Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilamjolai Vennilaa
Ilamjolai Vennilaa
Ilamjolai Vennilaa
Ebook122 pages44 minutes

Ilamjolai Vennilaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466695
Ilamjolai Vennilaa

Read more from Devibala

Related to Ilamjolai Vennilaa

Related ebooks

Related categories

Reviews for Ilamjolai Vennilaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilamjolai Vennilaa - Devibala

    1

    கவுசிக் பற்றி ஒரு சின்ன அறிமுகம்.

    ‘மல்ட்டி மில்லியனர்’ பஞ்சாபகேசனின் ஒரே மகன். வயது இருபத்தி ஏழு. அயல் நாடு சென்று சில ‘பிசினஸ்’ பட்டங்களை தன்னோடு இணைத்துக்கொண்டு திரும்பியவன். சிறுவயதில் தாயை இழந்தவன். சகோதர- சகோதரிகள் இல்லாதவன். பணத்தில் கண் விழித்தவன்.

    அழகன்.

    ஆனால் ஆசைப்பட்டதை உடனே அடைந்துவிடத் துடிக்கும் சுபாவம் கொண்டவன்.

    அதற்கு என்ன விலையாக இருந்தாலும், அதைக் கொடுத்து வாங்கித் தரும் அப்பா.

    கவுசிக்கின் இந்தக் குணம் உண்டாக்கிய விளைவுகள்தான் இந்தக் கதை:

    கவுசிக் இன்னும் விழிக்கவில்லை.

    ‘இன்டர்காம்’ ஒலித்துக்கொண்டே இருந்தது.

    அப்பாதான் முயன்றுகொண்டிருந்தார்.

    ‘குட் மார்னிங்’ சொல்லிவிட்டு அன்றைய வேலையைத் தொடங்கினால்தான் அவருக்கு ராசி.

    தன் அறையைவிட்டு எழுந்து வந்தார்.

    அவனை மெல்லத் தட்டினார்.

    நாலாவது முறை அசைக்க...

    எழுந்தான் கவுசிக்.

    குட் மார்னிங் கண்ணா.

    இதைச் சொல்லவா எழுப்பினீங்க?

    இல்லைப்பா... நான் இன்னைக்கு ‘பிசினஸ் டூர்’ போகணும்.

    எங்கே ‘டாடி’?

    சிங்கப்பூர். வர ஒரு மாசமாகும்.

    அய்யோ... அதுவரைக்கும் உங்களைப் பார்க்காம எப்படி இருப்பேன்?

    ஸாரி டியர்! ‘பிசினஸ்’ முக்கியமில்லையா?

    நானும் வரட்டுமா?

    அப்பா எழுந்துகொண்டார்.

    உன்கூட கொஞ்சம் பேசணும் கவுசிக். என் அறைக்கு வா.

    என்ன ‘டாடி’?

    வாயேன்...

    அவர் போய்விட்டார்.

    தன் காலை நிர்ப்பந்தங்களை முடித்துக்கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தான்.

    உட்காரு கவுசிக்.

    சொல்லுங்க ‘டாடி’.

    நமக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கு. அது வளர்ந்துட்டே போகுது. ஏன் தெரியுமா...?

    நீங்களே சொல்லுங்க.

    நான் கடுமையா உழைக்கறதால. இந்தியாவுல பல இடங்கள்ல நம்ம ‘பிசினஸ்’ நடக்குது. ஆனா, இங்கிருந்தே எல்லா ‘கன்ட்ரோலை’யும் என் கையில வச்சிருக்கேன். அடிக்கடி ‘டூர்’ போய் எல்லாத்தையும் பரிசோதிக்கறேன். புது ‘பிசினஸ்’ கவனிக்கறேன். இருபத்தி நாலு மணி நேரம் எனக்கு போதலை.

    சரி டாடி’.

    நான் ‘டூர்’ போகும் போதெல்லாம் ‘கம்பெனி’களோட உயர் அதிகாரிகள்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டுப் போறேன்.

    தெரியும்.

    இனியும் அது வேண்டாம்.

    ஏன்?

    நீதான் பார்த்துக்கணும்.

    ஓ... நோ... நானா? உங்களை மாதிரி எந்திரமா மாறச் சொல்றீங்களா என்னையும்?

    பின்ன எதுக்காக அயல்நாடு போய் பிசினஸ் மேனேஜ்மென்ட்’ படிச்சே? கவுசிக்... நான் இன்னும் நூறு வருஷம் வாழப் போறதில்ல. எனக்கு இப்ப அம்பத்தி அஞ்சு. தளரத் தொடங்கியாச்சு உடம்பு. மன நம்பிக்கையிலதான் வாழ்க்கையை ஓட்டுறேன். அதுகூட கொஞ்ச நாளைக்குத்தான். நீ உடனடியா பொறுப்பை எடுத்துக்கணும். இல்லைன்னா நிறைய பேர் நம்ம காசை சாப்பிடத் தொடங்குவாங்க.

    மகன் மவுனமாக இருந்தான்.

    இருபத்தியேழு வயசு வரைக்கும் உன்னைக் கோவில் காளை மாதிரி திரிய விட்டாச்சு. இதுவே அதிகம். அப்புறம்...?

    சொல்லுங்க...

    சுப்ரீம் கோர்ட்டு ‘நம்பர் ஒன் கிரிமினல் லாயர்’ பசுபதியோட மகள் பேரு நம்ருதா.

    தெரியும்.

    அவ ஒரு டாக்டர். புகழ்பெற்ற ‘ஜைனகாலஜிஸ்ட்’ (மகளிர்நல மருத்துவர்) டெல்லியில! அவளை உனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னு யோசிக்கறேன்.

    டாடி.

    சொல்லுப்பா.

    ம்... பிசினஸ்’ல வேணும்னா நான் வர்றேன். அதுகூட இருபத்தி நாலு மணி நேரமும் உங்களைப் போல இயங்க முடியுமான்னு சந்தேகம்தான். முயற்சிக்கறேன். ஆனா நம்ருதா சங்கதியெல்லாம் வேண்டாம். எனக்குப் புடிச்ச பொண்ணா இருந்தாத்தான் தாலி கட்டுவேன்.

    நம்ப அந்தஸ்துக்கு...

    கூடைக்காரிகூட என் பொண்டாட்டியாள்ன்னா கோடீஸ்வரிதான்! விருப்பம் முக்கியம். இப்ப நான் என்ன செய்யணும்?

    நம்ம ‘கம்ப்யூட்டர்’ பிரிவை இந்த வாரம் முழுக்க நீதான் பார்த்துக்கணும். மற்றபடி நம்ம ‘ஜெனரல் மானேஜர்’கிட்ட எல்லா உத்தரவுகளும் தந்திருக்கேன். நான் ஊருக்குப் போன பின்னால நேரடியா நீ கவனிக்க வேண்டிய வேலைகள்... என்றவாறே ஒரு ‘பைலை’ நீட்டினார்.

    அதில் விவரங்கள் ‘டைப்’ செய்யப்பட்டிருந்தன.

    இதென்ன... வேலைகளா?

    நான் ஒரு நாள்ல செய்யற வேலைகள்ப்பா.

    நீங்க மனுஷனா... எமனா?

    சிரித்தபடி எழுந்தான்.

    2

    ஏழு மணிக்கு தையல் ‘மிஷினை’ விட்டு எழுந்தான் ருத்ராபதி.

    பிரபலமான பெரிய ஏற்றுமதி நிறுவனம். ருத்ரா அங்கே ஒரு ‘டெயிலர்’.

    வேலை முடிந்து வேறு சில பெண்களும் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

    வள்ளி அருகில் வந்தாள்.

    ருத்ரா...

    என்னங்க வள்ளி...?

    இதை வீட்ல போய் படிச்சிப் பாருங்க. நாளைக்குப் போகலாம் - அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

    ருத்ராபதி அந்தக் கடிதத்தைக் கையில் வாங்கி சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டான்.

    ‘இதென்ன கடிதம்? என்ன எழுதி இருக்கும் இதில்?’

    ருத்ரா இந்த நிறுவனத்தில் நாலைந்து ஆண்டுகளாக வேலை பார்க்கிறான். சமீபத்தில் ஓராண்டாகத்தான் இதில் பெண்களை சேர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி சேர்க்கப்பட்டவர்களில் வள்ளியும் ஒருத்தி.

    அழகான- இளமையான பெண்.

    வள்ளியைப் பார்த்து உமிழ் நீர் சுரக்காத (‘ஜொள் விடுறது’ன்னு எழுதி அலுத்துப் போச்சுங்க!) வாலிபர்களே இல்லை. வயதானவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. விதிவிலக்கு ருத்ரா. தான் உண்டு, தன் கடமை உண்டு என்ற ரகம்.

    வள்ளிக்கு அவன் வித்தியாசமாகத் தெரிந்தான், அந்தக் கூட்டத்தில். நாலைந்து முறை வலுக்கட்டாயமாக ஏதாவது காரணங்களை உண்டாக்கிக்கொண்டு வள்ளியே அவனிடம் வந்தாள். கேட்டகேள்விக்கு மட்டுமே பதில். அதனால் அவள் மதிப்பில் இன்னும் உயர்ந்துபோனான். அவனைக் காதலிக்கவே தொடங்கிவிட்டாள்.

    தனியாக அவனை அழைத்துப் பேச ‘கம்பெனி’யில் முடியாது.

    எந்த நேரமும் குட்டியிட்ட பூனையாக கண்காணிப்பாளர் அலைவார்.

    ‘கடிதம்தான் சிறந்த வழி’ என்று தோன்ற... எழுதிவிட்டாள் வள்ளி. அதற்குக் காரணமும் இருந்தது. அவள் வீட்டில் கல்யாணப் பேச்சை எடுத்துவிட்டதுதான் காரணம்.

    கடிதத்தில் தன் மனதைக் கொட்டி எழுதி இருந்தாள்,

    ‘எப்படி எடுத்துக்கொள்வான் ருத்ரா இதை? அழகான, இளமையான பெண் நான். என்

    Enjoying the preview?
    Page 1 of 1