Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iranthavan Sirippu
Iranthavan Sirippu
Iranthavan Sirippu
Ebook164 pages1 hour

Iranthavan Sirippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903706
Iranthavan Sirippu

Read more from Pattukottai Prabakar

Related to Iranthavan Sirippu

Related ebooks

Related categories

Reviews for Iranthavan Sirippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iranthavan Sirippu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இறந்தவன் சிரிப்பு

    Iranthavan Sirippu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    இறந்தவன் சிரிப்பு பாகம் - 2

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ஊட்டி செல்லும் மலைப்பாதையில் க்ரீம் கலர் ஃபியட் கார் மூச்சு வாங்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

    மலைகளின் மேல் பனி அபிஷேகம் நடத்தப்பட்டிருந்தது.

    வானம் தன் நிலப்படுதாவை தொலைத்துவிட்டு அழுத முகத்துடன் விழித்துக் கொண்டிருந்தது.

    காற்று ஜதி சொல்ல, மரங்கள் நடனமாட... உதிரும் சலங்கை முத்துக்களாய் பனித்துளிகள்.

    அவசரத்திற்காக ஈரம் காயாத உடைகளை உடுத்திக் கொண்டது போல ஜில்லிப்பாக இருந்தது பிரேமலதாவுக்கு.

    சேலை தலைப்பைப் போர்த்திக் கொண்டு, மேடையில் கடவுள் வாழ்த்துக்குப் போல கைகளை மார்பின் குறுக்கில் கட்டிக் கொண்டிருந்தாள்.

    பிரேமலதாவின் கழுத்தில் இன்னும் சரடு மாற்றாத புதிய தாலி ஒளிந்திருந்தது. நெற்றியிலும், வகிட்டின் ஆரம்பத்திலும் பயணம் புறப்படும் முன்பாக ஆசிர்வாதம் பெற்றபோது, வரிசையாக உறவினர்கள் வைத்து விட்டதில் அடர்த்தியாகக் குங்குமம்.

    பிரேமலதாவுக்கு உப்பல் கன்னங்கள். அவற்றில் சிரிக்காத போதிலும் லேசான குழிகள். திருத்தமான மூக்கு. மாப்பிள்ளையின் தங்கை பிடிவாதமாக பூசிவிட்ட சிகப்புச் சாயம் சுமந்த உதடுகள். வரையாத வளைந்த புருவங்கள். சிப்பிகளாய் இமைகள்.

    பிரேமலதாவின் தோளில் ஒரு கையைப் போட்டுக் கொண்டு, மற்றொரு கையால் ஸ்டியரிங்கை கண்ட்ரோல் செய்து காரை ஓட்டின ரஞ்சித்குமார் கழுத்தில் மஃப்ளர் சுற்றியிருந்தான்.

    கைகளில் சுருட்டை சுருட்டையாய் ரோமங்கள், நெற்றியோரத்தில் ஒரு சின்ன தழும்பு. ரிமாண்டில் இருந்த ஒரு கொலைக் குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கொடுத்த பரிசு. அடர்த்தியான மீசை மேலுதட்டை பதுக்கி வைத்திருக்க... அந்தக் கண்களில் போலீஸ் அதிகாரிக்கு உரிய முரட்டுத்தனத்தை மீறி லேசாக ஒரு பெண்மையின் நளினம் ஒட்டிக்கொண்டிருந்தது.

    பிரேம் என்றான் ரஞ்சித்குமார். உன்னை அப்படி சுருக்கமா கூப்பிடலாமா?

    உங்க இஷ்டம் என்றாள்.

    என் இஷ்டம் இருக்கட்டும். உனக்கு அப்படிக் கூப்பிட்டா பிடிக்குமா?

    ம் என்று தலையசைத்தாள்.

    இங்கே பாரு, நமக்கு கல்யாணமாகி ஒரு வாரமாச்சி. இதுவரைக்கும் நம்மை சுத்தி சதா சொந்தக்காரங்க இருந்தாங்க. அதனால மனசு விட்டுப் பேச முடியலை. இப்ப நாம ரெண்டு பேரும் தனியாக பிச்சிகிட்டு வந்தாச்சு. இன்னமும் நீ கல்யாணப் பொண்ணு வேஷத்திலேயே இருக்கக்கூடாது. உன்னோட நெருக்கமான ஃபிரண்டுகிட்டே எப்படி கலகலப்பா பேசுவியோ அப்படி என்கிட்டப் பேசணும்.

    சரி.

    அதை என் முகத்தைப் பார்த்து சொல்லக்கூடாதா?

    பிரேமலதா, நிமிர்ந்து அவன் முகம் பார்த்துச் சொல்லிவிட்டு, உடனே வெட்கம் மேலிட பார்வையை நகர்த்திக் கொண்டாள்.

    நீ டிகிரி படிச்சிருக்கிறதா சொன்னாங்க. என்ன சப்ஜெக்ட்?

    பி.ஏ. பாலிடிக்ஸ்

    அரசியல்ல உனக்கு ஆர்வமா?

    காலேஜ்ல அதான் எனக்கு கிடைச்சது.

    ரஞ்சித்குமார் வாய்விட்டுச் சிரித்து, பரவாயில்லையே, ஜோக் எல்லாம் அடிக்கிறியே. சாந்தி முகூர்த்தத் தன்னைக்கு நான் கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சியும் ரெண்டு வார்த்தை முழுசா பேச மாட்டேன்னுட்டியே. என்றான்.

    பயமா இருந்திச்சு.

    நியாயம்தான். உங்க மாமா சொன்னார். உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சப்ப ஒரு போலீஸ் ஆபீசராப் பாருங்கன்னு நீ சொன்னியாமே. உண்மையாகவா?

    ஆமாம்

    அதென்ன உனக்கு அந்த உத்தியோகத்து மேலே ஆர்வம்?

    என்னவோ தெரியலை, சின்ன வயசிலேர்ந்தே மனசுல பதிஞ்சிடுச்சி. வக்கீல், டாக்டர், என்ஜினியர் இவங்களைத்தான் கட்டிக்குவேன்னு ஆளாளுக்கு சொல்லிக் கிட்டிருப்பாங்க. நான் மட்டும் ஒரு போலீஸ் ஆபீசரை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்வேன். நான் விரும்பின மாதிரியே நீங்க எனக்கு கிடைச்சுட்டிங்க. சினிமால போலீஸ் ஆபீசரை பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு உற்சாகமா, பெருமிதமா இருக்கும். உங்க துறையில் மட்டும்தான் நிறைய சாகசங்கள் செய்ற வாய்ப்பு இருக்கு. நான் மட்டும் ஆம்பளையா பொறந்திருந்தா ஒரு பெரிய போலீஸ் ஆபீசராத்தான் வர நினைச்சிருப்பேன்.

    ஏன், இப்பக்கூட ஒண்ணும் மோசமில்லையே பிரேம். இப்பவும் உனக்கு ஆசையா இருக்கா, சொல்லு. பெண் போலீஸ் அதிகாரியா உன்னைக் கொண்டு வர நான் முயற்சி எடுத்துக்கிறேன் என்றான் ரஞ்சித்குமார்.

    நிஜமாவா? என்றாள் பிரேமலதா கண்களில் ஆர்வம் ததும்ப.

    இட் ஈஸ் எ ப்ராமிஸ். என்னோட எத்தனையோ கல்யாணமான ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட அவங்க வைஃப்ஸ் பத்தி சலிச்சுக்கிட்டிருக்காங்க. பொதுவா எந்த பொண்டாட்டியும் தன் புருஷன் போலீஸ்ல இருக்கிறதை விரும்பறதில்லை. அதில ஆபத்து அதிகம் இருக்குங்கிறதாலே. ஆனா, உன்னைப் பார்க்கிறப்ப எனக்கு சந்தோஷமா இருக்கு. ஒரு மாசம் போகட்டும். உங்கப்பா அம்மாவையும் ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு உன்னை போலீஸ் ட்ரைய்னிங் காலேஜ்ல சேர்க்க முயற்சி பண்றேன்.

    என்னால நம்பவே முடியலைங்க.

    எதை?

    நீங்க இவ்வளவு அன்பா, அமைதியா பேசறதை. உங்க உருவத்தைப் பார்த்தா ஜிலீர்ன்னு ஒரு பயம் மனசுல இறங்குது. அதை வச்சி நீங்க ரஃபாதான் பேசுவிங்கன்னு நினைச்சேன்.

    பிரேம் - பொண்டாட்டிகிட்டேயா முரட்டுத்தனமா பேச முடியும்? ரவுடிகள்கிட்டே நான் நடந்துக்கற முறையே வேற.

    எத்தனை நாள் லீவு போட்டுருக்கிங்க?

    ஒரு வாரம். கல்யாணத்துக்காக ரெண்டு வாரம் லீவு போட்டாச்சு. இது ஹனிமூனுக்காக. ஊட்டி வந்திருக்கேதானே?

    சின்ன வயசில.

    கோயமுத்தூர்ல குடியிருக்கிறவங்க வாரம் ஒரு தடவை ஊட்டி போய்டுவாங்கன்னு நான் நினைச்சிட்டிருந்தேன்.

    எனக்குதான் என்னவோ சந்தர்ப்பம் அமையலை. எங்கே தங்கப் போறோம்?

    ஊட்டில சப்-இன்ஸ்பெக்டரா என் ஃபிரண்டு பத்ரிநாத் வேலை பார்க்கிறான். அவனுக்கு ஏற்கனவே தகவல் கொடுத்துட்டேன். நல்ல ஹோட்டல்ல தனி காட்டேஜ் போடச்சொல்லி, ஊட்டியை சுத்திப் பார்க்கிற வேலையே இந்தப் பயணத்தில் கிடையாது.

    அய்யய்யோ! வேற எதுக்கு போறோம்?

    காட்டேஜ் போய் தங்க வேண்டியது. மூணு வேளையும் சாப்பிட்டு, மக்கள் தொகை பெருக்கத்துக்காக முயற்சி செய்யவேண்டியது.

    ச்சீ! போங்க என்றாள் பிரேமலதா.

    தோளில் போட்டிருந்த அவன் கை அவள் இடது கன்னத்தை மெல்ல வருடிக் கொடுத்தது. அவள் மெளனத்தை அமைதியாக்கி கொண்டு சங்குக் கழுத்தில் படர்ந்தது. அது மேலும் தைரியம் பெற்றபோது...

    தன் கையால் தடுத்து, ஒழுங்கா காரை ஓட்டுங்க, இது மலைப்பாதை என்றாள்.

    யெஸ், மலைப்பாதைதான் என்று கண்ணடித்தவன், உனக்கு டிரைவிங் தெரியுமா?" என்றான்.

    கத்துக்கணும்னு ஆசை, எங்க வீட்ல கார் இல்லையே. டிரைவிங் ஸ்கூல்ல சேர்ந்து கத்துக்கறேன்னு அப்பாகிட்டே கேட்டேன். நாம கார் வாங்கப்போறதில்லை, கத்துக்கிட்டு என்ன செய்யப்போறேன்னு சொல்லி தடுத்துட்டார்.

    நான் உனக்கு கத்துத் தர்றேன் பிரேம். இது அண்ணனோட வண்டி. அடிக்கடி எடுத்துக்குவேன். ஊட்டியை விட்டுப் புறப்படறதுக்குள்ளே உனக்கு டிரைவிங் கத்துக் கொடுத்துடறேன்.

    ஒரே வாரத்தில் கத்துக்க முடியுமா?

    அதுவே அதிகம். வேற என்னென்ன நீ கத்துக்கணும்னு ஆசைப்படறே?

    நீச்சல் கத்துக்கணும்னு ஆசை. குட்டி விமானம் ஓட்டி, வானத்துல பறக்கணும். பாராசூட்ல குதிச்ச, மிதந்து இறங்கணும். கால் மேல சக்கரம் கட்டிக்கிட்டு விளையாடணும்.

    யம்மாடி! விமானம், பாராசூட் இதெல்லாம் நமக்கு கட்டுப்படியாகாது. நீச்சல் வேணும்னா கத்துத் தர்றேன். மத்ததை கனவோட வச்சிக்க.

    நீங்க கேட்டதால சொன்னேன்.

    வெரி பெக்கூலியர் கேர்ள் என்ற அவன் விரல்கள், அவள் உதடுகளை மெதுவாக நிமிண்டின. என்னமோ தெரியலை - உன்னைப் பார்த்ததுமே எனக்குப் பிடிச்சிப் போச்சு பிரேம்.

    எனக்கு முன்னாடி எத்தனை பொண்ணுங்களை பார்த்திங்க?

    நிறைய ஜாதகங்கள் வந்துச்சி. ஆனா, நான் பொண்ணு பார்த்தது உன் ஒருத்தியைதான், அதென்ன பாட்டு பாடினே? கலைமகள் கைப்பொருளே. ஒரு வரிகூட மூளைல பதியலை, உன் முகத்தையே இமைக்காம பார்த்துக்கிட்டிருந்தேன்.

    என்ன சொல்வது என்று புரியாமல் முகத்தில் பூரிப்பு பொங்க, அமைதியாக இருந்தாள் பிரேமலதா.

    நம்ம ரிசப்ஷன்ல என்னோட ஃபிரண்ட்ஸ் அத்தனை பேரும் பேசி வச்சிக்கிட்ட மாதிரி என்ன சொன்னாங்க தெரியுமா?

    Enjoying the preview?
    Page 1 of 1