Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poi, Poiyai Thavira Verillai...!
Poi, Poiyai Thavira Verillai...!
Poi, Poiyai Thavira Verillai...!
Ebook84 pages44 minutes

Poi, Poiyai Thavira Verillai...!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தன் மனைவி தேவாவுக்கு தெரியாமல் ஜெயா என்ற பெண்ணுடன் பழகி வருகிறார். ஐம்பது வயதான ராஜசேகர் என்ற தொழிலதிபர். ஊரில் தனக்கு இருக்கும் மரியாதை கெடாமல், ஜெயாவை திருமணம் செய்ய நினைக்கிறார். அதற்கு ஜெயாவின் தம்பி ஒரு குறுக்கு யோசனை தருகிறார். அந்த யோசனையால் அவர் மனைவிக்கு என்ன நேர்ந்தது? ராஜசேகரின் நடிப்பு நம்ப்ப்பட்டதா? தற்கொலை நாடகம் நிறைவேறியதா? ஜெயாவை மணந்தாரா? ராஜசேகரின் நிலைமை என்ன? என்பதை கதையின் மூலம் அறியலாம்!.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580100906502
Poi, Poiyai Thavira Verillai...!

Read more from Pattukottai Prabakar

Related to Poi, Poiyai Thavira Verillai...!

Related ebooks

Related categories

Reviews for Poi, Poiyai Thavira Verillai...!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poi, Poiyai Thavira Verillai...! - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    பொய், பொய்யைத் தவிர வேறில்லை...!

    Poi, Poiyai Thavira Verillai...!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    உறவு சுமந்தவள் நீ.

    உணர்வு சுமந்தவன் நான்.

    அடுத்த குழந்தை இப்போது வேண்டாம்.

    அபச குணம்! அபச குணம்!

    முதலில் அந்த ரேடியோவை நிறுத்து!

    மேற்படி கவிதை எப்போது, எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டதென்றால்... வேண்டாம். உங்களுக்குத் தெரியும்.

    சப்ஜெக்ட்டை விட்டாச்சு...

    பொய், பொய்யைத் தவிர வேறில்லை ப்ளஸ் மர்டர் மார்க்கெட் கதைகளைத் கொண்ட இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கும் மயிலவன் என்பவருக்கு நன்றி, கவிதைக்காக தனி சன்மானம் எதுவும் தர வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பிரியமாய்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    பொய், பொய்யைத் தவிர வேறில்லை...!

    எப்போதும் முதல் அத்தியாயத்திலிருந்து நாவல்களைப் படிக்க ஆரம்பித்து... உங்களுக்கு போரடிக்கவில்லை? ஒரு மாற்றத்துக்காக இங்கே ஆறாம் அத்தியாயத்தில் ஆரம்பியுங்களேன்.

    - பட்டுக்கோட்டை பிரபாகர்

    6

    அப்போ, நாளைக்குப் பார்க்கலாமா என்று புறப்பட்டுக் கொண்டிருந்தான் கதிரவன். குருவிகள் அந்தரத்தில் சிறகசைத்து டாட்டா காட்டிக் கொண்டிருந்தன.

    இன்ஸ்பெக்டர் பைக்கை நிறுத்தி இறங்கினார். நடைபாதையின் இரண்டு பக்கங்களில் மண் தொட்டிகளில் செல்லமான செடிகள் பின்னோக்கிச் செல்ல, சரக் சரக் என்று ஸ்டேஷனுக்குள் நுழைந்து தன் மேஜையில் அமர்ந்தார். சப்-இன்ஸ்பெக்டரின் நாற்காலியைப் பார்த்தார், காலியாக இருந்தது.

    ரைட்டர் மூக்கின் நுனியில் அபாயகரமாய் கண்ணாடியைத் தாங்கிக் கொண்டு எழுதிக் கொண்டிருக்க அடுத்த ஹாலில் பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களை விரட்டிக்கொண்டிருந்தான் ஒரு கான்ஸ்டபிள்.

    டிராயரிலிருந்து ஒரு பைலை எடுத்து மேஜைமேல் போட்டுக்கொண்டு டெலிபோனை எடுத்தார்.

    ஹலோ, ஜீவகன் இருக்காரா? அவரோடத்தான் பேசணும். காத்திருக்கையில் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு, மூடியை எடுத்துவிட்டு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் குடித்தார்.

    ஒரு கான்ஸ்டபிள் வந்து சுவிட்ச் போட பெரிய முனகலுடன் மின் விசிறி சுழலத் துவங்கி அறையின் சுவரெல்லாம் டியூப் லைட்டின் வெளிச்சத்தை அலைக்கழித்தது.

    ஹலோ, மிஸ்டர் ஜீவகன். நான் இன்ஸ்பெக்டர் விமல் பேசறேன். குட் ஈவினிங், முந்தாநாள் பிரிண்ட்ஸ் பார்க்கறத்துக்காக டென்னிஸ் ராக்கெட் ஒண்ணு அனுப்பியிருந்தேன், இன்னும் ரிப்போர்ட் தரலை நீங்க. டி.எஸ்.பி. என் தலையைத் திங்கிறார் இந்த வாரத்துக்குள்ளே முடிக்க வேண்டிய கேஸ் இது. டிலே ஆகிறது ரொம்ப தொந்தரவாகிடும்.

    பிரிண்ட்ஸ் எடுத்தாச்சு சார். கம்பாரிசன் நடந்துக்கிட்டிருக்கு. இன்னும் அரைமணியிலே ரிசல்ட் சொல்லலாம் போன்ல ரிசல்ட்டைச் சொல்றேன். ரிட்டன் ரிப்போர்ட்டை காலைல அனுப்பி வைக்கிறேன். லாபிலே ரெண்டு டெக்னீஷியன்ஸ் லீவு. அதான் டிலே.

    ஓக்கே அரை மணியிலே சொல்லுங்க.

    டெலிபோனை வைத்தார்.

    எங்கேய்யா ஏட்டு?

    போன் வந்துச்சி சார், தியேட்டர்ல ஒரு கலாட்டான்னு. அவரும், 804ம் போயிருக்காங்க.

    கிருஷ்ணனைக் கூட்டி வரச் சொன்னேனே, என்னய்யா ஆச்சு?

    ஒரு கையில சாராயம். இன்னொரு கையில விரிச்ச கத்தி வச்சுக்கிட்டு அசிங்கமா பேசறான் சார். அதெல்லாம் வர முடியாது. உங்க இன்ஸ்பெக்டரை வேணும்னா இங்கே வந்து பாக்கச் சொல்லுங்கறான் சார்.

    ச்சை! உங்களுக்கெல்லாம் எதுக்குய்யா காக்கிச் சட்டை. கழட்டிப் போட்டுட்டு ஸ்டேஷ்ன்ல பொட்டி தூக்கறத்துக்கு போறது தானே? தம்மாத்துண்டு பய... இழுத்துட்டு வாய்யான்னா கத்தி வச்சிருக்கானாம். இவனுக்கெல்லாம் நான் என் பயிற்சியை நிருபிச்சிக் காட்டணுமா? ஏட்டு வந்ததும் நாலு பேரா போய் பொடரியில்ல தட்டிகொண்டாங்க இங்கே. கத்தியைப் பார்க்கறேன் நானும்.

    விமல் வெள்ளைக் காகிதம் எடுத்து சில இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட் எழுத ஆரம்பித்தார். தலைக்கு மேலிருந்த மறைந்த பிரதமரின் படத்தின் காய்ந்த மாலை ஃபான் காற்றுக்கு தக்கபடி அசைந்து கொண்டிருக்க...

    அந்த நான்கு பேரும் உதடுகள் முழுக்க சிரிப்பேந்தி உள்ளே வந்து ஆள் மாற்றி ஆள் மாற்றி வணக்கம் சொன்னார்கள். ஒருவன் எலுமிச்சைப் பழம் நீட்டினான். வாங்கி மேஜையில்

    Enjoying the preview?
    Page 1 of 1