Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manithan Paathi! Mirugam Paathi!
Manithan Paathi! Mirugam Paathi!
Manithan Paathi! Mirugam Paathi!
Ebook124 pages57 minutes

Manithan Paathi! Mirugam Paathi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பம் ஒரு கடவுள் கொடுத்த கொடை. அதில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் பொழுது அது சிறக்கும். இங்கும் கோவக்கார மாமியாரை தன் அன்பாலும், பண்பாலும் நல்ல மனுஷியாய் மாற்றினாலா மருமகளான வினோ? இவர்களின் குடும்ப பிரச்சனை என்ன? இன்னும் பல சுவாரசியமான குடும்ப கதையான மனிதன் பாதி! மிருகம் பாதி! வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580100610243
Manithan Paathi! Mirugam Paathi!

Read more from Devibala

Related to Manithan Paathi! Mirugam Paathi!

Related ebooks

Reviews for Manithan Paathi! Mirugam Paathi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manithan Paathi! Mirugam Paathi! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனிதன் பாதி! மிருகம் பாதி!

    Manithan Paathi! Mirugam Paathi!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    (முன்குறிப்பு: இது தமிழ் நாட்டில் நடந்த உணர்ச்சிகரமான ஒரு உண்மைக்கதை. பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது. கதைக்காக சில சம்பவங்கள் கற்பனை.)

    அத்தியாயம் 01

    அது சம்பள நாள். அசோக்கின் சம்பளம் அவன் கணக்கில் க்ரெடிட் ஆகி விட்டது. ஒரு மாதிரி சுருக்கென்றது. போன மாதம் வரை, பிடித்தம் போக, கைக்கு ஒண்ணரை லட்சம் வரை சம்பளம் வந்தது. இந்த மாதம் வீட்டு லோன், கார் லோன் எல்லாம் பிடித்தம் போக, வெறும் முப்பதாயிரம்... கேட்டட் கம்யூனிட்டியில் பெரிய வில்லா வீடு. அதன் மதிப்பு இரண்டு கோடிக்கு மேல். வீடு முழுமையாக முடிந்து கைக்கு வர, ஓரிரு மாதங்கள் ஆகலாம். ஆனால் சம்பள பிடித்தம் மட்டும் போக தொடங்கி விட்டது. அதனால் அசோக் மூட் அவுட்டில் இருந்தான். சக அதிகாரி வர்மா அருகில் வந்தார்.

    என்ன ப்ரோ தீவிர யோசனை? எந்த கோட்டையை பிடிக்கற ஐடியா? சரி, அதை விடு. வர்ற வாரம் லாங் வீக் எண்ட். நாலு நாள் கிடைக்குது. நம்ம க்ரூப் கோவாவுக்கு ஒரு ட்ரிப் போட்டு எல்லா சந்தோஷங்களையும் அனுபவிச்சிட்டு வரலாம். என்ன சொல்ற? ஃப்ளைட் புக் பண்றான் ஜோ. பெரிய ரிசார்ட் பேசியாச்சு. தலைக்கு அம்பதாயிரம் ஆகுது. ரெடியா இரு.

    தலைக்கு அம்பதாயிரமா? பிடித்தம் போக என் கையில உள்ளதே முப்பது தான். நான் வரலை.

    உன் சம்சாரம் உன்னை விட அதிகம் சம்பாதிக்கலை? கேட்டு வாங்கிட்டு வாடா.

    இல்லை ப்ரோ. ஏராளமா பிடித்தம் போகுது. இனிஷியல் கட்ட அவ பர்சனல் லோன் போட்டிருக்கா. குடும்ப செலவு நிறைய. இப்ப பொறுப்பில்லாம நான் கோவாவுக்கு வர்றது சரியில்லை. விட்ரு என்னை.

    ப்ரோ, வீடு, கார் எல்லாம் தேவைதான். குடும்பம்னாலே பிரச்னை தான். அதுக்காக எந்திரமா வாழ முடியுமா? என்டர்டெயின்மென்ட் வேண்டாமா? கோவா போய் கொஞ்சம் சரக்கை ஏத்தி, அயிட்டங்களோட உல்லாசமா இருந்து, நாலஞ்சு நாட்கள் உலகை மறந்து, சார்ஜ் ஏத்திட்டு வந்தாத்தான் வருஷம் முழுக்க நீ பாரம் சுமக்க முடியும் ஒரு பக்கம் சொத்து, மறுபக்கம் கடன்... ரெண்டும் கலந்தது தான் வாழ்க்கை. டென்ஷனை விட்ரா மாப்ளை.

    அசோக் பிரமித்தான்.

    ‘இவன் என்னை விட குறைவான சம்பளம் வாங்கும் நபர். ஏராளமான குடும்ப பிரச்னை உள்ளவன். எந்த நேரமும் எப்படி சிரித்த படி இவனால் வாழ முடிகிறது?’

    எனக்கு நாளை வரைக்கும் அவகாசம் குடு. காலைல நான் சொன்ன பிறகு புக் பண்ணு. சரியா?

    அசோக் முதலில் அநாவசிய செலவு கூடாது என்று நினைத்தான். சொந்த வீடு, கார் என வசதிகள் பெருகுவது சந்தோஷம் தந்தாலும், கடன் கூடி விட்டதால் இந்த மாதிரி செலவுகளை குறைக்க வேண்டும் என தீர்மானித்திருந்தான். ஆனால் வர்மா சொன்னதும் ஆசை அவனுக்கும் வந்தது. அசோக் நல்லவன் தான். தப்பான வழிக்கு போக மாட்டான். ஆனால் சில சமயம் நண்பர்கள் வற்புறுத்தினால் சரக்கு மட்டும் போடுவான். அதுவும் வினோதினியை கல்யாணம் செய்யும் வரை தான். கல்யாணம் முடிந்து ஒரு வருஷ காலம் எந்த ஒரு தப்பு தண்டாவுக்கும் அசோக் போகவில்லை. ஒரு நாள், ஒரு பிறந்த நாள் விழாவில் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட சரக்கின் வாசனையோடு வீடு திரும்ப, வினோ கண்டு பிடித்து விட்டாள். மறுநாள் ரகளை செய்து விட்டாள்.

    நம்ம முதல் சந்திப்புல கோயில்ல வச்சு என்னை நீங்க பெண் பார்க்க வந்தப்ப, நான் உங்களை கேட்ட முதல் கேள்வி என்ன?

    நீங்க டீட்டோட்லரானு கேட்டே?

    அசோக் குரல் நடுங்கியது.

    அதுக்கு தமிழ்ல என்ன அர்த்தம் அசோக்?

    குடிப்பழக்கம் இல்லாதவரானு அர்த்தம்.

    நீங்க ஆமாம்னு பதில் சொன்னீங்க. நானும் சந்தோஷப்பட்டேன். ஏன்னா பெரிய பதவில இருக்கற ஆண்கள் பலருக்கும் எல்லா பழக்கங்களும் இப்ப இருக்கு. எனக்கு குடிக்கறவங்களை கண்டா வெறுப்பு. எங்கக்கா புருஷன் குடிக்கு அடிமையாகி, அவ வாழ்க்கையே அழிஞ்சு போச்சு. அந்த நிலை எனக்கு வர்றதை நான் விரும்பலைனு சொன்னேன். நீங்களும் திடமா பதில் சொன்னீங்க. இப்ப அத்தனையும் உடைஞ்சு போச்சு. உங்களை நான் சும்மா விட மாட்டேன்.

    காலையில் அசோக்கின் அப்பா நடேசன், அம்மா பத்மா, தங்கை ரஞ்சிதா என அனைவரையும் அழைத்து சபை கூட்டி இதை அறிவிக்க,

    ஏண்டா இப்படி செஞ்சே அசோக்? அம்மா பத்மா கேட்க,

    நிச்சயமா இது முதன் முறையா இருக்க வாய்ப்பில்லை. என் கிட்ட பேசும் போதே இந்த பழக்கம் இருந்திருக்கும். அன்னிக்கு பொய் சொல்லியிருக்கார். இன்னும் என்னல்லாம் பொய்களை சொல்லியிருக்கார்னு எனக்கு இப்ப தெரியணும்.

    இல்லை வினோ. இது வரைக்கும் நான் குடிச்சதே மூணு தடவை தான். கல்யாணத்துக்கு முன்னால ரெண்டு தடவை. இப்ப ஒரு முறை.

    சரி விடும்மா. இனி இந்த தப்பை அவன் செய்ய மாட்டான்.

    அப்பா சொல்ல,

    பொய் சொன்னது, குடிச்சதுன்னு ரெண்டு தப்பு. என்ன தண்டனை?

    அவகிட்ட மன்னிப்பு கேட்ரு அசோக். இனி இது நடக்காதுன்னு ப்ராமிஸ் பண்ணு. போதுமா வினோ?

    சத்யத்தை காப்பாத்துவார்னு என்ன நிச்சயம்?

    அம்மா பத்மாவுக்கு கோபம் வந்து விட்டது.

    நிறுத்து வினோ. அவன் செஞ்சது தப்பு தான். நீ இப்ப செய்யறது, அதைவிட பெரிய தப்பு. புருஷன் ஒரு தப்பை செஞ்சா, ஒரு நல்ல, நியாயமான மனைவி என்ன செய்வா? அதை குடும்பத்தை கூட்டி இப்படியா பகிரங்கப்படுத்துவா? உங்க பெட்ரூம்ல அவன் உன் கால்ல விழுந்தாக்கூட அது தப்பில்லை. ஒரு மனைவி, புருஷனை கொஞ்சலாம், அசிங்கப்படுத்தலாம். எங்கே? அவங்க தனியறைல. ஆனா வெளில அவனைப்பெத்தவங்க முன்னால அவனை நிக்க வச்சு கேள்வி கேக்கறது சரியில்லை.

    உங்க பிள்ளை பொய் சொன்னதை, குடிச்சதை நியாயப்படுத்தறீங்களா?

    நிச்சயமா இல்லை. அப்படி செய்யற பெத்தவங்களா இருந்தா, அவனை உங்கிட்ட மன்னிப்பு கேக்க சொல்லிட்டு ப்ராமிசும் பண்ண சொல்ல மாட்டோம். அவன் குடிகாரன் இல்லை. ஒரு நாள் தப்புக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் அவசியமில்லை.

    விடு பத்மா. அவ புருஷனுக்கு என்ன தண்டனை குடுக்க நினைக்கறாளோ அதை குடுக்கட்டும். இதுல நாம தலையிட வேண்டாம். விட்ரு.

    ஏற்கனவே வினோ கெடுபிடிதான். கல்யாணம், பெரியவர்கள் பார்த்து ஜாதக பொருத்தங்களுடன் நிச்சயித்த திருமணம் தான். அவனுக்கு சரி நிகராக படித்தவள். அவனைப்போலவே சம்பளம். யாருக்கும் அத்தனை சுலபத்தில் அடங்க

    Enjoying the preview?
    Page 1 of 1