Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Susee, Take It Easy
Susee, Take It Easy
Susee, Take It Easy
Ebook76 pages38 minutes

Susee, Take It Easy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பணக்கார வாழ்வில் அழகிய ரதியாக திகழும் அஞ்சலி, ஒரு கம்பெனியில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் விக்ரமை காதலிக்கிறாள். அவர்கள் காதலுக்கு வில்லனாக வந்தவர் யார்? பண வெறி கொண்டு அலையும் அனுபவ் நிலை என்னவாயிற்று? காதலை சேர்த்து வைக்க பரத், சுசீலா போராடுகிறார்கள். அஞ்சலி, விக்ரம் காதல் கை கூடியதா படிப்போம் ...

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580100908090
Susee, Take It Easy

Read more from Pattukottai Prabakar

Related to Susee, Take It Easy

Related ebooks

Reviews for Susee, Take It Easy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Susee, Take It Easy - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுசி, டேக் இட் ஈஸி

    Susee, Take It Easy

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அவள் ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.

    அவள் அஞ்சலி! ஏஞ்சலி என்றுப் பெயர் வைத்திருக்கலாம். நியாயமாக அவளுக்கு ஒப்பனை அநாவசியம். காலையில் தூங்கி எழுந்த முகத்தோடு அவளை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் மினிமம் மூன்று முறை எச்சில் விழுங்க நேரிடும்.

    அவளின் புகைப்படத்தைப் போட்டு செத்துப்போன அவள் அம்மா கர்ப்ப காலத்தில் என்னென்ன சாப்பிட்டாள் என்று கைக்கு வந்ததை எழுதி ஒரு புத்தகம் வெளியிட்டால் ஒரு லட்சம் பிரதிகள் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்வது உறுதி.

    அஞ்சலிக்கு ஒரே முத்தம் தர கட்டணம் ரூ.1000 என்றும் முத்தம் பெற ரூ.2000 என்றும் விளம்பரம் செய்தால், அவள் வீட்டின் வாசலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஸ்பெஷல் கவுண்டர்கள் போட்டு இருபது கம்ப்யூட்டர்களுடன் கேஷியர்களைப் போட்டு... வசூலாகும் தொகையில் ஏதாவது ஒரு அரபு நாட்டை விலை பேசலாம்.

    இவ்வளவு மிகையோ மிகையாக சொன்ன பிறகு அஞ்சலி பின் கண்கள் இப்படி, உதடுகள் இப்படி என்று வலுவில்லாத வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்க முயன்றால் அவளது அழகை அவமானப்படுத்த முயற்சி என்று என் மீது, நூற்றி ஏழே முக்கால் கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கு போடலாம் என்பதால்...

    இதோ அஞ்சலி!

    அவள் அமெரிக்க டாலரின் வடிவம் போல வளைந்த மாடிப்படிகளில் துள்ளித் துள்ளி இறங்கிய போது, அம்ப்ரெல்லா கட்டிங்கில் ஸ்கர்ட் உயர்ந்து தாழ்ந்த விநாடிகளைத் தவறவிட்டவர்களை ஜொள்ளர்கள் சங்கத்திலிருந்து நீக்கியாக வேண்டும்.

    அஞ்சலி கையில் டென்னிஸ் ராக்கெட்.

    கோல் போஸ்ட்டுகள் இல்லாத கால்பந்தாட்ட மைதானம் போலிருந்த, மார்பிள் போர்த்திய, அலங்கார ஸோபாக்கள் கொண்ட, பித்தளையில் அங்கங்கே அழகுக்கான சிலைகள் நின்ற, அந்த மகா ஹாலில்...

    அனுபவ் அமர்ந்து இரண்டு பேரிடம் பேசிக் கொண்டிருந்தான். மூக்குப்பொடி நிறத்தில் ஸபாரி சூட் அணிந்திருந்த அவன் அஞ்சலியின் ஒரே அண்ணன். வயது முப்பத்தி இரண்டு. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    காரணம்: ஒரு லட்சியம். அனுபவ் தன் மனதிற்குள் ஒரு சபதம் செய்து வைத்திருக்கிறான். தன் லட்சியம் நிறைவேறிய பிறகுதான் திருமணம் என்பதே அஃது.

    லட்சியம்: இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக உருவாக வேண்டும்.

    அனுபவின் சிந்தனை, செயல் எல்லாவற்றின் பின்னணியிலும் கரன்சி நிச்சயம் இருக்கும். அவனுடைய உத்தரவுகள் ஒவ்வொன்றிலும் பணம் பதுங்கியிருக்கும்.

    ஊருக்கு வெளியே ஒருவருமே சீண்டாத தரிசு நிலத்தை இருபது ஏக்கர் வாங்குகிறான் என்றால்...

    மாநில அமைச்சரை வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து கொடுத்து அவரின் இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு பத்து பவுனில் செயின் மாட்டி விடுகிறானென்றால்...

    புதிதாக இரண்டு கார்களும், லாரிகளும் வாங்குகிறான் என்றால்...

    புதிதாக ஏழாவது டெலிபோனுக்கு விண்ணப்பிக்கிறான் என்றால்...

    திடீரென்று திரைப்படங்களின் பூஜைகளில் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைக்கிறானென்றால்...

    ... செமத்தியாக பணம் பண்ணப் போகிறான் என்று அர்த்தம்.

    ராணிப்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றும், தோலில் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1