Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ver Kooda Poo Pookkum
Ver Kooda Poo Pookkum
Ver Kooda Poo Pookkum
Ebook96 pages49 minutes

Ver Kooda Poo Pookkum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403000
Ver Kooda Poo Pookkum

Read more from Rajesh Kumar

Related to Ver Kooda Poo Pookkum

Related ebooks

Reviews for Ver Kooda Poo Pookkum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ver Kooda Poo Pookkum - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    வேர் கூட பூ பூக்கும்

    Ver Kooda Poo Pookkum

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அந்தக் காலை நேர எட்டு மணிக்கு ஹாஸ்டல் பரபரப்பாயிருந்தது. வொர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். எல்லோருமே வேலைக்குக் கிளம்புகிற அவசரத்தில் இருந்தார்கள். பாத்ரூம் பிடிப்பதில் போட்டி இருந்தது. டவலைத் தோளில் போட்டுக் கொண்டு, பேஸ்ட்டை வாயில் நுரைத்துக் கொண்டு - பாத்ரூம் கதவை மொய்த்திருந்தார்கள் மேக்ஸி அணிந்த ஒரு கும்பல். ஏதோ ஒரு அறையில் இருந்து முகேஷின் ஹிந்திப் பாட்டு சத்தமாய்க் கேட்டது. சில பெண்கள் நேற்றைக்கு எடுத்த குஷ்பூ புடவை பற்றியும், நெயில்பாலீஷ் விலை உயர்ந்ததைப் பற்றியும், முந்தாநாள் ஒருத்தன் லவ் லெட்டர் தந்தது பற்றியும் தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

    மைதிலிக்கு கடைசி நேரத்தில் பரபரப்பாய் ஆஃபீசுக்குக் கிளம்புவது பிடிக்காது. காலையில் ஐந்தரைக்கெல்லாம் எழுந்துவிடுவாள். ஆறு மணிக்கெல்லாம் குளித்து - சரியாய் எட்டு மணிக்கு ரூமை விட்டு வெளியே வந்து விடுவாள். இந்த நாவலில் அறிமுகமாகிற நிமிஷம் -

    இந்து மகா சமுத்திர நிறத்தில் புடவை சுற்றியிருந்தாள். அதற்கு மேட்சாக வளையல்கள் கலகலத்தன. அளவெடுத்துப் பொருத்தின மாதிரி சீரான பல்வரிசை. மாதுளை நிறத்தில் ஈறுகளும், உதடுகளும் சிரிக்கும்போது அசத்தின.

    மைதிலி வராந்தாவைக் கடந்து படிகளில் இறங்கிக் கீழே வந்தாள். ரிசப்ஷனில் ரோஸி வந்து இணைந்து கொண்டாள். ரோஸி புடவை கட்டுவது மேற்கில் சூரியன் உதிப்பதற்கு இணையான சமாசாரம். இந்த நிமிஷம் கூட பனியனும், மிடியுமாய் இருந்தாள். மிடிக்கு கீழே வாழைத்தண்டு கால்கள்.

    குட்மார்னிங் மைதிலி!

    குட்மார்னிங்.

    ஹாஸ்டல் பீஸ் கட்டிட்டியா? - ரோஸி கேட்டாள்.

    கட்டிட்டேன் மெஸ் பீசையும் கட்டிட்டு நேத்திக்குத்தான் ஊருக்கு பணம் அனுப்பினேன்...

    உன்கிட்ட கடன் வாங்கி ஹாஸ்டல் பீஸ் கட்டலாம்னு இருந்தேன்...

    ஏண்டி! முள்ளங்கிப் பத்தை மாதிரி மாசமானா சம்பளம் வாங்கறியே… அதையெல்லாம் என்ன பண்றே?

    போன மாசம் கொஞ்சம் செலவு அதிகம், மைதிலி.

    ஒண்டிக்கட்டை! உனக்கு அப்படி என்ன செலவு?

    கிரிக்கெட்ல இந்தியா ஜெயிக்குமா ஜெயிக்காதான்னு பந்தயம் கட்டி தோத்துட்டேன் பார்ட்டி தர வேண்டியதாப் போச்சு.

    பாய் ப்ரெண்ட்ஸ்சுக்கா?

    ம்.

    நினைச்சேன். சாதாரண பார்ட்டியா இருந்திருக்காதே...

    கொஞ்சம் ஸ்காட்ச், கொஞ்சம் ரம், அப்புறம் பீர், கோழி, மீன்...

    ஏண்டி இப்படிக் குடிச்சுக் கெட்டுப் போறே?

    சேச்சே... நீ நினைக்கிற மாதிரி குடிச்சிட்டு ஆட மாட்டேன். டீசண்டான குடிகாரி நான்…

    குடிக்கறதுல டீசன்ட் வேறா! பசங்களோட பழகிட்டு அவங்களுக்கு செலவு வெக்கற பொண்ணுங்க நம்ம ஹாஸ்டல்ல நிறைய பேர் இருக்காங்க. நீ என்னடான்னா சம்பாதிக்கிற காசை அவங்களுக்காகத் தொலைச்சுட்டு பீஸுக்கு என்கிட்டே கடன் கேக்கறே…!

    ரோஸி சட்டென ஞாபகம் வந்தவளாய் மைதிலியைப் பார்த்துக் கேட்டாள்.

    என்னாச்சு உன்னோட ரோமியோ…?

    முறைத்தாள்.

    என்னோட ரோமியோவா?

    ஆமா.. உன் பின்னால ஒருத்தன் சுத்தினா அவன் உன்னோட ரோமியோதான்...

    நான் அந்த ஆளைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்.

    பாவம்டி!

    எனக்கு இப்படிப் பின்னாடி அலையறது… பார்க்ல, பீச்ல காதலிக்கிறது... இதெல்லாம் சுத்தமாய் பிடிக்காது...

    பேசிக் கொண்டே வந்ததில் பஸ் ஸ்டாப் வந்திருந்தது. ஆஃபீஸ் போகும் சின்ன கும்பல் அடிக்கடி வாட்சைப் பார்த்த படி காத்திருந்தது. ஒரு தெருப் பிச்சைக்காரன் அந்நேரத்துக்கே கலெக்க்ஷனை ஆரம்பித்திருந்தான். சில பெண்கள் போகிற அவசரத்திலும் மறக்காமல் ஒரு முழம் பூவை வாங்கி பின்னால் சொருகிக் கொண்டார்கள். ஆட்டோ ஒன்று இவர்களில் யாராவது ஒருத்தியாவது வரமாட்டாளா என்று ஏக்கமாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.

    சற்று தள்ளி - மைதிலியும், ரோஸியும் நின்றார்கள். ரோஸி சுற்றும் முற்றும் பார்த்தாள். கும்பலுக்கிடையில் துழாவினாள்.

    "உன்னோட ஆள் இன்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1