Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounamthan Pesiyatho
Mounamthan Pesiyatho
Mounamthan Pesiyatho
Ebook52 pages25 minutes

Mounamthan Pesiyatho

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பெண் எதையும் புரிந்து கொள்ளாமல் இருந்தால் அந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமிருக்காது.

அந்த வகையில் இந்த நாவலில் வரும் இரு சகோதரிகளில் ஒருவள் பக்குவமானவளாகவும் மற்றொருத்தி பக்குவமற்றவளாகவும் இருப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கு ஒரு சகோதரி தரும் நிரந்தரமான தீர்வு வித்தியாசமானவை. அதை நாம் காணலாம்.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580100606550
Mounamthan Pesiyatho

Read more from Devibala

Related to Mounamthan Pesiyatho

Related ebooks

Reviews for Mounamthan Pesiyatho

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounamthan Pesiyatho - Devibala

    https://www.pustaka.co.in

    மௌனம்தான் பேசியதோ?

    Mounamthan Pesiyatho?

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அம்மா! கொஞ்சம் உள்ளே வாயேன்!

    அதிகாலை நேரத்தில பாத்ரூம் போன கீதா அவசரமாக அழைத்தாள்.

    என்னடீ வேணும்?

    சீக்கிரம் வாம்மா?

    லக்ஷ்மி தூக்கக் கலக்கத்துடன் லேசான எரிச்சல் சுமந்து எழுந்து போனாள்.

    ஏதாவது கரப்பான் பூச்சியை பார்த்திருப்பா. சரியான கழுத்தறுப்பு. தூங்க விடமாட்டாளே மனுஷங்களை!

    பாத்ரூமுக்குள் நுழைந்து ஒரு சில நிமிடங்களில் வெளிப்பட்ட லக்ஷ்மியின் முகத்தில் உணர்ச்சிக் கலவை.

    நேராக படுக்கையறை வந்தாள்.

    என்னங்க!

    வாசு நல்ல உறக்கத்தில் இருந்தான்.

    உங்களைத் தானே! கொஞ்சம் எழுந்திருங்களேன்!

    வாசு புரண்டு படுத்தான்.

    என்ன லக்ஷ்மி சொல்லு!

    சற்று தள்ளிப் படுத்திருந்த ஜெயந்தி எழுந்து உட்கார்ந்தாள்.

    ஜெயந்தி நீ படு! என்னங்க பாத்ரூம் ஸ்விட்ச்ல ஷாக் வருது எழுந்து வாங்களேன்!

    ஜெயந்தி திரும்பிப் படுத்தாள்.

    வாசு கடுப்புடன் எழுந்து வந்தான்.

    எந்த ஸ்விட்ச்ல?

    லக்ஷ்மி குரலைத் தழைத்துக் கொண்டாள்.

    நம்ம கீதா பெரிய பொண்ணாயிட்டா!

    ஜெயந்தினு சொல்லு!

    ஜெயந்தி இல்லீங்க. கீதா பெரியவளா ஆயாச்சு! இம்முறை லக்ஷ்மியின் குரல் அழுகையில் இடறியது.

    வாசு அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

    பதிமூணு வயசுல கீதாவுக்கு நடக்க வேண்டியது நடந்திருக்கு. பதினேழு வயசாகியும் ஜெயந்தி அப்படியே இருக்காளே!

    லக்ஷ்மி! மெதுவா! ஜெயந்தி காதுல இது விழ வேண்டாம். குழந்தை ஏங்கிப் போவா!

    எப்படீங்க, ஒரே வீட்ல இருந்துட்டு விஷயத்தை மூடி மறைக்க முடியும்? தெரிந்துதானே தீரும்!

    சரி சரி! கீதாவுக்கு வேண்டியதைச் சொல்லிட்டு நீ உள்ளவா. விடிஞ்ச பின்னால பார்க்கலாம்.

    வாசு

    Enjoying the preview?
    Page 1 of 1