Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வாலைக் குமரியடி!
வாலைக் குமரியடி!
வாலைக் குமரியடி!
Ebook144 pages50 minutes

வாலைக் குமரியடி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"எந்த நேரத்தில் பிறந்தேனோ தெரியலை இந்தத் துன்பப்படறேன். நீங்க மட்டும் அப்பப்ப உதவி செய்யலேன்னா நாங்க போன இடத்தில் புல்லு முளைச்சிருக்கும். நம்ம நிலைமையே சட்டி ஏந்தாத தங்க நிலை. இதில் இந்த துப்புகெட்ட மனுஷன் அக்காகாரி சாவுக்கு போனவர் சும்மா வரவேண்டியதுதானே. அவள் பெத்த மூணையும் இழுத்துக்கிட்டு வந்திட்டார். பெத்த மூணு. வந்த மூணுன்னு ஆறுக்கும் முழுவயிறு இல்லேன்னாலும் கால் வயிறாவது கஞ்சி ஊத்தணும். துணிமணி வாங்கித் தரணும். திருமணம் கருமாதின்னு செய்துத் தொலையணும்... கொடுத்தா வைச்சிருக்கோம்? உங்களை அடிக்கடி தொந்தரவு செய்ய?"
 குட்டை மேசை மீது காபி ஏடுகட்டி ஆறிக்கொண்டிருந்தது. வடிவாம்பாளின் பிலாக்கணம் முடியாமல் நீண்டது.
 "சிங்கப்பூர் போயிட்டு ஆறு மாதம் கழிச்சு இப்பதான் வந்திருக்கார். அதுக்குள்ளே நம்ம துன்பத்தைச் சொல்லணுமா? அவரை காபி குடிக்கறதுக்கு விடு வடிவு..." சன்னாசி பயந்துகொண்டே முணுமுணுத்தார். குரல் நடுங்கியது.
 "நீங்க வாயை மூடுங்க... ஏதாவது சொல்லிடப் போறேன். எல்லாம் உங்களால் வந்தது. சித்தப்பா... காபி ஆறிப்போகுது. நீங்க குடிங்க..."
 தேவநாதன் ஒரே ஒரு மிடறு குடித்துவிட்டு கோப்பையை கீழே வைத்தார். வடிவு ஏதோ தூரத்து சொந்தம். வறுமையிலும், பேராசையிலும் சிக்கித் தவிக்கும் ஒரு சராசரி பெண் அவள். மனைவி இறந்த பிறகு தனியாளாய் இருக்கும் தேவநாதனைத் தேடி வருவாள். தன் குறையை சொல்லி அழுது புலம்பி நூறோ. இருநூறோ வாங்கிக்கொண்டு போவாள். பத்து நாளைக்கொருதரம் இப்படித்தான் இடையில் வியாபார சம்மந்தமாக தேவநாதன் சிங்கப்பூர் சென்றுவிட்டால் வடிவுவின் பாடு துன்பம் தான். அவர் ஊர் திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பாள். வந்துவிட்டால் புலம்பித் தள்ளி ஆயிரம் ரூபாய் வரையில் கறந்துவிடுவாள்இந்த முறை புலம்பல் புதுமாதிரி இருக்கிறது. தேவநாதன் அமைதியாக இருப்பதைப் பார்த்த வடிவு மீண்டும் ஆரம்பித்தாள்.
 "வந்திருக்கறதுங்க லேசுபட்டதுங்க இல்லை சித்தப்பா. எடுக்கறது பிச்சைன்னாலும் கவுரவம் பார்க்குது பாருங்க... உங்களால் நம்பமுடியாது. பெரியவள் செல்லக்கிளி கடையில் வேலை பார்க்க ஏற்பாடு செய்துக்கிட்டாச்சு. நடுபையன் பிரபு படிக்கிறான். ஆனால் காலையில் தினசரி பத்திரிகை வினியோகம் பண்றான். சின்னபெண் சாயங்காலத்தில் நூலகத்தில் புத்தகம் ஒழுங்கு பண்ணி வைக்கிற வேலை செய்கிறாள்."
 தேவநாதன் வியப்பில் விழி உயர்த்தினார். 'சன்னாசி குடும்பத்தில் இப்படி சுயகவுரவம் பார்க்கக்கூட ஆள் இருக்கிறதா? தங்களால் பிறருக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்கிற எண்ணம் கொண்ட பிள்ளைகளா? அவசியம் பார்க்க வேண்டுமே.'
 "அவங்களை கூப்பிடேன் வடிவு நானும் பார்க்கிறேன்..."
 "எல்லாம் எட்டு மணிக்குத்தான் வரும்... அதுகளுக்கு ஆக்கிக் கொட்டத்தான் நான் இருக்கேனே..." வடிவு அலுத்துக் கொண்டாள்.
 தேவநாதன் சற்று ஏமாற்றமானார். அதைக் காட்டிக்கொள்ளாமல், "சரி வடிவு நான் கிளம்பறேன்..." என்றபடி எழுந்தார். வடிவு வளைந்து குழைந்தாள். தேவநாதன் கண்டு கொள்ளாமல் காருக்கு விரைந்தார்.
 கார்க் கதவை திறக்கும் போது வடிவின் குரல் கேட்டது "அதோ வராளே... செல்லக்கிளி... என்னடி இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா வந்திட்டே..."
 அலட்சியமாக திரும்பிய தேவநாதன் ஒரு கணம் வியந்தார். இத்தனை அழகான பெண்ணா கை தன்னையுமறியாமல் பைக்குள் நுழைந்தது

Languageதமிழ்
Release dateDec 29, 2023
ISBN9798223908739
வாலைக் குமரியடி!

Read more from Geeye Publications

Related to வாலைக் குமரியடி!

Related ebooks

Reviews for வாலைக் குமரியடி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வாலைக் குமரியடி! - Geeye Publications

    1

    மேக வீதியில் விளையாடிக் கொண்டிருந்த நட்சத்திர சிறுவர்கள் நிலவு விளக்கு ஏற்றியதும் வான வீட்டிற்குள் ஓடிவரும் முன்மாலைப் பொழுது.

    பகல்பொழுதின் வேகத்தையெல்லாம் வியர்வையாக வடித்து சோர்ந்துபோன மனிதர்கள் குளிர்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

    பனிமலர் பனிக்குழைவு விற்பனை நிலையத்தில் கூட்டம் தெரிந்தது. பணியாளர்கள் பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்த பரபரப்பான வியாபார நேரம்.

    குனிந்து கவனமாக கணக்கெழுதிக் கொண்டிருந்த செல்லக் கிளியை விலாவில் இடித்தாள் லதா. அதோ பார்த்தியா... பஞ்சபாண்டவர் வந்தாச்சு... ரெண்டு மாசமா அவங்க தொடர்ந்து தினமும் வர்றதுக்கு ஏதோ காரணம் நிச்சயம் இருக்கு. நான் நினைக்கிறது மட்டும் சரியா இருந்தா நீ ரொம்ப கொடுத்து வைத்தவள்தான்.

    செல்லக்கிளி தலையில் அடித்துக் கொண்டாள். உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன். இப்படி உளறாதேன்னு நாம் இங்கே வேலை செய்யத்தான் வந்திருக்கோம். இப்படியெல்லாம் புலம்பிக்கிட்டிருக்க இல்லை. நினைவு வைச்சுக்க. கையிருப்பு கணக்கு எழுதிட்டியா? மாட்டியே... கொஞ்ச நாளாவே உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு. வேலையை ஒழுங்கா பாரு இல்லை... சீட்டு கிழிஞ்சிடும்... சொல்லிட்டேன்...

    உன்கிட்டே சொன்னேன் பாரு... என் புத்தியை எதால் அடிச்சுக்கறது?

    அதை அப்புறமா முடிவு பண்ணிக்கலாம். முதலில் வேலையைப் பாரு... அங்கே பாரு மேலாளர் சந்தேகமா பார்க்கிறார்... செல்லக்கிளி எச்சரித்தாள்.

    சரிடி... கிழவி... அவர் முறைக்கிறாரோ இல்லையோ உன் தொணதொணப்பு தாங்க முடியலை. கையிருப்பு கணக்கு பட்டியலை எடு. சரிபார்த்திட்டு வரேன். பஞ்சபாண்டவர் என்ன பேசிக்கறாங்கன்னு வேவு பார்த்த மாதிரியும் இருக்கும்.

    நண்பர்கள் குழு தன்னைப் பார்த்துவிடாமல் சுற்றிக்கொண்டு சென்றாலும் காது மட்டும் அவர்களிடம் சென்றது. அங்கே காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

    இதோ பாரு தமிழரசு உன் எண்ணம் நிறைவேறப் போவதில்லை பொண்ணு ஒண்ணும் அசைஞ்சு கொடுக்கற மாதிரி தெரியலியே...

    நானும் அதையேத்தான் நினைக்கிறேன். அதனால் நாளையிலிருந்து நான் உன்கூட வரமாட்டேன். இந்த ரெண்டு மாசமா தொடர்ந்து பனிக்குழைவு சாப்பிட்டு பல்லு எல்லாம் ஆட்டம் கண்டுபோச்சு...

    நீங்க வேறண்ணே... இந்த மன்மதனைப் பார்த்து மயங்கி பின்னால் வர அவள் ஒண்ணும் பைத்தியக்காரி இல்லை...

    உங்க பிரச்சினை இருக்கட்டும். தமிழரசு அவளை விரும்பறதை அந்தப் பொண்ணுக்கிட்டே என்னிக்காவது சொல்லி இருக்கானா? அட அதுகூட வேணாம்ப்பா... தைரியமா அவள்கிட்டே போய் ஒருவார்த்தை... ஒரே ஒரு வார்த்தை பேசியிருக்கானா வர்றது. பனிக்குழைவு திங்கறது... பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருக்கறது... எழுந்து போயிடறது... இப்படி இருந்தால் முடிவுதான் என்ன?

    தமிழரசுக்கு ஆவேசம் வந்தது பேசிமுடிச்சிட்டீங்களா? இப்ப என்ன? நான் போய் அவள்கிட்டே பேசணும். அவ்வளவுதானே! என்னை என்ன பயந்தாங்குளின்னு நினைச்சீங்களா? பாவம், சின்னப் பெண்ணா தெரியுது. நான் போய் பேசினால் பயந்திடுமேன்னு விட்டுவைச்சிருக்கேன்...

    ஆமாம்... உன் வீரம் எங்களுக்குத் தெரியாது? பொண்ணுங்கக்கிட்டே போய் நின்னாலே கை, கால் உதறும். உனக்கெதுக்கு வாய்?

    தமிழரசு பதில் ஏதும் பேசாமல் எழுந்தான். வேகமாக செல்லக்கிளியை நோக்கி நடந்தான். நண்பர்கள் திறந்த வாய் மூடாமல், பார்த்துக்கொண்டிருந்தார்கள். செல்லக்கிளியிடம், சிரித்து சிரித்து தமிழரசு பேசுவதும் அவள் புன்னகையுடன் பதில் சொல்வதும் தெரிந்தது. தமிழரசு வெற்றிப் புன்னகையுடன் திரும்பினான்.

    இப்ப என்ன சொல்றீங்க? பேசிட்டேன் பார்த்தீங்களா?

    பேசினே சரிப்பா... என்ன பேசினேன்னு சொன்னாத்தானே... நாங்க ஏதாவது முடிவுக்கு வரமுடியும்?

    ஆ... ஆசை... ஆசை... என் காவியக் காதலிகிட்டே முதன் முதலில் பேசினதை உங்ககிட்டே சொல்லுவேன்னு பார்த்தீங்களா? அது மட்டும் நடக்காது நான் கிட்டே போனதுமே பளீர்னு மின்னல் அடிச்சுதே... பார்க்கலை நீங்க? எங்காளு சிரிச்சது சார்... என்ன பிரமிச்சு உட்கார்ந்திட்டீங்க இன்னிக்கு நான் ஏக மகிழ்ச்சியில் இருக்கேன். இரவு சாப்பாடு முனியாண்டி விலாசில் என் கணக்கில்... புறப்படுங்க போகலாம்...

    நால்வரும் நம்பமுடியாமல் அவனைப் பின்தொடர். லதா தன் இடத்திற்குத் தாவி வந்தாள்.

    பெரிய ஆளா இருக்கியேடி. நீ... என்ன விசயம்? அந்த அழகன் அர்ச்சுனன்கிட்டே அப்படி என்னதான் பேசினே? அந்த ஆளு மாய்ந்து போகிறாரே. இரண்டு வினாடி பேசினதுக்கு பஞ்சபாண்டவர் கூட்டத்துக்கு பிரியாணி சாப்பாடாம்... நான் உன் உயிர்த்தோழி இல்லையா? அவர் அளவு நீயும் மகிழ்ச்சியாத்தானே இருப்பே? உன் கணக்கில் ஒரே ஒரு பனிக்குழைவு எடுத்துக் கொடுடி...

    செல்லக்கிளி குழப்பத்துடன் அவளைப் பார்த்தாள். என்ன சொல்றே? எனக்கு ஒண்ணும் புரியலியே... அர்ச்சுனன்கிட்டே பேசினேனா? யாரு அது?

    லதா கடுங்கோபத்துடன் முறைத்தாள்.

    என்னது புரியலியா? ஏண்டி தெரியாமத்தான் கேட்கிறேன்... நீ நிசமாகவே இளம்வயது பெண்தானா? இல்லை ஏதாவது ரோபட்டா? இப்படி மண்ணாந்தை போல விழிக்கிறியே... நான் சொன்ன ஆளு உனக்குத் தெரியாது? பஞ்சபாண்டவரில் உன்னை கணக்கு பண்ற ஆளு செக்கச்செவேல்னு ஒரு நிறம். எத்தனை உயரம். பார்க்கிறவளுங்க எல்லாம் திரும்பவும் பார்க்கமாட்டானான்னு ஏங்கறாங்க... நீ என்னடான்னா ரொம்ப பிகு பண்ணிக்கிறியே... உனக்காக வந்து தவம் இருக்கான் பாரு... அவனைச் சொல்லணும். பாவி... என்னத்தைடி பேசித் தொலைச்சே... இப்படி உருகுறான்? உண்மையை சொல்லலை இங்கே ஒரு கொலை விழும்...

    செல்லக்கிளி சலித்துக் கொண்டாள்.

    என்ன தெரியணும்னு நீ இப்படி குடையறே? அந்த ஆளுக்கிட்டே நான் எதுவும் பேசலைடி... கசாட்டா வகை நேத்து இல்லைன்னு சொன்னீங்களே இன்னிக்காவது வந்திட்டுதான்னு கேட்டார். நானும் இல்லை சார் நாளைக்குத்தான் வரும்னு பதில் சொன்னேன். இதுதான் நடந்தது. உன்மேல ஆணை... என்னை நம்புடி...

    என்னது... இதுதான் நடந்ததா... என்ற லதா அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

    2

    "எந்த நேரத்தில் பிறந்தேனோ தெரியலை இந்தத் துன்பப்படறேன். நீங்க மட்டும் அப்பப்ப உதவி செய்யலேன்னா நாங்க போன இடத்தில் புல்லு முளைச்சிருக்கும். நம்ம நிலைமையே சட்டி ஏந்தாத தங்க நிலை. இதில் இந்த துப்புகெட்ட மனுஷன் அக்காகாரி சாவுக்கு போனவர் சும்மா வரவேண்டியதுதானே. அவள் பெத்த மூணையும் இழுத்துக்கிட்டு வந்திட்டார். பெத்த மூணு. வந்த மூணுன்னு ஆறுக்கும் முழுவயிறு இல்லேன்னாலும் கால் வயிறாவது கஞ்சி ஊத்தணும். துணிமணி வாங்கித் தரணும். திருமணம் கருமாதின்னு செய்துத் தொலையணும்... கொடுத்தா வைச்சிருக்கோம்? உங்களை அடிக்கடி தொந்தரவு செய்ய?"

    குட்டை மேசை மீது காபி ஏடுகட்டி ஆறிக்கொண்டிருந்தது. வடிவாம்பாளின் பிலாக்கணம் முடியாமல் நீண்டது.

    சிங்கப்பூர் போயிட்டு ஆறு மாதம் கழிச்சு இப்பதான் வந்திருக்கார். அதுக்குள்ளே நம்ம துன்பத்தைச் சொல்லணுமா? அவரை காபி குடிக்கறதுக்கு விடு வடிவு... சன்னாசி பயந்துகொண்டே முணுமுணுத்தார். குரல் நடுங்கியது.

    நீங்க வாயை மூடுங்க... ஏதாவது சொல்லிடப் போறேன். எல்லாம் உங்களால் வந்தது. சித்தப்பா... காபி ஆறிப்போகுது. நீங்க குடிங்க...

    தேவநாதன் ஒரே ஒரு மிடறு குடித்துவிட்டு கோப்பையை கீழே வைத்தார். வடிவு ஏதோ தூரத்து சொந்தம். வறுமையிலும், பேராசையிலும் சிக்கித் தவிக்கும் ஒரு சராசரி பெண் அவள். மனைவி இறந்த பிறகு தனியாளாய் இருக்கும் தேவநாதனைத் தேடி வருவாள். தன் குறையை சொல்லி அழுது புலம்பி நூறோ. இருநூறோ வாங்கிக்கொண்டு போவாள். பத்து நாளைக்கொருதரம் இப்படித்தான் இடையில் வியாபார சம்மந்தமாக தேவநாதன் சிங்கப்பூர் சென்றுவிட்டால் வடிவுவின் பாடு துன்பம் தான். அவர் ஊர் திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பாள். வந்துவிட்டால் புலம்பித் தள்ளி ஆயிரம் ரூபாய் வரையில் கறந்துவிடுவாள்.

    இந்த முறை புலம்பல் புதுமாதிரி இருக்கிறது. தேவநாதன் அமைதியாக இருப்பதைப் பார்த்த வடிவு மீண்டும் ஆரம்பித்தாள்.

    "வந்திருக்கறதுங்க லேசுபட்டதுங்க

    Enjoying the preview?
    Page 1 of 1