Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Eppa Varuvey?
Nee Eppa Varuvey?
Nee Eppa Varuvey?
Ebook92 pages44 minutes

Nee Eppa Varuvey?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுதாகர்-விஜி இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு "அனிருத்" என்ற பையனும் உண்டும் சுதாகருக்கு இரண்டு தங்கைகள் நளினி மற்றும் பூஜா. நளினிக்கு திருமணமாகி அம்மா வீட்டிலேயே இருக்கிறாள். நளினியும் சுதாகரின் அம்மாவும் சேர்ந்து கொண்டு விஜியை தொந்தரவு செய்கிறார்கள். பெற்ற பெண்களை அளவுக்கு மீறி தாங்கி, பிள்ளைகளின் கசப்புக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் சுதாகரின் அம்மா - மனம் திருந்துவாளா?

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580100610537
Nee Eppa Varuvey?

Read more from Devibala

Related to Nee Eppa Varuvey?

Related ebooks

Reviews for Nee Eppa Varuvey?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Eppa Varuvey? - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ எப்ப வருவே?

    Nee Eppa Varuvey?

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம்: 01.

    அத்தியாயம்: 02.

    அத்தியாயம்: 03.

    அத்தியாயம்: 04.

    அத்தியாயம்: 05.

    அத்தியாயம்: 06.

    அத்தியாயம்: 07.

    அத்தியாயம்: 08.

    அத்தியாயம்: 09.

    அத்தியாயம்: 10.

    அத்தியாயம்: 11.

    அத்தியாயம்: 12.

    அத்தியாயம்: 13.

    அத்தியாயம்: 14.

    அத்தியாயம்: 01.

    காலை முதலே மகா கடுப்பாக இருந்தாள் விஜி. அவளது ஒண்ணரை வயசு குழந்தை அனிருத் நள்ளிரவு வரை உறங்காமல் படுத்தி எடுத்தது! காலை ஐந்து மணிக்குத்தான் அது உறங்க தொடங்கியது! விஜிக்கு தூக்கம் போய் விட்டது! அவள் கணவன் சுதாகருக்கு இரவு ட்யூட்டி! மாதத்தில் இரண்டு வாரங்கள் நைட் ட்யூட்டி! சுதாகர் இருந்தால் குழந்தையை நன்றாக பார்த்து கொள்வான்! விஜிக்கு ரெஸ்ட் கிடைக்கும்! பெரிய ரசாயன தொழிற்சாலையில் பொறுப்பான பதவி! போய்த்தான் ஆக வேண்டும்! விஜியும் தனியாரில் வேலை பார்க்கும் பெண்! கல்யாணமாகி மூன்று வருஷங்கள் கழித்துத்தான் அனிருத் பிறந்தான்! கூடவே மாமனார், மாமியார், அடுத்த தெருவில் வாழும் சுதாகரின் அக்கா நளினி, கல்யாணம் ஆகாத ஒரு தங்கை பூஜா! அந்த அக்கா நளினி எந்த நேரமும் இங்கு தான் இருப்பாள்! அவள் கணவன் செலவை மிச்சப்படுத்த மனைவியை இங்கே தள்ளி விட்டு ஓசியில் குளிர் காயும் ஆசாமி! தங்கை பூஜா ஓரளவு நல்ல பெண் தான்!

    விஜிக்கு அம்மா இல்லை! அப்பா மட்டும் தான்! அதனால் பண ரீதியாக அப்பா ஓரளவு செய்வார்! மற்ற படி தேக ரீதியாக செய்ய யாருமில்லை! அண்ணன், அண்ணிக்கு அவர்கள் குடும்ப பிரச்னையே தலைக்கு மேல் இருப்பதால் விஜிக்கு பிறந்த வீட்டு ஆதரவு அறவேயில்லை! அதை இங்கே மாமியார் பிரபா அடிக்கடி நாசூக்காக குத்தி காட்டுவாள்! மூத்த நாத்தனார் நளினி அம்மாவை ஏற்றிக்கொடுத்து குளிர் காய்வாள்! மாமனார் சேஷா டம்மி பீஸ்! கல்யாணம் ஆனது முதலே சமையல் உட்பட அத்தனை பொறுப்பும் விஜி தலையில் சுமத்தப்பட்டது! அம்மா இல்லாமல் பிறந்த வீட்டில் இருந்ததால் அண்ணியின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு அத்தனை வேலைகளையும் விஜி தான் செய்வாள்! இவள் சம்பளம், உடல் உழைப்பு என சகலத்தையும் அண்ணி உறிஞ்சி கொண்டாள்! இவளுக்கு கல்யாணம் நடந்தால் சம்பளம் கை விட்டு போய் விடுமே என கல்யாண முயற்சியே செய்யாமல் தட்டி கழித்தார்கள்! அப்பா பொறுக்க முடியாமல் வரன் பார்க்க தொடங்க,

    ஏன் அதை நாங்க பார்க்க மாட்டோமா? அண்ணி கேட்க,

    எப்ப? அவ கல்யாண வயசை கடந்த பிறகா? அவ அம்மா உயிரோட இருந்தா இந்த நிலைமைக்கு விடுவாளா? அவ சம்பளம், உழைப்பு இதெல்லாம் கை விட்டு போகக்கூடாதுங்கற சுய நலம் உங்களுக்கு! அவளுக்கு உடனே கல்யாணம் நடந்தாகணும்!

    அதை நடத்த எங்க கிட்ட பணம் இல்லை!

    ஏண்டா? இவ மட்டும் தான் பேசுவாளா? நீ ஊமை ஆயிட்டியா?

    ஏன் இந்த மாதிரி பேசறீங்க? வளர்ந்த, கல்யாணமான ஒரு மகனுக்கு அப்பா காட்டற மரியாதை இது தானா?

    அப்பா! விட்ருங்க!

    இல்லை விஜி! நான் கடனை வாங்கியாவது உனக்கு கல்யாணம் பண்றேன்!

    நானும் போயிட்டா நீங்க எப்படீப்பா?

    எனக்கு பென்ஷன் இருக்கேம்மா! இப்ப மட்டுமென்ன? உன் சம்பளம், என் பென்ஷன்ல தானே இந்த வீடே ஓடுது! உன் அண்ணன் சம்பளத்தை அவ சேமிக்கறது நமக்கு தெரியாதா? உன் கல்யாணம் முடிஞ்சா, நான் ஹோம்ல போய் சேர்ந்துடுவேன்!

    அப்பா தீவிரமாக தேடி சுதாகரை பிடித்து விட்டார்! சுதாகருக்கு படிப்பு, நல்ல உத்யோகம் எல்லாமே இருந்தது! ஜாதகமும் பொருந்தியிருந்தது! நண்பர் ஒருவர் மூலம் வந்த வரன்!

    பையன் நல்ல தகுதியுள்ள பையன் தான்! அதுல சந்தேகமில்லை! அவங்க தாத்தா காலத்து வீடு! அம்மாவோட அப்பா! மூணு பசங்க! சேஷா ரிடையர் ஆன ஆள்! மூத்தவ நளினியை கட்டிக்குடுத்தாச்சு! அது எப்பவும் இங்கே தான் இருக்கும்! சின்னவ பூஜா படிக்கறா! சேஷா சம்சாரம்... அதான் சுதாகர் அம்மா ராட்சசி! அந்த மூத்த பொண்ணு குடி கெடுக்கறவ! சேஷா ரிடையர் ஆனதால சுதாகர் தான் குடும்ப பொறுப்பு! பூஜாவை கட்டிக்குடுக்கற பொறுப்பு! உன் பொண்ணு விஜிக்கு அந்த குடும்பம் பட்டு மெத்தை இல்லை! நீ பேசிக்கோ!

    அப்பா வந்து விஜியிடம் சொல்ல,

    இங்கே மட்டும் என்னப்பா வாழுது? சுதந்திரமா இருக்கோமா என்ன?

    இதைத்தான் நானும் நினைச்சேன்மா! கழுத்துல ஒரு தாலியும் ஏறாம, வயசும் கடந்து, இங்கே குப்பை கொட்டறதை விட, ஒரு வீட்டுக்கு வாழப்போனா உன் கணவன், உன் குழந்தைனு வாழற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்குமில்லையா?

    ஆனா என்ன? தனிக்குடும்பமா அமைஞ்சிருந்தா, உங்களை என்னோட கூட்டிட்டு போயிருப்பேன்பா! அதுக்கு இங்கே வழியில்லை!

    இல்லைம்மா! அது முறையில்லை!

    அப்பா! நானும் கை நிறைய சம்பாதிக்கறேன்! நீங்களும் அடுத்தவங்களை எதிர்பார்த்து நிக்கற ஆள் இல்லை! உங்க பென்ஷன்ல ஒரு குடும்பம் வாழலாம்! ஆம்பளையோட அப்பா, அம்மாவுக்கு மட்டும் தான் உரிமையா? பெண்களுக்கு அது இல்லையா?

    விவாதம் வேண்டாம்மா! அது நல்ல வாழ்க்கையை கெடுத்துடும்!

    அண்ணி ஆயிரம் குறை கண்டு இதை தடுக்கப்பார்த்தாள்! முடியவில்லை! வரன் நெருங்கி விட்டது!

    மாமியார் பிரபாவதி தொடக்கத்தில் தன்

    Enjoying the preview?
    Page 1 of 1