Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thuppakki Vidu Thoothu
Thuppakki Vidu Thoothu
Thuppakki Vidu Thoothu
Ebook96 pages57 minutes

Thuppakki Vidu Thoothu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உற்றார் உறவினரின்றி, வேலை தேடி அலையும் இளைஞனான விக்ரமை காதல் புரிகிறாள் ஆஷா. வேலைத் தேடி டெல்லி சென்ற விக்ரமிடமிருந்து தனது காதலுக்கு நம்பிக்கை தரும் தகவல் எதுவும் வராத நிலையில் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு விக்ரமை மறந்து பெற்றோர் பார்த்த வரனான, வசதியான அரவிந்தை மணந்து நிம்மதியாக வாழ்க்கை நடத்துகிறாள். இவளது வாழ்வில் மீண்டும் வரும் விக்ரம் என்னவானான்? விக்ரமின் நண்பன் கிட்டு யார்? இவர்களை ஆஷா எப்படி சமாளித்தாள். என்பதை கதையோடு பயணித்து அறியலாம்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580100906498
Thuppakki Vidu Thoothu

Read more from Pattukottai Prabakar

Related to Thuppakki Vidu Thoothu

Related ebooks

Related categories

Reviews for Thuppakki Vidu Thoothu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thuppakki Vidu Thoothu - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    துப்பாக்கி விடு தூது

    Thuppakki Vidu Thoothu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்: வானில் நிலவு

    அத்தியாயம்: மனிதனின் விழிகள்

    அத்தியாயம்: பசுவின் கால்கள்

    அத்தியாயம்: கையில் விரல்கள்

    அத்தியாயம்: முருகனின் தலங்கள்

    அத்தியாயம் : வானவில் நிறங்கள்

    அத்தியாயம்: திசைகள்

    அத்தியாயம்: கிரகங்கள்

    அத்தியாயம்: தாய்மை மாதங்கள்

    அத்தியாயம்: ஒரு டஜனில் ஒன்று அழுகல்

    அத்தியாயம்: வானில் நிலவு

    நட்சத்திரப் பந்தலிட்ட வானம்.

    எதிரணியாய் பூமியில் மின்சாரப் பூக்கள்.

    குறுமுயலாய் அந்த வெள்ளை மாருதி கார் விமான நிலையம் நோக்கி, காரம் போர்டில் ஸ்ட்ரைக்கராய் வழுக்கிக் கொண்டிருக்க... நேர் மேலே முழு நிலவும் கூட வந்தது.

    கேஸட் - மாண்டலின் இசையை நழுவ விட்டுக் கொண்டிருக்க... அருகே எலெக்ட்ரானிக்ஸ், பச்சையாய் நேரம் சொன்னது. 7:12ல் நடுவில் இருந்த புள்ளிகள் மட்டும் கண்ணடித்துக் கொண்டிருக்க...

    மெத் மெத் என்றிருந்த தன்னிருக்கையில், மெத் மெத் என்றிருந்த அவளுக்குப் பக்கத்தில் ஹோல்டர் வழியே சிகரெட்டைக் கரையச் செய்து கொண்டிருந்தார் அரவிந்த்.

    அருகில் பாலியெஸ்டர் மென்மையாய், பனி முத்தமிட்ட காலை மலராய் அவளான ஆஷா கண்ணாடி வழியாய் தப்பி ஓடுகிற கட்டிடங்களை, பட்டணத்துக்குப் புதுசு போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அவள் தோளில் கை வைத்தார்.

    கோட் கசங்காமல் அணைத்துக் கொண்டு அவளின் பெயரைச் சொன்னார், புகை நடுவில் ஹஸ்கியாக.

    ம்? என்று திரும்பியவளை வர்ணிக்காமல் கடந்தால் விமோசனம் கிடைக்காது. விலாவரியாய் வர்ணித்தால் இலக்கிய எதிரியாகிற நிலை. ஆகவே, பலபக்க வர்ணனையின் சாரம்:

    பார்ப்பவன் நிற்பான். நிற்பவன் மறுபடி பார்ப்பான். தனிமையான சந்தர்ப்பத்தில் நாலு பக்கமும் பார்த்துவிட்டுக் கையைப் பிடிப்பான். ஜென்டில்மேனாகப்பட்டவன் வாட்ச் கட்டாத அவளிடம் டைமாவது கேட்பான்.

    என்ன மௌனமாகவே வர்றே?

    ஒண்ணுமில்லை.

    பத்தே நாள்ல திரும்பிடுவேன்.

    ஓ காட்! எட்டு லட்சத்து அறுபத்தி நாலாயிரம் வினாடிகள்!

    இவ்வளவு நேரமா இதைத்தான் கணக்குப் பண்ணிக்கிட்டிருந்தியா? ரெண்டு நாளைக்கு ஒரு தடவை போன்லே பேசறேன் ஆஷா.

    போன்லே பேச மட்டும் தானே முடியும்?

    திரும்பி வந்ததும் வட்டியோட வாங்கிக்கோ.

    டிராஃபிக் சிக்னலுக்காக வண்டி நிற்க... அரவிந்த் கோட்டின் கை முனையை நகர்த்திப் பார்த்துக் கொண்டு. இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. கொஞ்சம் வேகமாப் போப்பா.

    ஆஷா தொடையில் கை வைத்து. உனக்கு என்னென்னடா வேணும்? என்றார்.

    நீங்க மட்டும்தான் பத்திரமா வேணும்.

    என்ன அர்த்தம் இதுக்கு?

    போற இடத்திலே உங்களைத் தொலைச்சிடாதீங்கன்னேன்.

    நான் என்ன கார் சாவியா?

    கார் சாவிக்குக் கண் இல்லை. உங்களுக்கு இருக்கே, போற நாடுகள்ல உங்க கண்ணை இழுக்கற காந்தங்கள் இருக்குமே.

    இரவு வாழ்க்கையைச் சொல்றியா? சேச்சே... நான் செய்ற உச்சமான தப்பே பீர் கிளாஸ் ஏந்தறது தான். அப்புறம் ஆஷா, செக்புக்ல நாலைஞ்சு இலைகள்ல கையெழுத்துப் போட்டு பெட்ரூம் டிராயர்ல வச்சிருக்கேன். ஷாப்பிங் போறப்போ உபயோகப்படுத்திக்கோ, லைப்ரரிக்குப் போய் கேஸட்ஸ் அள்ளிக்கிட்டு வந்து படம் படமாப் பாரு. வேலைக்காரியை வேணும்னா வீட்ல படுக்கச் சொல்லு.

    வாட்ச்மேன் இருக்கிறப்போ என்ன பயம் எனக்கு?

    விமான நிலையத்தின் நுழைவில் மூக்கு மின்ன வரிசையாக நின்று கொண்டிருந்த கார் வரிசைகளில் இடம் தேடிச் செருகி நிறுத்தினான் டிரைவர்.

    கண்ணாடிக் கதவுகளுக்கு மறுபக்கம் அழுக்கில்லாதவர்கள் குப்பை விஷயங்களை நளினமாக மூன்றாவது காதுக்கு கேட்காமல் பேசிக் கொண்டு உலாவி... அமர்ந்து... கைகுலுக்கி... மாலை போட்டு... பளபளக்கும் புத்தகம் பிடித்துக் கொண்டு... நீளமான சிகரெட்டுகளை, விநோதமான லைட்டர்களால் பற்றவைத்து...

    அரவிந்தும் ஆஷாவும் உள்ளே நடக்க...

    நாய்க் குட்டிகளைப் போல இரண்டு சூட்கேஸ்களை இழுத்துக் கொண்டு பின்னாலேயே தொடர்ந்தான் டிரைவர்.

    உங்கள் கவனம் தயவு செய்து... என்று ஒரு பெண் ரகசியமாக எல்லோரையும் அழைத்து, விழுப்புரம், மாயவரம் மார்க்கமாக இராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சில வினாடிகளில் புறப்படும் என்று - ஸாரி, தூக்கக்கலக்கம்... பம்பாய் செல்லும் பயணிகள் உடனடியாகப் பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளக் கோரப்படுகிறார்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த மொழிக்குத் தாவினாள்.

    வெல்... என்று திரும்பினார் அரவிந்த்.

    அவர் கையை எடுத்து இதழ்களில் ஒற்றினாள்.

    வரட்டுமா?

    ஹேப்பி ஜர்னி டியர்.

    தாங்க்யுடா. குட்நைட்.

    குட்நைட்.

    ரன்வே முழுக்க என்லார்ஜ் செய்த மின்மினிப் பூச்சிகளாய் வெளிச்சத் தூறல்கள். ஒரு அலுமினியப் பறவை பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. புற்களை அதிரவைத்து, ஓடுதளத்தின் முனையைத்தொட - சக்கரங்களைப் பிரசவம் செய்து சீராய், நேராய் தவழ்ந்து வந்தது மற்றொரு விமானக் குழந்தை.

    பத்து நிமிடம் கழித்துப் பறந்து போன பம்பாய் விமானத்தை நோக்கி அசட்டுத்தனமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1