Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannamoochi Re... Re...
Kannamoochi Re... Re...
Kannamoochi Re... Re...
Ebook156 pages1 hour

Kannamoochi Re... Re...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மதுலதா சினிமாத் துறையில் கதைநாயகி. வசதியான மார்வாடி பையன் அணில்தூத் மீது காதல் வயப்படுகின்றாள். இந்த நிலையில் மதுலதா கடத்தப்படுகிறாள். துர்கா என்பவள் யார்? சுதிர் மற்றும் சங்கரதாஸின் சூழ்ச்சி வலையில் சிக்கிய மதுலதா மீண்டு வருவாளா? பரத் - சுசிலாவிற்கு கண்ணாமூச்சி காட்டியது யார்? வாசித்து அறிந்துகொள்வோம்…

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580100908121
Kannamoochi Re... Re...

Read more from Pattukottai Prabakar

Related to Kannamoochi Re... Re...

Related ebooks

Reviews for Kannamoochi Re... Re...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannamoochi Re... Re... - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கண்ணாமூச்சி ரே... ரே...

    Kannamoochi Re... Re...

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    இரண்டாம் பாகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    சக்தி ஸ்டுடியோவின் நான்காவது ஃப்ளோரில் பிரம்மாண்டமான கனவுக் காட்சி செட்டிங்ஸ் போடப்பட்டிருந்தது. ஜிகினாத் தோரணங்கள், ராட்சச பூக்கள், நிறம், நிறமாய் புகை கக்கத் தயாராய் ஒளிந்து கொண்டிருக்கும் வாயு தாங்கிய சிலிண்டர்கள், கூரை முழுக்க நட்சத்திர சவாலாய் வர்ண விளக்குகள், மேடை மேடையாய் அமைத்து ஒவ்வொரு மேடையிலும் ஒரு வீணை என்று மொத்தம் முப்பத்தாறு வீணைகள், மையத்தில் செயற்கை தடாகத்தின் பிரம்மாண்ட தாமரை இலை மேல் ஜெயண்ட் சைஸ் வீணை, தரையெங்கும் கேபிள் வயர்கள். அலங்காரம் முடிந்த - முப்பத்தாறு வீணைகள் வயசில் முப்பத்தாறு சைசில் முப்பத்தாறு சீமாட்டிகள் வீணை மீட்டத் தயாராய் - தற்சமயம் ஓரமாய் குழுமி ‘நேத்து ராத்திரி என் பையனுக்கு சரியான காய்ச்சல்’ என்றும் ‘மனுஷனா அவன், வீட்டுப்பக்கம் வரட்டும், வெளக்கமாத்தாலயே அடிக்கிறேன்’ என்றும், ‘வயத்தில என்னடி நகக் கீறல், நேத்து எதுவும் பேஜாரான கிராக்கியா?’ என்றும் பேசிக் கொண்டிருக்க...

    கதாநாயகன் தன் நாற்காலியில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டு, சுற்றிலும் நின்றுகொண்டிருந்த - நாலு செகண்ட்டுக்கு ஒரு தரம் கபகப என்று சிரிக்கத் தயாராய் இருந்தவர்களிடம் தன் சமீபத்து அமெரிக்கப் பயணத்தின் கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தான்.

    ப்ரொடக்ஷன் மேனேஜரை அழைத்த டைரக்டர், என்னய்யா இன்னிக்கு ஷூட்டிங் உண்டா. இல்லையா? கேன்சல் பண்ணிட்டு நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்க்கப் போய்க்கிட்டே இருக்கட்டுமா?

    கோச்சுக்காதிங்க சார். போன் பண்ணேன், இப்பக்கூட வீட்டை விட்டுப் புறப்பட்டாச்சி. வழில டிராஃபிக்லதான் மாட்டியிருக்கணும்.

    ஒரு மணிநேரமா இதே பதிலைத்தான்யா சொல்றிங்க! நான் தலைதலையா அடிச்சிக்கிட்டேன், மதுலதா வேணாம் - வேணாம்னு. கேட்டாரா உங்க ஆளு? ஒரு நாளாவது நேரத்துக்கு வந்திருக்காளா அவ? செட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகை என்ன ஆச்சி?

    புரியுது சார். என்ன பண்ணச் சொல்றிங்க? மதுலதா ஹீரோயின்னா சொல்லுங்க, படத்தைப் பார்க்காம பூஜை அன்னைக்கே விலை ‘பேசலாம்’னு தயாரா இருக்காங்க சார் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ். அதனால அனுசரிக்க வேண்டியிருக்கு.

    ப்ரொடக்ஷன் மேனேஜர் அவ்விடத்தை விட்டு அகன்றதும் டைரக்டர் திரும்பி கேமிராமேனிடம், ஏன்ப்பா... நீதானே அவளுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் பண்ணே? நல்லா நினைவிருக்குய்யா. என் ஆபீஸ் வந்து ‘ஒரு சின்ன ரோல் கொடுங்க சார் போதும். உங்க படத்தில் நான் இருந்தேன்ங்கறதே பெருமை சார்’ன்னெல்லாம் டயலாக் அடிச்சாப்பா. இப்ப என்னடான்னா தலை கால் தெரியாம ஆடறா. ஷாட் ரெடியாகி ரெண்டு மணி நேரமாச்சி. எல்லா ஆர்ட்டிஸ்ட்சும் ரெடி. ஹீரோ ஹிந்தில நாலு படம் பண்றான்யா. அவனுக்கென்ன தலையெழுத்தா இப்படி காத்துக் கெடக்கணும்னு? இன்னொருத்தன்னா அவ வந்ததும் சொல்லி அனுப்புங்கன்னு போய்டுவான்... என்ற போது...

    ஃப்ளோர் வாசலில் பென்ஸ் வந்து நிற்க...

    வந்தாச்சுய்யா மகாராணி.

    மதுலதா இறங்கினாள். அடுத்து அவளின் உதவியாளினி. பிறகு சொந்த மேக்கப் வுமன். அப்புறம் வெற்றிலை போடும் சித்தி. நாற்காலி, ஐஸ் பாக்ஸ், டிஃபன் பாக்ஸ் என்று எடுத்து கீழே வைக்கும் பொடியன்.

    மதுலதா நடந்து, ஹீரோ பக்கம் ஹாய் சொல்லிவிட்டு, டைரக்டரிடம் வந்து, குட் மார்னிங் சார்.

    டைம் டு ஸே குட் ஆஃப்டர்நூன் மது.

    ஸாரி சார். புறப்படறப்போ பார்த்து ஒரு ப்ரட்யூசர் வந்துட்டார். முதல் ஹிந்திப் படம். அவசர அவசரமா டேர்ம்ஸ் பேசிட்டு ஓடி வர்றேன். பத்தே நிமிஷத்திலே ரெடியாய்டறேன்.

    தன் பர்சனல் மேக்கப் ரூமிற்கு வந்த மதுலதா புடவையை அவிழ்த்து விசிறிவிட்டு டவல் வாங்கி மார்பின் மேல் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்து, ம். சீக்கிரம்... இங்கே மேக்கப் ரூம்ல ஏ.சி. கிடையாது. அதனாலதான் இந்த ஸ்டூடியோ வேணாம்னு சொன்னேன். கேக்க மாட்டேங்கறாங்கப்பா.

    மேற்கண்ட மதுலதா இன்றைக்கு இண்டஸ்ட்ரியில் ஹாட் கேக். மதுலதாவை அட்டையில் போடாத ஒரே இதழ் கெளரி பஞ்சாங்கம். அண்ணா சாலையில் உள்ள பேனர்களில் இரண்டில் எப்போதும் அறுபதடியில் மதுலதா சிரிக்கிறாள். அந்த சிரிப்பு மற்றும் திறப்பு: காரணமாக அருகாமையில் சில சாலை விபத்துக்களும் நிகழ்ந்திருக்கின்றன. ரேடியோவைத் திருகினால் மதுலதா சிறப்புத் தேன் கிண்ணம் வழங்குகிறாள். டி.வி-யைப் போட்டால் மதுலதா, நான் காலேஜ் ஸ்டேஜ்லயே நடிப்புல நிறைய பிரைஸ் வாங்கியிருக்கேன் என்று பேட்டியில் சொல்கிறாள். பேட்டியாளர் எந்த காலேஜ் என்று கேட்பதில்லை. தீபாவளி, பொங்கல் என்று விசேஷ தினங்களின் பேப்பர்களைப் புரட்டினால் மதுலதா உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பாள், ‘அன்பே மதுலதா. நீ என் கனவில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறாய். என்னைக் கட்டிக்கொள்வாயா? – ‘தெ. காசிநாதன், மதுராந்தகம்.’ ‘கனவில் தானே? தாராளமாக கட்டிக் கொள்கிறேன்.’ அப்புறம் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்கள் என்றால் மதுலதாவை நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கச் சொல்கிறார்கள். புதிய படத்தின் பாடல் கேசட்டை வெளியிடுகிறாள்.

    அப்பேர்ப்பட்ட மதுலதாவின் விலாவரியான வரலாறோ விலாவரிகளின் வரலாறோ இப்போது ஆராய முற்பட்டால்... அய்யே... வேண்டாம். குப்பை! மூக்கில் நெடி ஏறும்.

    மதுலதா இப்போதைக்கு சகல சௌபாக்யங்களோடு - மூன்று கார்கள், இரண்டு பங்களாக்கள், ஒரு தியேட்டர், ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என்று விலைவாசி உயர்வைக் குறிக்கும் கிராஃப் படத்தின் கோடு போல மேலே மேலே முன்னேறிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்தில்...

    இதோ அடிக்கடி ஃபோனை எடுத்துப் பேசி சங்கரதாஸைப் பகைத்துக்கொள்ள இருக்கிறாள்.

    யாருன்னு எடுத்துக்கேளேன்.

    சூரிதார் அணிந்த கௌசல்யா ஆகிய உதவியாளினி எடுத்துப் பேசி, மேடம். சங்கரதாஸ் பேசறார். உங்களோட ரொம்ப முக்கியமா பேசணுமாம்.

    ஏற்கனவே நான் வந்தது லேட்டு. சரி கொண்டா. ஹலோ, மதுலதா பேசறேன். என்ன?

    ரெண்டு நாள்ல யோசிச்சு சொல்லுன்னு சொன்னேன். ரெண்டு வாரம் ஆய்டுச்சி. உன்கிட்டேர்ந்து பதில் இல்லை. உன்னை ஃபோன்ல பிடிக்கவும் முடியலை. இன்னைக்குதான் கிடைச்சிருக்கே. சொல்லு.

    மதுலதா சைகை செய்ய... அந்த மேக்கப் அறையைவிட்டு அனைவரும் வெளியே வந்து கதவைச் சாத்தினதும்...

    நான் அன்னைக்கே சொல்லிட்டேன் என் பதிலை.

    அப்போ... மறுபடி யோசிச்சிப் பார்க்கவே இல்லையா?

    யோசிக்க அவசியம் இருக்கிறதா எனக்குப் படலை.

    என்கூட ரெண்டு வருஷம் பழகியிருக்கே மது, என் குணம் உனக்குத் தெரியும். என் பிடிவாதமும் உனக்குத் தெரியும். என் கோபமும் உனக்குத் தெரியும்.

    "இந்த மிரட்டல் வேலை எல்லாம் வேணாம். இப்ப என்னோட. பலம் என்னங்கிறதும் உங்களுக்குத் தெரியும். அனாவசியமா

    Enjoying the preview?
    Page 1 of 1