Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

January February Mortuary
January February Mortuary
January February Mortuary
Ebook176 pages1 hour

January February Mortuary

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நடிகை ஆஷா கொலை செய்யப்படுகிறாள். அவளை கொலை செய்தவன் அவள் கணவன் என்று கேஸ்ஃபைல் க்ளோஸ் செய்யப்படுகிறது. சிவராமன் என்ற பத்திரிக்கையாளர், இதில் ஏதோ ஒன்று மறைக்கப்பட்டிருக்கிறது. என்று ஆராயத் தொடங்குகிறான். அந்த ஆராய்சியில் பல்வேறு மர்மங்களை கண்டுப்பிடிக்கிறான். அந்த மர்மங்கள் என்ன? அவை ஆஷாவின் மரணத்தோடு தொடர்புடையதா? யார் தான் அவளை கொலை செய்தவன்? விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த பகுதிகளை வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580100906668
January February Mortuary

Read more from Pattukottai Prabakar

Related to January February Mortuary

Related ebooks

Related categories

Reviews for January February Mortuary

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    January February Mortuary - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    ஜனவரி பிப்ரவரி மார்ச்சுவரி

    January February Mortuary

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    என்னுரை

    அன்புள்ள உங்களுக்கு,

    ஹலோ,

    என்ன பேசலாம்? தேசப்பிரச்னைகள் பற்றி? வேண்டாம். பெரிய விஷயம். மாநிலப் பிரச்னையை ‘வாங்க கண்ணுச்சாமி, வணக்கம் சின்னச்சாமி’ பாணியில் அலசலாமா! இந்தப் பக்கத்தைத் திருப்பிவிடலாமா என்கிற உங்கள் யோசனை தெரிகிறது. வேண்டாம் விடுங்கள். பல வீடு ஒரு நாடு.

    நம் வீட்டுப் பிரச்னையையே பேசலாம்.

    நேற்று ஒரு தமிழ்ப் படத்திற்காகப் போய் டிக்கெட் இல்லாமல் திரும்பினீர்களாமே, எந்தப் படம்? தம்பி ரேஷன் கடையிலிருந்து வந்தாச்சா? கொசு ஒழிப்பான் வாங்க இன்றைக்கும் மறந்து போனிங்களா? இன்னைக்கு டாக்டர்கிட்டே போகவேண்டிய நாள். இல்லே அப்புறம் எத்தனை மணிக்கு பஸ் கிடைச்சிச்சி? நண்பர்கிட்டே அவர் வாங்கின கடனை திருப்பிக் கேக்கறதுக்கு இன்னும் எத்தனை நாள்தான் தயங்கப் போறிங்க? ஒவ்வொரு தடவையும் பெனால்டியோட M.V.Tax கட்றது நல்லாருக்கா? நாலு நாளா சொல்லிக்கிட்டிருக்கார், இன்னிக்காவது கிழிசலை தைங்களேன்...

    30, தலயாரி தெரு.

    பட்டுக்கோட்டை,

    25, ஏப்ரல், 84.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்.

    ஊரும் பேரும்

    முதன் முதலில் பிரபாகரை சந்திக்க பட்டுக்கோட்டை போகிறேன். கவஞர்களைப்பற்றிய பல எண்ணங்கள் நெஞ்சில் அலைவீசுகின்றன. இந்தக் கலைஞர்களுக்குத்தான் ஊரின்மேல் எத்தனை பாசம்! பட்டுக்கோட்டை பிரபாகர், இந்த இளந்தளிர் தன் எழுத்தால் ஊருக்கு பெருமை சேர்க்க ஆசைப்படுகிறது.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அவர் பாட்டை பாடாத வாய் கிடையாது. கேட்காத காது கிடையாது.

    மதுரை - சோமு

    சீர்காழி - கோவிந்தராஜன்

    சூலமங்கலம் - சகோதரிகள்

    இவர்கள் தமிழ் இசைச் செல்வர்கள்,

    வழுவூர் - ராமையாபிள்ளை - நாட்டிய மேதை.

    திருவாடுதுறை – ராஜரெத்தினம்பிள்ளை - நாதஸ்வர மன்னன்.

    குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின் கம்பிகளைப் பேச வைக்கும் வித்தகர். சிக்கல் - குஞ்சுமணி - நீலா கண்ணனை நினைவுபடுத்தும் குழலோசை. இன்னும் ஊருக்குப் பெருமை சேர்க்கும் கலைஞர்கள் ஏராளம்! ஏராளம்!!

    வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார். நினைத்துப் பார்க்கிறேன்.

    ஒரு கால் நூற்றாண்டுகளுக்குமுன் சிங்கப்பூருக்கு எங்கள் ஊரிலிருந்து பெட்டி பெட்டியாகப் புத்தகங்கள் ஏற்றுமதியாகும். அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு படிக்க அவ்வளவு ஆர்வம். ஒரு சமயம் ஒரு புத்தக வியாபாரி வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களை 100 வீதம் அனுப்பும்படி கேட்டிருந்தார். என் பார்வை அப்போது அப்புத்தகங்களின் மீது விழுந்தது.

    ஆங்கில நாவல்களைத் தழுவி எழுதிய அந்தத் துப்பறியும் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கமுடியாது. ஒவ்வொரு புத்தகமும் பல பாகங்கள் கொண்டது. இதைப் போல இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளை, தமிழகத்தில் நடக்கும் செய்திகளை வைத்துக்கொண்டு ஏன் நாவல் எழுதக்கூடாது என எண்ணினேன். பல நண்பர்களிடமும் தெரிவித்தேன்.

    அதன் பிறகு இப்போது துப்பறியும் நாவலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆர்வமுடன் பலர் எழுதுகின்றனர். துப்பறியும் நாவல் வராத பத்திரிகைகள் கிடையாது. பிரபாகரும் நிறைய எழுதுகிறார். அவர் எழுத்தால் கவரப்பட்ட வாசகர் வட்டம் பெருகி வருகிறது. அவருடைய உழைப்பையும் ஆர்வத்தையும் நேரில் பார்த்து வியந்து போனேன். தன் பெயருடன் ஊரின் பெயரையும் சேர்த்திருப்பதால் மற்ற கலைஞர்களுக்குக் கிடைத்த புகழைப் போல் பிரபாகருக்கும் கிடைக்க வேண்டுமென்று என் நெஞ்சு ஆசைப்பட்டது. அது வீண் போகாது. உண்மையாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    - புத்தகப்பித்தன்

    காணாமல் போனவர் பற்றி ஓர் அறிவிப்பு:

    மதுராந்தகத்தைச் சேர்ந்த ஆர். இளங்கோவன் என்பவரைக் காணவில்லை.

    வயது 27, மாநிறம், உயரம் ஐந்தடி, ஆறு அங்குலம். தமிழும், ஆங்கிலமும் தெரியும்.

    காணாமல் போன தினத்தன்று கறுப்பு நிற பாண்ட்டும், வெள்ளை நிற சட்டையும் போட்டிருந்தார்.

    இந்தக் கதை துவங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பிலிருந்து காணவில்லை.

    உங்களில் யாராவது மேற்படி நபரை இந்த நாவலில் கண்டுபிடித்தால், தகவல் தெரிவிக்கத் தேவையில்லை. உங்களுக்கு உங்களிடமிருந்தே ஒரு சபாஷ் பெற்றுக்கொள்ளுங்கள்.

    1

    களைந்த நிலா கொட்டாவி விட்டது.

    கிழக்கு வானம் கம்யூனிஸ்ட்டாயிருந்தது.

    ஆனால் பனியின் காரணமாக விதவைக் காட்சிகள்.

    ஸோடியம் வேப்பர் விளக்குகள் வெளிச்சத் தூறலை நிறுத்தின.

    130 டெஸிபல் சத்தத்தை உதறிக்கொண்டு பத்தாயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் காற்றை அறைந்தது.

    மீனம்பாக்கத்தில் அந்த விமானத்திற்காக நாமும் காத்திருக்கலாம்.

    வெளியே நிறைய கார்கள் இல்லை. நுனி சிவந்த குட்டி வெள்ளை நாயனம் வாசித்துக் கொண்டிருந்தார்கள் சோபாவில் அமர்ந்து இரண்டு பேர். புகை இசை புறப்பட்டதுமே காற்று கவர்ந்து கொண்டிருந்தது. காத்திருந்தார்கள்.

    டெல்லி போல அதிசயமாய் அன்று ஃபாக் எனப்படும் பனிப்படுதா ரன்வே முழுக்க தொங்கிக் கொண்டிருந்ததால், விமானம் இறங்கச் சம்மதிக்காமல் மற்றொரு முறை ஊர் சுற்றியது.

    கற்றையாய் உட்கார்ந்திருந்த இளைஞன் என்கிற அந்தஸ்தை சில வருடங்களுக்கு முன்பு இழத்திருந்த அவன் கையில் சலஃபன் காகிதம் அணைத்த புது மலர்க் கொத்துக்கள் வைத்திருந்தான்.

    பாக்கெட்டிலிருந்து பேனா எடுத்து, அதை அழுத்தி மணி பார்த்தான்.

    7.05.

    அரை மணிக்குப் பிறகு விமானம் இறங்கியது.

    படிக்கட்டுகள் விமானத்தை நோக்கி ஓடின, கண்ணாடிச் சுவர் அருகாக வந்து நின்றுகொண்டான் மலர்க் கொத்துடன்.

    அவள் வெளிப்பட்டாள். இவன் நெருங்கி, குட். மார்னிங், என்றான்.

    ஓ, இங்கேயும் வந்துட்டிங்களா? என்றவளுக்கு புருவங்கள் மழிக்கப்பட்டு மைக் கோடுகள், உலர்ந்து போன சாய உதடுகள். மூன்று, நான்கு பருக்கள்.

    வாசலில் நின்றவன் கிட்டே வர...

    இந்தா முத்து, கொண்டு போய்க் கார்லே வை. வர்றேன்.

    மலர்க் கொத்தை நீட்டினான். வார்த்தைகள் தேடினான்.

    சரி, வாங்கிக்கறேன். நீங்க என்னைத் தொந்தரவு பண்றிங்க.

    அப்போ, உங்க முடிவு?

    உங்களை மாதிரி எனக்கு தினம் நூறு கோரிக்கைகள் வருது. எத்தனை பேருக்கு நான் பொண்டாட்டியா இருக்க முடியும்?

    நான் உங்களை சின்சியரா காதலிக்கிறேன்.

    ஸாரிங்க. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.

    டக் டக் என்று சப்திக்க அவளைத் தாண்டி நடந்து’ காத்திருந்த காருக்குள் ஏறிக் கொண்டான்.

    பீடியைத் துப்பிவிட்டு ஒரு டாக்ஸி டிரைவர் தன் சகாவிடம் கேட்டான்.

    நடிகை ஆஷா தானே போறது?

    மலர்க் கொத்திலிருந்து கீழே உதிர்ந்திருந்த இரண்டு உதிரிகளைக் குனிந்து எடுத்து முத்தமிட்டுவிட்டுப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் இவன். அப்புறம் தன் காரில் ஏறிக் கொண்டு ஸ்டார்ட் செய்தான்.

    நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வந்து தனது அவென்யூவிற்குத் திரும்பி, தனது பங்களாவுக்குள் நுழைந்து, தனது போர்ட்கோவில் நின்று கொண்டது கார்.

    அவசர நடையில் உள்ளே வந்தாள் ஆஷா.

    பிளேன் லேட்டா? என்றாள் அவள். அவளை இவள் சித்தி என்று அழைக்கிறாள். என் கால்ஷீட் எல்லாம் இவங்கதான் பார்த்துக்கிறாங்க என்கிறாள் நிருபர்களிடம்.

    ஆமாம். இங்கே என்ன விசேஷம்?

    செல்வகுமார் மூணுதடவை முயற்சி பண்றார். புதுப்படம். பணம் வாங்கினியா?

    செக்.

    செக் ஏன் வாங்கினே ஆஷா?

    நல்ல பார்ட்டி. இன்னிக்கு வாஹினியில ஷூட்டிங் உண்டான்னு கன்ஃபாம் பண்ணிச் சொல்லு சித்தி. கான்ஸல் ஆயிருந்திருச்சின்னா ரெண்டு வீடியோ ஃபிலிம் பார்க்கணும். குளிச்சிட்டு வந்துடறேன், என்ன டிபன்?

    குளித்துவிட்டு வந்தபோது சித்தி போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

    பேரிருக்கிறப்பத் தானா? அப்படி சொல்பமா நினைச்சுடாதீங்க. பண விஷயத்திலே கரைக்டா இருக்குறது நல்லதில்லையா? பேபி வருது, பேசறீங்களா?

    நீயே பேசிடு சித்தி, என்று தன் அறைக்குள் வந்து டிரெஸ்சிங் மேஜை முன்னால் அமர்ந்து ஆரம்பித்தாள்.

    எக்ஸ்டென்ஷன் டெலிபோன், ஆஷா, ஆஷா என்றது.

    எடுத்தாள். ஹலோ, என்ன சித்தி?

    போட்டோகிராஃபர். உங்கிட்டேதான் பேசணுமாம் பேசிக்க.

    ஹலோ மேடம். குட் மார்னிங். எப்ப வந்தீங்க பெங்களூர்லேர்ந்து?

    அரை மணி முன்னாடி. என்ன சார்?

    டிரான்ஸ்பரன்ஸி எடுக்கணும் உங்களை. இன்னைக்கு எப்போ ஃப்ரீ?

    இனினிக்கி வேணாம் சார். ஒரு வாரம் போகட்டும்.

    படுக்கையில் படுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் வீடியோ பார்த்தாள். நான்கைந்து தபால்கள் படித்தாள். புரண்டு ரிசீவரை எடுத்து டயல் செய்தாள்.

    பிரகாஷ் இருக்காரா? எப்போ போனார்! இன்னிக்கு ஷூட்டிங் இல்லைன்னு சொன்னாரே. ஆஷாதான் பேசறேன் இவ்வளவு நேரமாச்சா குரலைக் கண்டுபிடிச்க? சரி சொல்றியா?

    ரிஸீவரை எறிந்துவிட்டு செருப்பு மாட்டிக் கொண்டாள். அலமாரியிலிருந்து அலிஸ்டர் மாக்லீன் புத்தகம் எடுத்துக் கைப்பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டாள்.

    காரில் கதவின் கறுப்புக் கண்ணாடிகளை சித்தி ஏற்றினாள்.

    வயசுக் கோளாறு எப்படிப் போகுது சித்தி?

    கதை ஒண்ணுமே இல்லை. உன் ரெண்டு டான்சுக்காகத்தான் ஓடிக்கிட்டிருக்கு.

    "சென்சார் கொஞ்சம் சாப்பிட்டுட்டாங்க இந்தப் படத்திலே. உலகமே கூத்தா

    Enjoying the preview?
    Page 1 of 1