Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa!
Vaa!
Vaa!
Ebook104 pages36 minutes

Vaa!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மோகன் - பிருந்தா, சிறு வயதிலே காதலில் இணையும் இரு இதயங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையினால் பிரிகின்றனர்.

பிருந்தாவின் திருமண வாழ்க்கையும் 2 வருடங்களுக்கு பின் கேள்விக்குறியாகிறது. குழந்தையுடன் தனித்து, வாழ்க்கையில் பயணிக்கும் பிருந்தா திடீரென மோகனை சந்திக்க நேரிடுகிறது.

பிருந்தாவின் திருமண வாழ்க்கை என்னவாயிற்று? மோகனின் சந்திப்பால் பிருந்தாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் பட்டுக்கோட்டை பிரபாகருக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100906661
Vaa!

Read more from Pattukottai Prabakar

Related to Vaa!

Related ebooks

Reviews for Vaa!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa! - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    வா!

    Vaa!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    மற்றொரு இருபத்தி நான்கு மணி நேரங்களைச் சுமந்து கொண்டு ஒரு புது தினத்தின் பிரசவம் ஆன ஆஸ்பத்திரியின் கீழ் வார்டில் சுகமாய் நிகழ்ந்து முடிந்தது.

    கொஞ்ச நேரம் கழித்து குழந்தை கண் விழித்துச் சிரித்தது பஸ்களாய், லாரிகளாய், கார்களாய், மனிதர்களாய்.

    தன் மோட்டார் பைக்கை நிறுத்தினான். சின்ன சூட்கேஸை எடுத்துக் கொண்டான். மணிக்கட்டில் பார்த்துக் கொண்டான். ஒரு விரலால் கண்ணாடியை அழுத்திக் கொண்டான். லிஃப்ட்டுக்குப் போய் பித்தான் அழுத்தி அழைத்தான்.

    வந்ததும், திறந்ததும்... நுழைந்தான்.

    குட் மார்னிங் சார்

    குட் மார்னிங்

    லிஃப்ட் ஆபரேட்டர் முதுகுக்குப் பின்னால் உயிருள்ள பீடி வைத்திருந்தான்.

    G-1-2-3-4-5.

    இரண்டாவது சலாமை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு வெளி வந்தான் மோகன்.

    கண்ணாடிக் கதவைத் தள்ளி நீண்ட ஹாலுக்குள் நுழைந்தான். அலுவலகம் காகிதங்களை சரசரக்க வைக்க... டைப்ரைட்டர்களை வலமிருந்து இடம் நகர்த்த வைக்க... டெலிபோன்களை ஒலிக்க வைக்க... தயாராகிக் கொண்டிருந்தது. இன்னும் நிறைய நாற்காலிகள் கடமையாற்றக் காத்திருந்தன.

    வரவேற்பு ஹாலின் சோபாக்களிலும், பெஞ்சுகளிலும்...

    ஐ வோண்ட் மிஸ் இட் யார்

    வர்றப்போ செருப்பு அறுந்துடிச்சிடி

    நெர்வஸா இருக்கு

    திஸ் ஈஸ் மை ட்வண்டி சிக்ஸ்த் இண்ட்டெர்வ்யு

    மிஸோராம் தலை நகர் என்ன?

    கரண்ட் கட்போல பட் என்று பேச்சுக்கள் நின்றன.

    அந்த ஹாலைக் கடந்து நேராய் போய் உதவி மானேஜர் அறைக்குள் அவன் நுழையும் வரை அத்தனை மையிட்ட, யிடப்படாத கண்களும் தொடர்ந்தன.

    இவர் தான் அஸிஸ்டெண்ட் மானேஜரா?

    ரொம்ப சின்ன வயசு. இல்லே?

    ஹாண்ட்சம்!

    மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்த பியூன் காலை வணக்கம் சொன்னான். ஏ. சி. யை போட்டு விட்டான். கோட்டைக் கழட்டி சேரில் போட்டான் மோகன்.

    மானேஜர் வந்துட்டாரா ராஜன்?

    வந்துட்டார் சார்

    உன் வைஃப்க்கு இப்ப தேவலாமா?

    தேவலாங்க சார்

    அனந்தராமன் வந்துட்டாரா?

    இன்னும் வரலை சார்

    எக்ஸ்க்யூஸ் மி சார் என்று வந்தான் அனந்தராமன்.

    வாங்க அனந்தராமன். மானேஜர் ரூம்ல தானே இண்ட்டெர்வ்யு?

    ஆமாம் சார். நாம கார்டு போட்ட அத்தனை பேரும் வந்துட்டாங்க. நீங்க ரெடின்னா அஞ்சு நிமிஷத்திலே ஆரம்பிச்சிடலாம்.

    இந்த சிகரெட்டை முடிச்ச உடனே நான் ரெடி. மிஸ்டர் தேவ் வர்றேன்னார் இல்லே?

    இப்போ தான் போன் பண்ணினார். ஹி ஈஸ் நாட் கமிங். மானேஜரையும் உங்களையும் பார்த்துடச் சொன்னார்.

    வெல். எத்தனை பேர்?

    நாப்பத்தேழு

    பாவம்... நாப்பத்தஞ்சு பேர் ஏமாற்றத்தோட திரும்பப்போறாங்க. ஒருத்தருக்கு அஞ்சு நிமிஷம் வச்சாலும், லன்ச்சை தாண்டும் போலிருக்கே...

    இண்ட்டெர்காமை எடுத்தான் மோகன்.

    குட் மார்னிங் சார். மோகன்.

    குட் மார்னிங் மோகன். மிஸ்டர் தேவ் வரலை. நாம வெய்ட் பண்ண வேணாம்.

    நாம ஆரம்பிச்சுடலாம் சார். நான் உங்க ரூமுக்கு வர்றேன்

    வாங்க

    வைத்து விட்டு, அனந்தராமன், ராஜன்கிட்டே லிஸ்ட்டை கொடுத்திடுங்க. வரச் சொல்லுங்க. ஏ. சியை ஆஃப் பண்ணுப்பா

    மானேஜரின் அறைக்குள் வந்தான்.

    மானேஜர் சிவராமகிருஷ்ணன் கழுத்துக்குக் கீழே நிறைய பரப்பளவு வைத்திருந்தார். தலைக்கு மேலே கொஞ்சமாய்த்தான் முடி சேமிக்கப் பட்டிருந்தது. மீசை இல்லாமல் மழமழ என்று, கொஞ்சம் பசுமை கலந்து பம்பாய் சினிமா அப்பா போலிருந்தார்.

    ரெண்டு இல்லை மூணு கேள்வியோட நிறுத்திக்கலாம் மோகன். நேரம் எக்கச்சக்கமாயிடும்.

    மௌனமாய் இருந்தான் மோகன்.

    என்ன மிஸ்டர் மோகன், உடம்பு சரியில்லையா?

    இல்லை சார். அஞ்சு வருஷம் முன்னாடி இதே ரூமிலே பயபக்தியா நான் பதில் சொல்லியிருக்கேன். இப்போ நானே இண்ட்டெர்வ்யு பண்ணப் போறேன். நினைச்சுப் பார்த்தேன்.

    இந்த தமிழ் சரியா வர மாட்டேங்குது. இதுக்கு என்னமோ சக்கரம்னு சொல்வாங்களே?

    காலச் சக்கரம்

    நான் உள்ளே வரலாமா சார்? என்றன பளிச்சோ பளிச் லிப்ஸ்டிக் உதடுகள்.

    வாங்க, உட்காருங்க. உங்க பேரென்ன? என்றார் மானேஜர்.

    த சில்லியஸ்ட் முதல் கேள்வி என்று நினைத்துக் கொண்டவளின் பெயர் ஆனந்தி.

    ஆகவே, ஆனந்தி என்றாள்.

    இவ்வளவு நீளமா நகம் வச்சிருக்கிங்களே, டைப்பிங் வேகத்தை குறைக்காது?

    "அப்ளிகேஷன்ல நான்

    Enjoying the preview?
    Page 1 of 1