Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sandhya Nee Saagalam!
Sandhya Nee Saagalam!
Sandhya Nee Saagalam!
Ebook70 pages36 minutes

Sandhya Nee Saagalam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603295
Sandhya Nee Saagalam!

Read more from Devibala

Related to Sandhya Nee Saagalam!

Related ebooks

Reviews for Sandhya Nee Saagalam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sandhya Nee Saagalam! - Devibala

    http://www.pustaka.co.in

    சந்தியா நீ சாகலாம்!

    Sandhya Nee Saagalam!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    எனக்கு மனைவியா வரப் போறவ படிச்சிருக்கணும்னு கட்டாயமில்லை. அவகிட்ட பணவசதி வேண்டாம். ஜாதகப் பொருத்தமெல்லாம் கூட பாக்கணும்னு இல்லை.

    குரு நிறுத்தினான்.

    வேற என்னதான் வேணும் உனக்கு?

    அழகு! அவளை மிஞ்ச ஒரு அழகு இருக்கக் கூடாது. இந்தியாவில் அவளை விட ஒரு அழகி இருக்கக் கூடாது!

    ஏண்ணா! உலகத்துலனு திருத்திக்கோயேன்!

    தங்கை சீண்டினாள்.

    ரொம்ப விசேஷம். கிடைச்சா கசக்குதா!

    அப்பா எழுந்து வந்தார்.

    தபாரு குரு! உன் நிபந்தனை எனக்கு சுத்தமா பிடிக்கலை.

    ஏனப்பா?

    அப்படியெல்லாம் ஒரு அழகான பெண் அமையாது. அதிரடிக்கற அழகு குடும்பத்துக்கு அவசியமும் இல்லை. இன்னும் சொன்னா ஆபத்தும் கூட. புரியுதா?

    ஸாரிப்பா. என் முடிவை நான் மாத்திக்கிறதா இல்லை

    அப்படீன்னா நீ பிள்ளையார் மாதிரி இருக்க வேண்டியதுதான் வாழ்நாள் முழுக்க!

    தப்பில்லை. அமைஞ்சா அழகான மனைவி இல்லைன்னா ஆயுசுப் பூராவும் பிரம்மச்சாரி!

    அப்பா அம்மாவைப் பார்த்தாள்.

    உன் பிள்ளை விவகாரத்துக்கு நான் இல்லை. இனிமே அவனுக்குக் கல்யாணம் பேசற பொறுப்பிலேருந்து என்னைக் கழற்றி விட்டு!

    'விருட்’டென எழுந்து போய் விட்டார்.

    ஏனம்மா அப்பா கோபப்படறார்? நான் என்ன கேட்கக் கூடாததைக் கேட்டுட்டேன்!

    அதில்லைடா! இந்தியால சிறந்த அழகி மனைவியா வேணும்னெல்லாம் கேட்டா, கிடைக்குமாப்பா? நம்மை மாதிரி நடுத்தர வர்க்கத்துக்கு இந்த ஆசைகளெல்லாம் வரலாமா?

    அம்மா!

    உன் படிப்பு என்னா?

    எம்.காம்!

    என்ன சம்பளம்?

    அஞ்சாயிரம் ரூபாய்!

    நீ ஆண் அழகனா!

    இல்லைதான்மா. நான் அசிங்கமா இல்லையே! கம்பீரமாய்த்தானே இருக்கேன்.

    நிஜம்தான். அதுக்குத் தக்க படிச்ச, உத்யோகம் பாக்கற் கம்பீரான பெண்ணைத் தேடுவோம். ருரளவு லட்சணமாகவும் இருந்தாப் போதாதா? அழகி ஒருத்தி மனைவியாகி, உன் சம்பளம் முழுக்க உதட்டுச் சாயத்துக்கு கரைஞ்சா, ஆண்டியாகத்தான் நிக்கணும் நீ சரிப்படுமா?

    குரு பேசவில்லை.

    யோசனை பண்ணு ராஜா!

    ஸாரிமா! இந்திய அழகிதான் என் மனைவியா வரணும்ங்கற முடிவுல மாற்றமில்லை. எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு. நான் வர்றேன்!

    அவன் ஸ்கூட்டர் உதைபட்டது.

    அம்மா பெருமூச்சு விட்டாள்.

    அப்பாவுக்கும் மகனுக்கும் இது காரணமா ஜென்மப் பகைல முடியாம இருக்கணும். யாரு அழகி? அவளைத் தேடி தெருத் தெருவா லோ லோனு அலைய முடியுமா?

    அம்மா இங்க பாரேன்!

    தங்கை கல்யாணி பத்திரிகையுடன் ஓடி வந்தாள்.

    என்னடீ

    இந்தப் பெண்தான் மிஸ் இந்தியா!

    அதுக்கு எனக்கு என்ன வேணும்?

    "இந்தியால

    Enjoying the preview?
    Page 1 of 1