Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Orey Oru Saatchi
Orey Oru Saatchi
Orey Oru Saatchi
Ebook104 pages1 hour

Orey Oru Saatchi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903788
Orey Oru Saatchi

Read more from Pattukottai Prabakar

Related to Orey Oru Saatchi

Related ebooks

Related categories

Reviews for Orey Oru Saatchi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Orey Oru Saatchi - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஒரே ஒரு சாட்சி

    Orey Oru Saatchi

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    பத்ரிநாத் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். ஜன்னல் மேலும் கீழும் மெதுவாக அசைந்து கொண்டிருந்தது. ஆடும் நாற்காலியை நிறுத்தினான். ஜன்னல் நின்றது. மூடப்பட்ட கண்ணாடிகளில் நீர் பாம்புகள் இறங்கின.வேர் வேராகக்கிளைவிட்டமின்னல் ஒன்று மழையை நிச்சயப்படுத்தியது.

    காற்றில்லாததால் நேராக நூல் புகை உயர்ந்து மின்விசிறியின் சுழலாத இறக்கைகள் வழியாக விட்டம் தொட்டது. சாம்பலை அருகில் ஆஷ்ட்ரே இருந்தும் தரையில் சுண்டினான். அவ்வாறாக எறும்பின் பார்வையில் தரையெங்கும் நிறைய சாம்பல் குன்றுகள்.

    குள்ள மேஜையில் சத்தமில்லாமல் ஆவியாகிக் கொண்டிருந்த ஆரஞ்சு நிற விண்ட்டேஜை எடுத்தான். சோடா எடுத்தவன் திடீரென புறக்கணித்து வெறுமனே கவிழ்த்துக் கொண்டான்.

    எழுந்தான். சுவிட்ச் போர்டு நோக்கி நடப்பதுதான் நோக்கம். ஆனால் கால்கள் பாத்ரூம் கதவருகில் கொண்டுவந்து அவனை நிறுத்தின. வந்ததால், வந்ததால் (புருஃப் பிழை அல்ல) உள்ளே வந்தான். ஜிப்பை இறக்கினான். ஏற்றினான்.

    அவன் உபயோகிக்கும் ஹாமாமும், அவள் உபயோகிக்கும் லக்சும் தனித்தனி சோப்புப் பெட்டிகளில் இருந்தன. லிக்விட் டெட்டால் போட்டு நுரை கிளப்பி கை கழுவிக் கொண்டு ரோலரில் இருந்து வாசனையான காகிதம் உருவிக் கிழித்து துடைத்து வீசினான்.

    வெளியே வந்தான். சிட் அவுட்டுக்கான கதவு தாழிடப்பட்டிருந்தது. சிரமத்தின் பேரில் திறந்தான். இரட்டைக் கதவுகள் திறக்கப்பட்ட இரண்டு கதவுகளின் மீதும் கைகளை வைத்துக் கொண்டு மழையின் சாரலை தன் முகத்தில் அனுமதித்தான். மைக்ரோ புள்ளிகள் கூட்டணி அமைத்து நெற்றியில் ஊர்வலம் புறப்பட்டு மூக்கு மேம்பாலத்தைக் கடந்து அதன் நுனியில் திரண்டு துளியாகிச் சொட்டியது.

    என்ன பண்ணிட்டிருக்கீங்க...?

    குரல் கேட்டுத் திரும்பினான்.

    எழிலரசி. பெயர் காரணம் சொல்லவே தேவையில்லை. பிளைய்ன் வய்லெட்டில் பிரத்யேகமாகக் கொடுத்து எம்பிராய்டரி செய்யப்பட்ட ரத்தச் சிகப்புப் பூக்கள் சிரிக்கும் ஷிபான் சேலை. வழக்கம் போல தாழ்ந்த இடையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட். அதன் தோள் பகுதியின் ஒன்றரை இஞ்ச் அகலத்திற்குள் மறைக்கப்பட்ட அவன் கட்டிய தாலி. கூந்தலை முன்னந்தலையில் என்னவோ பண்ணி, முதுகு பூரா அம்பிகா ஸ்டைலில் விரிய விட்டிருந்தாள்.

    ஏர் ஹோஸ்டஸ் என்றால் நம்புவீர்கள். மாடலிங் அழகி என்றால் நம்புவீர்கள் நட்சத்திர வேஹாட்டலில் ரிசப்ஷனிஸ்ட் என்றால் நம்புவீர்கள்.

    இதெல்லாம் எதுவும் இல்லை. டிரெஸ் டிசைனர். அதாவது ஒரு பிரபல ரெடிமேட் எக்ஸ்போர்ட் கம்பெனியில் உடைகளுக்கு டிசைன் போட்டுத் தருபவள். இவளின் கற்பனைத்திறனை நம்பித்தான் கம்பெனியின் வருமானம் குறிக்கும். அம்புக்குறி ஏறும், இறங்கும்.

    சம்பளம் ஏழாயிரம். தவிர சலுகைகள் ஏராளம். கம்பெனியில் ஏ.சி. அறை. டிரைவருடன் ஒரு அம்பாசிடர் கார். அதில் தீரத் தீர கம்பெனி செலவில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டேயிருக்கலாம்.

    பத்ரிநாத் தன் பார்ட்னர் சுவாமியுடன் சேர்ந்து மீன் பண்ணை நடத்துகிறான் ஐந்து வருடமாக. நல்ல வருமானம். குடியிருக்கும் வீடு சொந்தம். தவிர இரண்டு இடங்களில் வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறான். கொஞ்சம் பணம் பேங் கில் டெபாசிட் செய்திருக்கிறான். கொஞ்சம் பணம் ஷேர்களில் முதலீடு செய்திருக்கிறான். எனவே நான்கைந்து திசைகளிலிருந்து வருமானம் - வற்றாத (மழைக்கால) காவிரி போல்.

    எழிலரசியை பத்ரிநாத் காதலித்து மணந்தான். மணந்தது மூன்று வருடங்களுக்கு முன்னால்.

    இரண்டு வருடங்கள் வரை ஜாலி மகா ஜாலி. குழந்தை அடுத்த நூற்றாண்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்துவிட்டு ஜாலி.

    திடீரென்று பலூனில் ஓட்டை விழுந்து காற்று இறங்கி வருகிறது. காரணம் மணி சங்கர்! இரண்டு பேர் இல்லை, ஒரே ஆள்தான்.

    மணிசங்கர் சின்ன வயசுக்காரன், சிவந்த மேனிக்காரன், சுருள் கிராப்புக்காரன், மெத்த அறிவுக்காரன், சி.ஏ. படித்து ஏ.சி. அறையில் பல கம்பெனிகளின் கணக்குகளைப் பார்த்து வருமான வரி அலுவலகத்தில் ஃபைல்களை பைசல் செய்து கொண்டிருப்பவன்.

    அவன் கணக்கு பார்க்கும் கம்பெனிகளில் ஒன்று எழிலரசி வேலை பார்க்கிற நிறுவனம். அதனால் வர, போக அறிமுகம்.

    மேடம், நீங்க பண்ற டிசைன்ஸ் சூப்பர்ப்!

    தேங்ஸ்.

    இப்படித் துவங்கி...

    வீட்டுக்கு டின்னருக்கு வாயேன் மணி. உனக்குப் பிடிச்ச நூடுல்ஸ்.

    வர்றேன். திரும்ப என் வீட்ல டிராப் பண்ணுவாயா எழில்?

    இப்படி வளர்ந்து...

    எழில், என்கிட்ட பணம் நிறைய இருக்கு, என்கிட்ட வர்ற பல எக்ஸ்போர்ட் கம்பெனிகளோட கணக்குகளை ஆடிட் பண்றதால இதில எவ்வளவு லாபம் இருக்குன்னு எனக்குத் தெரியும். உனக்கோ திறமை இருக்கு. தொழில் நல்லா தெரியும். நாம் ரெண்டு பேரும் ஆளுக்குப் பாதியாக முதல் போட்டு தனியா ஒரு ரெடிமேட்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியை ஏன் ஆரம்பிக்கக் கூடாது?

    வெரி வெரி நைஸ் ஐடியா...!

    இப்படி ஒரு யோசனை பிரசவ மானதில் தான் சிக்கலும் பிரசவமானது.

    "நோ! எனக்கு இதில்

    Enjoying the preview?
    Page 1 of 1