Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Nijam Oru Nizhal
Oru Nijam Oru Nizhal
Oru Nijam Oru Nizhal
Ebook280 pages2 hours

Oru Nijam Oru Nizhal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580100905365
Oru Nijam Oru Nizhal

Read more from Pattukottai Prabakar

Related to Oru Nijam Oru Nizhal

Related ebooks

Related categories

Reviews for Oru Nijam Oru Nizhal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Nijam Oru Nizhal - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஒரு நிஜம் ஒரு நிழல்

    Oru Nijam Oru Nizhal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    முதலில் சில அறிமுகங்கள்!

    மாதவன்: வெற்றிகரமான பதிப்பாளன். இவனுடைய திசைகள் பதிப்பகம் எழுபது பேர் பணி புரியும் பிரபல நிறுவனம். இனியவன். துடிப்பானவன். தீவிரமான உழைப்பாளி. எதையும் மாற்றி யோசிப்பவன். நேர்மையை விட்டுத்தராதவன். வார இதழும், தினசரியும் எதிர்காலத் திட்டங்கள். தங்கையின் திருமணத்திற்குப் பிறகு தன் திருமணம் என்றிருப்பவன். எழிலரசியின் காதலன்.

    காவ்யா: மாதவனின் தங்கை. ஊடகத் துறைப் படிப்பு. மேகம் பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். பண்பாளி. திறமைசாலி. அண்ணன் மேல் மரியாதை, அன்பு, நட்பு எல்லாம் சம விகிதத்தில். இருவரும் உடன் பிறப்புகள் அல்ல, உயிர் நண்பர்கள்.

    எழிலரசி: இளம் வழக்கறிஞர். முக்கியமாக குடும்ப நல வழக்குகள். சிறந்த பேச்சாளர். பட்டி மன்றமா? கவியரங்கமா? கூப்பிடு எழிலரசியை! தீபாவளி, பொங்கலுக்கு சகல தொலைக்காட்சிகளிலும் வந்து விடுவாள். மாதவனின் காதலி.

    கண்ணன்: வளரும் தொழிலதிபர். காகிதம் இறக்குமதி முக்கிய தொழில். புதிதாக துவங்கிய மேகம் பண்பலை வானொலி உப தொழில். மேகம் தொலைக்காட்சி துவங்க வேண்டுமென்பது லட்சியம்.

    பார்த்திபன்: மாதவனின் முக்கிய நண்பர்களில் முதன்மையானவன். திரைப்பட கதாசிரியன். வசனகர்த்தா. நிறைய புத்தகங்களும் எழுதியிருக்கிறான். விரைவில் திரைப்படம் இயக்கும் திட்டம் உள்ளது. மாதவனைக் கேட்காமல் பார்த்திபனும், பார்த்திபனைக் கேட்காமல் மாதவனும் பெரிய முடிவுகள் எதுவும் எடுப்பதில்லை. கல்லூரி நட்பு ஆழமாக வேர் விட்டு அழுத்தமாகத் தொடர்கிறது.

    பிரசன்னா : விளம்பர நிறுவனம் நடத்தி வருபவன். தொலைக்காட்சியில் வரும் முக்கிய விளம்பரங்கள் இவன் நிறுவனம் தயாரித்ததாகத்தான் இருக்கும். டெல்லி, மும்பை, பெங்களூர் என்று பறந்து கொண்டே யிருப்பவன், அழகன். சினிமாவில் கதாநாயகன் ஆக ஆசை. முயற்சிகளில் தோல்வி. விளம்பரத் துறையில் காலூன்றிவிட்டாலும், அந்த ஆசை இன்னும் இருக்கிறது. பிரசன்னாவும், மாதவனும் நெருக்கமில்லை. ஆனால் தொழில் முறையில் நண்பர்கள்.

    ***

    1

    கறுத்த மேகக் கூட்டம் மழைக்கான திட்டத்துடன் இருந்ததால் வானம் சோம்பலாய் விடிந்து கொண்டிருந்தது. மறைக்கப்பட்ட சூரியன். ஆனாலும் வெளிச்சக் கசிவில் இருட்டை சுருட்டும் முயற்சி. குற்றாலக் குளுமையுடன் சென்னை, கடற்கரையில் இலக்கிய கூட்டத்தில் போல சொற்பமான மனிதர்கள். ஸ்வெட்டர், மப்ளருடன் தடி தட்டி நடக்கும் தாத்தாக்கள். வலை கட்டாமல் கைப்பந்து விளையாட்டு நடக்க... பாதி தூக்கத்துடன் இரண்டு நாய்கள் பார்த்துக் கொண் டிருந்தன. நேற்று மாலை மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு மக்கள் வீசியெறிந்த காகிதங்கள் பிரதேசம் முழுக்க திருப்பதி வேண்டுதல் போல உருண்டு கொண்டிருந்தன. நெற்றியில் சந்தனத்துடன் அருகம்புல் சாறு விற்பனைக்காகக் காத்திருந்த வியாபாரி தன் அலைபேசியில் மலையாளப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.

    அரை மணி நேர நடை முடித்து தன் காரை அடைந்தான் மாதவன். நேரம் பார்த்தான். காவ்யா குறிப்பிட்ட நேரம். அவசரமாகக் காரில் இருந்த வானொலியைப் போட்டான்.

    "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மேகம் பண்பலையின் சிந்தனை ஆயிரம். இன்று நம்மோடு உரையாடிக் கொண்டிருப்பவர் மருத்துவர் நித்யா.

    டாக்டர், சில பேர் பிரசவம் அறுவை சிகிச்சை மூலமாதான் நடக்கும்ன்ற சூழ்நிலையில் குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட நேரம் அதைச் செய்யச் சொல்றதா சொன்னீங்க. இது சரியானது தானா?" என்றார் பேட்டியாளர்.

    சரியா, தவறான்றதை விட இது நடக்கறது உண்மை. சட்டப்படி இதுல தப்பு எதுவும் இல்லை. நல்ல நேரத்தில பிறந்தா குழந்தையோட எதிர்காலம் நல்லா அமையும்னு சிலர் நம்பறாங்க. என்றார் அந்த மருத்துவர் நித்யா.

    அப்போ நல்ல நேரத்துல குழந்தை பிறக்கணும்னு சுகப் பிரசவத்தையே அறுவை சிகிச்சை பிரசவமா மாத்தச் சொல்றதும் உண்டா?

    அப்படியும் ஒண்ணு, ரெண்டு பேர் இருக்காங்க. அஷ்டமி, நவமி இந்த நாட்கள்ல பிரசவம் நடக்கற சூழ்நிலை இருந்தா... முன்னாடியே அறுவை சிகிச்சை செய்யச் சொல்றதும் உண்டு.

    காரைக் கிளப்பிய மாதவன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டபடி ஓட்டினான். அடுத்த பதினைந்தாவது நிமிடம் அவன் வீடு இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்து நிறுத்தி இறங்கினான். இரண்டாவது மாடிக்கு மின் தூக்கி பயன்படுத்தாமல் படிகளில் ஏறி வந்தான். தன் வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த செய்தித்தாள்கள், வார இதழ்களை எடுத்துக் கொண்டு அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான்.

    கதவைத் திறந்த காவ்யா கையில் மீன்களுக்குப் போடும் தீனி டப்பா வைத்திருந்தாள். கண்ணாடி தொட்டியில் அலையும் மீன்களுக்குத் தீனி போட்டபடி,நான் தயாரிச்ச புது நிகழ்ச்சி கேட்டியாண்ணா? என்றாள்.

    சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் புரட்டியபடி,ம்... என்றான் மாதவன்.

    அவ்வளவுதானா?

    இதை விட சிறப்பா நிகழ்ச்சி அமைக்க உன்னால முடியும் காவ்யா.

    என்னண்ணா இப்படி சொல்றே? அந்த டாக்டர் சொன்ன தகவல்கள் உனக்குப் புதுசா இல்லையா? எனக்கு ஆறு போன் வந்திச்சி.

    உன் நிகழ்ச்சியோட பேர் என்ன? சிந்தனை ஆயிரம்! அதை தகவல் ஆயிரம்னு மாத்திடு! அந்த டாக்டரை கிடுக்கிப்பிடி போட்டு மடக்கி கேள்விகள் கேட்டிருக்கலாம்.

    மக்கள் மனப்போக்கு அப்படி! அவங்க என்ன பண்ணுவாங்க?

    "காசு தர்றேன், எனக்கு போதை ஊசி போடுங்கன்னா போடுவாங்களா? ஒரு பொது நிகழ்ச்சி இது. இங்க ரெண்டு விதமான கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டியது உன் பொறுப்பு! நீ என்ன செஞ்சிருக்கணும்?

    அஷ்டமி, நவமி நாட்கள்ல பொறந்து பெரிய அளவுல சாதிச்சவங்களை பட்டியல் போட்ருக்கணும். நாள், நேரம் இதெல்லாம் மூடநம்பிக்கைன்னு ஒரு எதிர் கருத்து இருக்கில்ல... அதையும் ஒரு பகுத்தறிவுவாதியை விட்டு பேச வெச்சிருக்கணும். அப்பதான் நிகழ்ச்சி முழுமையாகவும், பரபரப்பாவும், சிந்திக்க வைக்கிறதாகவும் இருக்கும்."

    சில விநாடிகள் மாதவனையே பார்த்துக் கொண்டிருந்த காவ்யா அருகில் வந்து,கை குடுண்ணா. நச்சுன்னு மண்டையில அடிச்ச மாதிரி புரியவெச்சுட்டே! உன் கருத்தோட முழுமையா உடன்படறேன். நிகழ்ச்சியை வடிவமைக்கிறதுக்கு முன்னாடி உன்னோட விவாதிச்சிருக்கணும்னு இப்ப தோணுது. நீ சொன்ன யோசனையை வெச்சி அடுத்த தடவை கண்டிப்பா மாத்தி அமைச்சிடறேன், தேங்க்ஸ். என்றாள்.

    நான்தான் சரின்னு அடம்பிடிக்காம உடனே ஏத்துக்கிட்டே பாரு... இதுதான் என் காவ்யாவோட ஸ்பெஷல்! இன்னிக்கு சமையல்காரம்மா லீவு தெரியுமில்ல... இட்லியா, தோசையா என்ன செய்யப் போறே?செய்தித்தாளைப் போட்டுவிட்டு எழுந்தான்.

    சேமியா கிச்சடி பண்ணிட்டேன். நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள சட்னி தயார் செஞ்சிடுவேன். அப்புறம் ஒரு விஷயம். என் வண்டி சர்வீசுக்குப் போயிருக்கு. நீதான் என்னை அலுவலகத்துல விடணும். என்றபடி சமையலறைக்குள் சென்றாள் காவ்யா.

    ***

    திசைகள் பதிப்பகம் அந்தப் பெரிய வணிக வளாகக் கட்டிடத்தில் ஒரு தளம் முழுவதும் வியாபித்திருக்க...

    தன் தனியறையில் கணினியில் வேலையாய் இருந்த மாதவனை அவனுடைய அலைபேசி புல்லாங்குழல் இசைத்து அழைத்தது. புல்லாங்குழல் ஒலித்தால் எழிலரசியின் அழைப்பு. பியானோ ஒலித்தால் நண்பன் பார்த்திபன். சரக்ஸபோன் என்றால் காவ்யா. இப்படி எல்லோருக்கும் இசைக் கருவிகளால் அடையாளப் படுத்தி வைத்திருந்தான்.

    அலைபேசியை எடுத்து,எப்ப வந்தே எழில்? என்றான்.

    காலைல தான்.

    டெல்லில குளிர் ரொம்பப் படுத்திடுச்சா?

    உதடெல்லாம் வெடிச்சிடுச்சி.

    வழக்கு என்னாச்சி?

    சொதப்பல். என் சீனியர் கொஞ்சம் சறுக்கிட்டார். அநேகமா தோத்துடுவோம்.

    ஆக உங்க ஜம்பமெல்லாம் சென்னையைத் தாண்டாதா?

    உதைபடுவே மாதவ்! இது நான் நடத்துன வழக்கு இல்ல. சீனியர் கூப்பிட்ட மரியாதைக்கு ஒத்துழைச்சேன். நான் என்ன செய்ய முடியும்?

    சரி. சூடாயிடாதே. மாலை என்ன நிகழ்ச்சி வெச்சிருக்கே?

    ஒரு திறந்தவெளி கவியரங்கம் இருந்திச்சி. மழை வர்ற மாதிரி இருக்கிறதால ரத்தாயிடுச்சி.

    அப்ப சந்திக்கலாமா?

    நாளைக்கு ஒரு வழக்கு இருக்குப்பா. அதுக்குத் தயாராகணுமே.

    நான் மட்டும் என்ன வேலை வெட்டி இல்லாம இருக்கேன்னு நினைச்சியா? இன்னும் பத்து நாள்ல புதுசா முப்பது புத்தகம் கொண்டு வரணும். தினம் ராத்திரி ஒம்போது மணி வரைக்கும் வேலை பார்த்துட்டு தான் கிளம்பறேன். பாத்து ஒரு வாரமாச்சேன்னு கூப்புட்டா பிகு பண்றியே?

    பிகுவெல்லாம் இல்லம்மா. சரி, டின்னர் சேர்ந்து சாப்புடலாம். எங்க? எத்தனை மணிக்கு?

    எக்ஸ்பிரஸ் அவென்யூ. எட்டு மணி. சரியா?

    அலைபேசியை வைத்து விட்டு வேலையைத் தொடர்ந்த மாதவன் கணினி திரையில் அந்தப் புதிய புத்தகத்தின் பகுதிகளைப் படிக்கப் படிக்க முகம் மாறினான். உள் தொலைபேசி எடுத்தான். ஆசிரியர் பகுதில மணிமாறன் இருக்காரா பாருங்க. உடனே என் அறைக்கு வரச் சொல்லுங்க. என்றான்.

    கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்து நின்றார் மணிமாறன். வேட்டி, சட்டை. நெற்றியில் குங்குமம். கழுத்தில் எல்லா வண்ணங்களிலும் கயிறுகள்.

    காது மடல்களிலும் நரை முடி. விரல்களில் மறைக்கப்பட்ட நடுக்கம்.

    மணி சார், நடிகர் நாகேஷ் பற்றின இந்தப் புத்தகத்தோட தகவல்களைத் திரட்டறதுக்கு எவ்வளவு பணம் குடுத்தேன்... கொஞ்சமும் மெனக்கெட்ட மாதிரி தெரியலையே சார். ஏற்கனவே வந்த சில புத்தகங்கள், பேட்டிகள் இதெல்லாம் வெச்சே ஒப்பேத்திருக்கீங்க. எழுதியிருக்கிற ஒரு விஷயம்கூட புதுசா இல்லையே சார். வீட்ல உக்காந்து பத்து புத்தகத்தை விரிச்சி வெச்சி எல்லாத்திலேர்ந்தும் கொஞ்சம் எடுத்துப் போட்டு அவியல் மாதிரி பண்ணியிருக்கீங்க.

    இல்லை சார்... அது வந்து... ஒரு வாரம் உடம்பு முடியாம படுத்துட்டேன் அதான்.

    அதுக்காக? தொழில்ல நேர்மை வேணாமா? சொல்லியிருந்தா நான் வேற யாரையாச்சும் செய்யச் சொல்லியிருப்பேனே? நீங்க வேலையே செய்யாம சும்மா உக்காந்திருந்தா கூட இரக்கப்பட்டு சம்பளம் குடுப்பேன். தப்பா வேலை செய்ததை ஏத்துக்க முடியாது. நீங்க வேலையை விட்டு நின்னுக்கங்க.

    சார்! அதிர்ந்தார் மணிமாறன்.

    நான் இனிமே...

    நீங்க போலாம். என் நேரத்தை விரயம் பண்ணாதீங்க.மாதவன் மீண்டும் உள் தொலைபேசியில்,மேனேஜர் சார்... மணி சாரை வேலைலேர்ந்து நிறுத்தியிருக்கேன். அவரோட கணக்கைப் பார்த்து தொகையைக் குடுத்துடுங்க என்றான்.

    ***

    எக்ஸ்பிரஸ் அவென்யூ. அந்தப் புதிய வணிக வளாகத்தில் மக்கள் தானியங்கி படிகளில் ஏறிக் கொண்டும், இறங்கிக்கொண்டும், கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட கடைகளில் வாங்கிக் கொண்டு பார்த்துக்கொண்டும், பல வகை உணவு விடுதிகளில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள். ஒரு உணவு விடுதியின் மேஜையில் அமர்ந்து எழிலரசிக்காகக் காத்திருந்தான் மாதவன். அலைபேசி ஒலித்தது. பார்த்தான். புதிய எண். எடுத்தான்.

    டேய் மாதவா! நீ என்ன பெரிய பருப்பாடா? அப்படி என்னடா மண்டகணம் உனக்கு? எவன்டா தப்பு செய்யலை இங்க? வேலையை விட்டு தூக்கிட்டா... நான் என்ன தூக்குல தொங்கிடுவனா? தப்பு பண்ணிட்டேடா திமிர் பிடிச்சவனே! உனக்கு சரியானபடி நான் ஆப்பு வைக்கலை... நான் ஒரு அப்பனுக்கு பொறக்கலைடா! ஆயுதம் உள்ளவனை மட்டும் இல்ல, அறிவு உள்ளவனையும் பகைச்சுக்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியலை. கணக்கா தீர்க்கறே? உன் கணக்கை நான் எப்படி தீர்க்கறேன்னு பாரு. எதிர்முனையில் பேசிய மணிமாறனின் குரலில் கோபத்துடன் போதையும் கலந்திருந்தது.

    ***

    2

    சுடிதார் அணிந்திருந்த எழிலரசி அந்த உணவு விடுதிக்குள் நுழைந்து மாதவனைத் தேடியபடி நடந்தபோது ஒரு சிலர் அவளை அடையாளம் கண்டு உடனே தன்னருகில் இருப்பவர்களிடம் கிசுகிசுத்தனர்.

    மாதவன் எதிரில் வந்தமர்ந்து புன்னகைத்தபடி,காக்க வெச்சிட்டேனா? கோபமா? என்றாள்.

    அப்படியே ஒரு சின்ன கோபம் இருந்தாலும் உன் புன்னகையால அதைத் துடைச்சி சுத்தம் பண்ணிடறே.

    எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும்ன்னு காத்திருப்பியா மாதவன்?

    எதுக்கு?

    இப்படி பூப்போடத்தான்.

    அந்த நிலை எல்லாம் எப்பவோ தாண்டியாச்சு எழில் என்றபோது.

    மீண்டும் அவனது அலைபேசி அழைத்தது. எடுத்தான். மீண்டும் மணிமாறன்.

    ஏய்... என்னடா பேசிட்டிருக்கறப்பவே போனை வைக்கிறே? என்னை அவமானப்படுத்தறியா? நீ தைரியமான ஆம்பளையா இருந்தா இப்ப இந்த நிமிஷம் எங்க இருக்கேன்னு சொல்லு. நான் இப்பவே அங்க வர்றேன். தில்லு இருக்கா துரை?

    இதோ பாருங்க மணிமாறன். உங்க வயசை மதிச்சிப் பேசணும்னு விரும்பறேன். இப்ப நீங்க குடிச்சிருக்கீங்க. போதையில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டிருக்கீங்க. ஒழுங்கா வீட்டுக்குப் போய்ச் சேருங்க, புரியுதா?

    வீட்ல பொண்டாட்டி திட்றாடா. பத்து குடித்தனம் இருக்கற வீடு. எல்லாரும் கேக்க, இப்படி ‘வேலையைத் தொலைச்சிட்டு வந்து நிக்கிறியேடா பாவி, உனக்கு வெக்கமா இல்லையா?’ன்னு கூசாம கத்தறா.

    இப்ப என்ன செய்யணுன்றீங்க?

    எனக்கு மறுபடி வேலை வேணும்.

    அதுக்கு வாய்ப்பில்லை, அப்பறம்?

    அப்ப நீ விளைவுகளைச் சந்திக்கத் தயாரா இருக்கியா?

    தயாரா இருக்கேன். என்ன செய்யணுமோ செய்ங்க. அதே அலுவலகம்தான். அதே வீடுதான். இப்ப போனை வைங்க. மறுபடி கூப்பிடாதீங்க. கூப்பிட்டாலும் எடுக்க மாட்டேன்.

    எரிச்சலுடன் அலைபேசியை அணைத்தான்.

    என்ன பிரச்சனை மாதவ்?கேட்டாள் எழிலரசி.

    அலுவலகத்தில் நடந்ததைச் சொன்னான்.ஏன் எடுத்ததுமே வேலையை விட்டுத் தூக்கணும்? எச்சரிக்கை செய்து அடுத்த முறையும் அவர் தப்பு செஞ்சாருன்னா அப்ப கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாமே மாதவ்?

    அவர் இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கறது இது மூணாவது முறை எழில். ஒரு முறை இவரை பண வசூலுக்கு அனுப்பினேன். முப்பதாயிரம் வசூலானதை லாட்ஜுல எவனோ திருடிட்டான்னு சொன்னார். போலீஸ்ல புகார் குடுத்துட்டு வாங்கன்னு சொன்னேன். அப்புறம் பார்த்தா இவர்தான் சுருட்டிட்டாருன்னு தெரிஞ்சுது. நெத்தில விபூதியோட அலுவலகம் வர்றவர் மாலையில் மதுக் கடைக்குப் போயிடறார். சீட்டாட்டம், குதிரைப் பந்தயம்னு எல்லா வேண்டாத பழக்கமும் இருக்கு. எத்தனை தடவை மன்னிக்கறது? மன்னிப்பு கொடுக்கப்படறதுக்கும் ஒரு தகுதி வேணும் எழில்.

    அதுக்கில்லை. அந்தாளு குடிகாரர்னு சொல்றீங்க. மரியாதையில்லாம பகிரங்கமா மிரட்டறார். விபரீதமா ஏதாச்சும் செய்துட்டா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க மாதவ்.

    சேச்சே. இவர் வெத்து வேத்து, வெறும் வாய்ச் சவடால் ஆசாமி. ஏதோ போதையில் பேசறாரு. தெளிஞ்சதும் நடுங்குவார். சரி, விடு. என்ன சாப்பிடலாம்? என்று உணவுப் பட்டியல் அட்டையை அவள் பக்கமாகத் திருப்பி வைத்தான் மாதவன்.

    ***

    சென்னையில் இயங்கும் உயர்தரமான கிளப்புகளில் ஒன்று சென்னை ராயல் கிளப். அதில் உறுப்பினராவது மிகக் கடினம். ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்களில் இரண்டு பேர் சிபாரிசு செய்தால்தான் விண்ணப் பிக்கவே முடியும். அதன் பிறகு மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ரகசிய ஓட்டளித்துத் தீர்மானிப்பார்கள். ஒரே ஒரு நபர் வேண்டாம் என்று எதிர்ப்பு ஓட்டுப் போட்டிருந்தாலும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

    அந்த கிளப்பில் சீட்டாடலாம். மது அருந்தலாம். டென்னிஸ், செஸ், கேரம் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1