Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panivanbudan kettu Kolgiren
Panivanbudan kettu Kolgiren
Panivanbudan kettu Kolgiren
Ebook71 pages40 minutes

Panivanbudan kettu Kolgiren

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466954
Panivanbudan kettu Kolgiren

Read more from Rajeshkumar

Related to Panivanbudan kettu Kolgiren

Related ebooks

Related categories

Reviews for Panivanbudan kettu Kolgiren

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    V. G o o d s t o r y

Book preview

Panivanbudan kettu Kolgiren - Rajeshkumar

1

அந்த ஊதாநிற பிரியதர்சினி முற்பகல் 11.05ஐ சிணுங்கியபோது, சிவராஜ் கம்பெனியின் டைரக்டர்ஸ் மீட்டிங்கில், இம்போர்ட்டட் லைசன்ஸைப் பெறுவதிலுள்ள கஷ்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். அமெரிக்க வாசனை வீசும் அற்புதமான ஆங்கிலம் அவனுடையது. பொனிடிக்ஸ்படி பேசக்கூடியவன். ஊட்டியில் இருக்கும் ஒரு உயர்தரமான கான்வென்டில் ஸ்கூல் படிப்பு. அதற்கப்புறம் மெட்ராஸில் ஒரு காஸ்ட்லி காலேஜில் பட்டப்படிப்பு. எனவே ஆங்கிலம் அவனிடம் நாய்க்குட்டி மாதிரி பழகியிருந்தது. சொடுக்குப் போட்டால் அது ஓடி வருகிற மாதிரி -அவன் வாயைத் திறந்தால் அந்த அந்நிய பாஷை அவனிடம் ஓடிவந்தது.

எதிரே கறுப்பு குஷன் நாற்காலிகளின் மடியில் தங்களுடைய ப்ளட் பிரஷர் உடம்புகளைக் கிடத்தியபடி உட்கார்ந்திருந்த அந்த ஆறு டைரக்டர்களும் - சிவராஜ் பேசுவதை வெகு சிரத்தையாய் கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் - டேபிளின் - மேலிருந்த அந்த ஊதாநிற பிரியதர்சினி சிணுங்கி அவனுடைய பேச்சை நிறுத்தியது.

டைரக்டர்களில் ஒருவர் ரிஸீவரை எடுத்து- தன் ‘ஹியரிங் எய்டு’ காதுக்குக் கொடுத்தார். ஒரு பத்து வினாடி செவிமடுத்துவிட்டு சிவராஜை ஏறிட்டார்.

மிஸ்டர் சிவராஜ் யுவர் ஓய்ப் ஈஸ் இன் வாண்ட் ஆப்... யூ...

ப்ளீஸ்... ரிஸீவரை வாங்கிக் கொண்டான் சிவராஜ். ரிஸீவர் வாயைக் கோட்டில் தேய்த்து காதில் பொருத்தினான். என்ன மதுமதி?

மறுமுனையில் அவனுடைய மனைவி மதுமதி, கொஞ்சம் கவலையான குரலில் கேட்டான்:

டைரக்டர்ஸ் மீட்டிங்கிலா இருக்கீங்க?

ஆமா.

ஒரு நிமிஷம் வீட்டுக்கு வந்திட்டுப் போறீங்களா?

என்ன விஷயம்?

போன்ல வேண்டாம். நேர்ல வாங்க சொல்லிடறேன்.

சிவராஜ் புருவத்தைச் சுழித்தான்.

எதிரேயிருந்த டைரக்டர்களையும், அந்தக் கம்பெனியையும் மறந்து விட்டு தவிப்பான குரலில் கேட்டான்.

இப்பவே வரணுமா?

போர்டு மீட்டிங்கை முடிச்சுக்கிட்டு மத்தியானம் லஞ்சுக்கு வர்றப்ப வந்தாபோதும். மீட்டிங் ரொம்ப நேரம் நடக்குமா...?

இல்லே ஒரு மணி நேரத்துல முடிஞ்சுடும்.

முடிச்சிட்டே வாங்க. ஆனா மறந்து அப்படியே டைரக்டர்ஸ் மீட்டிங்கை ப்ரோலாஸ் பண்ணிடாதீங்க.

மறக்கமாட்டேன். வந்துடறேன்.

ரிஸீவரைக் கீழே வைத்தான் சிவராஜ்.

எனிதிங் இம்பார்ட்டென்ட் மிஸ்டர் சிவராஜ்?

நத்திங்... லெட் அஸ்... கன்டினியூ அவர் ப்ரோக்ராம்ஸ் என்றவன் தன் கையிலிருந்த ப்ரோக்ராம் சார்ட்டைப் பார்த்தபடி விட்டுப்போன தன் பேச்சைத் தொடர்ந்தான். ஸோ... வீ... ஆர் இன் ஏ... க்ரிடிக்கல்...

சரியாய் ஒரு மணி நேரம் பேச்சு மழை. 1.30க்கு போர்டு மீட்டிங் லஞ்சுக்காகக் கலைந்தபோது- எக்ஸ்க்யூஸ்மீ சொல்லிவிட்டு முதல் ஆளாய் ஏ.ஸி. அறையினின்றும் வெளியே வந்தான் சிவராஜ். சிவராஜைப்பற்றி ஒரு இரண்டு வாக்கியம் சொல்லியாக வேண்டும். சிவராஜ் ஆறடிக்கு ஒரு அங்குலம் கம்மியாய் பாலிஷ் செய்யப்பட்ட கோதுமை நிறத்தில், திருத்தமாய், வளப்பமாய்- பார்க்கிற எந்தப் பெண்ணையும் சலனப்படுத்துகிற மாதிரி இருந்தான். மீசையும் புருவங்களும் அசாத்திய கருமை. அந்த இருபத்தெட்டு வயதில் கம்பெனியின் நிர்வாகத்தைத் தோளில் தாங்கி தடுமாறாமல் நடந்தான். இப்போதைக்கு இது போதும்.

தன் அறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவனை - எதிர்ப்பட்ட ஜி.எம். எக்ஸ்க்யூஸ்மீ ஸார் என்று கூறி நிறுத்தினார்.

என்ன மிஸ்டர் தாமோதரன்?

ஏ.வி.எம். ராஜேஸ்வரி ஆல்ரெடி புக்கட் ஸார்.

ஈஸிட்... வேற எதை ட்ரை பண்ணினீங்க...?

ஆபட்ஸ்பரி... அதுவும் அவெய்லெபிளா இல்ல ஸார்...

தென்?

ஹேமமாலினி அவெய்லபிளா இருக்கு ஸார்... புக்க பண்ணிடலாமா...?

சிவராஜ்

Enjoying the preview?
Page 1 of 1