பின்...

    உங்க பேரென்ன? என்றான்.

    அவ்வளவு அவசரமா தெரிஞ்சி என்ன பண்ணப்போறிங்க? வஸந்தி. வஸந்த்னு கூப்பிடுவார் விக்டர்.

    வஸந்தின்னு ஒரு பொண்ணு வந்தா நான் இல்லைன்னு சொல்லிடுன்னு வீட்ல சொல்றத்துக்காகதான் கேட்டேன். பை த பை, எனக்கு எக்ஸ்ட்ரா தகவல்கள் தேவையில்லை என்று வெறுப்பாக ரிசீவரை வைத்தான் பரத்.

    உடனே அடித்தது. அடிக்கவிட்டான். பிடிவாதம் பிடித்தது. எடுத்தான்.

    ஸாரி, உங்களை கோபப்படுத்திட்டேனா? என்றாள் அதே அவள்.

    மௌனமாயிருந்தான்.

    மிஸ்டர் பரத், எங்களுக்கு உங்க உதவி தேவை அவசியமா?

    ஆனா பேச்சு உதவி கேக்கற லட்சணத்திலே இல்லை.

    அதான் ஸாரி சொல்லிட்டேனே... எத்தனை மணிக்கு வரட்டும்?

    சாயங்காலம் ஆறு மணிக்கு மேலே.

    அவசியம் வர்றேன்.

    அவள் வைத்தபின் வைத்துவிட்டு தன் வீட்டுக்கு எண் சுழற்றினான்.

    ஹலோ சுசி, நான்தான். என்ன செஞ்சிக்கிட்டிருக்கே...?

    மோகன் பலமுறை கதவைத் தட்டியபின் ஆனந்தி கதவைத் திறந்து உடனே நாணத்தில் வார்த்தைகள் தடுமாற, எப்ப வந்தீங்க? என்றாள் என்றாள் சுசிலா.

    எப்பலேர்ந்து தமிழ் கதைகள் படிக்க ஆரம்பிச்சிருக்கே?

    இப்பதான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியிலேர்ந்து. லன்ச் சாப்பிட்டாச்சா?

    இனிமேதான். சாயங்காலம் எதாச்சும் டிபன் செஞ்சி வைக்கிறே நீ.

    இந்த உத்தரவெல்லாம் வேணாம் கண்ணு. அதுக்கு பொண்ட்டின்னு ஒருத்தி வருவா. அவகிட்ட சொல்லுங்க.

    அவகிட்டதான் சொல்றேன்.

    ஸ்டில் நான் மிஸ் சுசிலாதான். ஞாபகம் இருக்கட்டும். இப்போ நான் தூங்கப்போறேன். தூங்கி எந்திரிச்சி குளிச்சி அப்போ மூடு எப்படி இருக்கோ அப்படி டிபன் செய்வேன். டிபன் செய்யமாட்டேன். என்ன விசேஷம்? யாராச்சும் வர்றாங்களா?

    ஆமாம். ஒரு புது கேஸ்ன்னு நினைக்கிறேன்.

    மை காட்! ஆஃப்டர் சிக்ஸ் ஃபுல் மன்த்ஸ்! அப்போ டிபன் செய்யறதா முக்கியம்? அதைவிட முக்கியமான வேலை இருக்கே.

    என்ன சுசி?

    உங்க சட்டப்புத்தகம் எல்லாம் தூசிதட்டி வைக்க வேணாம்?

    யு... யு... உன்னை நேர்ல பேசிக்கிறேன்.

    பேசிக்கங்க, வர்றவருக்கு எத்தனை வயசிருக்கும்?

    வர்றவர் இல்லை; வர்றவள்.

    நிச்சயமா நான் டிபன் செய்யப்போறதில்லை. சின்ன பொண்ணா?

    நான் பார்த்ததில்லை.

    வெல், பரத், நீங்க இந்த கேஸை எடுத்துக்கறிங்களா இல்லையாங்கிறதை நான்தான் முடிவு பண்ணுவேன்.

    எதைவச்சி முடிவு பண்ணுவே?

    அவளோட அழகை வச்சி என்று வைத்தாள் சுசிலா.

    பரத் சிரித்துக்கொண்டான்.

    மாலையில் வஸந்தியை நேரில் சந்தித்த வினாடியே சுசி இந்த கேஸை கவனிக்கக்கூட விடப்போவதில்லை என்று முடிவு செய்தான்.

    வஸந்தி, மிஸ் இந்தியா போட்டியிலிருந்து நேராய் புறப்பட்டு வந்தவள் போலிருந்தாள். குறைந்தது ஒரு மணி நேரமாவது கண்ணாடி முன் அமர்ந்திருக்க வேண்டும். அவள் நுழைந்ததுமே ஹால்

    Enjoying the preview?
    Page 1 of 1