Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Virunthukku Vaanga!
Virunthukku Vaanga!
Virunthukku Vaanga!
Ebook194 pages4 hours

Virunthukku Vaanga!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராஜா ஒரு போலீஸ் அதிகாரி. அவன் மனைவி தீபா. காதலுடன் வாழும் ஒரு ஜோடி. ராஜாவின் நண்பன் சுபாஷ். ஆனால், சுபாஷைப் பார்த்தவுடன் தீபா அதிர்ச்சியடைவது ஏன்? தீபாவின் பார்வையில் யார் இந்த சுபாஷ்? தீபாவுக்கும் சுபாஷுக்கும் இடையில் நிகழ்ந்தது என்ன? தீபாவின் வாழ்வில் இனி நிகழப்போவது என்னென்ன? - தொடர்ந்து படியுங்கள்....

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580100607835
Virunthukku Vaanga!

Read more from Devibala

Related to Virunthukku Vaanga!

Related ebooks

Reviews for Virunthukku Vaanga!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Virunthukku Vaanga! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விருந்துக்கு வாங்க!

    Virunthukku Vaanga!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    1

    இரவுக்காட்சி முடிந்து தியேட்டரை விட்டு சிரித்தபடி வெளியே வந்தார்கள் ராஜாவும் தீபாவும்!

    என்னங்க! குளிருது!

    என்னைக் கட்டிப் பிடிச்சுக்கோ!

    ச்சீ! இது பொது எடம். போதுமே வேடிக்கை! வாங்க போகலாம்!

    ராஜா, ஸ்டாண்டிலிருந்து தன் பைக்கை விடுவித்தான். வெளியே எடுத்தான். உதைத்தான். தீபா உட்கார்ந்து கொண்டாள்.

    பைக் வேகம் பிடிக்கத் தொடங்கியது!

    தீபா! பசிக்குதா?

    ம்! லேசா பசிக்கற மாதிரி இருக்கு!

    வழில நைட் ரெஸ்ட்டாரென்ட் ஏதாவது இருக்கும். சாப்டுட்டு போகலாம்!

    வேண்டாங்க! இப்பவே நடுராத்திரி 12 மணி! வீட்டுக்கும் போயிடலாம். பிரிட்ஜ்ல மாவு இருக்கு தோசை ஊத்திக்கலாம்!

    அவன் பேசவில்லை!

    பிரதானசாலையில் பைக் ஓடாமல் சீக்கிரம் போய் விடலாம் என்று எண்ணத்தில் சவுக்குத் தோப்புப் பாதையில் வண்டியைத் திருப்பினான்.

    அந்த சாலையில் ஈ, காக்கை இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது.

    எதுக்கு இந்த வழியா வந்தீங்க?

    ஏன் தீபா? சீக்கிரமே வீட்டுக்குப் போயிடலாம்!

    பிரதான சாலைல போனா பத்து நிமிஷம் லேட்டாகும். ஆகட்டுமே!

    ஏய்... பயமா?

    அவள் பேசவில்லை!

    நான் ஒரு போலீஸ்காரன். என் பொண்டாட்டியான ஒனக்கு தைரியம் வேண்டாமா?

    அவள் இப்போதும் பேசவில்லை!

    கம்மான் தீபா! சிரிச்சுகிட்டே வா!

    அடுத்த ஐந்தாவது நிமிடம் பைக் சீறும்போது, சாலையின் குறுக்கே ஒருவன் நின்றான்.

    அவனை அடுத்து ஒன்று நாலானது.

    பைக்கை நிறுத்தினான் ராஜா! இறங்கினான். தீபாவுக்கு நடுக்கம்.

    யாரு நீங்க?

    உருட்டுக் கட்டைகளை அவர்கள் வெளியே எடுத்தார்கள்.

    இன்ஸ்பெக்டர்! எங்களை உனக்குத் தெரியாது. லாக்கப்ல உள்ள மாணிக்கத்தைத் தெரிஞ்சிருக்கும்!

    ஓ... அவனோட ஆட்களா நீங்க?

    அவனை விடுதலை செய்!

    எதுக்கு? எல்லா தப்புகளுக்கும் சொந்தக்காரன் மாணிக்கம். அவனை விடமுடியாது!

    இதப்பாரு இன்ஸ்பெக்டர். எங்களுக்கு செல்வாக்கு அதிகம். கொண்டு வர்றோம். பாக்கறியா?

    செய்ங்க! அதுக்கு இந்த நடு ராத்திரில என்ன வேணும்?

    நாங்க யார்னு உனக்குத் தெரியணுமில்லை?

    அதான் தெரியுதே!

    டேய்... டயத்தை வீணாக்காதீங்க. இன்ஸ்பெக்டருக்குக் குடுக்க வேண்டியதைக் குடுத்து அனுப்புங்க!

    அடுத்த நொடியே அவர்கள் செயல்படத் தொடங்கிவிட்டார்கள்.

    ராஜா எதிர்த்து தாக்க ஆரம்பித்தான்.

    புயல்போல, ராஜா அவர்களுக்குள் ஊடுருவி அதிவேகமாக செயல்பட, அவர்கள் நிலை குலைந்தார்கள்!

    ராஜாவின் கை, கால்கள் அவர்களுக்கு மத்தியில் மின்னல் போல ஊடுருவ, அவர்களால் சமாளிக்க முடியவில்லை!

    ஒருவன் சாதுர்யமாக நழுவி, பீதியுடன் நிற்கும் தீபாவின் பின்புறம் பிரவேசித்து, உருட்டுக் கட்டையால் அவள் பின்னந்தலையில் ஓங்கி இறக்க, தீபாவின் அலறலில் அந்தப் பிரதேசமே கிடுகிடுத்தது.

    அடுத்த நொடியே ஆட்கள் காணாமல் போக, ராஜா ஓடி வந்தான். தீபா ரத்த வெள்ளத்தில் சரிந்தாள் ராஜா தன் செல்போனில் யாரையோ அழைத்துப் பேசினான்.

    சில நிமிடங்களில் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.

    தீபாவை இருவரும் தூக்கி, ஜீப்பில் கிடத்த, ஜீப் வேகம் பிடித்தது.

    நேராக அந்த 24 மணி நேரமும் இயங்கும் பெரிய ஆஸ்பத்திரி வாசலில் நின்றது.

    ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட, அதில் தீபா கிடத்தப்பட்டாள்! வேகமாக உள்ளே போனது.

    டாக்டர் அறைக்குள் நுழைந்தான் ராஜா!

    வாங்க ராஜா! என்ன இந்த நேரத்துல?

    ராஜா சொல்லத் தொடங்கினான்!

    டாக்டர் வேகமாக எழுந்து வந்தார்! பரிசோதிக்கத் தொடங்கினார்.

    அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தாள் தீபா.

    நிறைய ரத்தம் வீணாகியிருக்கு!

    ரத்தப் பிரிவு பரிசோதிக்கப்பட்டது. ரத்த வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டது.

    அந்த ஆஸ்பத்திரியில் அந்த ரத்தம் கொஞ்சம் இருந்தது. ஆனாலும் போதாது என்ற நிலை!

    ரத்த வங்கியிலும் இல்லை! டாக்டரிடம் டென்ஷன் பரவத் தொடங்கியது.

    இந்த க்ரூப் உள்ளவங்க யார், கிடைப்பாங்க?

    நான் பாக்கறேன் டாக்டர்!

    அதற்கான பட்டியல் ஒன்று வைத்திருந்தார்கள்.

    அதற்குள் விடியத் தொடங்கியது!

    ராஜா சில விலாசங்களைச் சேகரித்துக் கொண்டு வெளியே வர, சுபாஷ் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

    டேய்... சுபாஷ்!

    ஹாய் ராஜா! என்ன இந்தப் பக்கம்?

    ராஜா, விவரத்தைச் சொன்னான்.

    என்ன க்ரூப்?

    ஏபி - பாஸிட்டிவ்!

    எனக்கும் அதுதாண்டா! வா!

    இருவரும் டாக்டரிடம் வந்தார்கள். பரிசோதிக்கப்பட்டது. அடுத்த நொடியே சுபாஷ் படுக்க வைக்கப்பட்டான். ரத்தம் சேகரிக்கப்பட்டது!

    வேகமாக வேலை தொடங்கியது!

    ராஜா நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியே வந்தான். சில நிமிடங்களில் சுபாஷ் ரத்தம் கொடுத்து முடித்து வெளியே வந்தான்.

    தீபாவுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை!

    சுபாஷை, ராஜா கட்டிப் பிடித்துக் கொண்டான்.

    சுபாஷ்! கடவுளாப் பார்த்து உன்னை அனுப்பி வச்சிருக்கார்! இல்லைனா, தீபாவை நான் இழந்திருப்பேன்!

    சேச்சே! என்னப்பா இது? நீ நல்லவன். உன்னைக் கடவுள் ஒருநாளும் தண்டிக்க மாட்டார். நான் வரட்டுமா?

    இரு சுபாஷ்! தீபாவுக்கு நினைவு தெளிஞ்சிரட்டும். அவ உயிரைக் காப்பாத்தின உன்னை, அவ பார்த்து நன்றி சொல்ல ஆசைப்படுவா!

    அதுக்கு இப்ப அவசரமே இல்லை!

    நீயும் அவளைப் பாக்கலியே!

    அவங்க பழைய நிலைக்கு வரட்டும். அப்புறம் நானே வந்து பாக்கறேன்! அவசர வேலை இருக்கு ராஜா! வரட்டுமா?

    ராஜா, சுபாஷின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

    சுபாஷ்! உன்னோட இந்த உதவியை, ஆயுளுக்கும் நான் மறக்க மாட்டேன்!

    நோ... நட்புக்கு நன்றி உணர்ச்சி இடைஞ்சலா இருக்கக் கூடாது. வரட்டுமா?

    சுபாஷ் சிரித்தபடி நடந்து போனான்.

    ராஜா முகத்தில் பூரிப்பு.

    2

    தீபா வீட்டுக்கு வந்து விட்டாள்.

    தீபாவின் பெற்றோர் வெளியூரில் இருந்ததால், ராஜா இந்தத் தகவலைத் தெரிவிக்கவேயில்லை!

    வயதானவர்கள். பதட்டமாக வருவார்கள். அவர்களை பயப்படுத்தக் கூடாது என்று விட்டுவிட்டான்.

    தீபாவின் அண்ணன் வெளிநாட்டில் இருந்தான்.

    ராஜாவின் தங்கை உள்ளூரில் இருந்தாள். அவள் பதட்டமாக வந்து விட்டாள்!

    ஏண்ணே... ஆஸ்பத்திரில அண்ணி அட்மிட் ஆனதும், தெரிவிக்கக் கூடாதா?

    அந்தப் பதட்டத்துல எனக்கு எதுவும் தோணலை! தீபா கண் முழிச்சதும்தான் எல்லாமே நினைவுக்கு வந்தது!

    நீ முதல்ல இந்தப் போலீஸ் உத்யோகத்தை விடு!

    தீபா விழித்திருந்தாள்.

    நல்லா சொல்லு ரம்யா!

    தப்பு ரம்யா! இது சேவை செய்யற உத்யோகம். காக்கிச்சட்டை போட்டுக்கறதே ஒரு கௌரவம்! வாழ்க்கைல எல்லாம்தான் இருக்கும். பயப்பட முடியுமா? மனுஷனாப் பொறந்தா, எதிர்நீச்சல் போடற தைரியம் வாழ்க்கைல இருக்கணும்!

    நான் அண்ணிகூட இருந்து பாத்துக்கறேன்!

    தேங்க்யூ ரம்யா!

    ரம்யாதான் அடுத்து வந்த ஒரு வாரத்தில் தீபாவுடன் இருந்து சகலமும் பார்த்துக் கொண்டாள். தீபா தெளிந்துவிட்டாள். வழக்கமான நிலைக்கு வந்து விட்டாள்.

    ரம்யா! இனிமே நீ புறப்படும்மா! உன் குடும்பத்தை விட்டுட்டு எனக்காக வந்திருக்கே!

    உங்களுக்கு செய்யற கடமை எனக்கும் உண்டு அண்ணி!

    தேங்க்யூ ரம்யா!

    நன்றியே வேண்டாம்!

    மாலை ரம்யா புறப்பட்டு விட்டாள்.

    இதப்பாரண்ணே! உன் உத்யோகத்துல சில சிக்கல்கள் இருக்கு! எனக்கும் தெரியும். ஆனாலும் அண்ணிக்காக கொஞ்ச நேரம் தினமும் ஒதுக்கு. கூடவே இரு பாவம் அவங்க!

    நிச்சயமா செய்யறேன் ரம்யா!

    ரம்யா! நீ அடிக்கடி போன்பண்ணி, உங்கண்ணனுக்கு ஞாபகப்படுத்து!

    ரம்யா சிரித்தபடி புறப்பட்டுப் போனாள்.

    பாவம் ரம்யா! அவளுக்கு நாம கடமைப்பட்டிருக்கோம் ராஜா!

    தீபா! வீட்டு வேலைகளை சமையல் உட்பட பார்த்துக்க ஒரு ஆளைப் போட்டுர்றேன்!

    ‘தேவையே இல்லை! மற்ற வேலைகளைச் செய்ய ஆள் இருக்கு! சமையல் நான் பண்ணிப்பேன்!"

    உனக்குக் கஷ்டமில்லையா?

    என்ன கஷ்டம் நான் குணமாயிட்டேனே! நம்ம ரெண்டு பேருக்கு செய்யறது ஒரு பிரச்னையே இல்லை! எல்லாத்துக்கும் ஆள் போட்டா, ஏகப்பட்ட பணம் செலவாகும். நீங்க லஞ்சம் வாங்காத நேர்மையான போலீஸ்காரர்! புரியுதா? உங்க சம்பளத்தை மட்டுமே நம்பி, நான் குடித்தனம் நடத்தணும்!

    ராஜா சிரித்தான்.

    அதுல ஆதங்கமா?

    சத்யமா இல்லீங்க! பெருமையா இருக்கு! ஒரு நேர்மையான போலீஸ்! அதிகாரிக்கு மனைவினா, அதைவிடப் பெரிய கௌரவம் என்ன இருக்க முடியும்?

    ராஜா சிரித்தான்.

    சரி! ரத்தம் குடுத்த உங்க நண்பரை ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிடுங்க! நான் நன்றி சொல்லணும், அல்லது அவர் வீட்டுக்குப் போய், அவர் மனைவியை சந்திக்கலாம்!

    அவனுக்குக் கல்யாணமே ஆகலை! ஒரு பேச்சிலர் மேன்ஷன்ல இருக்கான். நான் பேசறேன்!

    ***

    ராஜா மறுநாள் காலையில் வேலைக்குப் புறப்பட்டுவிட்டான்.

    என்னங்க! டிபன் ரெடி!

    எதிரே வந்து நின்றாள் தீபா!

    வேர்க்குது பார். உனக்கு இன்னும் ஓய்வு தேவை. பலவீனமா இருக்கே!

    அதெல்லாம் இல்லை! சரியாகும். நீங்க வாங்க!

    டிபன் சாப்பிட வந்தான்!

    நீயும் ஒக்காரம்மா! ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்!

    Enjoying the preview?
    Page 1 of 1