Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varuvean! Velvean!
Varuvean! Velvean!
Varuvean! Velvean!
Ebook92 pages48 minutes

Varuvean! Velvean!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நல்ல குணம் கொண்ட அழகான தேவதை, நிவேதாவை காதல் வலையில் சிக்க வைத்து கொன்றது யார்? பாடகி அக்ஷயாவின் திருமணம் நடந்ததா? பிரசாத்தின் வாழ்க்கையில் என்ன நடந்தது? பரத் சுசீலாவுடன் நாமும் வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580100908097
Varuvean! Velvean!

Read more from Pattukottai Prabakar

Related to Varuvean! Velvean!

Related ebooks

Reviews for Varuvean! Velvean!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varuvean! Velvean! - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வருவேன்! வெல்வேன்!

    Varuvean! Velvean!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அந்தக் கல்யாண வரவேற்பில் பரத் ஈடுபாடில்லாமல் மெல்லிசைக்குப் போதுமான இடைவெளி விட்டு புல்வெளியில் ஒதுங்கி நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். உதட்டுக்குக் கொண்டு போன போதெல்லாம் வாசலில் தொட்டுக் கொண்ட சந்தனம் மணந்தது.

    சுசிலாவின் தோழியின் திருமண வரவேற்பு. அவள் ஒவ்வொருத்தியாகத் தேடிப் போய் போன சந்திப்புக்கும் இந்த சந்திப்புக்கும் இடைப்பட்ட நாட்களில் பகிரப்படாதவற்றைப் பட்டியல் தவறாமல் பேசிக் கொண்டிருக்க, ஒரே குரூப் நடத்தும் பட்டிமன்றத்தை அடுத்தடுத்து பார்த்த அயர்ச்சியுடன் பரத், ‘நான் அங்க நிக்கிறேன், நீ மெதுவா வந்து சேரு, நியூட்டன் வீட்ல இன்னைக்கு டின்னருக்கு ஒத்துக்கிட்டிருக்கோம். அதை மட்டும் மறந்துடாதே’ என்று அவளிடம் சொல்லி விட்டு ஒதுங்கி வந்து விட்டான்.

    மரத்திற்கு மரம் சீரியல் பல்புகள் காய்த்திருந்தன. மூன்று வீடியோ மனிதர்கள் பிரதேசமெங்கும் கேபிள் தவழவிட்டு முகங்களைப் பிடித்துக் கொண்டிருக்க, மிக்ஸரில் உட்கார்ந்தவன் தனக்குப் பிடித்த ஃபிகர்களை மட்டும் இண்டர்னல் சர்க்யூட் டெலிவிஷன்களில் அதிக நொடிகளுக்கு ஃப்ரீஸ் செய்து கொண்டிருந்தான். செவ்வந்திப் பூக்களின் பின்னணியில் ரோஜாப் பூக்கள் தம்பதியின் பெயர்களை அமைத்திருக்க... இடவலம் மாற்றி புடவையை கட்டி பியூட்டி பார்லரில் தலையை அலங்கோலம் செய்து கொண்டிருந்த மணமகள், மணமகன் எழுந்த போதெல்லாம் எழுந்து அவன் சிரித்த நபருக்கெல்லாம் சிரித்து, அவன் அறிமுகப்படுத்தி வைத்த முகங்களை மூன்றாவது ஸெகண்ட் மறந்து கொண்டிருந்தாள்.

    ஐந்து இலக்கத்தில் தொகை வாங்கின மெல்லிசைக் குழுவினர் ஆளுயர ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்து காற்றை அதிரச் செய்து கொண்டிருந்தாலும் வந்தவர்களுக்கு காதருகில் கத்திப் பேச நிறைய விஷயங்களிருந்தன.

    கடைசில டயானாவுக்கு இப்படி ஆயிருக்கக் கூடாதுங்க!

    மும்பாய்ல எல்லா ஸ்டார்சும் நடுங்கறாங்களாமே...

    பாவங்க இந்த ஆந்திரா... புயலுக்கு புயல் மாட்டிக்குது.

    பாம்பன் பாலத்தில் இப்படியா பஸ் ஓட்டுவான்?

    சாமியாரையும் நம்ப முடியலை. பாதிரியாரையும் நம்ப முடியலை. யாரைத்தான் நம்பறது?

    எதுக்கு இந்த சாதி வெறி? ஏன் இப்படி வெட்டிக்கிறாங்க?

    இப்படியே இன்னும் மூணு மாசம் போச்சுன்னா எல்லா தியேட்டர்லயும் லவகுசா, சம்பூர்ண ராமாயணம்தான் ஓட்டணும் போலிருக்கு.

    நக்கீரன் கோபாலால நாலு தடவை போய்ட்டு வர முடியும்னா போலீசால போக முடியாதா? எல்லாம் சும்மா வெத்துப் பசங்க!

    கவுதமி கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். தெரியுமா?

    இந்த ஷேர் மார்க்கெட் மறுபடி எந்திரிக்கவே எந்திரிக்காதா?

    தூர்தர்ஷன், ரேடியோவுக்கெல்லாம் சுதந்திரம் தரப் போறாங்க போலிருக்கு!

    கேபிள் கனெக்ஷன் கொடுக்க பயமா இருக்கு. ஸ்டார்ல வர்ற பொம்பளை திடுதிப்புனு அவுத்துடறா. ஒரு டி.வி.ல அடல்ட்ஸ் ஒன்லி பாட்டுன்னா இன்னொன்னுல புதிரா புனிதமான்னு படம் போட்டு விளக்கறாங்க. இனிமே ஃபர்ஸ்ட்நைட் ரூமுக்கு போறவங்களுக்கு காதுக்குள்ளே எதுவும் சொல்லி அனுப்ப வேண்டியதில்லைங்க.

    நோ! நோ! இது மாதிரி சேலையை நீங்க வேற எங்கயுமே பார்த்திருக்க முடியாது. இது டிசைனர் சேலைங்க. எட்டாயிரம் ஆச்சு.

    வேலை அதிகம். வீட்டுக்கு வந்து பார்க்க முடியலை. பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிக்கிட்டிங்களே, இப்ப பரவால்லையா?

    அதுல எண்ணெய் இறங்கிடுச்சின்னு எடுத்து வெச்சிட்டேன். இந்த வைர நெக்லஸ் புதுசா பண்ணிக்கிட்டேன்.

    என் மூணு பிள்ளைங்களுமே அமெரிக்காலதான் இருக்காங்க. தினம் போன்ல பேசிக்கிறோம்.

    தவிர, பேச்சுக்கு டாபிக் கிடைக்காத இளைஞர்கள் நாற்காலி நாற்காலியாய் தேடி சைட் அடித்துக் கொண்டிருக்க, முன் வரிசை விடலைகள் மட்டும் துண்டு சீட்டில் ‘மயிலு மயிலு மயிலம்மா பாடவும்’ - ‘அவள் வருவாளா பாடவும்’ என்று நேயர் விருப்பத்தை மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

    பரத் வாட்ச் பார்த்து விட்டு சுசிலாவைத் தேடினான். மூன்று நிமிஷம் தேடிய பின் தூரத்தில் பாரதிராஜா கதாநாயகி மாதிரி காது வளையம் ஆடலில் சுசிலா போல தெரிந்தாள். கிட்டேப் போனால் சுசிலா இல்லை.

    ஜீன்ஸ் ஜீன்ஸாகத் தேடத் துவங்கினான்.

    எல்லோரையும் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்த ஸஃபாரி சூட் இளைஞன் யாரைத் தேடறீங்க சார்?

    Enjoying the preview?
    Page 1 of 1