Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannikka! Manamillai, Mannikka...!
Mannikka! Manamillai, Mannikka...!
Mannikka! Manamillai, Mannikka...!
Ebook113 pages1 hour

Mannikka! Manamillai, Mannikka...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரித்திர பேராசிரியர் டாக்டர் தசரதராமன் இந்தியா - கி.மு. நூற்றாண்டுகளில் என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். அங்கு சரித்திரத்தில் ஆர்வம் கொண்ட ஆனந்தி, அவரை சந்திக்கிறார். இவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்ன? பொக்கிஷத்தை கைப்பற்ற துடிக்கும் இளவரசனுக்கு நிகழ்ந்தது என்ன? பரத், சுசீலாவுடன் நாமும் ஆராய்வோம்.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580100908117
Mannikka! Manamillai, Mannikka...!

Read more from Pattukottai Prabakar

Related to Mannikka! Manamillai, Mannikka...!

Related ebooks

Reviews for Mannikka! Manamillai, Mannikka...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannikka! Manamillai, Mannikka...! - Pattukottai Prabakar

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    மன்னிக்க! மனமில்லை, மன்னிக்க...!

    Mannikka! Manamillai, Mannikka...!

    Author :

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை, அந்த ஆர்ட்ஸ் காலேஜ். அதன் மூன்றாவது மாடி. அங்கே ஒரு சின்ன ஹால். செவ்வகம். இரண்டு வாசல்கள்.

    இரண்டு நீளமான சுவர்களிலும், ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி இரண்டில் துவங்கப்பட்டபோது இருந்த டர்பன் கட்டின முதல் பிரின்சிபாலில் இருந்து, போன வருஷத்து நரைத்த மீசைக்காரர் வரைக்கும் புகைப்படத்திற்கென்று பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், என்லார்ஜட் பர்ஸ்ட் சைஸ்களில் தொங்கினார்கள்.

    இடதுபுற கடைசியில் சலவைக்கல் பரப்பின, படிகள் கொண்ட நிரந்தர மேடை. பின்னணியில் மூன்று இடங்களில் ஒட்டுப்போட்டுத் தைக்கப்பட்டிருந்த அடர்நீலப் படுதா, அதன்மேல் வளைவு வளைவாகப் பூ குத்தி, மேடையில் மூன்று நீளமான மேஜைகள் இணைத்துப்போட்டு, மேலே வெல்வெட் துணி போர்த்தியிருந்தது. ஒரு கொத்துப் பூக்கள். ஒரு கொத்து ஊதுபத்திகள்.

    ரோஸ்ட்ரம் நிறுத்தப்பட்டு அதற்கு முன்னால் மண்டை கனத்த மைக். அதன் கழுத்தில் கால் வட்டத்தில் ‘J.R.S. சவுண்ட் சர்வீஸ்’ ஒரு நாற்காலி மேல் தயாராய் மாலைகள்.

    விழா துவங்க இருந்தது.

    எதிரே காலி நாற்காலிகள் அதிகம். மொத்தம் எண்பது மாணவ மணிகளும். முன் வரிசையில் முக்கிய ஜோலியில்லாத - வீட்டுக்குப் போனால் தொணதொணக்கும் மனைவிகளைக்கொண்ட மூன்று பத்திரிகை நிருபர்களும் காத்திருந்தார்கள்.

    மேடையில் பெரிய ஆசாமிகள் வந்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு செருப்பு சரசரக்க அனைவரும் எழுந்து கொண்டார்கள்.

    வரவேற்புரையின்போதே தத்தம் – சொந்தக் கவலைகளில் இறங்கிவிட்டார்கள் நாளைய தூண்கள்.

    இந்த பாகிஸ் வாங்கினதா, தச்சதா கீதா?

    என்ன மச்சி சிகரெட் புடிக்கறதில்லைன்னு உன் ஆளுகிட்ட சத்தியம் பண்ணிட்டியாமே அப்படியா?

    ச்சை! நேத்து ஒலியும் ஒளியும் ஆரம்பிச்சப்பப் பார்த்து கெஸ்ட் வந்துட்டாங்க. நீ பார்த்தியா? பழசா? புதுசா?

    ரங்கசாமிக்கு நிர்மலா செருப்பைத் தூக்கிக் காட்டிட்டாளாம் தெரியுமா?

    ஞாயித்துக் கிழமைன்னா ஒன்பது மணிக்கு முன்னாடி எந்திரிக்க பிடிக்காதுடி. நீ?

    கேஸட் இருக்கு. மூணு எக்ஸ். அப்பா வெளியூர் போனாத் தேவலாம்.

    என்னன்னவோ போட்டுப் பார்த்துட்டேன். இந்தப் பரு போகவே மாட்டேங்குது.

    என்னய்யா சீரியஸா எழுதிட்டிருக்க? எல். எல்லா?

    மேடையில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கழற்றி வைத்திருந்த மாலையில் இருந்து ஒரு ரோஜா இதழைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டார் கொஞ்சம் உயரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த தசரதராமன்.

    தசரதராமன் ஆறடிக்கு ஒரு இஞ்ச் பாக்கி வைத்திருந்தார். பிரௌன் நிறத்தில் கோடு கோடாய் சபாரி உடை. பாக்கெட்டில் மூன்று பேனாக்கள். மற்றொன்றில் படிக்கும்போது மட்டும் பயன்படுத்துகிற கண்ணாடி. அதன் ஒற்றைக் காது மட்டும் அதிகப் பிரசங்கித்தனமாக வெளியே தொங்கியது, ஃபுட்போர்டு பயணியைப்போல. தசரதராமனின் முன் மண்டையில் காலிமனை, வட்டாரத்திலும் வறட்சி. மீசை வளரவில்லையா? இல்லை பிடிக்கவில்லையா?

    கண்களுக்குக் கீழே சதைப் பைகள். கைகளின் முடிகளில் நரை கலப்படம். பற்களில் வெற்றிலை பரிசளித்த காவி யூனிஃபார்ம். முக்கியமான சுவாசிக்கத் தேவையான மூக்கை விட்டாயிற்றே. மூக்குப்பொடியின் கறை லேசாய் இருக்க, விரிந்த நாசி துவாரங்களுடன் துப்பாக்கி மூக்கு.

    விழாத் தலைவர் விட்டால் ஓடிப்போய்விடும்போல மைக்கின் கழுத்தை நெரித்துக்கொண்டு பேசுவதை கவனித்தார் தசரதராமன். கைக்குட்டையில் பூ செய்துகொண்டே.

    ஆகவே, மாணவ, மாணவிகளே இது இரட்டை விழா. இருபத்தி மூன்று ஆண்டுகள் இந்தக் கல்லூரிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட, நம் சரித்திரத் துறை பேராசிரியர் டாக்டர் தசரதராமன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு இது பிரிவு உபச்சார விழா. அதே சமயத்தில் பதினொரு ஆண்டுக்கால உழைப்பில் அவர் உருவாக்கியுள்ள ‘இந்தியா - கி.மு. நூற்றாண்டுகளில்’ என்னும் அற்புதமான புத்தகத்தின் வெளியீட்டு விழா. இந்தப் புத்தகத்தில் இவர்...

    மாணவ சமுதாயம் கொட்டாவி விட்டது.

    கடைசி வரிசையில் ஒருவன் குனிந்துகொண்டு சிகரெட் பற்ற வைத்தான்.

    ஒருத்தி மும்முரமாக நெய்ல்கட்டர் கொண்டு நகம் வெட்ட ஆரம்பித்தாள். இரண்டு பேர் தங்கள் நோட்டுக்களில்...

    E:\Priya\level 1 doc\1-min.jpg

    என்று விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு கண்ணாடிப்பெண் இல்லாத காதலனை கவிதை படைத்துக்கொண்டிருந்தாள்.

    ஆனால்...,

    இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த அவள் மட்டும் ஒரு கையைக் கன்னத்திற்குத் தூண் அமைத்துக்கொண்டு, பேச்சாளரையே ஆர்வமாகப் பார்த்தாள். பேனா வைத்திருந்து, மூடியை பின்னால் செருகிக்கொண்டு நான்கு வாக்கியங்களுக்கொரு முறை குறிப்பு எழுதிக்கொண்டாள்.

    இப்போது மேடையில் ரிப்பன் கட்டின புத்தகத்தை கோட் போட்டவர் நீட்ட, ஜிப்பா போட்டவர் வாங்கிக்கொள்ள... கேமிரா மேனின் வேண்டுகோளுக்காக திரும்பக் கொடுத்துவிட்டு மறுபடியும் வாங்கிக்கொண்டார்.

    போனால் போகிறதென்று கைதட்டினார்கள்.

    கோட், தன் பாக்கெட்டில் இருந்து காகிதம் எடுத்து விரித்துக்கொண்டு தன் உதவி எழுதிக் கொடுத்தபடி தசரதராமனை வார்த்தைகளால் தூக்கி ரெஃப்ரிஜிரேட்டருக்குள் வைத்தார். ஒன்றரை நிமிடத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1