Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudinthal Uyirodu
Mudinthal Uyirodu
Mudinthal Uyirodu
Ebook147 pages52 minutes

Mudinthal Uyirodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Mudinthal Uyirodu

Read more from Rajeshkumar

Related to Mudinthal Uyirodu

Related ebooks

Related categories

Reviews for Mudinthal Uyirodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudinthal Uyirodu - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    "ஆரம்பிக்கலாமா... ஸார்...?"

    கழுத்தில் டையைக்கட்டி மெலிசாய் மீசை வைத்து அரசாங்க வாசனை அடிக்கும் அந்த இளைஞன் பவ்வயமாய் குனிந்து கை வைத்த நாற்காலியில் இறுக்கமாய் உட்கார்ந்திருந்த குருப்ரகாஷிடம் கேட்டான்.

    மௌனமாய் தலையாட்டினான் குருப்ரகாஷ். அவனுடைய வழக்கமான மாநிற முகம் இருட்டு நிறத்துக்கு போயிருந்தது. வழக்கமாய் ப்ரில் க்ரீமில் மினுமினுக்கும் அவனுடைய அடர்த்தியான தலைக் கேசம் அன்றைக்கு வறண்டு போயிருந்தது. உட்கார்ந்திருக்கும் போது வேகமாய் வலது காலை ஆட்டும் அந்த மேனரிஸமும் அன்றைக்கு நின்று போயிருந்தது.

    பாக்டரியின் வாசலில் டேபிள் போட்டு உட்கார்ந்திருந்த அமீனா – பக்கத்திலிருந்த அரசாங்க வக்கீலிடம் கேட்டார்.

    லாயர் ஸார்... பார்ட்டீஸ் பூராவும் வந்துட்டாங்களா?

    எல்லாரும் வந்துட்டாங்க...?

    ஏலத்தை ஆரம்பிச்சுடலாமா...

    ம்...

    கோர்ட் அமீனா நாற்காலியினின்றும் தன் தொப்பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தார். மரத்து நிழலில் ஏறக்குறைய இருபது நாற்காலிகளில் நேர்பார்வை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவர்களை ஏறிட்டார். தன் தாம்பாளக் குரலில் பேச ஆரம்பித்தார்.

    இங்கே வந்திருக்கிற அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் கோர்ட் ஆர்டர்படி மறுபடியும் விஷயத்தை சொல்றேன். வுட்ஸ் க்ரூக்கள், ஒயர் நைல்ஸ், தயாரிக்கும் கம்பெனியான 'குருப்ரகாஷ் மெட்டல்ஸ்' கம்பெனி முப்பது வயதான குருப்ரகாஷுக்கு சொந்தமானது. இவருடன் ஆரம்ப காலத்தில் இருந்த மற்ற பார்ட்னர்கள் போன வருடம் விலகிய பின் இவர் மட்டுமே இந்த கம்பெனிக்கு ஸோல் ப்ரொப்ரைட்டராக இருந்து வந்திருக்கிறார். நிர்வாகமும் செய்திருக்கிறார். கடந்த ஆறு வார காலத்தில் கம்பெனி கடனில் மூழ்கியதால் கடனைக் கொடுத்த நபர்கள், பாங்க் நிர்வாகம், விற்பனை வரித்துறை ஆகியோர் திரு. குருப்ரகாஷ் மீது வழக்கு தொடுத்ததின் காரணமாக கோர்ட் இதில் தலையிட்டு தன் தீர்ப்பாக குருப்ரகாஷுக்கு சொந்தமான இந்த கம்பெனியை ஏலத்தில் விட்டு வரும் தொகையை முன்னுரிமை அடிப்படைப்படி வழக்கு தொடுத்த அனைவரும் விகிதாச்சாரப்படி பிரித்துக் கொள்ள வேண்டியது.

    அமீனா சத்தம் போட்டு குருப்ரகாஷின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்க குருப்ரகாஷ் தலைகுனிந்து மோவாயைச் சொறிந்து கொண்டிருந்தான். வயிற்றுக்குள் அமிலம் சுரந்து கொண்டிருந்தது.

    அமீனா தொடர்ந்தார். இந்த பாக்டரியின் மொத்த விஸ்தீர்ணம் ஐம்பது செண்ட்ஸ். கருங்கல் கட்டிடத்தால் ஆன இந்த பாக்டரி... ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி மூன்றில் கட்டப்பட்டது. பாக்டரிக்குள் இருந்த எந்திர சாதனங்களை ஏற்கனவே தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் தன் கடனுக்காக எடுத்துக் கொண்டு விட்ட படியால் இப்போது இருப்பது கட்டிடம் மட்டுமே. பாக்டரி கட்டிடததை ஏலத்தில் எடுக்க விரும்புகிறவர்களுக்காக நேற்றைய தினம் பாக்டரியின் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஏலம் கோர வந்த அனைவரும் கட்டிடத்தை பார்வையிட்டிருப்பீர்கள் எனும் நம்பிக்கையில் இந்த ஏலம் ஆரம்பிக்கப்படுகிறது... என்று சொல்லிவிட்டு மேஜையின் மேலிருந்த மணியை அடித்தார் அமீனா.

    ஏலத்தொகை ஒரு லட்சத்தில் ஆரம்பமாகிறது...

    ஒரு லட்சம்...

    உடனே முன் வரிசையில் இருந்த ஒருவர் கத்தினார்.

    "ஐந்து லட்சம்...

    பின் வரிசை வழுக்கையொன்று ஏழு. என்றது.

    தொடர்ந்து பத்து...

    பனிரெண்டு...

    பதினஞ்சு...

    நாற்காலியில் உட்கார்ந்திருந்த குருப்ரகாஷ் தன் தாடைப் பிரதேசத்தை வலது கை விரல்களால் வழுவிக் கொண்டே எதிரே வேப்ப மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு ஒற்றை காக்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    பதினாறு லட்சம். சில விநாடி மௌனம்.

    பதினாறு லட்சம்... ஒரு தரம்...

    பதினேழு லட்சம்...

    பதினெட்டு.

    ஏலம் மும்முரமாய் நடந்து கொண்டிருந்த அதே நிமிஷம் ரத்த நிறத்தில் மினுமினுத்த அந்த மாருதி கார் வேகமாய் பீறிட்டு வந்து வாசலில் நின்று டயர்களைத் தேய்த்தது. காரின் கதவு 'பளக்' என்று விலகிக் கொள்ள அவள் இறங்கினாள். காற்றில் 'கோல்ட் ப்ளேம்' செண்ட் தவழ்ந்தது.

    ஏலம் ஒரு சில விநாடிகள் ஸ்தம்பித்தது தொடர்ந்தது.

    காரினின்றும் இறங்கியவள் பட்டுப்புடவையில் இருந்தாள். வெளிச்ச நிறம். கண்களுக்கு குளிர் கண்ணாடியைக் கொடுத்திருந்தாள். காலியாய் இருந்த ஒரு நாற்காலியை போய் நிரப்பினாள். பதினெட்டு லட்சம்... அமீனா கத்த அவள் குறுக்கிட்டாள். இருபது லட்சம்...

    நாற்காலியின் இரண்டு வரிசைகளில் உட்கார்ந்திருந்தவர்கள் மொத்த பேரும் அவளைத் திரும்பிப் பார்க்க அவள் லிப்ஸ்டிக் பூசின உதடுகளால் புன்னகைத்தாள். கண்களைக் கவ்வியிருந்த குளிர் கண்ணாடியைக் கழற்றி பட்டுச் சேலையின் தலைப்பில் நாசூக்காய் தேய்த்து மறுபடியும் கண்களுக்கு கொடுத்தாள். அமீனா உற்சாகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார். இருபது லட்சம்.

    இருபது லட்சம்... ஒரு தரம்... இருபத்தியொண்ணு... தோளில் அங்கவஸ்திரம் போட்ட ஒரு நரைத்த தலை சொல்ல அமீனா அதை வழி மொழிவதற்குள் இருபத்தைந்து என்றாள் அவள். ஏலம் கோர வந்த கும்பல் ஸ்தம்பித்தது. ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டு தாழ்ந்த குரல்களில் கிசுகிசுத்தார்கள். இருபத்தைந்து லட்சம்..."

    இருபத்தைந்து லட்சம் ஒரு தரம்... யாரும் மூச்சு காட்டவில்லை.

    இருபத்தைந்து லட்சம் ரெண்டு தரம்... மரண அமைதி.

    இருபத்தைந்து லட்சம் மூன்று தரம்... அமீனா மணியை அடித்து ஏலத்தை முடித்தார். நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்கள் ஒவ்வொருத்தராய் எழ அவள் எழுந்து அமீனாவை நோக்கிப் போனாள். அவர் நீட்டிய பேப்பர்களில் கையெழுத்தைப் போட்டுவிட்டு கேட்டாள்.

    டாக்குமெண்டேஷனை எப்போ வெச்சுக்கலாம்?

    ஆக்ஷன் முடிஞ்சு ஒரு வாரத்துக்குள்ளே... எப்ப வேணுமின்னாலும், அமௌண்டை பே பண்ணிட்டு டாக்குமெண்டேஷனை முடிச்சுக்கலாம்.

    தாங்க்யூ... அமீனாவிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1