Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Happy Bharath Day!
Happy Bharath Day!
Happy Bharath Day!
Ebook113 pages1 hour

Happy Bharath Day!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பட்டப் படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கும் தனபாலுக்கு வேலை கிடைத்ததா? அதன்பின் அவன் எடுத்த முடிவு என்ன? அகிலாவின் காதலனாகிய மதன் சூர்யா எண்டர்பிரைசஸ் அலுவலகத்தில் உயர்பதவி வகிக்கிறான். எதிர்பாராத விதமாக மதன் இறந்து விடுகிறான். இன்ஸ்பெக்டர் நியூட்டன் பரத் சுசிலாவின் உதவியால் தன் காதலன் இறப்பிற்கான காரணங்களை அகிலா கண்டுபிடித்தாளா? இல்லையா? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹேப்பி பரத் டே கதையில் காணலாம்...!

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580100908124
Happy Bharath Day!

Read more from Pattukottai Prabakar

Related to Happy Bharath Day!

Related ebooks

Reviews for Happy Bharath Day!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Happy Bharath Day! - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹாப்பி பரத் டே!

    Happy Bharath Day!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    திருவல்லிக்கேணி.

    பன்னிரண்டு போர்ஷன்கள் கொண்ட நசுங்கின பெருங்காயடப்பா போன்ற அந்த வீட்டின் மய்யத்தில், சகடை இல்லாத ஒரு கிணறு, ஒரு கை பம்பு, பின்புறம் இரண்டு பாத்ரூம்கள் (ஒன்றில் தாழ்ப்பாள் இல்லை) இரண்டு கக்கூஸ்கள் (எப்போதும் டிமாண்ட்).

    ஒரு போர்ஷன் என்பது, பத்தடிக்கு பனிரெண்டடியில் ஒரு ஹால். அதையடுத்து உடனே அதில் பாதி சைசில் சமையலறை. தட்ஸ் ஆல். மொத்தமாக இரண்டு நாற்பது வாட்ஸ் விரக்தி வெளிச்சம் சிந்தும் ஒட்டடை கட்டின பல்புகள். தரையில் நிலாவின் மேற்பரப்பாய் அங்கங்கே பள்ளங்கள். பல்விழுந்த கிழவி போல அங்கங்கே ஓடு இல்லாத கூரை, மழை வரும்போதெல்லாம் காகிதக் கப்பல் செய்து மிதக்கவிட்டு குழந்தையுடன் விளையாட வசதியாக.

    முப்பது ரூபாய் வாடகைக்கு இந்த சௌகரியங்கள் அமோகம்.

    ஒரு போர்ஷனைத் தவிர மற்றதில் எல்லாம் தனி நபர்களே. அநேகமாக கவலை சுமந்த இளைஞர்கள்; ஜவுளிக்கடையில் ஸேல்ஸ்மேனாக இருக்கும் முத்தண்ணா, சமையல் சாமாவுக்கு எடுபிடியாகப் போய் வரும் கிட்டு, பாரீசில் லாட்டரிச் சீட்டு ஸ்டால் போட்டிருக்கும் அகமது, குவைத் போவதற்கு விசாவுக்காகக் காத்திருக்கும், ஒரு மோசமான ஏஜண்ட்டிடம் பத்தாயிரம் கொடுத்துவிட்டு தினம் அலையும் ரபீக். காகிதத்தில் வர்ணம் பூசி காற்றாடி செய்து விற்கிற குப்புசாமி, தேய்த்ததும் ஈறுகளுக்கு எரிச்சலூட்டி சிலருக்கு கொப்புளங்களையும் ஏற்படுத்திவிடும் எட்டாம் தர பல்பொடி ஒன்றை ஏஜன்சி எடுத்து, கடை கடையாய் அலையும் கஸ்தூரிரங்கன், ஒரு நாள் வசனம் பேசும் நடிகனாகிற நம்பிக்கையுடன், இன்றைக்கு கூட்டத்துடன் வசனம் பேசாமல் நின்றுவிட்டு ஏஜண்ட்டுக்கு வெட்டியது போக சொற்பமாய் பாக்கெட்டில் சேர்க்கிற சுப்பிரமணி...

    இவர்களில் தனபால் தவிர்த்து மற்ற யாவரும் கல்லூரி பக்கம் போகாதவர்கள்.

    முதல் போர்ஷனில் இருக்கும் தனபால் மட்டும் அந்த காலனியில் மதிப்பான ஆசாமி. உருப்படியான வேலை எதுவும் இல்லை என்றாலும் பி.எஸ்.சி. படித்திருப்பதால் தங்களுக்கு வரும் ஆங்கில சந்தேகத்தை இவனிடம்தான் தீர்த்துக் கொள்வார்கள்.

    தன் போர்ஷன் வாசலில் காற்றுக்காக அமர்ந்து அருகில் உள்ள சலூனில் கேட்டு எடுத்து வந்த நேற்றைய பேப்பரை பீடி குடித்துக்கொண்டே படித்துக் கொண்டிருந்தான் தனபால்.

    26 வயது. 36 வயது தோற்றம். கறுப்பு, கலைந்த தலை, ஷேவிங் மறந்த தாடி, ஆனாலும் தெரிவது கன்னங்களில் குழிகள். லூசான முரட்டுத் துணிச் சட்டை. பீடி நெருப்பின் பொத்தல்கள் ஏழெட்டு வாங்கிய சாயம் காலாவதியான லுங்கி.

    தனபாலுக்கு ஊர் சிதம்பரம். அங்கே அப்பா, அம்மா, அண்ணன், தங்கை எல்லோரும் உண்டு. ஆனால் இவன் சென்னை வந்து இரண்டு வருடங்களாயிற்று. வீட்டில் அப்பாவோடு ஆரம்பித்த பிணக்கு, ரோஷத்தைச் சூடேற்றிப் புறப்பட வைத்தது. அங்கேயும் ஒண்ணும் பால் பாயாசத்துடன் சாப்பாடு கிடையாது. அப்பா ஒரு தனியார் லாட்ஜில் வாட்ச்மேன். நானூறு ரூபாய் சம்பளம்.

    தனபால் டிகிரி முடித்த நிமிடத்திலிருந்தே வேலைக்கு வேட்டையாடிக் கொண்டிருக்கிறவன். அப்ளிகேஷன் வாங்கின, ஸ்டாம்ப் வாங்கின, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பிரிண்ட் போட்ட செலவுகளைத் தனியாகச் சேர்த்திருந்தாலே ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கலாம்.

    சென்னையில் ஏதாவது வழி பிறக்கும் என்று வந்ததில் நிறைய அனுபவங்கள் தான் கிடைத்தன. வேலைக்கு முயன்று கொண்டே சின்ன சின்னதாய் பத்துக்கும் மேற்பட்ட வேலைகள் மாறியாயிற்று.

    லேட்டஸ்ட்டாய் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை விளக்குப் பிடித்தல்.

    திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ராகம் வீடியோஸ் என்று கடை வைத்திருக்கும் கனகராஜ், கேஸட்ஸ் வாடகைக்கு விட, குறித்துக் கொள்ள, ப்ளஸ் டூ படித்துவிட்டு எடுப்பாய் பிரா போட்டுக் கொண்டு புதுசாய் லிப்ஸ்டிக் தீற்றலாய்ப் பழகும் ஒரு பெண்ணைப் போட்டு வைத்திருக்கிறார். கவரேஜ் என்று திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மட்டும் தனபாலுக்கு ஆள் அனுப்பிகூட அழைத்துக் கொள்வார்.

    தனபால் வீடியோ கேமிரா வைத்த பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவரோடு செல்ல வேண்டும். லென்ஸ் வழியாகப் பார்க்க அனுமதிக்க மாட்டார். போகஸ் லைட்டை அவர் சொல்லுகிற திசையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு மரம் போல நின்றால் போதும்.

    ஒரு கவரேஜ்க்கு துணையாகச் சென்றால் இருபது ரூபாய் கொடுப்பார். கல்யாண வீடென்றால் விருந்து இலவசம். கனகராஜ்க்கு தொழில் அவ்வளவு ஒன்றும் பிஸி இல்லை. வாரத்திற்கு ஒரு கவரேஜ் வந்தாலே பெரிது.

    ஹலோ தனபால் என்று வந்தான் பாலு. அவனும் வேலையற்றவன்தான். ஆனால் கொஞ்சம் வசதியான பின்னணி. விதவிதமாய் ட்ரெஸ், சிகரெட், சினிமா, மொஃபெட், வேலை கிடைத்தால்தான் வாழ்க்கை என்று இல்லை. கிடைத்தால் தேவலாம்.

    பாலு கர்சீப் எடுத்து தனபாலுக்கு அருகில் சிமெண்ட் பூசின படியில் மண்ணைத் தட்டிவிட்டு அமர்ந்து, என்ன, நேத்து பேப்பரைப் படிச்சிட்டிருக்கே? என்றான்.

    "எப்பவும் அப்படித்தான். நேத்து பேப்பர் ஓசி கேட்டாத்தான் சங்கடமில்லாம யாரும் கொடுப்பாங்க. நான் என்ன ப்ரைம் மினிஸ்ட்டரா இல்லை சீஃப் மினிஸ்ட்டரா? உடனுக்குடனே நியூஸ் தெரிஞ்சி என்ன செய்ய போறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1