Hands - Up
()
About this ebook
திரைப்பட ஆர்ட்டிஸ்ட்டான சூர்யசுந்தர், கார் பங்களா என்று வசதியாக வாழ்ந்து வருகிறான். சூர்ய சுந்தரின் தீவீர ரசிகை செவ்வந்தி, எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறாள். அவள் இறப்பிற்கு யார் காரணம்? அவளின் இறப்பு சூர்ய சுந்தரை எவ்வாறு பாதித்தது? பரத், சுசிலா இந்தக் கேள்விகளுக்கான விடைகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின், 'ஹேண்டஸ் - அப்' கதையில் காணலாம்...!
Read more from Pattukottai Prabakar
Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsNarukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Hands - Up
Related ebooks
Atho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5Iranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5En Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Sei! Rating: 5 out of 5 stars5/5Marakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsIni Avan Iranthavan Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Kanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsDear Mr. Bharath Rating: 0 out of 5 stars0 ratingsDhayalan Theerpu Rating: 5 out of 5 stars5/5Naalaya Aagayam Rating: 5 out of 5 stars5/5Ilamai - Ithudan Inaippu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathil Mannippom Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattum Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsThats All Your Honour... Rating: 0 out of 5 stars0 ratingsOru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Mugam Rating: 0 out of 5 stars0 ratingsBharath, Bharath, Bharath Rating: 5 out of 5 stars5/5Kuttram, Puthiya Kuttram! Rating: 0 out of 5 stars0 ratingsMannikka! Manamillai, Mannikka...! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratingsBharath Speaking Rating: 0 out of 5 stars0 ratingsOru Koppai Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPlease... Please... Bharath! Rating: 0 out of 5 stars0 ratingsUn Kathai Muttrum Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Vetri Kodu Rating: 5 out of 5 stars5/5Idhayathil Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsKutram Melum Kutram Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Hands - Up
0 ratings0 reviews
Book preview
Hands - Up - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
ஹேண்ட்ஸ் அப்
Hands – Up
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
அம்மா, நான் உங்க மகன்.
ஏண்டா பெத்தோம்னு இத்தனை வருஷம் கழிச்சி என்னைக் கவலைப்பட வச்சிட்டேடா...
அம்மா, நான் அவங்களுக்கு நல்லதுதான் செஞ்சேன்.
செஞ்சது தப்பில்லை. செஞ்ச முறைதான் தப்பு.
மேட்டைக் கரைச்சாதானேம்மா பள்ளத்தை நிரப்ப முடியும்?
நீ செஞ்சதுக்குப் பேரு தொண்டில்லை, திருட்டு!
அது பொது அகராதி. என்னோட அகராதிப்படி சமதர்மம்.
நிறுத்துடா. இனிமே கொள்ளையடிக்க மாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்து தரணும் நீ.
அம்மா!
நீ இந்த சத்தியத்தை செய்யலைன்னா நாளைக்குக் காலையில உங்கம்மாவை பார்க்க முடியாது.
கேமிராவின் விர்ர்ர்ர் நின்றது. ஒரு பிரதான விளக்கைத் தவிர மற்ற விளக்குகள் அணைந்தன. கிரேன் பழைய நிலைக்கு உயர்ந்துகொண்டது.
கட் சொன்ன டைரக்டர் அந்த அம்மாவிடம் வந்தார். நாளைக்குக் காலையில் உங்கம்மாவை பொணமாத்தான் பார்ப்பே. இதான் டயலாக்மா...
நான் என்ன சொன்னேன்?
தன் டச்சப் பெண் நீட்டிய ட்ரேயில் இருந்து வெட்கிளாத் எடுத்து கழுத்தில் ஒற்றியபடி கேட்டார் அம்மா.
உங்கம்மாவைப் பார்க்க முடியாதுன்னு சொன்னீங்க.
அர்த்தம் ஒண்ணுதானே?
கிளியரா இல்லை. பார்க்க முடியாதுன்னா ஊரை விட்டேப் போய்டுவேன்னு ஒரு அர்த்தம் வரும். உயிரோட பார்க்க முடியாதுன்னுச் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை...
டப்பிங்ல சரி பண்ணிட முடியாதா?
லிப் இடிக்கும். ஒன்மோர் பண்ணிடலாம்.
ஏழே காலுக்கு ஃபிளைட் சார்.
இந்த கம்பைண்ட் ஷாட் முடிஞ்சதும் ரெண்டே ரெண்டு க்ளோஸ் ஷாட்ஸ்தான். சின்ன டயலாக்ஸ்தான்.
முதல்லேர்ந்தே வேணுமா?
க்ரேன் ஷாட்டும்மா. நடுவுல கட் பண்ணி மாத்தினா அசிங்கமா உறுத்தும். பேசற நேரத்துக்கு ஷாட் எடுத்துடலாம்மா.
நான் ரெடி.
அம்மா தன் டச்சப் பெண்ணை அனுப்பிவிட்டு தனது பழைய பொசிஷனுக்குச் சென்று நின்றுகொண்டார்.
அவரோடு நடித்த மகன் சூர்யசுந்தர் தன் நாற்காலியில் அமர்ந்து தம்மடிக்க, உதவி டைரக்டர் ஓடி வந்தான். ஷாட் ரெடி சார்...
இருய்யா. இப்பதான் பத்த வச்சேன். என்ன, ரொம்ப சிலுப்பிக்கிறாங்களா?
ஆமாம் சார். ஏழேகாலுக்கு ஃபிளைட்டாம். இவங்க வசனத்தை மிஸ் பண்ணிட்டு நம்மைப் போட்டு காயறாங்க.
தெலுங்குல பிஸி அம்மா இவங்க. அதுக்காக ஹீரோயினுக்கு மேல அலட்டினா எப்படி?
முப்பத்தேழு படம் ஹீரோயினா பண்ணிருக்காங்களாம். அதில் முப்பது சூப்பர் ஹிட்டாம்.
இருக்கட்டும். அந்த இமேஜோட விலகிட வேண்டியதுதானே? இன்னும் அந்த ஜபர்தஸ்து காட்டினா எப்படி? எந்த விதவை அம்மாய்யா கறுப்பு பிரா போட்ருப்பா?
சூர்யசுந்தரைச் சுற்றி நின்றவர்கள் அனைவரும் உரக்கச் சிரித்தார்கள்.
இருபது படம் பண்ணிட்டேன் நான். இந்தம்மா எனக்கு உச்சரிப்பு சொல்லித்தருது. ஏதோ வயசுக்கு மரியாதை கொடுத்தா ரொம்ப டாமினேட் பண்ணப் பாக்குது.
சார்! நான் ரெடியாகி பத்து நிமிஷம் ஆச்சு
அம்மா, டைரக்டரைப் பார்த்து வேண்டுமென்றே இங்கே கேட்கவேண்டும் என்று உரக்கச் சொன்னார்.
சூர்யசுந்தர் நாற்காலியை விட்டு எழுந்துகொண்டான். கடைசியாக ஒரு முறை சிகரெட்டை இழுத்துவிட்டு, பையன் நீட்டிய ஆஷ்ட்ரேயில் போட்டு விட்டு, இந்தம்மா இன்னைக்கு எப்படி ஃப்ளைட்டைப் பிடிக்குதுன்னு நான் பார்க்கறேன்
என்று சன்னமாகச் சொல்லிவிட்டு ஃபீல்டுக்குள் வந்தான்.
சூர்யா, ஒரு மானீட்டர் பார்த்துட்டு டேக் போலாமா?
என்றார் டைரக்டர்.
வேணாம் சார். முதல் டயலாக்கை மட்டும் சொல்லுங்க. அம்மா, நான் உங்க பேரன்தானே?
என்ன சார் கதையையே மாத்திட்டிங்க, அம்மா, நான் உங்க மகன்
ஸாரி. இவங்களைப் பாக்கறப்ப எல்லாம் என் பாட்டி ஞாபகம்தான் வருது
என்றதும் யூனிட் முழுக்க சிரித்தது.
என்ன சூர்யா, கிண்டலா?
என்றார் அம்மா.
இல்லைம்மா. நீங்க வேற... நீங்க எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். உங்களைப் போய் நான் கிண்டல் பண்ணுவேனா?
சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு கொடுக்கவேண்டிய சில மரியாதைகளை முதல்ல கத்துக்கங்க சூர்யா.
இப்ப என்ன மரியாதை குறைச்சிட்டேன்? ரகசியமா கிள்ளினேனா, இல்லை பின்பக்கம் தட்டினேனா?
இந்த வயசுக்கப்புறமா?
என்று யூனிட்டில் இருந்து ஒரு அனாமதேயக் குரல் வர... மீண்டும் சிரிப்பலைகள் எழ... அம்மா முகம் சிவந்தாள்.
ஷாட்டுக்கு ஷாட் சிகரெட் பிடிச்சிட்டு வந்து மூஞ்சிலேயே மூச்சு விடறிங்க. ஒண்ணு அவாய்ட் பண்ணுங்க. இல்லைன்னா மவுத் ரெஃப்ரஷனர் யூஸ் பண்ணுங்க...
மவுத் ரெஃப்ரஷ்னர் யூஸ் பண்றதுக்கு லிப் டு லிப் சீனா எடுக்கறாங்க? இல்லை உங்களுக்குத்தான் என்ன சிகரெட் அலர்ஜியா? கையில் சிகரெட்டோட நீங்க போஸ் கொடுத்து பழைய பேசும் படத்தில் நான் பார்த்திருக்கேனே... பனாமா இல்லை?
யூனிட் மறுபடியும் ஆர்ப்பாட்டமாகச் சிரித்தது.
சூர்யா, நீ வேணும்னே என்னை இன்ஸல்ட் பண்றே!
நீ, வா, போன்னா எனக்கும் மரியாதையை இறக்கத் தெரியும். என்ன ரொம்பத்தான் ஆட்டம் காட்டறீங்க? இந்த அலட்டற வேலை எல்லாம் இங்கே வச்சுக்காதீங்க.
அம்மா, டைரக்டர்