Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கோடைத் தள்ளுபடி
கோடைத் தள்ளுபடி
கோடைத் தள்ளுபடி
Ebook101 pages37 minutes

கோடைத் தள்ளுபடி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பதட்டமாக நரேன் எதிரே வந்து நின்றாள் தீபா! மூச்சு வாங்கியது!
 "என்னாச்சு ஒனக்கு? எதுக்கு இப்படி ஓடி வர்ற? நீ வர்றதுக்குள்ள நான் போயிடுவேன்னு பயந்துட்டியா?"
 தீபா மெதுவாக அழத் தொடங்கினாள்.
 "என்ன தீபா? எதுக்கு அழுகை?"
 "எங்கம்மா எனக்கு வரன் பாக்கத் தொடங்கிட்டாங்க! தீவிரமா இருக்காங்க! இனிமேலும் நாம பேசாம இருந்தா, நல்லதில்லை!"
 நரேன் பேசாமல் நின்றான்.
 "இன்னிக்கு நம்ம காதலை நான் வீட்ல சொல்லத்தான் போறேன்!"
 அதற்கும் பதில் இல்லை!
 "என்ன நரேன்? எதுவும் பேசாம இருந்தா எப்படி?"
 "எங்கக்கா கல்யாணம் முடியாம, நான் எப்படி இந்தப் பேச்சை வீட்ல எடுக்க முடியும்?"
 "அதுக்காகக் காத்திருந்தா, என்னை நீங்க இழக்க வேண்டியதுதான். புரியுதா?"
 "சரி! நான் இந்த வாரக் கடைசில ஊருக்குப் போறேன். பேசறேன்!"
 "பேசி மட்டும் லாபமில்லை. கல்யாணம் நடக்கணும். நம்ம கல்யாணம் நடக்கணும்!"
 "இதப்பார்! அது வரைக்கும் உங்க வீட்ல என்ன நடந்தாலும் உணர்ச்சி வசப்படாதே! எதையும் இப்ப உளறாதே! உனக்கு நான்தான்! பொறுமையா இரு!"
 தீபா எதுவும் பேசவில்லை

இதப்பாருடா! நாமும் சேரணும். அதே சமயம் பெரியவங்களையும் இழக்கக் கூடாதில்லையா?"
 "சரி நரேன்! நாம பிரிஞ்சிடக் கூடாது! ஜாக்கிரதை!"
 தீபா புறப்பட்டுவிட்டாள். அவளை அனுப்பிவிட்டு நரேன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்க - தோளில் ஒரு கை விழுந்தது!
 திரும்பினான், அசார் சிரித்தபடி நின்றான்.
 "என்னப்பா? இன்னிக்கு பச்சைக்கிளி பதட்டமாக வந்து நிற்கறா!"
 "அவ வீட்ல கல்யாண ஏற்பாடு நடக்குதாம். வந்து சொல்றா!"
 "விட்ரேன். எப்படியும் அவளை நீ கட்டிக்கப் போறதில்லை! பின்ன எதுக்கு?"
 "கட்டிக்கலைனா ஆச்சா? தொடவே இல்லையே? தொட்டுட்டா, விட்ரலாம்!"
 "அடப்பாவி! நீ இப்பேர்ப்பட்ட அயோக்யன்னு அவளுக்குத் தெரிஞ்சா, தாங்குவாளா?"
 "அவ தாங்கறா... தாங்காம போறா! எனக்கென்ன?"
 "இவளைத் தொட்டு உனக்கென்னடா ஆதாயம்?"
 "ஆதாயமா? இவளைப் பார்த்ததும் சரக்கென ஒரு கரண்ட் ஒடம்புல ஏறுதே! அதை நான் எப்படி இழக்க முடியும்? தொட்டவளையெல்லாம் கட்டிக்கணும்னா, நான் தசரதனுக்கு அண்ணனாயிடுவேன்!"
 "உன் மன்மத லீலைகள் ரொம்ப நாளைக்குத் தொடராதுடா நரேன். ஒரு நாள் மாட்டுவே!"
 "நான் மடையன் இல்லைடா! மாட்டற சூழ்நிலை வந்தா, அழகா கழண்டுபேன்! அது மட்டுமில்லை. இந்த தீபாவை வச்சு ஒரு பிஸினஸ் டீல் வச்சிருக்கேன். நெனச்சபடி படிஞ்சா, பெரிய ரேட் வரும்!"
 "அடப்பாவி!"
 நரேன் சிரித்தபடி பைக்கை உதைத்தான்.
 அதே நேரம் தீபா வீட்டுக்குள் நுழைந்தாள். தரகர் அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்."தீபா வந்துட்டாளே!"
 "அப்ப, நான் உத்தரவு வாங்கிக்கறேன்மா!"
 "வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரச் சொல்லிடுங்க! நாங்க தயாரா இருக்கோம்!"
 அவர் தீபாவை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய் விட்டார்.
 "தீபா! இந்த போட்டோ பாரு!"
 அம்மா ஒரு இளைஞனின் புகைப்படம் தந்தாள்.
 "விப்ரோல நல்ல வேலை. மாசச் சம்பளம் நாப்பதாயிரம் ரூபாய். வெளிநாட்டுக்கு ரெண்டு தடவை போயிட்டு வந்தாச்சு! பாக்க லட்சணமா இருக்கான் பையன்! ஒரு தங்கச்சி. கல்யாணம் ஆயாச்சு! அம்மா உயிரோட இல்லை! அப்பா மட்டும் இருக்கார். போனதும் குடும்பப் பொறுப்பு உன் கைக்கு வந்துடும். எந்த பிரச்னையும் இல்லாத குடும்பம். எல்லாத்துக்கும் மேலா ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கு! அதான் வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரச் சொல்லிட்டேன்!"
 தீபா பேசவில்லை.
 "உள்ளே போய் ட்ரஸ் மாத்திட்டு வா!"
 "அம்மா! நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் போறேனே!"
 "அதை நீ தொடர யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க! பேசிக்கலாம்.!"
 தீபா உள்ளே வந்து விட்டாள்
 'அம்மா தீவிரமாகி விட்டாள். நரேன் சொல்ற மாதிரி இப்ப எதிர்த்தா பிரச்னை ஆகும். விட்டுப் பிடிக்கணும்!'
 தீபா எதுவுமே பேசவில்லை.
 தீபாவுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது அப்பா ஒரு விபத்தில் இறந்தார். அவள் தம்பிக்கு 3 வயது!
 அப்பாவின் வேலை அம்மாவுக்குக் கிடைத்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 14, 2023
ISBN9798215138229
கோடைத் தள்ளுபடி

Read more from Geeye Publications

Related to கோடைத் தள்ளுபடி

Related ebooks

Related categories

Reviews for கோடைத் தள்ளுபடி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கோடைத் தள்ளுபடி - Geeye Publications

    1

    பதட்டமாக நரேன் எதிரே வந்து நின்றாள் தீபா! மூச்சு வாங்கியது!

    என்னாச்சு ஒனக்கு? எதுக்கு இப்படி ஓடி வர்ற? நீ வர்றதுக்குள்ள நான் போயிடுவேன்னு பயந்துட்டியா?

    தீபா மெதுவாக அழத் தொடங்கினாள்.

    என்ன தீபா? எதுக்கு அழுகை?

    எங்கம்மா எனக்கு வரன் பாக்கத் தொடங்கிட்டாங்க! தீவிரமா இருக்காங்க! இனிமேலும் நாம பேசாம இருந்தா, நல்லதில்லை!

    நரேன் பேசாமல் நின்றான்.

    இன்னிக்கு நம்ம காதலை நான் வீட்ல சொல்லத்தான் போறேன்!

    அதற்கும் பதில் இல்லை!

    என்ன நரேன்? எதுவும் பேசாம இருந்தா எப்படி?

    எங்கக்கா கல்யாணம் முடியாம, நான் எப்படி இந்தப் பேச்சை வீட்ல எடுக்க முடியும்?

    அதுக்காகக் காத்திருந்தா, என்னை நீங்க இழக்க வேண்டியதுதான். புரியுதா?

    சரி! நான் இந்த வாரக் கடைசில ஊருக்குப் போறேன். பேசறேன்!

    பேசி மட்டும் லாபமில்லை. கல்யாணம் நடக்கணும். நம்ம கல்யாணம் நடக்கணும்!

    இதப்பார்! அது வரைக்கும் உங்க வீட்ல என்ன நடந்தாலும் உணர்ச்சி வசப்படாதே! எதையும் இப்ப உளறாதே! உனக்கு நான்தான்! பொறுமையா இரு!

    தீபா எதுவும் பேசவில்லை!

    இதப்பாருடா! நாமும் சேரணும். அதே சமயம் பெரியவங்களையும் இழக்கக் கூடாதில்லையா?

    சரி நரேன்! நாம பிரிஞ்சிடக் கூடாது! ஜாக்கிரதை!

    தீபா புறப்பட்டுவிட்டாள். அவளை அனுப்பிவிட்டு நரேன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்க - தோளில் ஒரு கை விழுந்தது!

    திரும்பினான், அசார் சிரித்தபடி நின்றான்.

    என்னப்பா? இன்னிக்கு பச்சைக்கிளி பதட்டமாக வந்து நிற்கறா!

    அவ வீட்ல கல்யாண ஏற்பாடு நடக்குதாம். வந்து சொல்றா!

    விட்ரேன். எப்படியும் அவளை நீ கட்டிக்கப் போறதில்லை! பின்ன எதுக்கு?

    கட்டிக்கலைனா ஆச்சா? தொடவே இல்லையே? தொட்டுட்டா, விட்ரலாம்!

    அடப்பாவி! நீ இப்பேர்ப்பட்ட அயோக்யன்னு அவளுக்குத் தெரிஞ்சா, தாங்குவாளா?

    அவ தாங்கறா... தாங்காம போறா! எனக்கென்ன?

    இவளைத் தொட்டு உனக்கென்னடா ஆதாயம்?

    ஆதாயமா? இவளைப் பார்த்ததும் சரக்கென ஒரு கரண்ட் ஒடம்புல ஏறுதே! அதை நான் எப்படி இழக்க முடியும்? தொட்டவளையெல்லாம் கட்டிக்கணும்னா, நான் தசரதனுக்கு அண்ணனாயிடுவேன்!

    உன் மன்மத லீலைகள் ரொம்ப நாளைக்குத் தொடராதுடா நரேன். ஒரு நாள் மாட்டுவே!

    நான் மடையன் இல்லைடா! மாட்டற சூழ்நிலை வந்தா, அழகா கழண்டுபேன்! அது மட்டுமில்லை. இந்த தீபாவை வச்சு ஒரு பிஸினஸ் டீல் வச்சிருக்கேன். நெனச்சபடி படிஞ்சா, பெரிய ரேட் வரும்!

    அடப்பாவி!

    நரேன் சிரித்தபடி பைக்கை உதைத்தான்.

    அதே நேரம் தீபா வீட்டுக்குள் நுழைந்தாள். தரகர் அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

    தீபா வந்துட்டாளே!

    அப்ப, நான் உத்தரவு வாங்கிக்கறேன்மா!

    வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரச் சொல்லிடுங்க! நாங்க தயாரா இருக்கோம்!

    அவர் தீபாவை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய் விட்டார்.

    தீபா! இந்த போட்டோ பாரு!

    அம்மா ஒரு இளைஞனின் புகைப்படம் தந்தாள்.

    விப்ரோல நல்ல வேலை. மாசச் சம்பளம் நாப்பதாயிரம் ரூபாய். வெளிநாட்டுக்கு ரெண்டு தடவை போயிட்டு வந்தாச்சு! பாக்க லட்சணமா இருக்கான் பையன்! ஒரு தங்கச்சி. கல்யாணம் ஆயாச்சு! அம்மா உயிரோட இல்லை! அப்பா மட்டும் இருக்கார். போனதும் குடும்பப் பொறுப்பு உன் கைக்கு வந்துடும். எந்த பிரச்னையும் இல்லாத குடும்பம். எல்லாத்துக்கும் மேலா ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கு! அதான் வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரச் சொல்லிட்டேன்!

    தீபா பேசவில்லை.

    உள்ளே போய் ட்ரஸ் மாத்திட்டு வா!

    அம்மா! நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் போறேனே!

    அதை நீ தொடர யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க! பேசிக்கலாம்.!

    தீபா உள்ளே வந்து விட்டாள்

    ‘அம்மா தீவிரமாகி விட்டாள். நரேன் சொல்ற மாதிரி இப்ப எதிர்த்தா பிரச்னை ஆகும். விட்டுப் பிடிக்கணும்!’

    தீபா எதுவுமே பேசவில்லை.

    தீபாவுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது அப்பா ஒரு விபத்தில் இறந்தார். அவள் தம்பிக்கு 3 வயது!

    அப்பாவின் வேலை அம்மாவுக்குக் கிடைத்தது!

    அது முதல் கடுமையாக உழைத்து அம்மாதான் குடும்பத்தை நிலை நிறுத்தினாள்.

    தீபா பட்டதாரியாகி விட்டாள்!

    தம்பி பள்ளிக் கூடத்தில் படிக்கிறான். அம்மா ஒரு கடன் உடன் என இல்லாமல் கௌரவமாக குடும்பம் நடத்துகிறாள்.

    அம்மா பிடிவாதக்காரி- தைரியசாலி! அப்பா இறந்ததும் சோர்ந்துவிடாமல் நிமிர்ந்து நற்கிறாள்.

    இளம் விதவை என்று பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தும், சோர்ந்து விடாமல் அம்மா தாண்டியிருக்கிறாள்! தீபாவுக்கு காதலில் பிடிப்பு இருந்தாலும் அம்மா மேல் பாசமுண்டு!

    அம்மாவை எதிர்க்க வேண்டிய சூழ்நலை உருவாகிறதே என தீபாவின் அடிமனதில் ஒரு கலக்கம் உருவாகிவிட்டது!

    ‘நரேன் ஏஜென்சிகளை எடுத்து நன்றாக சம்பாதிப்பவன்தான்! அக்கா கல்யாணம் ஒரு பெரிய தடை!’

    மறுநாள் நரேனிடம் டெலிபோனில் தீபா விவரத்தைச் சொன்னாள்.

    கவலைப்படாதே! பெண் பார்க்க வரட்டும். அதனால கல்யாணம் நடக்கணும்னு அவசியமில்லை! எதிர்க்காதே! நான் பாத்துக்கறேன்!

    தீபா தலையாட்டினாள்.

    உள்ளுக்குள்ளே ஒரு கலவரம் இருந்தது! வெள்ளிக்கிழமை

    Enjoying the preview?
    Page 1 of 1