Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuttram, Puthiya Kuttram!
Kuttram, Puthiya Kuttram!
Kuttram, Puthiya Kuttram!
Ebook83 pages53 minutes

Kuttram, Puthiya Kuttram!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கர்ப்பத்திலே திருட்டுப் போன குழந்தை யாருடையது? பரத், சுசிலா இருவரும் சேர்ந்து விக்னேஷ் வீட்டிற்கு ஏன் சென்றனர்? மர்மமான முறையில் திருட்டுப் போன குழந்தைக்கு என்னவாயிற்று? என்பதை அறிய "குற்றம் புதிய குற்றம்" - என்னும் நாவலில் வாசித்து பாருங்கள்.

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580100910057
Kuttram, Puthiya Kuttram!

Read more from Pattukottai Prabakar

Related to Kuttram, Puthiya Kuttram!

Related ebooks

Reviews for Kuttram, Puthiya Kuttram!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuttram, Puthiya Kuttram! - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குற்றம், புதிய குற்றம்!

    Kuttram, Puthiya Kuttram!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    யெஸ்… உங்களுக்கு என்ன வேணும்? என்றாள்

    நிருபமா.

    நீங்கதானே நிருபமா? என்றான் பரத்,

    ஆமாம்.

    பாலாஜி ஹாஸ்பிடல்ல நர்ஸா வேலை பார்க்கிறிங்க, இல்லையா?

    ஆமாம்.

    குழந்தை... என்றாள் சுசீலா தொட்டிலைச் சுட்டிக்காட்டி.

    என் குழந்தைதான். ஏன்?

    உங்களுக்கு எப்போ டெலிவரி ஆச்சு?

    "பத்து நாளாச்சு, நீங்க யாரு, எதுக்காக இதெல்லாம் விசாரிக்கிறீங்க?*

    "நாங்க பிரைவேட் டிடெக்டிவ்ஸ். ஒரு கேஸ் சம்பந்தமா இந்த

    விசாரணை. விபரம் சொல்றோம். முதல்ல எங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிடுங்க. உங்களுக்கு எங்க டெலிவரி ஆச்சு?

    பக்கத்தில் ஈஸ்வரி நர்சிங் ஹோம்னு இருக்கு. அங்க.

    உங்க குழந்தையை சரியாய் பார்க்க அனுமதி கொடுங்க...

    பரத் அந்த ஆண் குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த சட்டையைத் தூக்கி வயிற்றில் தொப்புள் காயத்தைப் பார்த்தான். அது முற்றிலும் ஆறியிருந்தது. குழந்தையின் மூக்கு நிருபமாவின் மூக்கை ஒத்திருந்தது.

    கொடி என்னைக்கு விழுந்துச்சு?

    முந்தா நாள்.

    நார்மல் டெலிவரியா?

    ஆமாங்க.

    உங்களுக்குப் பிரசவம் பார்த்த டாக்டர் யாரு?

    ஆனந்தலட்சுமி.

    நீங்க அட்மிட் ஆயிருந்த ரூம் நம்பர்?

    நூத்திப்பதினெட்டு.

    பர்த் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டிங்களா?

    ஓ!

    காமிங்க, ப்ளீஸ்...

    நிருபமா உள் அறைக்குச் செல்ல, பரத் விக்னேஷிடம், இந்தக் குழந்தை இல்லை விக்னேஷ். பத்து நாள் வளர்ச்சி நிச்சயமா தெரியுது. உன் குழந்தை தேதிக்கு இருபது நாள் முன்னாடியே பொறந்த குழந்தை. அது இப்படி இருக்காது என்றான்.

    சாயலும் அப்படியே அம்மா சாயல் இருக்கு பரத் என்றாள் சுசீலா.

    நிருபமா ஆஸ்பத்திரியில் வழங்கின சர்ட்டிஃபிகேட் மற்றும் பிரிஸ்கிருப்ஷன் காகிதங்களைக் கொண்டு வந்து காட்டினாள்.

    அவற்றை சரி பார்த்துவிட்டு, ஸாரி. உங்களை தொந்தரவு பண்ணிட்டோம். ஒத்துழைச்சதுக்கு தேங்ஸ் என்றான்.

    இப்ப சொல்லலாமா எதுக்காக இந்த விசாரணைன்னு?

    இவரோட வைஃப் சுதா உங்க டாக்டர்கிட்டதான் பிரசவத்துக்காக கன்சல்ட் செஞ்சிட்டிருந்தாங்க. மூணு நாள் முன்னாடி மர்மமான முறையில் அவங்களை மயக்கப்படுத்தி யாரோ கர்ப்பப்பைலேர்ந்தே குழந்தையை ஆபரேஷன் செஞ்சி திருடிட்டுப் போயிட்டாங்க

    பேப்பர்ல நியூஸ் வந்திருக்கிறதா என் ஹஸ்பண்ட் சொன்னார். விபரமா படிக்காதே, சங்கடப்படுவேன்னு சொன்னார். மிஸஸ் சுதா கன்சல்ட்டுக்கு வர்றப்ப நானும் பார்த்திருக்கேன். இது கொடுமை. ஆனா இதுல என்னை ஏன் சந்தேகப்பட்டிங்க?

    தப்பா எடுத்துக்காதீங்க. இந்த சம்பவம் போலீசுக்கு ஒரு சவாலா இருக்கு எல்லாருக்கும் புதிரா இருக்கு. இதே மாதிரி கர்ப்பப் பைலேர்ந்தே குழந்தையைத் திருடின சம்பவம் உலகத்தில் எங்கயாவது நடந்திருக்கான்னு தெரிஞ்சுக்க இண்ட்டெர்நெட் மூலமா கம்ப்யூட்டர்ல விசாரிச்சோம். அப்போ அமெரிக்காவுல மனநிலை தவறின நர்ஸ் ஒருத்தி இப்படி செஞ்சதா செய்தி கிடைச்சது. உங்க ஹாஸ்பிடல்ல பிரசவ லீவுல யாராவது நர்ஸ் போயிருக்காங்களான்னு விசாரிச்சப்ப உங்களைச் சொன்னாங்க. அதனாலதான் வந்து விசாரிச்சோம்.

    நல்ல வேளை! எனக்கு பத்து நாளைக்கு முன்னாடி பிரசவமாச்சு. டெலிவரி தள்ளிப்போய் மூணு நாளைக்கு முன்னாடி நடந்திருந்தா... இது என் குழந்தைதான்னு அவ்வளவு சுலபமா ஒத்துக்கிட்டிருக்க மாட்டிங்க இல்லை?

    ஸாரி. சந்தேகப் படறதும், விசாரிக்கிறதும் எங்க கடமை!

    புரியுது. ஆனா இந்த விஷயத்தில நீங்க ஒரு பொம்பளையை தயவுசெஞ்சி சந்தேகப்படாதிங்க! இவ்வளவு அரக்கத்தனமாக எந்தப் பொண்ணும் நடந்துக்க மாட்டா! என்றாள் நிருபமா.

    மூவரும் சோர்வாக

    Enjoying the preview?
    Page 1 of 1