Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீ எங்கே... நான் அங்கே..!
நீ எங்கே... நான் அங்கே..!
நீ எங்கே... நான் அங்கே..!
Ebook121 pages45 minutes

நீ எங்கே... நான் அங்கே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"என்னப்பா பூவரசு! பெண்ணை பிடிச்சிருக்கா!" என்று  கேட்டார் சிவனேசன். பூவரசுவின் ஒன்று விட்ட சித்தப்பா. 

'பிடிச்சிருக்கு' என்று தலையை ஆட்டினான் பூவரசன், பெண்ணைப் பார்த்துக் கொண்டே. கருப்புமில்லை, சிவப்புமில்லை புதுநிறம்தான் பொன்னி... 

கட்டான அழகுடன் கண்ணுக்குள் தெரிந்தவள் மனசுக்கு பிடித்துப் போனாள். 

"ம்ம்... பையனுக்கு பெண்ணை பிடிச்சிருக்காம். பெண்ணுக்கு... பையனை பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டீங்கன்னா... கல்யாணத்திற்கு நாளைக் குறிச்சிடலாம்" என்றார் சிவனேசன். 

பூவரசு... தனது பெற்றோரை தனது பதினைந்தாவது வயதில் பறி கொடுத்து விட்டு தன் சித்தப்பாவுடன் கட்டிட வேலைகளுக்கு சென்று சம்பாதிக்க துவங்கினான். 

கான்கிரீட் போட சென்ரிங் பலகை நன்றாக அடிப்பான், கம்பி கட்டுவான், கட்டிடம் கட்டுவான் இப்படி கிடைத்த வேலையை செய்து வந்தான். அவனுக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும், அவனது அப்பா வைத்து விட்டு போன கடன் மட்டும் கழுத்து வரை இருந்தது. அவனது உழைப்பு அனைத்தும் கடனை அடைக்கவே போதவில்லை. 

இப்போதும் கல்யாண செலவிற்கே கடன் வாங்கும் நிலைமைதான் அவனுக்கு. 'வயது முப்பது ஆயிருச்சே நீயும் ஒரு குடும்பம், குழந்தைன்னு ஆகணும்' என்றே சித்தப்பா வற்புறுத்தி பெண் பார்க்க அழைத்து வந்திருந்தார். 

குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம் பூவரசுக்கு. அவனுக்கு உடன் பிறப்புகள் யாரும் இல்லாததால் குடும்பம், குழந்தை என்றதும்... திருமணத்திற்கு சம்மதித்து இதோ... பெண்ணைப் பார்க்க வந்து பிடித்தும் போனது. 

பெண்ணிற்கு சம்மதம் என்றதும்...

"சரி பெண்ணுக்கு என்ன சீர் செய்யப் போறீங்க" என்று பெண்ணின் அப்பா செல்வராஜிடம் சிவனேசன் கேட்கவும். 

"ஐயா இரண்டு செண்ட் இடம் இருக்கு அதை என் பொண்ணு பெயரில் எழுதி வைச்சிடறேன். மற்றபடி ஒரு ஐந்து பவுன் நகை அவளுக்குன்னு இருக்கு அவ்வளவுதான் என்னால் முடிஞ்சது" என்றார் செல்வராஜ். 

பொன்னிக்கு பிறகு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள் இருந்தனர். செல்வராஜ் தள்ளு வண்டியில் காய்கறிகள் விற்று பிழைப்பை நடத்துபவர். அவரது மனைவி நல்லம்மாள் ஒன்றிரண்டு ஆடுகளை மற்றும் கோழிகளை வளர்த்து வருபவர். 

"ஏங்க... ஒரு பத்து சவரனா போட்டுடுங்க உங்க மகளுக்கு போடறீங்க... அவளுக்கு மாமனார், மாமியார், நாத்தனார் என்று எந்த விதப் பிக்கல், பிடுங்கலும் இல்லை... அவ வீட்ல அவளே ராணியா இருந்துக்கலாம்..." 

"ஐயா... முடியாதுங்க... ஐந்து சவரன்தான் என்னால முடியும் பத்து செண்ட்ல ஒரு இடம் இருக்கு ஐந்து பிள்ளைகளுக்கும் ஆளுக்கு இரண்டு செண்ட் என்று கொடுத்து விட்டேன். மற்றபடி ஒரு கம்பிக் காசும் பெயராது" என்று அடித்துக் கூறி விட்டார் செல்வராஜ். 

"ஏல... பூவரசு! என்னலே இப்படி சொல்றாங்க நீ என்னல சொல்ற...!" 

"சித்தப்பா... அதெல்லாம் அவங்க இஷ்டம். நாம தலையிட வேண்டாம்." 

"இல்லப்பா... கொஞ்சம் ரொக்கம் தந்தா... உன் கல்யாண செலவுக்கு கடன் இல்லாம போகுமேன்னு பார்த்தேன்." 

"ரொக்கத்திற்கு பதிலாதான் இரண்டு செண்ட் நிலம் தரேனே" என்றார் செல்வராஜ். 

அந்த நிலமோ அத்துவான காட்டிலே இருந்தது அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. 

"ஏம்பா... பூவரசு உன்னோட அழகுக்கும், வேலைக்கும் இதோட பெரிய இடமா கிடைக்கும் இந்த இடம் வேணாம் வா... பிறகு சொல்லி அனுப்புறோம்னு சொல்லிட்டு கெளம்பலாம்" என்று சித்தப்பா சிவனேசன் பூவரசு காதில் கிசு, கிசுக்க... 

"வேணாம் சித்தப்பா... காசுக்காக இந்த இடம் வேணாம்னு சொல்ல என் மனம் விரும்பல" 

"சரிதான்... அப்புறம் உன்னிஷ்டம் நான் என்னத்த சொல்ல? என்று சித்தப்பா கூறி விட... 

அடுத்த வாரமே...! விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடத்தி... பெண் வீட்டில் விருந்து, உபசாரமெல்லாம் நடத்தி... இரவு மணமகன் வீட்டில் 'வரவேற்பு' என அனைத்தும் நன்றாகவே நடந்தேறியது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 14, 2023
ISBN9798223239819
நீ எங்கே... நான் அங்கே..!

Read more from Sundari Murugan

Related to நீ எங்கே... நான் அங்கே..!

Related ebooks

Reviews for நீ எங்கே... நான் அங்கே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீ எங்கே... நான் அங்கே..! - Sundari Murugan

    1

    என்னப்பா பூவரசு! பெண்ணை பிடிச்சிருக்கா! என்று கேட்டார் சிவனேசன். பூவரசுவின் ஒன்று விட்ட சித்தப்பா.

    ‘பிடிச்சிருக்கு’ என்று தலையை ஆட்டினான் பூவரசன், பெண்ணைப் பார்த்துக் கொண்டே. கருப்புமில்லை, சிவப்புமில்லை புதுநிறம்தான் பொன்னி...

    கட்டான அழகுடன் கண்ணுக்குள் தெரிந்தவள் மனசுக்கு பிடித்துப் போனாள்.

    ம்ம்... பையனுக்கு பெண்ணை பிடிச்சிருக்காம். பெண்ணுக்கு... பையனை பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டீங்கன்னா... கல்யாணத்திற்கு நாளைக் குறிச்சிடலாம் என்றார் சிவனேசன்.

    பூவரசு... தனது பெற்றோரை தனது பதினைந்தாவது வயதில் பறி கொடுத்து விட்டு தன் சித்தப்பாவுடன் கட்டிட வேலைகளுக்கு சென்று சம்பாதிக்க துவங்கினான்.

    கான்கிரீட் போட சென்ரிங் பலகை நன்றாக அடிப்பான், கம்பி கட்டுவான், கட்டிடம் கட்டுவான் இப்படி கிடைத்த வேலையை செய்து வந்தான். அவனுக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும், அவனது அப்பா வைத்து விட்டு போன கடன் மட்டும் கழுத்து வரை இருந்தது. அவனது உழைப்பு அனைத்தும் கடனை அடைக்கவே போதவில்லை.

    இப்போதும் கல்யாண செலவிற்கே கடன் வாங்கும் நிலைமைதான் அவனுக்கு. ‘வயது முப்பது ஆயிருச்சே நீயும் ஒரு குடும்பம், குழந்தைன்னு ஆகணும்’ என்றே சித்தப்பா வற்புறுத்தி பெண் பார்க்க அழைத்து வந்திருந்தார்.

    குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம் பூவரசுக்கு. அவனுக்கு உடன் பிறப்புகள் யாரும் இல்லாததால் குடும்பம், குழந்தை என்றதும்... திருமணத்திற்கு சம்மதித்து இதோ... பெண்ணைப் பார்க்க வந்து பிடித்தும் போனது.

    பெண்ணிற்கு சம்மதம் என்றதும்...

    சரி பெண்ணுக்கு என்ன சீர் செய்யப் போறீங்க என்று பெண்ணின் அப்பா செல்வராஜிடம் சிவனேசன் கேட்கவும்.

    ஐயா இரண்டு செண்ட் இடம் இருக்கு அதை என் பொண்ணு பெயரில் எழுதி வைச்சிடறேன். மற்றபடி ஒரு ஐந்து பவுன் நகை அவளுக்குன்னு இருக்கு அவ்வளவுதான் என்னால் முடிஞ்சது என்றார் செல்வராஜ்.

    பொன்னிக்கு பிறகு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள் இருந்தனர். செல்வராஜ் தள்ளு வண்டியில் காய்கறிகள் விற்று பிழைப்பை நடத்துபவர். அவரது மனைவி நல்லம்மாள் ஒன்றிரண்டு ஆடுகளை மற்றும் கோழிகளை வளர்த்து வருபவர்.

    ஏங்க... ஒரு பத்து சவரனா போட்டுடுங்க உங்க மகளுக்கு போடறீங்க... அவளுக்கு மாமனார், மாமியார், நாத்தனார் என்று எந்த விதப் பிக்கல், பிடுங்கலும் இல்லை... அவ வீட்ல அவளே ராணியா இருந்துக்கலாம்...

    ஐயா... முடியாதுங்க... ஐந்து சவரன்தான் என்னால முடியும் பத்து செண்ட்ல ஒரு இடம் இருக்கு ஐந்து பிள்ளைகளுக்கும் ஆளுக்கு இரண்டு செண்ட் என்று கொடுத்து விட்டேன். மற்றபடி ஒரு கம்பிக் காசும் பெயராது என்று அடித்துக் கூறி விட்டார் செல்வராஜ்.

    ஏல... பூவரசு! என்னலே இப்படி சொல்றாங்க நீ என்னல சொல்ற...!

    சித்தப்பா... அதெல்லாம் அவங்க இஷ்டம். நாம தலையிட வேண்டாம்.

    இல்லப்பா... கொஞ்சம் ரொக்கம் தந்தா... உன் கல்யாண செலவுக்கு கடன் இல்லாம போகுமேன்னு பார்த்தேன்.

    ரொக்கத்திற்கு பதிலாதான் இரண்டு செண்ட் நிலம் தரேனே என்றார் செல்வராஜ்.

    அந்த நிலமோ அத்துவான காட்டிலே இருந்தது அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

    ஏம்பா... பூவரசு உன்னோட அழகுக்கும், வேலைக்கும் இதோட பெரிய இடமா கிடைக்கும் இந்த இடம் வேணாம் வா... பிறகு சொல்லி அனுப்புறோம்னு சொல்லிட்டு கெளம்பலாம் என்று சித்தப்பா சிவனேசன் பூவரசு காதில் கிசு, கிசுக்க...

    வேணாம் சித்தப்பா... காசுக்காக இந்த இடம் வேணாம்னு சொல்ல என் மனம் விரும்பல

    "சரிதான்... அப்புறம் உன்னிஷ்டம் நான் என்னத்த சொல்ல? என்று சித்தப்பா கூறி விட...

    அடுத்த வாரமே...! விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடத்தி... பெண் வீட்டில் விருந்து, உபசாரமெல்லாம் நடத்தி... இரவு மணமகன் வீட்டில் ‘வரவேற்பு’ என அனைத்தும் நன்றாகவே நடந்தேறியது.

    2

    கையில் பால் செம்புடன் வந்தாள் பொன்னி. சினிமாவில் காட்டுவது போல் முதல் இரவு அறையில் பூ, பழத்தட்டு என்று எந்தவித படோபகாரமும் இல்லை... ஒரே ஒரு நார் கட்டில் இருந்தது. ஒரு மூலையில் கோரைப்பாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

    அந்தக் குடிசை வீட்டில் ஒரு பக்கம் மறைத்து தட்டிவைத்து அடைக்கப்பட்டிருந்தது. அது தான் துணி மாற்றும் அறை. வீட்டின் முன்புறம் ஒரு மூலையில் சின்னதாக ஓலை வேய்ந்த கூரை அது தான் சமையலறை இதுதான் ‘பொன்னி’ வாக்கப்பட்டு வந்த ‘வசந்த மாளிகை’ இதுவும் சொந்தமான நிலம் கிடையாது ஏதோ தந்த நிலம் என்று கேள்விப்பட்டிருந்தார்.

    அப்போது அவளது தோளில் ஒரு கை விழவும் அரண்டு திரும்பினாள் பொன்னி...!

    ஏய்... என்ன பயந்திட்டியா...? இங்க என்னைத் தவிர யார் வருவாங்க? என்று மீசையை நீவிக் கொண்டு குறும்பு சிரிப்புடன் நின்றிருந்தான் பூவரசு...

    கறுப்பாய் இருந்தாலும் கட்டழகனாய் இருந்த அவனது வெள்ளைச் சிரிப்பில் சொக்கிப் போய் நின்றிருந்தாள் பொன்னி.

    என்ன புள்ள அப்படி பார்க்கிறே...! வா இப்படி... என்றவன் அவளது கையில் இருந்த பாலை வாங்கி டம்ளரில் ஊற்றி அவளிடம் நீட்டினான். இந்தா குடி என்று...

    ஐய்ய... இதை உங்களுக்குத்தான் கொடுக்கச் சொல்லிச்சி அம்மா... என்று அவள் வெட்கத்துடன் நெளிய...

    ம்ம்... நீ குடிச்சாலே... நான் குடிச்சமாதிரிதான் அதனால நீயே குடி...

    அதெப்படி நீங்க குடிச்சாதான் உங்க வயிறு நிறையும்...

    அடேங்கப்பா... நல்லா பேசுறியே... என்றவன் அவளை இழுத்து தன் மார்போடு சாய்த்துக் கொண்டே நார் கட்டிலில் போய் அமர்ந்தான்.

    பொன்னிக்கு உடல் நடுங்கியது.

    என்ன பொன்னி...! என்னை பார்க்க உனக்கு பயமா இருக்கா...?

    ம்கூம்

    அப்ப ஏன்...? உன் உடம்பு... இப்படி குளிரில் நடுங்கும் மைனாவை போல... நடுங்குது...

    ச்சீய் போங்க... என்று அவன் மார் மீது அவள் முகம் புதைக்க... அவளது முகம் நிமிர்த்தி கையில் இருந்த பாலை புகட்ட... ம்கூம் என்று அவள் அவனுக்கு புகட்ட டம்ளரை தூர வைத்தவன் அவளது குனிந்த தலையை நிமிர்த்தி அவளது முகத்தில் தன் இதழ் பதித்தான்...

    நான் ஒன்று கேட்கவா...? என்று அவள் மெதுவாக கேட்க... ம்... ஒன்று என்ன...! பத்து வேணும்னாலும் கேளு என்று அவளை நேராக பார்த்தான் பூவரசு...

    அவனது பார்வை வீச்சை தாளாது தலையை குனிந்தவாறே... என்னங்க உங்க அம்மா, அப்பா இல்லாம தனியாவே இந்த வீட்ல இருந்திருக்கீங்களே...? நீங்க ரொம்ப பாவமில்லையா...

    ம்கூம்... அதான் துணையா இப்ப நீ வந்திட்டியே...!

    "அதுசரி... நீங்க... கடனை அடைக்கணும்னு சொன்னீங்களே...! அது என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1