Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Manaivi, En Kaadhali!
Un Manaivi, En Kaadhali!
Un Manaivi, En Kaadhali!
Ebook129 pages2 hours

Un Manaivi, En Kaadhali!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விபின், ஸ்வேதா என்பவளை பெண் பார்க்க அவள் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்கிறான். அங்கு சிறிய திருப்பம் ஏற்படுகிறது. விபினின் அம்மாவும், ஸ்வேதாவின் அப்பாவும் எதிரெதிரே பார்த்து வியப்படைகின்றனர். இவர்கள் இருவரின் கடந்த காலத்தில் நடந்தது என்ன? இருவருக்கும் என்ன சம்பந்தம். விபின் மற்றும் ஸ்வேதாவின் திருமணம் நடைபெறுமா? என்பதைப் பார்ப்போம் வாருங்கள்!

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580100610538
Un Manaivi, En Kaadhali!

Read more from Devibala

Related to Un Manaivi, En Kaadhali!

Related ebooks

Reviews for Un Manaivi, En Kaadhali!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Manaivi, En Kaadhali! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உன் மனைவி, என் காதலி!

    Un Manaivi, En Kaadhali!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01.

    அத்தியாயம் 02.

    அத்தியாயம் 03.

    அத்தியாயம் 04.

    அத்தியாயம் 05.

    அத்தியாயம் 06.

    அத்தியாயம் 07.

    அத்தியாயம் 08.

    அத்தியாயம் 09.

    அத்தியாயம் 10.

    அத்தியாயம் 11.

    அத்தியாயம் 12.

    அத்தியாயம் 13.

    அத்தியாயம் 14.

    அத்தியாயம் 15.

    அத்தியாயம் 16.

    அத்தியாயம் 17.

    அத்தியாயம் 18.

    அத்தியாயம் 19.

    அத்தியாயம் 20.

    அத்தியாயம் 21.

    அத்தியாயம் 22.

    அத்தியாயம் 23.

    அத்தியாயம் 01.

    அம்மா! இன்னிக்கு நான் லீவு போட முடியாதும்மா. அவங்களை இன்னிக்கு வர வேண்டாம்னு சொல்லும்மா.

    ஸ்வேதா சொல்ல, ஆடிப்போனாள் அம்மா கஸ்தூரி.

    என்னடீ பேசற நீ? உன்னை பெண் பார்க்க காலைல பத்து மணிக்கு வர்றதா சொல்லியிருக்காங்க. பெரிய இடம். ஜாதகமெல்லாம் பொருந்தி, ஓரளவுக்கு உங்கப்பா நேர்ல, விபினோட அப்பாவை பார்த்து பேசி, இங்கே அப்பாவுக்கும் திருப்தி தான். நீயும் விபின் ஃபோட்டோ பார்த்திருக்கே. விபினும் உன் படம் பார்த்து மனசுக்கு பிடிச்சு தானே இந்த பெண் பார்க்கற ஏற்பாடு? இப்ப நீ லீவு போட முடியாதுன்னா, உங்கப்பா டென்ஷன் ஆயிடுவார். அதையும் காலைல எட்டு மணிக்கு சொன்னா என்னடீ அர்த்தம்? நடுவுல ரெண்டு மணி நேரம் தான் இருக்கு ஸ்வேதா.

    அம்மா எனக்கு புரியுது. ஆனா ஆஃபீஸ்ல திடீர் மீட்டிங். மார்க்கெட்டிங் கம்பெனி. என்னம்மா செய்ய முடியும்? வரச்சொல்லிட்டாங்க.

    நீ விஷயத்தை சொல்லணும்.!

    அம்மா! இது ஆஃபீஸ் சங்கதி.

    வாழ்க்கையும் முக்கியம் ஸ்வேதா. அதை நீ மறக்கக்கூடாது.

    எல்லாம் ரெடியா கஸ்தூரி!

    கேட்ட படி அப்பா மகாலிங்கம் வர, அம்மா முதலில் தயங்கி, இறுதியில் இதை சொல்லி விட்டாள்.

    ஸாரிப்பா. நான் வேணும்னே செய்யலை. சூழ்நிலை அப்படி

    உனக்கு எத்தனை மணிக்கு மீட்டிங்?

    பதினொரு மணிக்கு. ஆனால் சில முன்னேற்பாடுகளை செய்யணும்பா. எனக்கும் தர்ம சங்கடமா இருக்கு.

    அதற்குள் ஃபோன் வர,

    விபினோட அப்பா தான். விபின் அம்மா, படி இறங்கும் போது, கால் ஸ்லிப்பாகி நடக்க முடியலியாம். அதனால விபின், அப்பா, அவங்கத்தை வர்றாங்களாம்.

    இதை அப்பா சொல்ல, ஸ்வேதா படக்கென சமயோசிதமாக, அப்பாவிடம் சின்னக்குரலில் சொல்ல, அம்மா கஸ்தூரி அதை எதிர்க்க, அப்பா மகாலிங்கம் அவளை அடக்கி விட்டு, ஃபோனில்,

    சார்! தப்பா எடுத்துக்கக்கூடாது. முதல் சந்திப்புல விபின் அம்மா முக்கியம்னு என் பொண்ணு ஸ்வேதா சொல்றா. அவங்க கால் சரியான பிறகு கூட இதை வச்சுக்கலாமேன்னு அவ நினைக்கறா.

    எதிர் பக்கத்தில் விபின் அப்பா ராமதாஸ், இதை தன் மனைவி க்ருஷ்ணாவுக்கு சொல்ல, அந்தம்மா சிலிர்த்து போனாள்.

    என்னங்க! மாமியார் இல்லாத வரனா பாருங்கன்னு பல பெண்கள் நினைக்கற காலம் இது. இந்த பொண்ணு, அம்மா முக்கியம்னு சொல்றாளே. எனக்கு பெருமையா இருக்கு. சரின்னு சொல்லுங்க. இதை தள்ளி போடலாம்.

    அத்தை மாலினி கடுப்பானாள்.

    என்னை மனுஷியா தெரியலியா அவளுக்கு?

    விடுக்கா. க்ருஷ்ணா குணமாகட்டும்.இது சுளுக்கா? எலும்பு முறிவான்னு தெரியணும். நான் பேசிர்றேன்

    அவர் ஃபோனில் சம்மதம் சொல்ல, அப்பாவின் கைகளை பற்றி குலுக்கினாள் ஸ்வேதா.

    பார்த்தியாம்மா? எப்படி சமாளிச்சேன் பாரு. அதான் ஸ்வேதா. என் வேலையும் கெடலை பாரு.

    அப்பா மகாலிங்கம் மகளை பூரிப்புடன் பார்த்தார்.

    இது தான் ஸ்வேதா. சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தன் காரியங்களை சாதித்து கொள்வாள். எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் தனக்கு தோதாக வளைத்து கொள்வாள். ஆனால் கடுமையான பிடிவாதக்காரி. பொது நியாயங்களை பொருட்படுத்த மாட்டாள். அவளது நீதி மன்றத்தில் சில பல வழக்குகளுக்கு வினோதமான தீர்ப்பை கூசாமல் தந்து விடுவாள். அவள் என்ன செய்தாலும் அதை நியாயம் என்பார் அப்பா மகாலிங்கம். ஆனால் அம்மா கஸ்தூரி அதை ஏற்க மாட்டாள். பல அம்மாக்கள் கண்களை மூடி பெண்களை ஆதரிப்பார்கள். பெண்கள் பக்கம் தப்பு இருந்தால் கூட அதை மூடி மழுப்பி நியாயப்படுத்துவார்கள். ஆனால் கஸ்தூரி முற்றிலும் மாறு பட்ட அம்மா. அதனால் அம்மா...மகளுக்கு மத்தியில் மோதல் அடிக்கடி வரும். யாரும் கணிக்க முடியாத ஒரு மோதல் இந்த கதையில் வரப்போகிறது.

    அத்தியாயம் 02.

    கஸ்தூரி மாலை ஆறு மணிக்கு கோயிலுக்கு வந்தாள். மனசில் ஏதோ ஒரு பாரம் இருந்தது. காரணம் புரியவில்லை. அம்மனை வணங்கி விட்டு திரும்ப, எதிரே அவளது ஸ்நேகிதி நளினி.

    பெண் பார்க்க வந்தாங்களா? முடிவாயிடுச்சா? நன்றி சொல்ல கோயிலுக்கு வந்தியாக்கும்?

    இல்லை நளினி. இன்னிக்கு அவங்க வரலை.

    விவரத்தை கஸ்தூரி சொல்ல,

    சரி விடு. எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணும் இல்லையா?

    அதில்லை. இவளை பார்க்க அவங்க புறப்படும் போது, அந்தம்மாவுக்கு கால்ல பிரச்னை. இவ அதை தனக்கு சாதகமா பயன்படுத்தி நல்ல பேரை வாங்கிட்டா. எனக்குத்தான் மனசுல கீறல் விழுந்திருக்கு நளினி.

    எதுக்கு? புறப்படும் போது கால் சுளுக்கினா, அந்த பெண்ணுக்கு ராசி இல்லைன்னு ஒரு அம்மா நினைக்கலாம். அந்த நினைப்பையே ஸ்வேதா மாற்றிட்டாளே! இதுக்காக நீ சந்தோஷப்படணும்.

    இல்லை, என் பிரச்னை வேற. இந்த பெண் பாக்கற நாள்ள, அதி காலை மோசமான கனவு எனக்கு.

    என்ன கனவு?

    "அவருக்கும் எனக்கும் கடுமையான சண்டை. அது உச்ச கட்டத்துக்கு போய் அவர் என்னை அடிக்கறார். என் தாலியை தன் கையில எடுத்து,

    நியாயமா இதுக்கு சொந்தக்காரி நீயில்லைன்னு சொல்றார். நான் கண்ணீர் விட்டு கதறி, தலை விரி கோலமா நிக்கறேன். கனவு கலைஞ்சாச்சு. ஒரு மகளை பெண் பார்க்க வரும் போது அம்மாவுக்கு இப்படி ஒரு மோசமான கனவு வரலாமா?

    என்ன கஸ்தூரி நீ? கனவுக்கெல்லாம் முக்கியத்துவம் தருவியா?

    எனக்கு வர்ற கனவுகள் பெரும்பாலும் பலிக்குது நளினி. அதான் இத்தனை கலக்கம். அதற்கேற்ற மாதிரி, பெண் பார்க்கறது நடக்கலை. என் மன பாரம் நீங்கணும் நளினி.

    இதே கோயில்ல அருள் வாக்கு சொல்ற ஆராவமுதன்னு ஒருத்தர் உண்டு. இப்ப இருப்பார். அவரை நீ சந்திக்கலாம். அவர் விரும்பினாத்தான் சொல்லுவார். இல்லைன்னா முகத்தை திருப்பிட்டு போயிடுவார்.

    அப்படீன்னா நமக்கு சொல்ல விரும்பலைன்னு அர்த்தமா?

    அப்படி இல்லை. சிக்கல் அதிகமாகும். நீ விரும்பினா பாரேன்.

    அந்த நளினி விசாரித்து கஸ்தூரியை அழைத்து வந்தாள். அவரை சந்திக்க ஏற்கனவே ஒரு கூட்டம் இருந்தது. அவர் திறந்த கண்கள் எங்கோ நிலைத்திருக்க, கூட்டத்தில் கண்களை பதிய விட்டார். வந்தவர்களின் ஆர்வம் அதிகமாக, அவர் கஸ்தூரியை மட்டும் சுட்டி காட்டி, மற்றவர்களை போக சொல்ல,

    நீ அதிர்ஷ்டக்காரிடீ கஸ்தூரி.

    கஸ்தூரி வந்து பவ்யமாக வணங்கினாள்.

    இன்னிக்கு வர முடியாதவங்க சீக்கிரம் வருவாங்க. ஆனா கையோட பெரிய ஒரு சூறாவளியை சுமந்துட்டு வருவாங்க. அது உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். உங்களோட முப்பது வருஷ தாம்பத்ய வாழ்க்கையை புரட்டி போடப்போகுது. நீங்க இதை தவிர்க்கவே முடியாது. போகலாம்.

    அய்யா, அது என்ன பிரச்னைன்னு நான்…

    உங்களை நான் போக சொல்லியாச்சு.

    அவர் எழுந்து போக, கஸ்தூரி கதி கலங்கி போய் நின்றாள். தூரத்தில் சுமங்கலி பெண்கள் தாலிக்கு மஞ்சள், குங்குமம்

    Enjoying the preview?
    Page 1 of 1