Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathai Punnagaikkiral
Devathai Punnagaikkiral
Devathai Punnagaikkiral
Ebook331 pages4 hours

Devathai Punnagaikkiral

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வாழ்க்கை என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம்... பள்ளிப்பருவத்தில் சரவணனுடன் படித்த வெண்ணிலா ஒரு தருணத்தில் தன் வாழ்க்கையை இழக்கிறாள். அவள் இழந்த வாழ்க்கையை மீட்க சரவணன் போராடுகிறான். தான் வாழ்கின்ற வாழ்க்கைக்கும், செய்யும் தொழிலுக்கும் தகுதியற்ற சண்முகம். இந்நிலையில் சரவணனுக்கு உதவியாக இருந்தவர்கள் யார்? யார்?

இக்கதையில் வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கஷ்டம்... இவர்களின் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்குமா? வாழ்க்கையை இழந்த வெண்ணிலா மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவாளா? சரவணன் வாழ்க்கையில் தேவதை புன்னகைப்பளா? யார் அந்த தேவதை? நாமும் மெல்லிய புன்னகையுடன்...

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580100906680
Devathai Punnagaikkiral

Read more from Pattukottai Prabakar

Related to Devathai Punnagaikkiral

Related ebooks

Reviews for Devathai Punnagaikkiral

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    No words to say the feelings when finished reading all the charectors are in front of the eyes as Jabbar says in the story person like Saravanan are very rare really enjoyed reading

Book preview

Devathai Punnagaikkiral - Pattukottai Prabakar

https://www.pustaka.co.in

தேவதை புன்னகைக்கிறாள்

Devathai Punnagaikkiral

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

அத்தியாயம் 35

அத்தியாயம் 36

அத்தியாயம் 37

அத்தியாயம் 38

அத்தியாயம் 39

அத்தியாயம் 40

1

சரவணனுக்கு சங்கோஜமாக இருந்தது. கழுத்தில் போடப்பட்ட சந்தனமாலையைக் கழற்றப்போனபோது, அப்படியே இருக்கட்டும், சரவணா. அம்மா, அப்பாவோட சேர்ந்து நில்லு! என்று போட்டோ எடுக்கத் தயாரான மாமா மேல் எரிச்சல்தான் ஏற்பட்டது.

ஆனாலும்... செயற்கையாகப் புன்னகைத்து, போஸ் கொடுத்தான். ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தவர்கள், வழியனுப்ப வந்தவர்கள் என்று எல்லோரும் தன்னையே பார்ப்பது குறுகுறுவென்று இருந்தது.

'இந்த ரயில் இன்றைக்குப் பார்த்துத்தானா இத்தனை தாமதமாக வரவேண்டும்,' என்று யாரையோ சபித்தான்.

மறந்துட்டேன் சரவணா. பிள்ளையார் கோயில்ல அர்ச்சனை பண்ணிட்டு வரச்சொல்லியிருந்தேன். நெற்றியைக்காமி, என்ற அம்மா, விபூதியைப் பட்டையாகப் பூசிவிட்டாள்.

மூக்கில் உதிர்ந்ததைத் தங்கையிடம் கர்ச்சீப் வாங்கித் துடைத்துக்கொண்டு, திருப்பித்தந்தான்.

எப்பண்ணா வருவே? என்றாள் அவள்.

அங்க அந்த ஆபீஸ்ல எப்படிச் சூழ்நிலை என்னன்னு எதுவும் தெரியலையேம்மா. எப்படியும் ஒருமாசம் கழிச்சி ஒரு சனி, ஞாயிறு பிளான் பண்ணிட்டு வர்றேன்.

சரவணனை அப்பா சுந்தரம் கைப்பிடித்து, சற்றுத்தள்ளி அழைத்துச் சென்றார். சட்டையைத் தூக்கி இடுப்பு வேட்டி மடிப்பிலிருந்து கற்றையாகப் பணம் எடுத்துத்தந்தார்.

இதுல அஞ்சாயிரம் இருக்கு, சரவணா. வெச்சிக்கோ.

ஏற்கெனவே மூவாயிரம் தந்தீங்களேப்பா.

தந்தேன். பத்தாதுடா. கடலை போட்ட பணம் சாயங்காலம்தான் கைக்கு வந்திச்சி. பத்திரமா பையிலேவெச்சிக்கோ.

பரவால்லைப்பா.

என்ன பரவால்லை? மெட்ராஸ்ல எல்லாமே வெலை அதிகம் சரவணா. ஒரு கட்டிலு, மேஜைன்னு வாங்க வேணாமா? புதுசா வேலைக்குப்போற பையன் நல்லா ரெண்டு சட்டை, பேண்ட்டு வாங்க வேணாமா? இருக்கட்டும்ப்பா. நீ தங்கப்போற ரூமோட விலாசம் எழுதிக் கொடுத்துட்டுப் போறேன்னியே...

அஸ்வின்கிட்ட எழுதிக் குடுத்திருக்கேன்ப்பா.

புது இடம், பழக்கப்படாத ஜனங்க. பார்த்து நடந்துக்க சரவணா.

சரிப்பா.

உன் ஃப்ரண்டு நசீரோட ரூமுலதானே தங்கறே? அதுக்கு வீட்டு ஓனருக்கு நீ தனியா அட்வான்ஸ் எதுவும் குடுக்கவேண்டியிருக்குமா?

தெரியலைப்பா. நான் போய்ப் பேசிக்கிறேன்.

அப்படி எதுவும் கொடுக்கணும்னா பணம் போதாதேப்பா. அடுத்த வாரத்துல கொஞ்சம் அனுப்பிவைக்கட்டுமா?

தேவைப்பட்டா சொல்றேன்ப்பா. அப்பா...

என்ன, சரவணா?

ஒண்ணுமில்லை. தபால் எழுதறேன். உங்க உடம்பைப் பார்த்துக்கங்க. உழைச்சது போதும். இனிமே, குடும்பத்தை நான் பார்த்துக்கறேன். மூணு வருஷமா வேலை கிடைக்காம அலைஞ்சி அப்ளிகேஷன், இன்டர்வியூன்னு நிறையச் செலவு வெச்சிட்டேன்ப்பா. கஷ்டமா இருக்குப்பா.

என்னடா பேச்சு இது? குஞ்சு கோழிக்குப் பாரமா? நீ என்ன சும்மாவா வீட்ல உக்காந்திருந்தே? முயற்சி செஞ்சிக்கிட்டுதானே இருந்தே? ஏழெட்டு வருஷமா வேலை கிடைக்காமத்திரியற பசங்க நம்ம ஊர்லியே இருக்கானுங்களே. புறப்படற நேரத்துல எதையாச்சும் நினைச்சி மனசைக் கஷ்டப்படுத்திக்காம சந்தோஷமா புறப்படு! என்று அப்பா சொன்னாலும், கண் கலங்கத்தான் செய்தது.

தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அம்மா, பதறிப்போய் அருகில் வந்து கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

என்னங்க சொன்னீங்க? புள்ளை ஏங்க கண் கலங்குது?

நான் என்ன சொன்னேன்? மூணு வருஷமா எனக்கு நெறையச் செலவு வெச்சிட்டானாம்... சொல்றான்.

என்னப்பா சரவணா இது... எங்க புள்ளைங்களுக்குச் செய்யாம, யாருக்குச் செய்றதுக்காக உழைக்கிறோம்?

உழைச்சது போதும்னு சொல்றேன். இனிமே, மாசா மாசம் என் செலவு போக, மிச்சச் சம்பளத்தை அப்படியே அனுப்பிவெச்சிடறேன். மூட்டுவலிக்குத் தைலம் தேச்சிக்கிட்டே காலைல நாலு மணிக்கு எந்திரிச்சி மாட்டுக் கொட்டகையில் மாரடிக்கிறதையெல்லாம் நிறுத்திடும்மா. ஆள் போட்டுக்கம்மா. சரியா வரலைன்னா... ஒரு மாட்டை மட்டும் வெச்சிக்கிட்டு, மூணு மாட்டையும் வித்துடும்மா.

அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். என்னங்க, பணத்தைக் குடுத்தீங்களா?

குடுத்துட்டேன். சரவணா, மூர்த்திவர்றான். அவன்கிட்ட உனக்கு எவ்வளவு சம்பளம்னு சொல்லிடாதே. ஊர் பூரா போய்ச்சொல்லிட்டுதான் வீட்டுக்குப் போவான்.

மூர்த்தி பிளாட்பாரக் கும்பலில் சரவணனைக் கண்டுபிடித்து உற்சாகமாகக் கையாட்டியபடி, வந்து சேர்ந்து, கையில் ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்தான். தோளில் கைபோட்டுத் தள்ளி அழைத்துச்சென்றான்.

என்னடா இது?

பெரிய மனுஷங்களைப் பார்க்கப்போனா எலுமிச்சம்பழம் குடுப்பாங்க. இத்தனை நாளா நீ வேலை கிடைக்காம திரிஞ்சிட்டிருந்தே. இப்ப ஆபீசராயிட்டியே. பெரிய மனுஷன் தயவுவேணாமா? யப்பா, என்னை மறந்துடாதேப்பா.

என்னடா இப்படிப் பேசறே? உன்னை எல்லாம் எப்படிடா மறப்பேன்?

சும்மா சொன்னேன்டா. நீயே மறந்தாலும், நான் விட்ருவனா? என் கவரிங் கடை பர்சேசுக்கு மெட்ராஸ் போறப்பல்லாம் லாட்ஜ் எடுத்துத்தான் தங்குவேன். இனிமே உன் ரூமுலேயே வந்து தங்கிடுவேன். செலவு மிச்சம். என்ன, தங்கலாமா?

தாராளமா?

விலாசம் கொடுக்காம தாராளமான்னு சொல்லிட்டாப் போதுமா? மூர்த்தி பாக்கெட்டிலிருந்து பேப்பர், பேனா எடுத்துக்கொண்டு தயாரானான்.

மூர்த்தி, எனக்கே விலாசம் தெரியாது. புது நம்பர், பழைய நம்பர்னு குழப்பமா இருக்கு. நான் போனதும் சரியான விலாசத்தை உனக்கு எழுதறேன்.

நசீரோடதானே தங்கறே?

ஆமாம்.

நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லு. அந்தப் பய போனதடவை ஊருக்கு வர்றப்பவே பொக்காடி ரம்மு வாங்கிட்டு வர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டான். அடுத்த தடவை வாங்கிட்டு வரலைன்னா உதை விழும்னு சொல்லு.

டேய்... அப்பா - அம்மால்லாம் இருக்காங்க. மெதுவாப் பேசுடா.

அவங்க காதுல விழாது. ஆமா, உனக்கு ஆபீஸ் எங்க?

பழைய மகாபலிபுரம் ரோட்டுல கந்தன்சாவடிக்குப் பக்கத்துல.

திருவான்மியூலேர்ந்து பக்கமா?

பக்கம்தான். பஸ்சுல போயிடலாம்.

பஸ்சுலயா? போடா முட்டாள். கம்ப்யூட்டர் இன்ஜினியருடா நீ. அம்சமா ஒரு பைக்கு வாங்கிக்கோ. அதான் ஏகப்பட்ட பயலுவ லோன் தர்றானுங்களே.

பார்க்கலாம்.

என்னடா! காமராஜர் மாதிரிப்பேசறே. போனதும் பைக்கு வாங்கிடு. சூப்பரா ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிடு. அப்பறம் ஒரு செல்போனு வாங்கிடு. அப்பறம் பாரு... லட்டு லட்டான ஃபிகரை எல்லாம் பிக்கப்பண்ணலாம்.

டேய்... சும்மா இருடா.

சரவணனுக்கு மூர்த்தியை எப்படிக் கத்தரிப்பது என்று புரியவில்லை. அம்மா, அப்பா, தங்கையோடு ரயில் வரும்வரை ஏதாவது குடும்ப விஷயங்கள் பேசவேண்டும் என்று ஆசையாக இருந்தது.

சரவணா... உனக்கு மெட்ராஸ் அதிகப்பழக்கமில்லையே?

ரெண்டு தடவை இன்ட்டர்வியூக்குப் போயிட்டு வந்திருக்கேன். ஒவ்வொரு நாள்தான் தங்கினேன்.

நீ போய் நிரந்தரமா தங்கப் போறேல்ல. பாரு... பிரமிச்சிடுவே. நான் ஒவ்வொரு தடவை போறப்பவும் பெருமூச்சுவிட்டுப் பெருமூச்சுவிட்டு, நெஞ்சே வலிக்கும்டா. என்ன ஸ்டைலா இருக்காளுங்கடா பொண்ணுங்க. சினிமா ஸ்டார் எல்லாம் சும்மாடா. சத்தியம் தியேட்டர்லயும், பாண்டி பஜார்லயும் ஒருமணி நேரம் போய் நின்னு பாரு. ஒவ்வொண்ணும் தேவதைடா.

மூர்த்தி... நான் வேலைக்காகப் போறேன், என்றான் கடுப்புடன்.

இருபத்துநாலு மணிநேரமும் வேலை பார்த்துகிட்டே இருப்பியா? நான் முதல் போட்டுச் சொந்தக்கடை நடத்தறேன். நானே ஞாயித்துக்கிழமையானா, நம்ம செட்டோட பாண்டிச்சேரி போயிட்டுச் செலவு பண்ணிட்டு வர்றேன். உனக்கென்ன?

நீ வேற டைப்பு மூர்த்தி. எனக்கு நிறையப் பொறுப்பு இருக்கு. வாழ்க்கையை நான் வேறமாதிரிப் பார்க்கறவன்.

எங்களுக்கு மட்டும் பொறுப்பு இல்லையா? டேய்... ஒண்ணு சொல்றேன். மனசுல வெச்சிக்கோ. இந்த மனுஷப் பொறப்பு நிச்சயமில்லாதது. எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம். இருக்கறவரைக்கும் ஜாலியா, சந்தோஷமா என்ஜாய்பண்ணணும்.

எது சந்தோஷங்கிறது ஆளாளுக்கு மாறும், மூர்த்தி. இப்ப எதுக்கு அநாவசியமா வாக்குவாதம்? விடு.

சரி, விடு. ரெண்டு வாரம் கழிச்சி மெட்ராஸ் வரவேண்டிய வேலை இருக்கு. அப்ப வேலை கிடைச்சதுக்கு நீ எனக்கு பார்ட்டி குடுப்பியில்ல. அப்ப டீட்டெய்லா பேசலாம்.

தூரத்தில் ரயிலின் விளக்கு வெளிச்சம் முதலில் தெரிந்து, பிறகு, ரயில் தெரிய... பிளாட்பாரம் பரபரப்பாகியது.

அப்பாவும், மாமாவும் லக்கேஜ்களை ரயிலில்வைத்து, இரவுச் சாப்பாடு கொண்ட கேரிபேக்கைக் கொக்கியில் மாட்டினார்கள்.

தண்ணீர் பாட்டில் எடுத்துவைக்க மறந்ததற்காக, அஸ்வினியை அம்மா திட்ட... மூர்த்தி தான் வாங்கி வருவதாக ஓடினான்.

சரவணன், சந்தன மாலையைக் கழற்றி, அஸ்வினி கலங்க, அவள் முகத்தைப் பார்த்தான்.

கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டுவந்து, அம்மாவுக்கு ஒத்தாசையா இரு, அஸ்வினி.

சரிண்ணா... சென்னைல கொசு அதிகம். ஒரு கொசுவலை வாங்கிக்கோ. சீயக்காதூள் வெச்சிருக்கேன். அங்க போய் ஷாம்பூக்கு மாறிடாதே. முடி கொட்டிடும்.

சரி... முதல் மாசச்சம்பளத்துல உனக்கு ஒரு வாட்ச் வாங்கிட்டு வர்றேன், அஸ்வினி.

ரயில் புறப்பட சிக்னல் போட்டதும், அம்மா, அப்பாவை எச்சில் விழுங்கப் பார்த்துவிட்டு, ஏறிக்கொண்டான்.

ரயில் நகரத் துவங்க...

கூடவே நடந்த மாமா, திடீரென்று இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து, அவன் கையில் திணித்தார்.

எதாச்சும் வாங்கிக்கோ.

ஓட்டமாக வந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினான் மூர்த்தி.

பாரு... கேக்கவே மறந்துட்டேன். உனக்கு எவ்வளவுடா சம்பளம்?

லெட்டர்ல எழுதறேன்.

ரயில் விலக விலக, கையசைத்தான் சரவணன்.

கதவை மூடிவிட்டுத் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து, ஜன்னல் வழியாக இருட்டுச் சதுரத்தை வெறித்தபோது, வழிந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்துக்கொண்டான்.

'அம்மா, அப்பா, அஸ்வினி மூவரும் என்னைத் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். வேறு வழியில்லாமல், ஒரு பொய் சொல்லவேண்டிய நிர்பந்தம் எனக்கு. உங்களை எனக்குத் தெரியும். கண்டிப்பாக மன்னித்துவிடுவீர்கள்.'

2

மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் நின்றதும், ஏற்பட்ட பரபரப்பில், உறக்கம் கலைந்து, சார்... மாம்பலம் இன்னும் வரல்லையே? என்றான் சரவணன்.

இதுதாங்க மாம்பலம். சீக்கிரம் இறங்குங்க.

அவசர அவசரமாகப் போர்வையைச் சுருட்டி, லக்கேஜ்களை அள்ளிக்கொண்டு இறங்கியதும், அடுத்த விநாடி ரயில் நகர்ந்தது.

வானத்தில் இருட்டு கரைந்துகொண்டிருந்தது. சில்லென்று காற்று வீசி, உடலைச் சிலிர்க்கச் செய்தது. முன்னிரவின் மழை அடையாளங்களாக ஆங்காங்கே தண்ணீர்தேங்கி.. விளக்கு வெளிச்சங்களைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. சுவரில் ஒரு போஸ்டர் பாதி உரிந்து தலை கவிழ்ந்திருந்தது.

சிகப்புச்சட்டை போர்ட்டர் அணுகி, தூக்கட்டுமா? பத்துரூபா குடு. போதும் என்றான்.

வேணாம். நான் பாத்துக்கறேன், என்று போர்வையை உதறிச் சீராக மடித்து, ஒரு பேகுக்குள் திணித்துத் தோள்களில் மாட்டி, கைகளில் தூக்கி லக்கேஜ்களுடன் மெதுவாக வெளியே வந்தான் சரவணன்.

அப்போதுதான் திறந்த டீக்கடையில் பத்திரிகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். சிகரெட் வாங்கிக் கயிறு நெருப்பில் பற்றவைத்த ஒரு இளைஞன் இன்னொரு கையில் அந்த நேரத்திற்கு பெப்சி வைத்திருந்தது வியப்பாக இருந்தது.

எங்க போகணும்? என்று மூன்று ஆட்டோக்காரர்கள் சூழ்ந்துகொள்ள.

திருவான்மியூர்... என்றான் தயங்கி.

நூறுரூபா குடு. ஏறு.

நூறா? அதிகம்ங்க.

காலைல எவன் வருவான்? ரிடன் சவாரி கிடைக்காது. சிங்கிள்தானே? இன்னொரு பார்ட்டியை ஏத்திக்கிறேன். அம்பது தர்றியா?

சரி.

வெயிட்பண்ணு.

அந்த ஆட்டோ டிரைவர் இன்னொரு பார்ட்டி பிடிக்க ஸ்டேஷனுக்கு வெளியில் வந்துகொண்டிருந்த பயணிகள் கூட்டத்தை நோக்கிச் சென்றான்.

சரவணன் லக்கேஜ்களைக் கடைவாசலில் வைத்துவிட்டுத் தண்ணீர் வாங்கி வாய் கொப்புளித்தான். ஸ்ட்ராங்காக டீ சொல்லிவிட்டு, செய்தித்தாள்களின் விளம்பர போஸ்டர்களில் தலைப்புச் செய்திகளைப் பார்த்தான்.

இரண்டு மடக்கு டீ பருகியபோது, ஆட்டோ டிரைவர் வந்து, வா சார்... என்ன, டீ குடிக்கிறியா? சரி... நீ முடி. பார்ட்டி தூரத்துல இருக்கு. அதை பிக்கப்பண்ணிட்டு வந்து, உன்னை ஏத்திக்கிறேன், என்று சென்றான்.

அவசரமாகக் குடித்த டீ, நாக்கைச் சுட்டது. கடையில் சில்லரை இல்லாததால் வாங்கிய வார இதழைப் புரட்டப்போனபோது ஆட்டோ வந்துவிட்டது.

லக்கேஜ்களுடன் பின்புறம் வந்து ஏறப் போனபோதுதான், உள்ளே அமர்ந்திருந்தது ஒரு பெண் என்பதை உணர்ந்து தயங்கினான்.

சீக்கிரம் உக்காரு சார். லக்கேஜ்களைப் பின்புறம் வைப்பதற்கு அவள் உதவினாள். இடைவெளிவிட்டு, இவன் அமர்ந்ததும், ஆட்டோ புறப்பட்டது

சூரிதார் அணிந்திருந்த அந்தப்பெண் இயல்பாக ஹேர்பின் நீக்கி, வாடின பூச்சரம் அகற்றி வீசினாள். பாண்ட் நீக்கி, விரல்களால் கோதி, மீண்டும் மாட்டிக்கொண்டாள்.

ஏன் சார்... சென்னைல மட்டும் மழையே சரியாப் பெய்யமாட்டேங்குது? என்ற டிரைவர், வண்டியை ஓட்டியபடி பீடி பற்றவைத்துக்கொண்டான்.

அவள் இருமினாள்.

அவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால்... சரவணனுக்கு எரிச்சல் ஏற்பட்டது.

உன்னைத்தான் சார் கேக்கறேன். தூங்கிட்டியா?

இல்லை. நேத்துகூடப் பெஞ்சிருக்கு போலிருக்கே.

சொம்மா அப்பப்போ நனைச்சிவுடுது சார். இதெல்லாம் மழையா? சூட்டைக்கிளப்பி நோவைத்தான் குடுக்குது. பட்ணத்துல நல்லவன் குறைஞ்சி போயிட்டான் சார். நேர்மை கெடையாது. ஒழுக்கம் கெடையாது. அப்பால மழை எப்படிப் பெய்யும்? என்ன நான் சொல்றது?

சரவணனுக்கு அவனோடு விவாதம் தொடர்வதில் விருப்பமில்லை அதுவும் ஒரு பெண்ணுக்கு முன்னால்.

கரெக்டுதான், என்றான்.

திடீரென்று அவள் பேசுவாள் என்று சரவணன் எதிர்பார்க்கவில்லை.

என்ன கரெக்டுதான்? அவர்தான் ஏதோ சொல்றார்னா நீங்களும் அதை ஒத்துக்கறீங்களா? நேர்மையும், ஒழுக்கமும் சிட்டில மட்டும்தான் குறைஞ்சிருக்கா? டவுன்லயும், கிராமத்துலயும் எல்லாரும் அவதார புருஷங்களா? பொதுவா... மனுஷனோட குணம், பொல்யூட் ஆய்டுச்சி. இதுல சிட்டி என்ன, கிராமம் என்ன? மழை பெய்றதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

டிரைவர் தலையை ஆட்டிச் சிரித்துவிட்டு, உனக்கு என்னம்மா இவ்வளவு கோபம் வருது? மனுஷனோட குணம் என்ன ஆய்டுச்சின்னு சொன்னே? எனக்கு அவ்வளவு இங்கிலீஷ்லாம் வராது, என்றான்.

ம்... மாசு படிஞ்சிருச்சுன்னேன். கறை ஆய்டுச்சி.

வாஸ்தவம்தான். ஆனா... இன்னிக்கும் கிராமத்துல இரக்கம் அப்படியே இருக்கும்மா. ஒரு கிராமத்துக்குப்போய், சாரு மயக்கம்போட்டு விழுந்தாருன்னு வச்சிக்க... பதறிடுவானுங்க. உதவிபண்ணி, குடிக்கக் கொடுத்து ஊர் விசாரிச்சி, அனுப்பிவெப்பாங்க. அதுவே, இங்கே மயக்கம் போட்டாருன்னு வையி... லட்சம்பேர் கவனிக்காம ஒதுங்கிப்போவான். ரெண்டு பேரு, கிட்டவந்து வாட்ச், மோதிரம் எல்லாம் உருவிகிட்டுப் போவான். முப்பது வருஷமா நான் பார்க்காத மெட்ராசா?

அவள் தன்னைக் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லிக்கொண்டிருக்க, தான் எதுவும் பேச இயலாமல் போனதில் வெறுப்பு மேலிட... சரவணன் கோபமாகச் சொன்னான்.

எல்லாரும் அப்படி இல்லைங்க. இதே சென்னைல சமூகசேவை நடக்காம இருக்கா? உதவி செய்றவங்க சுத்தமா இல்லாம போயிட்டாங்களா? உங்களைமாதிரி ஆட்டோக்காரங்கள்ல அருவா எடுக்கறவங்களும் இருக்காங்க. அம்பதாயிரம், லட்சம்னு பயணிங்க தவறவிடறதைப் பொறுப்பா போலீஸ்ல ஒப்படைக்கிறவங்களும் இருக்காங்க. உண்டா, இல்லையா?

நிசம்தான். கொஞ்சம்பேர் இருக்கத்தான் செய்றான்.

அப்போ ஒட்டுமொத்தமா ஆட்டோக்காரங்க எல்லாம் ரவுசுங்க, அயோக்கியப் பசங்கன்னு சொன்னா ஒத்துக்குவீங்களா?

அதெப்படி முடியும்? தப்பு பண்றவன் கொஞ்சம் பேர்தான். ஆனா... எல்லாருக்கும் கெட்டபேர் வாங்கித்தந்துடறானுங்க.

அந்தமாதிரிதானே எல்லாமே! பொறுப்பில்லாத ஜனங்க, கொஞ்சம்பேர் இருந்தா, ஒட்டுமொத்தமா ஊரையே ஏன் தப்பாச் சொல்லணும்?

மடக்கிட்டே வாத்தியாரே! நம்ம லைன்லயே கேள்விகேட்டு, பேச முடியாம பண்ணிட்டே. நல்லாப் பேசறே சார். எந்த ஊர் சார் உனக்கு?

அரியலூர்.

இன்னா விஷயமா சார் சென்னை வந்திருக்கே?

இங்க வேலை கிடைச்சிருக்கு.

திருவான்மியூர்ல யார் வூடு சார்? சொந்தக்காரங்க வூட்ல தங்கறியா?

இல்ல. என் ஃப்ரண்டு ரூம்ல.

அவள் இருக்கும்போது, தன்னைப்பற்றிய சொந்தத் தகவல்களைச் சொல்லச் சங்கடமாக இருந்தாலும், டிரைவரின் கேள்விகளைக் 'கொஞ்சம் பேசாம வாங்க,' என்று சொல்லி, அவனால் தடுக்க முடியவில்லை.

உனக்கு எந்த ஊரும்மா?

சரவணனுக்கு ஏனோ அவளைப்பற்றிய தகவல்கள் அறிய... சின்ன ஆர்வம் ஏற்பட்டு, அவளின் பதிலுக்குக் காத்திருந்தான்.

உன்னைத்தாம்மா கேக்கறேன்.

கொஞ்சம் பேசாம வர்றீங்களா? என்றாள்.

டிரைவர் சைலண்ட்டாகிச் சாலையைப் பார்த்து ஓட்டினான்.

'இதையேதானே நானும் சொல்ல நினைத்தேன், என்னால் ஏன் இயலவில்லை. இவளால் எப்படி முடிந்தது?' என்று சரவணன் யோசித்துக்கொண்டிருக்க... ஆட்டோ, திருவான்மியூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று வெட்டியது. திணறியது. நின்றுபோனது.

என்னாச்சுப்பா? என்றாள்.

பெட்ரோல் போடணும்னு நெனைச்சேன். பேச்சு சுவாரசியத்துல மறந்துட்டேன். சாரி சார்... பக்கத்துல பங்க்கும் இல்லை! தலையைச் சொறிந்தான் அவன்.

என்னப்பா இப்படிப்பண்ணிட்டே? சரி... நான் நடந்து போய்க்கிறேன். கிட்டத்தட்ட வந்தாச்சி. பக்கம்தான். இந்தா அம்பது ரூபா... இவங்களை வேற ஆட்டோ ஏத்தி அனுப்பிடு.

சரவணன் தன் லக்கேஜ்களுடன்

Enjoying the preview?
Page 1 of 1