Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ippadithan Aarambikkirargal
Ippadithan Aarambikkirargal
Ippadithan Aarambikkirargal
Ebook122 pages1 hour

Ippadithan Aarambikkirargal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

காலையில் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து விட்டு மாலை சீட்டாட செல்லும் தந்தை. குடும்பத்தை பற்றி கவலையின்றி தன் சுயநலத்துக்காக உழைத்து பணம் சேர்க்கும் சுயநல அண்ணன். பத்தாவது படிக்கும் தங்கை. இவர்களுக்கு வீட்டிலும் உழைத்து பணிக்கும் சென்று வருபவள்தான் சித்ரா. முப்பது வயதை தொட்டவள். அவளது திருமணத்திற்கான முயற்சிகள் பையன் வீட்டார் கேட்கும் சீர்வரிசை காரணமாகவும், ஏற்று நடத்த அக்கரையற்ற குடும்பத்தினராலும் பல முறை தோல்வியடைகிறது . இயற்கையான மன உணர்சிகளுடன் வாழும் சித்ராவின் மனநிலையையும், அவள் திடீரென எடுக்கும் முடிவுகளும் என்ன என்பதை கதையை வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580100906505
Ippadithan Aarambikkirargal

Read more from Pattukottai Prabakar

Related to Ippadithan Aarambikkirargal

Related ebooks

Reviews for Ippadithan Aarambikkirargal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ippadithan Aarambikkirargal - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள்

    Ippadithan Aarambikkirargal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    பக்கத்தில் இருக்கும் கோயிலில் இருந்து அய்யப்பன் சுவாமி பஜனை ஒலி கொஞ்சம் தேய்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அதை மீறி மாடியில் கணபதிராமன் ஆக்டிவ் வாய்ஸ், பாசிவ் வாய்ஸ் என்று ஆங்கில இலக்கணம் டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கும் கனத்த ஒலி கேட்டது.

    ‘ஷோபா சில்க் ஹவுஸ், கோயமுத்தூர்’ என்று இரண்டு பக்கங்களும் விளம்பரம் செய்து கொண்டிருந்த மஞ்சள் பையுடன் சமையல் கட்டிலிருந்து வெளியேறி கொல்லைப்புறம் வந்தாள் சித்ரா.

    கிணற்றுக்குப் பக்கத்தில் துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு கால்களை மாறி, மாறி அசைத்துக் கொண்டே, பின்னலின் முனையை நோண்டிக் கொண்டே, எப்படி வானத்தில் இருந்து பெய்யும் மழையானது செம்மண் பிரதேசத்தில் பட்டதும் சிவப்பான நீராக மாறி அந்த மண்ணுடன் இரண்டறக் கலந்து விடுகிறதோ அப்படி... என்னக்கா? என்றாள் கவிதா புத்தகத்தில் இருந்து நிமிர்ந்து.

    கவி, கவி, என் கண்ணுல்ல, சட்னிக்கு தேங்கா திருகி வச்சிட்டுப் பார்க்கறேன், ஒரு பச்சை மொளகாக்கூட இல்லை. ரெண்டே நிமிஷத்தில வந்துடலாம். இந்தா பை, போய் கால் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்துடு

    போக்கா, நாளைக்கு அரைப் பரிட்சை ஆரம்பம். தெரியுமில்லை?

    நானே போய்ட்டு வந்துடுவேன். அடுப்புல சாதம் வச்சிருக்கேன். தெரு முனைக்குப் போய்ட்டு வர எவ்வளவு நேரமாகும்டி?

    என்னை டிஸ்டர்ப் பண்ணாதேக்கா, டைம் இல்லை. எப்படி வானத்தில் இருந்து பெய்யும் மழையானது செம்மண் பிரதேசத்தில் பட்டதும் சிவப்பான நீராக மாறி அந்த மண்ணுடன் இரண்டறக் கலந்து விடுகிறதோ அப்படி... அண்ணனை அனுப்பேன். காலைல சைக்கிள் எடுக்க யார் வர்றா?

    எனக்குத் தெரியும். நீ படி. திங்கறப்போ சட்னி எங்கேன்னு வக்கணையாக் கேளு... அப்ப பேசிக்கிறேன் என்று விருட்டென்று திரும்பி உள்ளே நடந்தாள் சித்ரா, கண்ணாடிக்கு முன்னாடி நின்னு ஒரு மணி நேரம் தலை சீவுவே. அதெல்லாம் டைம் வேஸ்ட் இல்லை.

    வீட்டின் வாசலில் மூங்கில் தட்டிகளால் அடைத்து அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் கம்பெனியில் மாரிமுத்து ஒரு சைக்கிளுக்குக் காற்றடித்துக் கொண்டிருந்தான். ‘கணபதி மிதிவண்டி நிலையம்’ என்று சின்னதாக மூலைகளில் துருபிடித்த போர்டு, உள்ளே வரிசையாக நிறுத்தப்பட்ட ஐந்து சைக்கிள்கள், ஒரு மேஜை. அதன் மேல் பரப்பின் இடுக்கில் செருகி வைக்கப்பட்ட புகையும் ஊதுபத்தி. ஓர் அஞ்சு நிமிஷம் முன்னே பின்னே ஓடும் அந்தக்கால அலாரம் டைம்பீஸ். பெயர், நேரம் குறித்துக் கொள்ள ஒரு நோட்டு. சுவரில் மயில் மேல் ஹாயாக உட்கார்ந்து கொண்டு தலையைச் சுற்றிலும் சரவணபவ என்று தனித்தனி எழுத்தாய் வைத்திருக்கும் முருகரின் நெற்றியில் ஆயுதபூஜையின் போது வைக்கப்பட்ட சந்தனம், குங்குமம், அப்புறம் பழைய ரிம்கள், டயர்கள், டியூபுகள், சைக்கிளின் சின்னச் சின்ன உறுப்புகள்.

    அண்ணா என்றாள், சித்ரா வாசலில் இருந்து எட்டிப்பார்த்து.

    என்ன?

    கால் ரூபாய்க்கு பச்சை மொளகா வாங்கிட்டு வரணும்.

    ஏன், கவிதா என்ன செய்றா?

    குளிச்சிக்கிட்டிருக்கா.

    ஆளில்லையே. பொடிப்பய இனிமேத்தான் வருவான்.

    நீ போய்ட்டு வர்ற வரைக்கும் நான் நிக்கிறேன். பார்த்துக்கறேன்.

    மாரிமுத்து எரிச்சலாகப் பையை வாங்கிக் கொண்டு போனான். திரும்பி வந்து கொடுக்கும் போது, நீ வெளில போய்ட்டு வர்றப்பவே என்ன என்ன வேணுமோ எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடு. இல்லைன்னா அப்பா ஸ்கூலுக்குப் போறப்போ லிஸ்ட் எழுதிக் கொடுத்திடு. கடையைப் போட்டுட்டு என்னைப் போகச் சொல்லாதே இனிமேல. புரிஞ்சுதா? என்றான்.

    ஓர் அவசரத்துக்கு வாங்கிட்டு வரச் சொன்னதுக்கு இவ்வளவு சலிச்சிக்கிறியே... அஞ்சு மணிக்கு எந்திரிச்சேன் நான், இன்னும் குளிக்கக்கூட இல்லை. டிபனையும் செஞ்சு, மத்தியான சாப்பாட்டையும் சமைச்சு வச்சிட்டு அதுக்கப்புறம் குளிச்சு, டிரெஸ் பண்ணிக்கிட்டு வேலைக்குப் போகணும். ரொம்ப அலுத்துக்காதே!

    சித்ரா உள்ளே வந்தபோது... ஹாலில் கவிதா தமிழ் நியூஸ் பேப்பரில் சினிமாச் செய்திகள் பக்கத்தை நின்ற நிலையில் கழுத்தில் துண்டுடன் பார்த்துக் கொண்டிருக்க வெடுக்கென்று பிடுங்கி மடித்து வைத்தாள்.

    பேப்பர் படிக்கிறதுக்கு மட்டும் டைம் இருக்கா?

    பாடம் படிச்சிட்டேன். குளிக்கப் போறேன். ஒரு நிமிஷம் பார்த்தேன். ஏன் இப்படி பாயறே?

    நான்தான் பாய்றேன். நீங்க எல்லாரும் மகா சாந்த சொரூபிகள். போங்கடி...

    சித்ரா சமையலறைக்குள் நுழைந்ததும், கவிதா பாக்கெட் டிரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு பின் பக்கம் வந்து பாத்ரூம் உள்ளே நுழைந்தாள். டிரான்சிஸ்டரை ஆன் செய்து திருகி விவிதபாரதி அமைத்துக்கொண்டு சோப் மேடையின் மேல் வைத்துவிட்டுக் கதவைத் தாளிட்டாள்.

    மாடியில் கீற்றுக் கொட்டகை அமைத்து ஒரு குடில் மாதிரி இருந்தது. உள்ளே மர ஸ்டாண்டில் கரும்பலகை. ஒரே ஒரு ஸ்டூல். அதில் அமர்ந்துகொண்டிருந்த கணபதிராமன் சொந்தச் சலவையில் தரம் வாய்ந்த சொட்டு நீலம் எல்லாம் போட்டு வெள்ளை வெளேரென்றாக்கப்பட்டிருந்த கை வைத்த பனியன் அணிந்திருந்தார். வேஷ்டி கட்டியிருந்தார். நெற்றியில் பட்டையாக திருநீறு. கையின் மணிக்கட்டில் உள் பக்கம் வாட்ச் கட்டியிருந்தார். தாத்தா அப்பாவுக்குக் கொடுத்து அப்பா அவருக்குக் கொடுத்த பாரம்பரிய ஃபேவர்லூபா.

    உள் கையில் மணி பார்த்த கணபதிராமன். சரி. போதும். நீங்கள்லாம் போங்க. நாளைக்கு ஹோம் வொர்க் செய்யாம வர்றவங்களை இன்னைக்கு மாதிரி அஞ்சு தடவை மட்டும் இம்போசிசன் எழுதச் சொல்ல மாட்டேன். அம்பது தடவை எழுதணும். போங்க. ரவி. நீ இரு, ஒரு சமாச்சாரம் என்றார்.

    ரவியைத் தவிர மற்ற பத்து, பன்னிரண்டு பையன்களும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு புறப்பட்டுப் படிகளில் இறங்கினார்கள்.

    ரவி புத்தகங்களை மார்போடு அணைத்துக் கொண்டு நின்றான்.

    இப்படி வா. ஒண்ணுமில்லை. நேத்து அன்ன பூர்ணா ஹோட்டல் போனேன். உங்க கடை காலண்டர் மாட்டியிருந்திச்சு. பார்த்தேன். நல்லா பெரிய சைஸ்ல பிரமாதமா இருக்கு. நீ உங்கப்பாகிட்ட இந்த மாதிரி சாரு பார்த்தாராம், நல்லா இருக்குன்னு சொல்லச் சொன்னாருன்னு மட்டும் சொல்லு. என்ன?

    "சரி

    Enjoying the preview?
    Page 1 of 1