Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalargal Jakkirathai
Kaadhalargal Jakkirathai
Kaadhalargal Jakkirathai
Ebook101 pages44 minutes

Kaadhalargal Jakkirathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரசாத் என்பவனை உயிருக்கு உயிராக காதலிக்கும் தேவி. நயவஞ்சகமாக தன்னுடைய காதலி தேவியை, விலைமகளிராக்கும் பிரசாத். தன் காதலனின் சுயரூபம் தெரிந்தபிறகு தேவி எடுக்கும் முடிவு என்ன? பரத்-சுசீலா இருவரும் தேவியின் நிலை கண்டு என்ன செய்தார்கள்? தெரிந்து கொள்ள வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580100908214
Kaadhalargal Jakkirathai

Read more from Pattukottai Prabakar

Related to Kaadhalargal Jakkirathai

Related ebooks

Reviews for Kaadhalargal Jakkirathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalargal Jakkirathai - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதலர்கள் ஜாக்கிரதை

    Kaadhalargal Jakkirathai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்

    நான் எழுதும் துப்பறியும் கதைகளில் தொடர்ந்து இடம் பெறும் கற்பனைப் பாத்திரங்கள் பரத் சுசீலா.

    வாசகர்கள் மத்தியில் இவர்கள் என்னைவிட பிரபலம். என்னைச் சந்திக்கும் வாசகர்களின் ஒன்றாவது கேள்வி; பரத் சுசீலாவுக்கு எப்ப சார் கல்யாணம்?

    இந்தப் பாத்திரங்களை கற்பனையாக உருவாக்கியபோது இத்தனை தூரம் இவர்கள் வரவேற்பைப் பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

    பரத் ஒரு வக்கீல். மூன்லைட் டிடெக்டிவ் ஏஜன்ஸி என்கிற பெயரில் ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்துபவன். அவனுக்கு நிறுவனத்திலும், வாழ்க்கையிலும் கிட்டத்தட்ட பார்ட்னராக செயல்படும் இனிய காதலி சுசீலா. துள்ளலும் குறும்பும் அதே சமயம் புத்திக் கூர்மையும், சாதுர்யமும் கலந்து அமைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்கள் இடம் பெற்ற நாவல்கள் இவர்கள் இடம் பெறாத நாவல்களை விட சற்று அதிகம் விற்பனையானதாக புத்தக வெளியீட்டாளர்களே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    பரத் சுசீலா பங்கு பெற்ற துப்பறியும் நாவல்களை தனிப்பட்ட தொகுதிகளாக, அழகிய புத்தக வடிவில் வாசகர்களான உங்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய எண்ணம். இதோ இப்போது உங்கள் கைகளில் மேலும் நான்கு தொகுப்புக்கள்! இதில் பரத் சுசீலா பங்கு பெற்று துப்பறிந்த ஐந்து சுவையான நாவல்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன. இந்த நாவல்கள் யாவும் உங்களால் அதிகம் பாராட்டப் பெற்றவை. தனிச் சிறப்புகள் வாய்ந்தவை.

    பரத்-சுசீலா வரிசையின் முதல் பத்து தொகுப்புகளுக்கு நீங்கள் அளித்த ஊக்கம் தற்பொழுது மேலும் நான்கு தொகுதிகளை வெளியிடும் உற்சாகத்தை தந்துள்ளது.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    உறுத்தாத வெயில் நேற்று மாலையோடு மழையை முடித்துக்கொண்டு, ராத்திரி விக்ஸ் வேபோரப் தடவித் தூங்கி இப்போது சுத்தமா மூச்சுவிட்டது வானம்

    ஆவின் பால் நிலையத்தில் ஒரு பாட்டில் வாங்கி ஸ்ட்ராவை எடுத்துப்போட்டுவிட்டு நேரடியாகக் குடித்தான்

    அருகில் பஸ் ஸ்டாப்.

    குடித்துக் கொண்டே பார்த்தான்.

    மொட மொட என்று சேலைக்கட்டி கொண்டை போட்ட உயரமான பெண்ணின் தொப்புள் ஓவல் வடிவத்தில் இருந்தது. சலவை முழுக்கை சட்டை போட்டிருந்தவன், ஸ்டைலுக்காக மட்டுமே சிகரெட் வைத்துக் கொண்டிருந்தான். கண்ணாடிபோட்ட பைலை மார்பில் அணைத்த ஒல்லியான பெண்கள் கைப்பையில் ஆங்கில நாவல் இருந்தது. நிமிடத்திற்கொருதரம் தன் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்ட வழுக்கைத்தலை பெரியவர் நேரம் பார்க்கிறாரா. இல்லை ஓடுகிறதா என்று பார்க்கிறாரா என்பது தெரியவில்லை. ஸ்கூல் யூனிபார்மில் மடக்கிக் கட்டின இரட்டை ஜடைகளோடு இரண்டு முழங்கால் தெரியும் பெண்கள், நாளை முதல் ஜாக்கெட்டுக்குள் உள்ளாடை அணியலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

    பாட்டிலை வைத்துவிட்டுப் பணம் தந்தான். சில்லறை இல்லை எனப்பட்டான். சுற்றிலும் பார்த்தான்.

    பாதையோரத்தில் வெள்ளரிப் பிஞ்சுகளால் சின்னச் சின்னக் கோபுரம் கட்டி வியாபாரம் பண்ணின காசுகளை ரெமி பவுடர் டப்பாவுக்குள் வைத்துக் கொள்ளும் பெரிய பொட்டுவைத்த சுமங்கலிக் கிழவியிடம் வந்தான்.

    வெள்ளரிப் பிஞ்சுகள் வாங்கிக்கொண்டான். பணம் தந்து, பாக்கி வாங்கி, பால் கடையில் தந்துவிட்டு ஒரு பிஞ்சை சொடக் என்று கடித்துக் கொண்டு மறுபடி பஸ் ஸ்டாப்பைப் பார்த்தான்.

    கறுப்பாய், இடுப்பில் சதைத் திமிறலுடன், முகத்தில் ஏக பவுடருடன், கையில் சுண்டு விரலில் ஒரு சின்னப் பையனுடன் இருந்தாள்.

    அசுவாரசியமாக முகத்தைத் திருப்பி சாலைக்கு அந்தப் பக்கம் முப்பதடி உயரத்தில் ஆபாசமாய்க் கால்களை வைத்திருந்த கதாநாயகியைப் பார்த்தான்.

    முடிந்த சிகரெட்டைக் கை மாற்றிக்கொண்டு மற்றொரு சிகரெட்டை எடுத்துக் கொண்டான். இதிலிருந்து அதற்கு நெருப்பு மாற்றம் செய்துகொண்டு கீழே போட்டு மிதித்தான்.

    புதிதாய் வந்து நின்ற பெண்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டான்.

    காத்திருந்தான்

    அவன் கழுத்தில் காமிரா தொங்கியது.

    ***

    காதுக்குப் பின்னால் ஒற்றை ரோஜாவைச் செருகிக்கொண்டாள். வெளியே வேடிக்கை பார்த்த பிரா பட்டையை உள்ளே தள்ளினாள். ஜாக்கெட்டின் அடிபாகத்தைக் கீழே இழுத்து சுருக்கங்களை நீக்கினாள். செயினை வெளியே எடுத்துப் போட்டுக்கொண்டாள். சாய்ந்து வந்து பின் நேராய் தொங்கியது. சைடில் திரும்பிப் பார்த்துக்கொண்டாள்.

    தேவி, ஆபீசுக்கு நேரமாகலை உனக்கு?

    "இதோ

    Enjoying the preview?
    Page 1 of 1