Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidiyattum, Vidai Solgirean
Vidiyattum, Vidai Solgirean
Vidiyattum, Vidai Solgirean
Ebook98 pages36 minutes

Vidiyattum, Vidai Solgirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டம் அதற்கான தண்டனை தரும். ஆனால், சட்டத்திலிருந்து தப்பிக்க தீபன் யாரை கொலை செய்தான்? ஓர் உயிரை காப்பாற்ற நினைத்து, அதில் மாட்டிக்கொண்ட அப்பாவி பெண் வினயாவுக்கு நேர்ந்தது என்ன? விடியும் வரை காத்திருப்போம்... பரத்தின் விடைக்காக சுசிலா உடன் நாமும்…

Languageதமிழ்
Release dateJun 4, 2022
ISBN6580100908095
Vidiyattum, Vidai Solgirean

Read more from Pattukottai Prabakar

Related to Vidiyattum, Vidai Solgirean

Related ebooks

Reviews for Vidiyattum, Vidai Solgirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidiyattum, Vidai Solgirean - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விடியட்டும், விடை சொல்கிறேன்

    Vidiyattum, Vidai Solgirean

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    மிதுன் சற்று உயரக் குறைவாய் இருந்ததால் கோட், சூட் அத்தனை பாந்தமாக இல்லை. ஐந்து மாத கர்ப்பம் போல வயிறு. ஒரு தேள் தன் குடும்ப சகிதமாய் ஒளிந்து கொள்ள முடிகிற அடர்த்தியான தாடி. ரேஃபான் கிளாஸ். மிதுன் செண்ட் எடுத்து பீய்ச்சிக் கொண்டான். டைம் பார்த்தான். விமானத்திற்கு இன்னும் நேரமிருந்தது.

    வசதியான நாற்காலியில் அமர்ந்து ஹோல்டரில் சிகரெட் பொருத்தி முனையை பொசுக்கிக் கொண்டு ரிமோட் தட்டி வீடியோவில் ராத்திரி பாதியில் விட்டிருந்த ஆங்கிலப் படத்தைத் தொடர்ந்து பார்த்தான்.

    அறைக் கதவு தட்டப்பட்டு, கமின்.

    குட்டைப் பாவாடையணிந்த, செம்பட்டை தட்டின பாப் தலையுடன் இருந்த ஆங்கிலோ இந்திய செகரெட்டரி உள்ளே வந்து அவன் அருகில் இருந்த டீப்பாய் மேல் யுவர் ஃப்ளைட் டிக்கெட் சார் என்று வைத்தாள்.

    என் பர்சனல் டெலிபோன் புக் எடு.

    கட்டில் அருகே இருந்த குட்டி கப்போர்ட் திறந்து எடுத்து வந்தாள். மிதுன் டெலிவிஷன் திரையில் ஹெலிகாப்டர் பல்டியடிப்பதில் இருந்து பார்வையை விலக்காமல், வி பக்கத்தில் விலாசினி, பெங்களூர்ன்னு இருக்கும் பாரு.

    யெஸ் சார்.

    டயல் பண்ணிக் கொடு.

    யெஸ் சார்.

    அருகில் இந்த கார்ட்லெஸ் டெலிபோனை எடுத்து, அதன் ஏரியலை நீட்டி விட்டு, எண்களை சுற்றினாள். மிஸ் விலாசினி ப்ளீஸ்...

    ஸ்பீக்கிங்...

    ஜஸ்ட் எமினிட் ப்ளீஸ்... என்று மவுத் பீஸ் பொத்தி, சார், விலாசினி என்று நீட்டினாள்.

    வாங்கிக் கொண்டு நீ போலாம் என்றவன், அவள் நடந்ததும், இரு. இங்கே வா. திரும்பு என்று இடுப்புக்குக் கீழே தட்டி, இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணனும் மர்லின் என்றான்.

    மர்லின் நாட்டி என்று சிரித்து ஹவ் அபவுட் விலாசினி?

    பர்ஃபெக்ட் என்றவன், ஏன் விலாசினி, முப்பத்தெட்டுதானே? என்றான் போனில், இவளை போகச் சொல்லி கைகாட்டினான்.

    என்னது முப்பத்தெட்டு? என்றாள் பெங்களூரிலிருந்து விலாசினி.

    மறந்துடு. இன்னிக்கு பெங்களூர் வரேன் விலா.

    மை குட்னெஸ்! என்ன ப்ரோக்ராம்?

    பிஸ்னெஸ்! மேலமேல பணத்தை எப்படி குவிக்கிறதுன்னு ஸ்காட்ச் சாப்பிட்டுக்கிட்டே பேசணும். அப்புறம் சூரியன் காணமப் போனதும் விலாவோட திருவிழா!

    எங்கே தங்கறீங்க மிதுன்?

    ப்ளூ ஏன்ஜல். டீலக்ஸ் சூட்.

    எத்தனை மணிக்குத் திருவிழா?

    வாயேன். ஒரு ஒன்போதரை, பத்து மணிக்கு.

    ரைட். மீட் யூ.

    மிதுன் அரை மணி கழித்து சிறிய சூட்கேசோடு புறப்பட்டான். டிரைவர் வந்து வாங்கிக்கொள்ள மர்லின் பை சார் என்றாள்.

    அதான் வச்சிருக்கியே இடுப்புல நிறைய என்று சிரித்து தன் காரில் ஏறப்போன போது, எதிரே வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கினான் குணசேகர்.

    மிதுனுக்கு சொந்தமான ஃபார்மச்சூட்டிக்கல்ஸ் கம்பெனியின் அக்கவுண்டண்ட். சற்று பதட்டமாக இவன் அருகில் வந்தான்.

    சார், வெளியூர் புறப்பட்டுக்கிட்டு இருக்கிங்களா?

    ஆமாம். பெங்களூர். என்ன விஷயம்?

    சார், உங்ககிட்டே ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு பேச வந்தேன் - கம்பெனி விஷயமா.

    வாட்ச்சைப் பார்த்து, டைம் ஆச்சே குணசேகர். நாளைக்கு மத்தியானம் நான் திரும்பிடுவேன். ரொம்ப அவசரமான சேதியா?

    ஆமாம் சார்.

    ஆட்டோவைக் கட் பண்ணிட்டு கார்ல ஏறுங்க. ஏர்போர்ட் போய்கிட்டே பேசலாம். கம்.

    குணசேகர் கர்சீப் எடுத்து முகத்தை ஒற்றிக் கொண்டான். முப்பது வயது. நாற்பது வயதுத் தோற்றம். முகத்தில் முள் முள்ளாய் மூன்று நாள் ஷவர பாக்கி. கண்களில் ஒருவித திகில். நூறு மீட்டர் ரேஸ் ஓடி முடித்தவன் போல அவசர மூச்சு.

    என்ன குணசேகர்? அந்த பாட்டை நிறுத்தப்பா என்றான் மிதுன்.

    பாட்டு இருக்கட்டும். அணைக்க வேணாம் என்று சத்தமாக டிரைவரிடம் சொன்ன குணசேகர், சன்னக் குரலில், நான் சொல்லப் போற விஷயம் டிரைவருக்குக் கூட தெரியக் கூடாத ஒரு ரகசியம் என்றான்.

    பற்ற வைத்த தீக்குச்சியை ஜன்னல் வழியாக விசிறிவிட்டு, என்னப்பா, ரொம்பதான் பீடிகை போடறே. சொல்லு என்றான் மிதுன்.

    மெதுவா! மெதுவாப் பேசுங்க சார். நான் சொல்றனேன்னு நீங்க தப்பா நினைக்கக் கூடாது. இப்பக் கொஞ்ச நாளா நீங்க ஆபீசுக்கு சரியா வர்றதில்லை. க்ளப், பார்ட்டி, டென்னிஸ்ன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டிங்க.

    நான் ஆபீஸ் வரணும்னு அவசியமே இல்லை குணசேகர். தீபன் அவ்வளவு அக்கறையா பார்த்துக்கறானே, அவன் கம்பெனி மேனேஜர் மட்டுமில்லை. என் ஃபிரண்டு.

    "அந்த நம்பிக்கைக்கு அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1