Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kutram Melum Kutram
Kutram Melum Kutram
Kutram Melum Kutram
Ebook95 pages57 minutes

Kutram Melum Kutram

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850815
Kutram Melum Kutram

Read more from Pattukottai Prabakar

Related to Kutram Melum Kutram

Related ebooks

Related categories

Reviews for Kutram Melum Kutram

Rating: 3 out of 5 stars
3/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 3 out of 5 stars
    3/5
    The story is in complete how and y this kolaveri

Book preview

Kutram Melum Kutram - Pattukottai Prabakar

http://www.pustaka.co.in

குற்றம் மேலும் குற்றம்

Kutram Melum Kutram

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

1

மெல்லிய கார்பன் ஃபிரேமில் கண்ணாடி அணிந்த விக்னேஷ் கம்ப்யூட்டரில் ஒரு ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருந்தான். மீசையின் இடத்தில் லேசான பசுமை மின்ன… ஒரு கையால் காலரை மறைத்து தோள் வரை தொங்கின பின்னத் தலைமையிரைக் கோதிக் கொண்டிருந்தான்.

அருகில் காகிதக் கோப்பையில் காபி சுருக்கம் வைத்த ஆடை அணிந்து கொண்டது.

‘ச்சே!’ என்று விரல்களை உதறிக் கொண்டான்.

சரியாகத்தானே கமான்ட்ஸ் தருகிறேன். எங்கோ உதைக்கிறதே ஏன்?டிராயரைத் திறந்த வேறு ஒரு ஃபிளாப்பி எடுத்து கம்ப்யூட்டரின் டிரைவில் செருகினான்.

ஆறின காபியைப் பார்த்தான். பால்பாயிண்ட் பேனாவின் மறுமுனையால் அதன் ஆடையை அவிழ்த்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஜீன்சில் துடைத்துக் கொண்டு ஒரே மூச்சில் பருகினான்.

ஜீனத் துப்பட்டாவை தோளில் எறிந்தபடி சூயிங்க மெல்லலுடன் வந்து தன் கம்ப்யூட்டரின் முன்பாக அமர்ந்தாள்.

"என்ன விக், முடிச்சுட்டியா?’’

அவனுக்கு சூயிங்கம் நீட்டினாள். அவன் மறுத்து பாக்கெட் திறந்து உதடுகளாலேயே ஒரு சிகரெட்டைப் பற்றி இழுத்து பற்ற வைத்துக் கொண்டு…

"நீ கொஞ்சம் பாரேன் ஜீனத். ’’

"என்ன ப்ரோக்ராம் எழுதறேப்பா?’’

"மூன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி தெரியுமா?’’

உதடுகளால் பிதுக்கினாள்.

"தமிழ் நாவல் படிக்கிற ஜாதிக்குத்தான் தெரியும், பரத் என்னோட ஃபிரெண்டு. அவன் ஆபிசை கம்ப்யூட்டரைஸ் பண்றான். அவனோட தேவைகளை குறிச்சுக்கிட்டு வந்தேன். ஆல் பர்ப்பஸ் ப்ரோக்ராமா கம்பைண்ட் பண்ணிருக்கேன். ’’

"நகரு’’ என்று அவனுடைய உயர நாற்காலியில் ஜீனத் அமர்ந்து ஸ்க்ரீனில் அந்த ப்ரோக்ராமை செக் செய்யத் துவங்க…

விக்னேஷ் ஜன்னலருகே வந்து. . . கயிறு இழுத்து வெனீஷயன் பிளைண்ட் பிளாஸ்டிக் தடுப்புகளைத் திறக்கச் செய்து. . . கீழே மௌன இயக்கத்தில் இருந்த சென்னையைப் பார்த்தான்.

கதவைக் கொஞ்சம் திறந்ததும், மௌனச் சென்னை சத்தச் சென்னையானது. புகையை வெளியே ஊதினான்.

இரவு மழையிலிருந்து நகரம் இன்னும் மூடு மாறாமல் இருந்தது. வானம் அவ்வப்போது கமறிக் கொண்டிருக்க, கட்டிங்களுகம், சாலைகளும் ஈரம் உலர அவகாசமில்லாமல் இயக்கத்தைக் துவங்கியிருந்தன.

பாதையோரங்களில் ரெயின்கோட் வியாபரிகள் முளைத்திருந்தார்கள். பஸ் ஸ்டாப்களில் பத்தில் நான்கு பேரிடம் குடை இருந்தது. வேட்டிகள் மடக்கிக் கட்டிக்கொண்டு நடந்தனர். ஒவ்வொரு பஸ் கடக்கும் போதும் சாலைத் தண்ணீரின் அபிஷேகத்திலிருந்து தப்பிக்க மக்கள் நான்கடி சைடில் தாவிக் கொண்டிருந்தார்கள்.

‘கிக். . . . கிக். . . . கிக். . . . ’

சப்தம்கேட்டதும் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த டிஜிடல் டைரியை எடுத்து திறந்து பார்த்தான்.

‘CALL YOUR WIFE’ -என்று இவனே பதிவு செய்து வைத்திருந்த குறிப்பை பொறுப்பாக அந்த டைரி நினைவூட்டியது. சிகரெட்டை வெளியே சுண்டி அது ஒரு ஓட்டுச் சரிவில் த்தித் தத்தி ஒரு இடுக்கில் சிக்கியதைப் பார்த்துவிட்டு வந்து போனை எடுத்தான்.

"கிளாரா, வீட்டுக்குப் போட்டுக் கொடு’’ என்று வைத்தான்.

"பரவாயில்லையே. . . வீட்டு ஞாபகம் எல்லாம் இருக்கே உனக்கு’’ என்றாள் ஜீனத்.

"மறந்துடக் கூடாதுன்னுதான் டைரில் போட்டு வெச்சி ஞாபகப் படுத்தச் சொன்னேன். ’’

"எத்தனாம் மாசம் இது?’’

"ஒம்போதாம் மாசம். . . ’’

"ரெகுலரா செக்-அப் போறாங்களா?’’

"ஓ யெஸ், நடந்து போற தூரத்திலதான் ஹாஸ்பிடல். என்னை எதிர்பார்க்க மாட்டா. இன்னைக்கு செக்-அப் போய்ட்டு வந்திருப்பா. அதான் விசாரிக்கணும். ’’

"யாரு டாக்டர்?’’

"வேதவல்லின்னு பேரு. கெஸ் ஹர் ஏஜ் ஜீனத். ’’

"நிச்சயமா அறுபதுக்கு மேல். ’’

"நோ. ட்வெண்டி ஃப்பைவ். ’’

"இந்த ஜெனரேஷன்ல வேதவல்லியா? காட்!’’

"ரொம்ப நல்லா பார்க்கறாங்க. ’’

"ஸ்கேன் பண்ணியாச்சுல்ல?’’

"யெஸ். பலதடவை ஹெட் பொசிஷன் பார்க்க பண்ணிட்டாங்க. ’’

"என்ன பேபி?’’

"எங்களுக்கு சொல்ல வேணாம்னு சொல்லிட்டேன். ’’

"ஏன் விக்?’’

"எதுக்கு முன்கூட்டியே தெரிஞ்சுக்கணும்? எந்தக் குழந்தையா இருந்தா என்ன? எங்களுக்கு முதல் குழந்தை ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறதே த்ரில்தானே ஜீனத்?’’

"நான் சர்புதீனை பெத்துக்கிட்டப்போ நாலாம் மாசமே பொறுமை இல்லாம கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். ’’

"என் வைஃபுக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இருக்கு இதில. ’’

"என்ன பந்தயம்?’’

"நான் பெண் குழந்தைன்னு சொல்றேன். ஆவ ஆண் குழந்தைதான்னு

Enjoying the preview?
Page 1 of 1