Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panama... Pasama...
Panama... Pasama...
Panama... Pasama...
Ebook141 pages1 hour

Panama... Pasama...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603222
Panama... Pasama...

Read more from Devibala

Related to Panama... Pasama...

Related ebooks

Reviews for Panama... Pasama...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panama... Pasama... - Devibala

    http://www.pustaka.co.in

    பணமா... பாசமா...

    Panama… Pasama…

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முன்னுரை

    காலை எழுந்து குளிக்கும் போதே ஜெகனுக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்தது! வெயில்காலம் தொடங்கி விட்டதால், வெந்நீர் ஊற்றிக் குளிப்பது தான் காரணம் என்று தோன்ற, படக்கென அதை நிறுத்தி விட்டு பச்சைத் தண்ணீர் ஊற்றிக் கொண்டார்! அந்த மாற்றம் தாங்கவில்லை! ஒரு மாதித் திணறியது! மறுபடியும் வெந்நீர். வியர்வை கொட்டியது! ஒரு மாதிரி தலை சுற்றுவதைப் போல இருந்தது! பயம் வந்தது!

    -தேவிபாலா

    1

    பாத்ரூம் கதவின் தாழ்ப்பாளை அவசரமாக விலக்கினார்.

    ஏதாவது நேர்ந்து உள்ளே மாட்டிக் கொண்டால் ஆபத்து! அடுத்த குவளை தண்ணீரை ஊற்ற படபடப்பாக வந்தது!

    அப்படியே பாத்ரூம் சுவரில் சாய்ந்து விட்டார். பீதி அதிகமானது!

    கஸ்தூரி - கஸ்தூரி! குரல் கொடுத்தார்.

    அவள் சமையல் கட்டில் இருந்ததால், கேட்கவில்லை! மறுபடியும் உரக்கக் குரல் கொடுத்தார்.

    கூப்பிட்டீங்களா?

    ரொம்ப வேர்க்குது கஸ்தூரி! முடியலை!

    என்னங்க ஆச்சு? கதவைத் திறந்தாள்!

    குளிச்சது போதும்! வாங்க! இப்படி வந்து ஒக்காருங்க!

    இரு டவலை கட்டிக்கறேன்! மனைவியாக இருந்தாலும் அதிகமாக கூச்சப்படும் மனிதர் ஜெகன்!

    நான்தானே! வந்து இப்படி ஒக்காருங்க கட்டில்ல! உடம்பை துடைச்சு விடறேன்!

    மெதுவாக அவரைப் பிடித்துக் கொண்டு வந்து உட்கார வைத்து உடம்பை துடைத்து, டவலைக் கட்டி விட்டாள்.

    அப்படியும் வியர்ந்தது!

    என்னவோ பண்ணுது கஸ்தூரி! எனக்கு பயம்மா இருக்கு! டாக்டர்கிட்டப் போகலாம்!

    ரத்னாவுக்கு போன் பண்ணட்டுமா?

    அவ வரமாட்டா!

    அய்யோ! இப்பவுமா வீம்பு? அப்பாவுக்கு முடியலைன்னா வராம இருப்பாளா?

    அதுக்கெல்லாம் நேரமில்லை! தாமதிக்க வேண்டாம். நீ ஆட்டோ வைக் கூப்பிடு!

    உங்களை தனியா விட்டுட்டா?

    சீக்கிரம் போ கஸ்தூரி. என் நெஞ்சை உரிக்கிற மாதிரி இருக்கு!

    அய்யோ! என்னங்க!

    கஸ்தூரி ஓடிப் போய் பார்த்துவிட்டு வாசுவுக்கு குரல் தர, அவர் ஓடி வந்தார்.

    நான் காரை எடுக்கறேன்மா! உடனே ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்!

    துரிதமாக அவர் செயல்பட, ஜெகனால் நடக்கக்கூட முடியவில்லை! தாங்கிப் பிடித்து காருக்குள் அவரை நுழைத்து,

    சுபத்ரா! கதவை நீ பூட்டு! நான் இவங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போறேன்!

    கஸ்தூரி ஏற, காரை எடுத்தார் பக்கத்து வீட்டு வாசு!

    போறது, நல்ல ஆஸ்பத்திரிக்கே போயிடலாம்மா!

    அங்குள்ள ஒரு இதய நோய் தொடர்பான பெரிய மருத்துவமனை பதினைந்து நிமிட தொலைவில் இருந்தது!

    காரை வேகம் பிடித்து வந்து சேர்ந்து விட்டார்கள்.

    வாசு வேகமாக செயல்பட, ஸ்ட்ரெச்சர்வர, நர்ஸ்கள் ஓட, டாக்டர்கள் பதட்டமாக வர, உடனே அவரை பரிசோதித்து ஐ.சி.யு.வுக்குள் எடுத்துப் போனார்கள்!

    கஸ்தூரி குடும்பத் தலைவியாக இருந்தாலும் படித்தவள் தான். ஆஸ்பத்திரி தொடர்பான நடைமுறைகளை வேகமாக பின்பற்றத் தொடங்கினாள்!

    படிவம் நிரப்பி, தகவல்களை தந்து, ரிஜிஸ்ட்ரேடிக் பணம் கட்டி முடித்தாள்!

    அவசரமா வந்த காரணமா பணம் கொண்டு வரலை! கட்டிடறோம் உடனே!

    சரிம்மா!

    இருபது நிமிடங்களில் டாக்டர் வெளியே வந்தார்.

    மாஸிவ் ஹார்ட் அட்டாக் தான்மா!

    அய்யோ! அலறி விட்டாள் கஸ்தூரி.

    இதுக்கு முன்னால வந்திருக்கா!

    இல்லை டாக்டர். இதுதான் முதல் அட்டாக்!

    பீபி, ஷூகர் உண்டா?

    ரெண்டுமே உண்டு டாக்டர். ஒருவாரமா இடது தோள்பட்டை, கை வலிக்குதுன்னு சொன்னார். அவருக்கு எப்பவுமே வியர்வை உடம்பு தான்!

    இல்லைம்மா! இதெல்லாம் அறிகுறிகள். நீங்க உடனே கவனிச்சிருக்கணும்!

    இப்ப... எப்படி டாக்டர்!

    பெரிய டாக்டருக்கு தகவல் போயிருக்கு! வந்துடுவார் அரை மணி நேரத்துல! இப்ப நிலைமை சரியா இல்லை முதலுதவி செஞ்சுகிட்டிருக்கோம். அவர் பார்த்துட்டு பேசுவார்!

    கஸ்தூரி ஆடிப் போனாள்.

    அழுகை பீறிட்டது!

    உள்ளூர்ல உள்ள உங்க மகள் ரத்னாவுக்கு உடனே தகவலை குடுங்கம்மா!

    வாசு சொல்ல,

    அவளைப்பற்றி உங்களுக்குத் தெரியாதர அண்ணே?

    என்னம்மா பேசறீங்க! ஆயிரம் கோபதாபங்கள் இருக்கலாம்! அதுக்காக பெத்த அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னு தெரிஞ்சா, எந்த மகள் பேசாம இருப்பா? உடனே போன் பண்ணுங்க!

    சரிண்ணே!

    கஸ்தூரி தேடி எடுத்து டயல் செய்தாள்.

    ஸ்வீட்ச் ஆப் என வந்தது! திரும்பத்திரும்ப முயல, அதே நிலைதான்!

    கிடைக்கலை அண்ணே!

    உங்க மாப்பிள்ளைக்கு முயற்சி பண்ணுங்க!

    மாப்பிள்ளை பாஸ்கரின் ஆபீஸ் நம்பர், செல் நம்பர் இரண்டும் இருந்தது.

    கஸ்தூரி தயங்கினாள்!

    என்னம்மா?

    இல்லைண்ணே! அவருக்கும் பேசமுடியாத சூழ்நிலை! எப்படி நான் அவரைக் கூப்பிடுவேன்! உங்களுக்கு ஓரளவு தெரியுமே அண்ணே!

    சரிம்மா! பிரச்சனை நிறைய இருந்து, விவகாரம் வெடிச்சாலும், இது உயிர் பிரச்சனைம்மா! இவர் மூணாவது மனுஷன் இல்லை! சொந்த மாமனார். எப்படீம்மா பேசாம இருப்பாங்க! இப்ப நீங்க தயங்கறதுல நியாயமே இல்லைம்மா! உடனே கூப்பிடுங்க!

    கஸ்தூரி செல்போனுக்கு டயல் செய்ய, 2 டயல் விட்டு பாஸ்கர் எடுத்தான்!

    மாப்ளை! நான் ரத்னா அம்மா பேசறேன்!

    அவனிடம் பதில் இல்லை!

    மாப்ளை! எங்கிட்ட உங்களுக்கு பேசப் பிடிக்காம இருக்கலாம். ஆனா முக்கிய செய்தி மாப்ளை! கொஞ்சம் முன்னால உங்க மாமாவுக்கு அட்டாக் வந்து, இப்பத்தான் ஆஸ்பத்திரிக்கு வந்தோம். மாஸிவ் அட்டாக்னு டாக்டர் சொன்னார். பயம்மா இருக்கு மாப்ளை! ரத்னாவுக்கு போன் செஞ்சா, ஸ்வீட்ச் ஆப்னு வருது மாப்ளை! என்ன செய்யறதுன்னே தெரியலை!

    அழுகை பீறிட்டது.

    எந்த ஆஸ்பத்திரி?

    சொன்னாள்.

    சரி நான் ரத்னாகிட்ட சொல்லிட்டு வர்றேன்!

    ரொம்ப தேங்க்ஸ் மாப்ளை!

    அவன் வைத்து விட, கஸ்தூரி அழுதாள்.

    வர்றேன்னு சொன்னார்!

    சரி! வெளிநாட்ல உள்ள உங்க 2 வது மகள் ராணிக்கும், டெல்லியில் உள்ள ஜீவாவுக்கும் உடனே தகவல் குடுங்க!

    வெளிநாட்டு ராணி நம்பர் விட்ல இருக்கு! அவர்டைரியில் இருக்கு. ஜீவாவுக்கு போன் பண்றேன்!

    உடனே டயல் செய்தாள். ஜீவா எடுக்க, விவரம் சொல்ல;

    அய்யோ! என்னம்மா? டாக்டர் என்ன சொல்றார்!

    முதலுதவி நடக்குது! பெரிய டாக்டர் பார்த்து சொல்லுவார்!

    சரிம்மா? அவர் ஊர்ல இல்லை! மாமியார் கிட்ட குழந்தைகளை விட்டுட்டு, ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு நான் வர்றேன்.

    ரெயில்ல வந்தா நேரமாகும்டி!

    இல்லம்மா! பிளைட் புடிச்சு வர்றேன். ரத்னாகிட்ட சொல்லிட்டியா?

    மாப்ளைகிட்ட சொல்லிட்டேன்! வர்றேன்னார்!

    இந்த நேரம் வந்து தானே ஆகணும். சரி நான் வந்து பேசிக்கறேன்!

    பெரிய டாக்டர் வந்து விட்டார்.

    உடனே ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ள, டாக்டருடன் ஒரு குழு உள்ளே போனது!

    வெளியே வர தாமதமானது!

    கஸ்தூரி உயிரைக் கையில் பிடித்தபடி நின்றாள்.

    அரைமணி நேரம் கழித்து பெரிய டாக்டர் வந்தார்.

    நிலைமை ரொம்ப மோசமா இருக்கு! இப்ப வெறும் முதலுதவியும், உயிரைக் காப்பாத்த என்ன செய்யணுமோ, அதை செஞ்சுகிட்டிருக்கோம். எந்த உத்தரவாதமும் தர முடியாது!

    டாக்டர்...?

    8 மணி நேரம் தாண்டின பிறகு தான் எதையும் சொல்ல முடியும். யாருக்கு சொல்லணுமோ, சொல்லிருங்க!

    அய்யோ!

    அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1