Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varanum Maruththaal Maranam
Varanum Maruththaal Maranam
Varanum Maruththaal Maranam
Ebook87 pages21 minutes

Varanum Maruththaal Maranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written Rajeshkumar
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466909
Varanum Maruththaal Maranam

Read more from Rajeshkumar

Related to Varanum Maruththaal Maranam

Related ebooks

Related categories

Reviews for Varanum Maruththaal Maranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varanum Maruththaal Maranam - Rajeshkumar

    1

    டிபன் பாக்ஸை அந்த சின்ன லெதர் பேக்குக்குள் திணித்து--- ஜிப்பை இழுத்து விட்ட பிரதீப் மணிக்கட்டை அணைத்திருந்த வாட்சைப் பார்வைக்குக் கொண்டு வந்து முட்களின் ஸ்டாண்டிங் பொசஷனைப் பார்த்தான்.

    7-45.

    அதே விநாடி-

    சமையலறை வியர்வையை புடவைத் தலைப்பால் ஒற்றியபடியே வெளிப்பட்டாள் கவிதா. குடும்பப்பாங்கு முகத்தில் ஜொலிக்க- கல்யாணமான நாளிலிருந்தே பிரதீப் அவளிடம் ரசித்து ரசித்து பிரமிக்கும் அந்த அழகான பெரிய கண்களில் சந்தோஷம் தெறித்தது.

    என்னங்க?

    பிரதீப் நிமிர்ந்தான்.

    என்ன கவிதா?

    சொல்ல மறந்துட்டேன்... உங்க பழைய கம்பெனி மேனேஜர் காலையில நீங்க வாக் போயிருந்த சமயம் வந்துட்டுப்போனார்.

    என்ன சொன்னார்?

    ம். நீங்க பேசாம அந்த கம்பெனியிலேயே இருந்திருக்கலாம்னு சொன்னார்.

    புன்னகைத்தான் பிரதீப்.

    அவர் ஒரு பிழைக்கத் தெரியாத மனுஷர். அதான்- அங்கேயே இருபது வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கார்.

    "அப்படி செல்லாதீங்க. எனக்கும் அவர் சொன்னது தான் மனசுக்கு, சரின்னு பட்டது.

    உனக்கு அதைப் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. பெரிய கவர்மென்ட் வேலையா கெட்டுப் போச்சு. ப்ரைவேட்ல இருக்கர வரை எங்கே சம்பளம் அதிகமா கிடைக்குமோ அங்கே போய் ஒட்டிக்க வேண்டியது தான்.

    சொல்லிக்கொண்டே ஷூ லேஸை இறுக்கிக் கட்டி கொண்டு எழுந்தான்.

    சரி நான் வர்றேன். ராத்திரி வர்றதுக்கு லேட் ஆகும். கம்பெனில கொஞ்சம் வேலை இருக்கு.

    ஸ்கூட்டர் சாவியை பாக்கெட்டினின்றும் தேடி எடுத்துக்கொண்டே நடந்த பிரதீப்பை குரல் கொடுத்து நிறுத்தினாள்.

    கொஞ்சம் இருங்க.

    என்ன?

    ராதிகாவுக்கு லேட் ஆயிடுச்சாம். அவளை ஆஃபிஸ்ல ட்ராப் பண்ணிட்டுப் போயிடுங்க.

    இந்த ட்யூட்டி வேறே? ராதிகாவை சீக்கிரம் வரச்சொல்லு. எனக்கு நேரமாச்சு.

    புடவை மாத்திட்டிருக்கா. இப்ப வந்திடுவா

    சொல்லச் சொல்லவே புடவை ப்ளீட்ஸை சரிப்படுத்திக் கொண்டே உள்ளேயிருந்து வந்தாள் ராதிகா. பளிச்சென்று! மின்னல் அடித்த மாதிரி தோற்றம். ராதிகா வேறு யாருமில்லை கவிதாவின் தங்கைதான். அக்காவின் திருத்தப்பட்ட பதிப்பு மாதிரி இன்னும் கொஞ்சம் நேர்த்தியாய் இருந்தாள்.

    ஏன் மாமா. எட்டு மணி ஆஃபீஸ்க்காரியே அவசரப்படாம புறப்பட்டுட்டிருக்கேன். ஒன்பது மணிக்கு ஆபீஸ் வச்சுட்டு இந்த பறபறப்பறீங்க?

    பிரதீப் சிரித்தான்.

    நீ பொண்ணு. பத்து மணிக்கே ஆபிஸ்க்குப் போய்- ஒரு ஸ்மைல் அடிச்சா போதும். மானேஜர் ப்ளாட் ஆகி, பரவால்ல... பரவால்ல... போம்மா. போம்மான்னு சொல்லிடுவான்.

    ஆமா போம்மா போம்மான்னு வீட்டுக்குப் போகச் சொல்லிடுவான்.

    சரி. சரி வாயாடாமே புறப்படுங்க கவிதா சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தார்கள்.

    ஸ்கூட்டர் ஸ்டாண்டை விடுவித்து - கிக்கரை உதைத்தான் பிரதீப். அவன் மேலே உடம்பு பட்டுவிடாமல் பில்லியனில் ஏறி உட்கார்ந்தாள் ராதிகா, ஸ்கூட்டர் நகர்ந்து- தெருமுனையைத் தாண்டி மெயின்ரோட்டை எட்டிப் பிடித்தது.

    அக்கா. என்ன சொல்லிட்டிருந்தா மாமா?

    ராதிகா கேட்டாள்

    நான் புதுக் கம்பெனில சேர்ந்தது தப்பாம்.

    புதுக் கம்பெனில சேர்ந்து ஒரு மாசம் கழிச்சு ஏன் இந்த ஞானோதயம்?

    பிரதீப் சிரித்தான்.

    காலையில பழைய கம்பெனி மேனேஜர் வீட்டுக்கு வந்திருப்பார் போலிருக்கு. பேசறதுக்கு ஒரு விஷயமும் கிடைக்காம அதையும்-இதையும் சொல்லியிருப்பார்..

    "உங்களுக்கு இந்த வேலையில ஸாட்டிஸ்ஃபாக்ஷன் இருக்கா?

    வொர்க்லோடும் அப்படி ஒண்ணும் பிரம்மாதமா இல்லை. சம்பளமும் அதிகம். இந்த ஜாப் எனக்குப் பிடிச்சிருக்கு.

    உங்களுக்கு பிடிச்சிருக்கிறதுதான் முக்கியம் மாமா.

    பத்து நிமிஷ பயணத்திற்கு பின்- ராதிகாவின் ஆபீஸ் வாசலில்- ஸ்கூட்டரை நிறுத்தி அவளை இறக்கி- டாட்டா காட்டி ஆக்ஸலேட்டரை முறுக்கினான். மேலும் ஒரு பத்து நிமிஷங்கள் பயணத்தில் கழித்தபோது கம்பெனி வாசலில் இருந்தான்.

    ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை தலையில் சுமக்கிற அந்தப் பெரிய கட்டிடத்துக்குள் நுழைந்தான். இரும்புத் தனமான கல் கட்டிடம். ஆபீஸின் முன்புறம் வலுக்கட்டாயமாய் உண்டாக்கப்பட்ட புல்வெளி, உயிர் பிடிக்காமல் காய்ந்து போயிருக்க-தொட்டிகளில் இருந்த குரோட்டன்ஸ் செடிகள் மட்டும் ஆர்வேச கலர் இலைகளில் சிரித்தது. பிரதீப் ஆபீஸ் உள்ளே போனபோது- எதிர் இருக்கை நாராயணன் காதைக் குடைந்து கொண்டு தெரிந்தான்.

    குட்மார்னிங்.

    "குட்மார்னிங்.

    Enjoying the preview?
    Page 1 of 1