Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panam, Penn, Pathavi!
Panam, Penn, Pathavi!
Panam, Penn, Pathavi!
Ebook71 pages30 minutes

Panam, Penn, Pathavi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன்னுடைய மாமன் மகளான ஷர்மிளாவை மனைவியாகவும், அவளின் சொத்துக்களுக்கு அதிபதியாகவும் ஆகும் நிலையை ஏற்க மறுக்கிறான் அஸ்வின். அஸ்வின் மறுப்பதற்கான காரணம் என்ன? ஷர்மிளா தன்னுடைய கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் சௌந்தரியை விரும்பக் காரணம் என்ன? யார் இந்த சௌத்ரி? ஷர்மிளா தன்னுடைய அத்தை மகனான அஸ்வினை கரம் பிடித்தாளா? பல சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதையை வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580100609609
Panam, Penn, Pathavi!

Read more from Devibala

Related to Panam, Penn, Pathavi!

Related ebooks

Reviews for Panam, Penn, Pathavi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panam, Penn, Pathavi! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பணம், பெண், பதவி!

    Panam, Penn, Pathavi!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அப்பா திடீரென இப்படி ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேருவார் என்று ஷர்மிளா நினைக்கவில்லை.

    நன்றாகத்தான் இருந்தார்.

    நாலு கம்பெனிகளை நிர்வகித்துக்கொண்டு பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்.

    காலை நாலுமணிக்கு எழுந்தால் இரவு பதினொருமணி வரை ஓயாமல் உழைத்தார்.

    முதல்நாள் ராத்திரி படுத்தார்.

    மறுநாள் அவருக்கு விடியவில்லை.

    ஷர்மிளாவால் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை. உறவுக்காரர்கள், நண்பர்கள் கம்பெனியின் உயர் அதிகாரிகள் என் ஊர் கூடி அனுதாபத்தைக் கொட்ட, அப்பா என்ற மனிதர் புகைப்படமாகி மாலையுடன் சுவரில் உறைந்துதான் போனார்.

    அவரது காரியங்கள் சடுதியில் நடக்கத் தொடங்கின.

    அது முடியும்வரை கம்பெனியின் உயர் அதிகாரிகள் காத்திருந்தார்கள்.

    பதினாறு நாட்கள் ஆனதும் ஷர்மிளாவைத் தேடி அன்று மாலை வந்துவிட்டார்கள்.

    மேடம் போர்ட் மீட்டிங் உடனே போட்டு உங்களை சேர்மனாக்கணும். கம்பெனிப் பொறுப்புகளை உடனடியா நீங்க ஏத்துக்கவேண்டிய நேரம் வந்தாச்சு!

    ஷர்மிளாவுக்கு தலைசுற்றியது.

    அவளுக்கு ஒன்றுமே தெரியாது. ஆளவந்தாரின் ஒரே மகள் என்ற உற்சாகத்தில் படிப்பை முடித்துவிட்டு ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறாள் இரண்டு வருடங்களாக.

    இருபத்திமூன்று வயது ஷர்மிளா... பெரிய அழகியில்லை. ஆனால் துடிப்பான பெண், ஒருமுறை பார்த்தவர்கள், திரும்பவும் பார்க்க நினைக்கும் அளவுக்கு வசீகரம்...

    ஒரே மகள்.

    கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி.

    அப்பா கல்யாண பேச்சைக்கூட கடந்த நாலைந்து மாதங்களாக எடுத்துவிட்டார்.

    நோ டாடி! இன்னும் ரெண்டு வருஷங்கள் எந்தப் பொறுப்பும் இல்லாம நான் ஜாலியா இருக்கணும். ஓக்கே?

    எந்த நேரத்தில் சொன்னாளோ...? அவரே போய்விட்டார். இதோ பொறுப்புகள் அதிகாரிகளின் ரூபத்தில்.

    தட்ட முடியாது.

    அப்பா கட்டிக்காத்த கம்பெனிகள்!

    ஓக்கே! ஏற்பாடு பண்ணுங்க! பட், எனக்கு ஒண்ணுமே தெரியாதே!

    எல்லாம் நாங்க சொல்லித் தர்றம் மேடம்!

    சரி!

    மறுநாள் போர்ட்மீட்டிங் கூட்டப்பட்டு ஷர்மிளா சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

    மற்ற அதிகாரிகள் என்று ஒரு சிலரை அறிமுகப்படுத்தினார்கள்.

    எல்லாரும் நாற்பது கடந்தவர்கள்.

    அவளுக்கு கம்பெனியில் முக்கிய ப்ராடக்ட், டர்ன்ஓவர், பாலன் ஷீட் என்று நிறைய விவரங்களை ஒருவர் சொல்லிக் கொண்டேபோக,

    Enjoying the preview?
    Page 1 of 1