Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mutham, Nizhal Mutham
Mutham, Nizhal Mutham
Mutham, Nizhal Mutham
Ebook86 pages58 minutes

Mutham, Nizhal Mutham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100901261
Mutham, Nizhal Mutham

Read more from Pattukottai Prabakar

Related to Mutham, Nizhal Mutham

Related ebooks

Reviews for Mutham, Nizhal Mutham

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mutham, Nizhal Mutham - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    முத்தம், நிழல் முத்தம்

    Mutham, Nizhal Mutham

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    லாக்கப் அறையில் பூட்டு திறக்கப்படும் ஓசை கேட்டு கண்மூடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த வரதராஜன் ஒரு சிலிர்ப்புடன் நிமிர்ந்து பார்த்தான்.

    இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளே வந்தார்.

    இன்ஸ்பெக்டரோடு உள்ளே வந்த கான்ஸ்டபிள், எந்திரிச்சி நில்லுடா நாயே! அய்யா வந்திருக்காரு. என்னடா லுக் விடறே? என்று லத்தியை ஓங்கினான்.

    பொன்னுசாமி, நீ வெளில இரு.

    கான்ஸ்டபிள் ஜென்ம எதிரியைப் பார்ப்பதுபோல வரதராஜனை முறைத்துவிட்டு வெளியேறினான்.

    சிரமப்பட்டு எழுந்து நின்ற வரதராஜனின் உடல் லேசாக நடுங்கியது. தன் கட்டுப்பாட்டை மீறி வீங்கின உதடுகளிலிருந்து வழிந்த எச்சிலை சட்டையை உயர்த்தி ஒற்றிக் கொண்டான்.

    என்ன வரதராஜன், வலிக்குதா? என்றார். முருகேசன்.

    பதில் சொல்லாமல் பார்த்தான்.

    எதுக்கு இத்தனை அவஸ்தை? நான்தான் கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி தெளிவாச் சொன்னேனே தம்பி. ஓத்துக்கிட்டா தண்டனை குறையும். அதை ஏன் நீ யோசிக்க மாட்டேங்கறே?

    நான் இதைச் செய்யலைங்க சார், நம்புங்க.

    நம்புற மாதிரி சொன்னா கட்டாயம் நம்புவோம். நீ இந்த ஒரு வரியைத் தவிர வேற எதுவும் பேச மாட்டேங்கறியே கண்ணா.

    தன் ஸ்டிக்கால் அவன் தாடையைத் தொட்டு நிமிர்த்தினார். என்னை நேராப் பாரு! என் கண்ணைப் பார்த்து சொல்லு, நீ எதுவுமே செய்யலை?

    கலங்கின கண்களுடன் பார்த்தான்.

    என் நேரம் சரியில்லை சார்.

    வெளிப்படையாப் பேசுவோமா? ஒரு நிராபராதியை குற்றவாளியாக்கி கேசை முடிக்கணும்னு எனக்கு ஆசை இல்லை. அது தர்மமும் இல்லை. நீ மனசு விட்டுப் பேசினாத்தான் என்னால உனக்கு உதவ முடியுமான்னு யோசிப்பேன்.

    என்னைக் காப்பாத்துங்க சார். எப்படியோ இந்தச் சிக்கல்ல நான் மாட்டிக்கிட்டேன் சார்.

    ரைட்டு. சுதாவை மயக்கப்படுத்தி அவங்களுக்கு அதிரடி ஆபரேஷன் நடத்தி கர்ப்பப் பையிலேர்ந்து குழந்தையைத் திருடின சதி வேலையை நீ செய்யலைன்னு தீர்மானமா வெச்சுக்கலமா?

    அதுதான் சார் உண்மை!

    எது?

    இதில எனக்கு சம்பந்தம் இல்லையங்கறது.

    சரி. எதுக்காக அவசர அவசரமாக உன் ரூமைக் காலி செஞ்சி பொருளை எல்லாம் உன் ஃபிரண்டு வீட்ல கொண்டு போய் வெச்சே? எதுக்காக வக்கீல் ஆபீசுக்கு ஆலோசனைக்காகப் போனே?

    அந்த சதில பயன்படுத்தப்பட்ட தையல் நரம்பு சம்பந்தமா நான் வேலை பார்க்கற நர்சிங்ஹோமுக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வந்து விசாரிச்சார் சர்.

    அதனால என்ன? நீதான் இதில சம்பந்தப் படலையே உனக்கென வந்திச்சி?

    பரத் அவரோட ஆபீசுக்கு விக்னேஷ் சார் மூலமா என்னை வரவழைச்சு சாதாரணமாக விசாரிக்கிற மாதிரி என்னைப் பத்தி தோண்டித் தோண்டி விசாரிச்சாங்க சார். அவங்க என்னை இதில சந்தேகப்படறாங்கன்னு தோணிச்சு சார்.

    லட்சம் பேர் உன்னை சந்தேகப் படட்டுமே. நீ தப்பு செஞ்சிருந்தாத்தானே உனக்கு பயம் வரணும்? எதுக்கு தலைமறைவாகப் பார்த்தே?

    ஒரு முட்டாள்தனமான பயம்தான் சார் காரணம். நான் சொன்ன சில பொய்கள் என்னை ரொம்ப பயப்பட வெச்சிடுச்சி.

    என்ன பொய் சொன்னே நீ?

    நான் சினிமால சின்னச் சின்ன வேஷங்கள்ல நடிச்சிட்டிருக்கிறவன்னு பரத் விசாரிச்சப்ப சொன்னேன். சம்பவம் நடந்த அன்னைக்கு ஹைதராபாத்ல ஒரு கோர்ட் சீன்ல நடிச்சதா அழகா கற்பனை செஞ்சி பொய் சொன்னேன்.

    ஏன் அப்படி சொன்னே?

    பக்கத்தில விக்னேஷ் சார் இருந்தார். அதனால அப்படிச் சொன்னேன்.

    அவர் இருந்தா என்ன?

    அவர்கிட்ட ஆறு மாசமாவே நான் சினிமாக்காரன்னு அப்பப்ப பொருத்தமா பொய் சொல்லிக்கிட்டிருந்தேன். அதனால அதேப் பொய்யைத் தொடர்றதுக்காக மேல மேல பொய் சொல்ல வேண்டியதாப் போச்சு. நான் சொன்னதெல்லாம் பொய்னு பரத் ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சிடுவார்னு எனக்குத் தெரியும். அதனால என்மேல சந்தேகம் திரும்புன்னு நினைச்சு அவசரமா ரூமைக் காலி செஞ்சேன்.

    ரைட்டு விக்னேஷ்கிட்ட ஆறு மாசமா நீ ஒரு சினிமாக்காரன்னு பொய்யா நாடகமாட வேண்டிய அவசியம் என்ன?

    உண்மையைச் சொன்னா நீங்க நம்பணும் சார்.

    "சொல்லு,

    Enjoying the preview?
    Page 1 of 1