Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வானைத் தேடும் வெண்ணிலா...
வானைத் தேடும் வெண்ணிலா...
வானைத் தேடும் வெண்ணிலா...
Ebook97 pages33 minutes

வானைத் தேடும் வெண்ணிலா...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குளித்து முடித்துவிட்டு இடுப்பில் லுங்கியும், தோளில் டவலுமாய் கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கொண்டிருந்தான். அடர்ந்த தலைமுடி படிய மறுத்து நெற்றியில் விழுந்தது.
 சரிவர துடைக்காததால்... முதுகில் கொப்புளங்களாய் பற்றிக் கொண்டிருந்தது நீர்!
 அர்ச்சனைக் கூடையுடன் அவனருகில் வந்தாள் பவானி...
 "மாமா!" என்றாள் சன்னமாக.
 "ம்..." என்றபடி திரும்பிய பூபாலன், "அட, காலையிலே கோவிலுக்கு போய்ட்டு வர்றியா? இன்னைக்கென்ன விசேஷம்?"
 "உங்க பிறந்தநாள்...!" என்றாள் வெட்கச் சிரிப்புடன்.
 "அட... ஆமாம்! எனக்கே மறந்து போச்சு. பரவாயில்லையே... ஞாபகம் வச்சிருக்கியே..."
 "மறக்க முடியுமா என்ன?"
 "எனக்காக கோவிலுக்கு போய்ட்டு வந்தியா?"
 "ம்..."
 "அதுக்கேன் வெட்கப்படறே?" கிண்டலாய் சொன்னபடி விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டான்.
 பவானி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். சிவந்த நிறம். நல்ல உயரம். திரண்டு உருண்டிருந்த தோள்கள். மார்பில் ரோமப் புற்கள்... கம்பீரத்தை கூட்டி காண்பித்தது. களையான முகம். எந்நேரமும் சிரிப்பை தேக்கி வைத்திருக்கும் உதடுகள், கொஞ்சம் கூட தொந்தி கிடையாது.
 'என் மாமாதான் எவ்வளவு அழகு?' தனக்குத்தானே சிலாகித்துக் கொண்டாள்அப்போதுதான் கவனித்தாள். உடலெங்கும் சரியாக துவட்டாததால் தேங்கி நின்ற தண்ணீர் திவலைகளை!
 "மாமா... என்ன இது சரியா துடைக்காம... உடம்பெல்லாம் ஈரம் அப்படியே இருக்கு. உடம்புக்கு முடியாமப் போய்டும்... முதல்ல நல்லா துடைச்சுக்குங்க..."
 "ஏதேது... விட்டா நீயே துடைச்சி விட்ருவே போல இருக்கே?" பூபாலன் சிரித்தபடி டவலால் துடைத்துக் கொண்டான்.
 "ஏன் துடைச்சி விட்டாதான் என்ன? பவானிக்கு இல்லாத உரிமையா?" மதுரம் கேட்டுக்கொண்டே அங்கே வந்தாள்.
 "அவ உனக்காக விடிகாலையிலே எந்திரிச்சி எவ்வளவு பலகாரம் பண்ணியிருக்காத் தெரியுமா?"
 "ஏன் பவானி... அம்மா சொல்றது நிஜமா?"
 'ஆமாம்' என தலையாட்டினாள் வெட்கத்துடன்.
 "உனக்கேன் கஷ்டம் பவானி? வீட்டு வேலை எல்லாம் நீதான் செய்யறே! போதாதுன்னு இதுவேறயா? நான் என்ன சின்னக் குழந்தையா... பிறந்த நாளெல்லாம் கொண்டாறதுக்கு?"
 "....."
 முகம் சுருங்கிப் போனது பவானிக்கு.
 அதைப் பார்த்ததும் பூபாலனுக்கு ஒருமாதிரியாகிவிட்டது.
 "நீ உன்னை வருத்திக்கிறியேன்னுதான் கண்டிச்சேன். அதுக்குள்ளே உன் முகம் வாடிப்போச்சே... ஏன் நான் உன்னை கண்டிக்கக்கூடாதா? எனக்கு அந்த உரிமையில்லையா?"
 சட்டென பூவாய் மலர்ந்தாள் பவானி.
 "உங்களுக்கில்லாத உரிமையா மாமா? எவ்வளவு வேணும்னாலும் திட்டுங்க, அடிங்க... நான் சந்தோஷப்படுவேன் மாமா!"
 "சரி... சரி... எனக்காக என்னென்ன சமைச்சே! கொண்டு வா... பார்ப்போம்!""இதோ வர்றேன் மாமா!" புள்ளி மானாய் துள்ளி ஓடினாள்.
 "அவளுக்கு நீதான் உலகம்... மத்த பொண்ணுங்களை மாதிரி சினிமா, டிராமான்னு எதிலேயும் ஆர்வமில்லே! பத்திரிகையிலே புதுவிதமா சமையல் குறிப்பைப் பார்த்தா... உடனே அதை மாமாவுக்கு சமைச்சுப் போட்டு பாராட்டு வாங்கணும்னு ஆசைப்படற குணம்!"
 "ஆமாங்க்கா... பவானிக்கு நான் என்றால் ஒரு பாசம்தான்!" என்று ஆமோதித்தான்.
 அதற்குள் தான் சமைத்தவற்றை சிறிய சிறிய தட்டுகளில் வைத்து எடுத்து வந்தாள்.
 ஒவ்வொன்றாய் ருசித்துப் பார்த்தான் பூபாலன்.
 "வாவ்... பிரமாதம்... அசத்திட்டே... அட, பாஸந்தி கூட செய்திருக்கியே..."
 அவன் பாராட்ட, பாராட்ட பெருமிதத்தில் முகம் அகன்றது பவானிக்கு.
 "இந்த பாஸந்திய டிபன் பாக்ஸ்ல போட்டுக் கொடு! ஆபீசுக்கு கொண்டு போகணும்"
 "எல்லா ஸ்வீட்டும் எடுத்துக்கிட்டு போகலாமே..."
 "இல்லே வேண்டாம். எல்லாருக்கும் தர்ற ஐடியா இல்லை. ஒரே ஒரு நெருங்கிய ஃப்ரண்டுக்கு மட்டும்தான் தரப்போறேன்..." என்றவன் மனக் கண்முன் வசுமதி வந்து நின்றாள்.
 "அது யாருய்யா... முக்கியமான ஃபரண்ட்?" இலையில் பரிமாறிக்கொண்டே கேட்டாள் மதுரம்.
 "வசு... வசந்தன்னு பேர்..." என்றான் தடுமாறி.
 "ஓகோ! ஒரு நாளைக்கு வீட்டுக்கு அழைச்சிட்டு வாயேன்!"
 "கண்டிப்பா... அழைச்சிட்டு வருவேன்"
 சாப்பிட்டு முடிந்து எழுந்து கைகழுவச் சென்றான்.
 பவானி அவன் சாப்பிட்டு வைத்திருந்த இலையை அப்படியே சமையலறைக்கு எடுத்துச் சென்றாள்.
 மதுரம் தம்பி பின்னாடியே சென்றிருந்ததால் அவளும் இதை கவனிக்கவில்லை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223012450
வானைத் தேடும் வெண்ணிலா...

Read more from Geeye Publications

Related to வானைத் தேடும் வெண்ணிலா...

Related ebooks

Reviews for வானைத் தேடும் வெண்ணிலா...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வானைத் தேடும் வெண்ணிலா... - Geeye Publications

    1

    "பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்...

    இன்பங்கள் உருவாகக் காண்போம்..."

    மெல்லிய குரலில் பாடியபடி... அதே நேரம் பால் பொங்கிவிடாமல் கவனமாகவும் இருந்தாள் பவானி...

    இளந்தீயில்... மெல்லிய தகடாய் படிந்த பாலாடையை கரண்டியால் லாவகமாய் எடுத்து பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருந்தாள். அந்த பாத்திரத்தில் ஏற்கனவே சர்க்கரை, ஏலக்காய், பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகள் பொடிசாக நறுக்கிப் போடப்பட்டிருந்தது.

    பூபாலனுக்கு பாசந்தி என்றால் உயிர்.

    சமையலறை ஜன்னல் வழியே... அதிகாலை நேரத்துக்கே உரிய வாடைக்காற்று சிலுசிலுத்து வந்துக் கொண்டிருந்தது.

    குளித்துவிட்டு... தலையில் கொண்டையாய் சுற்றியிருந்த ஈரடவலைக் கூட அவிழ்த்து கூந்தலை உலர வைக்க நேரமில்லை... அவளுக்கு... நாலைந்து பலகாரம் செய்தாக வேண்டும்... விடிவதற்குள்.

    மதுரம் புரண்டு படுத்தாள். வலக்கை மகளின் இடுப்பைத்தேடி பொட்டென தரையில் விழுந்து ஏமாந்தது. கண்களைத் திறக்காமலேயே கையால் துழாவினாள்.

    இருப்பிடம் வெறுமையாக உணர்த்தியதும் மதுரம் கண்களைத் திறந்தாள்.

    கொட்டாவி விட்டபடி அவிழ்ந்திருந்த கொண்டையை முடிச்சிட்டுக் கொண்டாள்.

    இரவு விளக்கு சன்னமாய் வெளிச்சம் தர சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். சமையலறையில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

    புரிந்து விட்டது.

    மதுரமும் படுக்கையை விட்டு எழுந்து, பாய், தலையணையை சுருட்டி வைத்தாள். வாசல் கதவைத் திறந்தாள். மை பூசிய கருமை!

    இன்னும் விடிய அவகாசமிருந்தது.

    ‘இந்தப் பொண்ணுக்கு என்னாச்சு? இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன பண்ணிட்டிருக்கா?’ யோசனையாய் சமையலறை நோக்கிச் சென்றாள்.

    இவள் வரும் அரவம் கேட்டு திரும்பி சிரித்தாள்.

    எந்திரிச்சிட்டியாம்மா?

    என்னடி பண்ணிட்டிருக்கே... இந்த நேரத்துலே?

    பார்த்தா தெரியலே? சமைச்சிட்டிருக்கேன்!

    தெரியுது! இவ்வளவு சுருக்க எழுந்து எதுக்காக இத்தனை பலகாரம் பண்ணிட்டிருக்கேன்னுதான் கேக்கறேன்! என்றாள். புரியாமல் மதுரம்.

    நிஜமாகவே உனக்கு நினைவில்லையா?

    வயசாயிட்டே வருது... எல்லாத்தையும் நினைவுல வச்சுக்க முடியாதே! சொல்லிடு... என்ன விஷயம்?"

    இப்படி வா என்று அம்மாவின் கையைப் பற்றி வராந்தாவிற்கு அழைத்துச் சென்றாள். சுவற்றில் ‘ராணிமுத்து/ காலண்டரில் முருகன் சிரித்துக் கொண்டிருந்தான்.

    இன்னைக்கு என்ன தேதி?

    நவம்பர் இருபத்தொன்பது! அட... இன்னைக்கு பூபாலனோட பிறந்த நாள் இல்லே!

    ம்... என்று தலையை ஆட்டினாள் பெருமிதமாய்.

    எப்படிடி... எல்லாத்தையும் கரெக்டா ஞாபகம் வச்சிருக்கே? என் தம்பி பிறந்தநாள் எனக்கே மறந்து போச்சு!

    ஆனா, என் மாமாவோட பிறந்த நாளை என்னால மறக்க முடியாதும்மா!

    உன் மாமன் மேல உனக்குதான் எவ்வளவு ஆசை? சரி... அதுக்காக இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி இத்தனை பலகாரம் ஏம்மா பண்றே? உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே பவானி!

    யாருக்காகம்மா... மாமாவுக்காகத்தானே கஷ்டப்படறேன்? நம்ம வீட்டு இனிப்பு வகைகளை மாமா ஒருநாள் ஆபீஸ்ல கொடுத்தாராம். ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினாங்களாம். அதான்... இன்னைக்கும் அவர் ஆபீஸ்ல கொடுக்கட்டும். மாமாவை மனசார வாழ்த்துவாங்க இல்லே... அதுக்காகத்தான் சமைக்கிறேன்.

    ரேஷன்ல இந்த மாசம் போட்ட சர்க்கரை, கோதுமை எல்லாம் காலியாய்டுச்சா? என்றாள் கிண்டலாய்.

    அட போம்மா... ஒரு மாசம் காபி குடிக்கலேன்னா என்ன வந்துடப் போகுது? பவானி சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சமையலறைக்குள் - நுழைந்தாள்.

    ம்... ஏன் சொல்லமாட்டே? என்னை விடு உன் மாமனுக்கு காபி குடிக்கலேன்னா பொழுதே விடியாதே!

    அது எங்களுக்கும் தெரியும். அதெல்லாம் தனியா சர்க்கரை எடுத்து வச்சாச்சு!

    அடிப்பாவி... பெத்த அம்மாவைவிட உனக்கு மாமன் முக்கியமாப் போய்ட்டானா?

    யாரு எவங்க? உன் தம்பியாச்சே... கவனிக்காம இருக்க முடியுமா? சரி... சரி... சும்மா வளவளன்னு பேசிட்டிருக்காம வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளிச்சு வை! நான் வந்து கோலம் போட்டுக்கறேன்

    எதுக்கு சிரமப்படறே? நீ அடுப்படி வேலைய கவனி நானே கோலம் போட்டுடறேன்

    சாதாரண நாளாயிருந்தா சரி... செய்னு விட்டுடுவேன். விசேஷமான நாளாச்சே... பெரிசா தேர்க்கோலம் போடப்போறேன். நீ சொன்னதை மட்டும் செய்தாப் போதும்.

    அடி ஆத்தி! அதிகாரம் தூள் பறக்குதே! ஹூம்... கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே இப்படின்னா... கல்யாணம் ஆகிட்டா... என்ன வெரட்டு வெரட்டுவியோ? அதுவும் புள்ளைக்கு அக்கா... நாத்தனார்காரியா ஆய்டுவேன்.

    போதும்... போதும் வெட்டிப் பேச்சு பேசினது. போய் ஆகவேண்டிய வேலையப் பார்! விடியப்போவுது... மாமா எந்திரிச்சிடும்! விரட்டினாள் பவானி.

    மகளின் துடுக்கு பேச்சை ரசித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் மதுரம்.

    கொஞ்சம் கொஞ்சமாய்... இரவோடு குலவிக் கொண்டிருந்த இருள்... மனமின்றி பிரிய ஆரம்பித்தது.

    பூபாலன் ஏழு மணிக்குத்தான் எந்திரிப்பான்.

    பவானி அவசரம் அவசரமாய் வேலை செய்தாள். சமையல்கட்டில் வேலையை முடித்துவிட்டு வாசலில் தெருவே அடைத்துக் கொள்கிறாற்போல் பெரிதாய் கோலம் போட்டாள்.

    தெருவிலே யாரும் நடக்கக்கூடாதுன்னு இவ்வளவு பெரிசா போட்டியா? கொஞ்ச நேரத்திலே கலைஞ்சிடப் போவுது... என்றாள் மதுரம்.

    அதெல்லாம் ஒண்ணும் கலையாது. இங்கே என்னப் பண்ணிட்டிருக்கே நீ? குளிக்கலே? கோவிலுக்கு போகணுமே!

    "தலைய வலிக்குது. விடிகாலைல குளிச்சா ஒத்துக்காது.

    Enjoying the preview?
    Page 1 of 1