Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Koodai Punnagai
Oru Koodai Punnagai
Oru Koodai Punnagai
Ebook42 pages20 minutes

Oru Koodai Punnagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதாநாயகி மயூரிக்கு அரவிந்தனுடன் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது மயூரி பற்றி ஒரு மொட்டைக் கடிதம் அரவிந்தன் வீட்டிற்கு வருகிறது. அது ஏற்படுத்தும் பிரச்சினைகள் என்ன? இவர்களின் திருமணம் நடைபெறுமா? மையூரி மற்றும் அரவிந்தன் வாழ்க்கையில் புன்னகை பூக்குமா? வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580100906999
Oru Koodai Punnagai

Read more from Pattukottai Prabakar

Related to Oru Koodai Punnagai

Related ebooks

Reviews for Oru Koodai Punnagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Koodai Punnagai - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    ஒரு கூடை புன்னகை

    Oru Koodai Punnagai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    விஸ்வநாதன் ஸ்கூட்டரில் தன் வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு சிக்னலிலும் தேங்கி நிற்பதும், 'சிக்னல்' இல்லாத பல இடங்களில் வாகன நெரிசல் காரணமாக ‘இன்ச்... இன்ச்’சாக நகர்வதும் எரிச்சலை ஏற்படுத்தியது.

    வெயில் காரணமில்லாமல்... உள்ளுக்குள் ஏற்பட்டிருக்கும் பதற்றம் காரணமாக வியர்த்துக்கொட்டியது.

    இன்னும் பத்து நாட்களில் மகன் அஸ்வினுக்குக் கல்யாணம். எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இடி மாதிரி இப்படியொரு செய்தி வந்து இறங்கி இருக்கிறது.

    என்ன செய்யலாம்... செய்தியை நம்பி திருமணத்தை நிறுத்துவதா? அல்லது செய்தியை அலட்சியப்படுத்திவிடுவதா?

    காலையில் அவரது அலுவலக முகவரிக்கு வந்த அந்தக் கடிதம், அவரைப் போட்டு அலைக்கழித்துக்கொண்டிருந்தது. பலமுறை படித்ததில் அவருக்கு மனப்பாடமே ஆகிவிட்டது.

    'மதிப்பிற்குரிய திரு விஸ்வநாதன் அய்யா அவர்களுக்கு... வணக்கம்.

    நான் யார் என்பது முக்கியம் இல்லை. சொல்கிற செய்திதான் முக்கியம். உங்கள் மகன் அஸ்வினுக்கு திருமணம் செய்யப்போகிறீர்களே, அந்தப் பெண் மயூரி... அவளைப் பற்றி தீர விசாரிக்கத் தவறிவிட்டீர்கள். அவள் உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற குணவதி அல்ல. ஏற்கெனவே ஒரு பையனை நேசித்தவள் என்பதை... பாவம், நீங்கள் அறியமாட்டீர்கள். அந்தக் காதலின் விளைவாக ஒரு முறை கர்ப்பத்தையும் கலைத்துக்கொண்டவள். இப்படியொரு பெண் உங்கள் வீட்டிற்கு மருமகளாக

    Enjoying the preview?
    Page 1 of 1