Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaladiyil Poomalai
Kaaladiyil Poomalai
Kaaladiyil Poomalai
Ebook61 pages27 minutes

Kaaladiyil Poomalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழாமல் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறாள்.
அப்படிபட்டவளுக்கு அவள் கணவன் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியமே காலடியில் பூமாலை கதையாகும்.
அந்த வைத்தியத்தில் அவள் திருந்தினாளா? அவள் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அதன் பின் இருந்ததா என்பதே இந்த கதையின் அடிப்படைக் கருவாகும்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606548
Kaaladiyil Poomalai

Read more from Devibala

Related to Kaaladiyil Poomalai

Related ebooks

Reviews for Kaaladiyil Poomalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaladiyil Poomalai - Devibala

    https://www.pustaka.co.in

    காலடியில் பூமாலை

    Kaaladiyil Poomalai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    பத்மினிக்கு என்னைப் பிடிக்கவே இல்லை!

    ஏன் என்று எனக்குத் தெரியவில்லை! நான் தாலி கட்டிய நாள் முதல் அவள் முகத்தில் சிரிப்பே இல்லை!

    ஆரம்பத்தில் - இதை நான் பொருட்படுத்தவில்லை!

    நானும் கல்யாணமே வேண்டாமென்று இருந்தவன்தான்.

    இருபத்தெட்டு வயதாகியும் கல்யாண விருப்பத்தை விலக்கி வைத்தவன் நான்!

    காரணம் உண்டு!

    எனக்குச் சம்பளம் ஆரம்ப நாட்களில் குறைவுதான். ஒரு நட்டாமுட்டிக் கம்பெனியில் விற்பனை பிரதிநிதி நான். சம்பளம் + கமிஷன் எல்லாமாக கையில் ஆயிரம் ரூபாய் கூட வராது.

    எனக்குப் படிப்பு வெறும் எஸ்.எஸ்.எல்.சி தான். அதனால் இதைவிட நல்ல வேலை கிடைக்கவில்லை!

    பார்க்கவும் நான் ஒன்றும் ஆணழகன் அல்ல.

    சுமார் உயரத்தில், சற்றே குண்டாக சன்னமான தொப்பையுடன் இருப்பேன்!

    எனக்கு வயதான அம்மா உண்டு. அவளும் வியாதிக்காரி. அண்ணன் குடும்பத்தோடு இருந்தான். கிடைக்கும் சம்பளத்தில் அவர்களுக்குக் கொஞ்சம் கொடுத்துவிட்டு, நான் மீதியை வைத்துக் கொள்வேன். மாதத்தில் 25 நாட்களும் டூர்தான்.

    எனக்குக் கல்யாணம் செய்து வைக்கும் அளவு யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

    இந்த நிலையில் ரவி என் வாழ்க்கையில் எமனாக வந்து சேர்ந்தான். ஆம் எமன்தான்!

    என் அத்தை பிள்ளை ரவிதான்!

    நீ ஏண்டா கோபி கல்யாணம் செஞ்சுக்கலை?

    கிடைக்கிற வருமானத்தை வச்சுகிட்டு, நான் வாழவே வழியில்லை. இதுல குடும்பம் வேற அமைஞ்சிட்டா எங்கே போவேன்?

    சமாளிக்க வேண்டியதுதான்! உன்னைவிடக் குறைஞ்ச வரும்படி உள்ளவன்கூட குடித்தனம் பண்றான். நீ அலுத்துக்கறியே! வாழ்க்கைல ஒரு பிடிப்பு வேண்டாமா?

    என்ன பிடிப்பு?

    த பாரு! எனக்குத் தெரிஞ்சி ஒரு குடும்பம் இருக்கு. சமீபத்துல தலைவனை இழந்த குடும்பம். மூத்த பொண்ணு பத்மினி! அவளை நீ கல்யாணம் செஞ்சுக்கோ! ஒரு ஏழைக் குடும்பத்துப் பொண்ணுக்கு வாழ்வு கொடுத்த மாதிரியும் இருக்கும் உனக்கும் குடும்பம் அமையும். யாரு கண்டா? அவ வந்த ராசி, நீ உசந்துட்டா?

    முதலில் நான் இஷ்டப்படவில்லை!

    ஆனால் பாழாய்ப் போன விதி என்னை விடவில்லை!

    பத்மினியைப் பெண் பார்க்கப் போனேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1