Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்!
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்!
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்!
Ebook126 pages45 minutes

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தான் நட்டு வைத்திருந்த செடிகளை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு வந்த மந்திரா... பிச்சி செடியை பார்த்ததும்... "ம்மா... இங்கே கொஞ்சம் வாயேன்" என்று கத்திக் கூப்பிட சமையலறையில் வேலையில் இருந்த சந்திரா, என்னவோ ஏதோ என்று- அடுப்பைக் கூட அணைக்காமல்... அரக்க, பரக்க ஓடிவர... தன் தாயை கண்டவள்... "அம்மா இங்கே பாரேன் நான் வைச்ச பிச்சி செடி இரண்டு மொட்டு விட்டிருக்கு பாரேன்" 

சப்பென்று ஆனது சந்திராவிற்கு. 

"ஏண்டி... இதுக்குதானா இப்படி கூப்பாடு போட்டு கூப்பிட்டே? நானே நேரா நேரத்திலே சமையலை முடிக்கணும்னு அங்கே அல்லாடிக்கிட்டிருக்கேன் உனக்கு இந்த பிச்சி செடி மொட்டு விட்டதுதான் பெரிய அதிசயமா?" என்று தன் தலையில் அடித்தபடி சந்திரா நகரந்தாள். 

"ச்சே... இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்ல..." என்றவாறு பிச்சி செடியிடம் பேசலானாள்... மந்திரா. 

தன் கணவர் சக்திவேலிடம் வந்த சந்திரா "ஏங்க... நீங்க கொடுக்கிற செல்லம்... உங்க மூத்த பெண் அலப்பறை தாங்க முடியல..." 

"அப்படி என்னடி செஞ்சா...? அவளைக் கரிச்சிக் கொட்டறே...?"

"ம்க்கும்... உங்க பெண்களைச் சொன்னா உடனே, வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு மல்லுக்கு வந்திடுவீங்களே" 

"சரி! சரி! சமையலைக் கவனி அங்கே ஏதோ கருகிய வாசனை வருது..." 

"ஐய்யய்யோ... சாம்பார் அடிபிடிக்குதுன்னு நெனைக்கிறேன்" என்று பதறியபடி சமையலறைக்கு விரைந்தாள் சந்திரா. 

வேகமாக... அடிபிடித்த பாத்திரத்தில் இருந்த சாம்பாரை அடுத்த பாத்திரத்தில் மாற்றினாள்... 

பின்பு அரைத்த தேங்காயை தாளித்தாள். 

சிறிது நேரத்தில்... இளையவள் அரக்க, பரக்க இரண்டு இட்லியை வாயில் போட்டு, லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு... பஸ்ஸை பிடிக்க ஓடவும்... 

அனைத்தையும் டைனிங் டேபிளில் பரப்பினாள் சந்திரா சாதம், சாம்பார், இட்லி, சட்னி என்று. அவளுக்கு மூன்று பெண்கள் மூத்தவள் மந்திரா, இரண்டாமவள் இந்திரா, மூன்றாவது பெண் சுதந்திரா. 

இரண்டு பெண்கள் போதும் என சந்திரா - சக்திவேல் தம்பதியர் நினைத்திருக்க... சக்திவேலின்... அம்மா... சங்கரியம்மாள் மூன்றாவது குழந்தை ஆண்குழந்தையாம் ஜோதிடர் சொல்கிறார் என்றதால் மூன்றாவது குழந்தையும் வந்தது அதுவும் பெண்ணாய் சுதந்திரத்தினத்தன்று பிறந்ததால் சுதந்திரா எனப் பெயரிட்டனர். 

"ம்ம்... பேரப்பிள்ளை கிடைக்கலையே" என்ற ஏக்கத்தோடு சங்கரியம்மாள் தன் மூச்சை விட்டாள். 

மூன்று பெண்களையும்... தன் சக்திக்கு ஏற்ப படிக்க வைத்து தைரியத்தோடு வளர்த்து வருகிறார் சக்திவேல். 

சக்திவேலுக்கு ஒரு தனியார் கம்பெனியில் சொற்பமான சம்பளத்தில் வேலை. வாடகை வீடு நடுத்தர குடும்ப வாழ்க்கை முறை. 

சந்திரா இல்லத்தரசிதான் ஆனால், சும்மா இருக்க பிடிக்காமல் தனக்கு தெரிந்த தையல்பயிற்சி மூலம் தன்னிடம் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தரும் ஜாக்கெட் துணிகளை தைத்துக் கொடுத்து தினமும்... முன்னூறு, ஐநூறு என வருமானம் ஈட்டினாள். 

"அம்மா... என்ன இது...? மூன்று இட்லி காலையிலே திங்க முடியாது..."

"ஏன்டி மூணே இட்லிதானே"

"ம்கூம்... ஒன்று போதும்" என்று வேகமாக பிட்டு வாயில் போட்டுக் கொண்டு எழும்பவும். 

"அடியேய்... மந்திரா... என்னடி இது...? ஒரு இட்லியா? இதுக்கு நீ சாப்பிடாமலே போகலாமிலே! "

"ஏய்... சந்திரா... என்னடி நீ ஒன்று சாப்பிட்டவளையும்... சாப்பிடாதேன்னு சொல்றே! இதையே சொல்லி நாளையிலிருந்து சாப்பிடாம போயிடப்போறா...?" 

"ஐய்யே...! அதனால... ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டா போதும்னு சொல்லச் சொல்றீங்களா?" 

"அவளுக்கு இளைய புள்ளைங்க தானே இந்திராவும், சுதந்திராவும்! நான் வைச்சதை சாப்பிட்டு சமத்தா... நடந்துக்கிறாங்க... ஆனா இந்த மந்திராதான்... என் சொல் பேச்சை கேட்பதேயில்லை" 

"ம்மா... புலம்பாதே! நான் வர்றேன். என் லஞ்ச் பாக்ஸை கொடு" என்றவள்... சந்திரா கொண்டு வந்த பாக்ஸை கையில் இருந்து பறித்துக் கொண்டு வேகமாக வெளியே பாய்ந்தாள்... தன் வண்டியை எடுத்துக் கொண்டு. 

மந்திரா... பி.எஸ்.சி. முடித்து விட்டு... அருகில் இருக்கும்... ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட்., இரண்டாம் வருடம். படிக்கிறாள். ஆறு மாதத்தில் இந்த படிப்பு முடிந்ததும் அடுத்து எம்.எஸ்.சி. படிக்க திட்டமிட்டிருக்கிறாள். 

இந்திரா... இரண்டாமவள் இவள் பி.டெக் பொறியியல் மூன்றாம் வருடம் படிக்கும் மாணவி. 

சுதந்திரர் இளையவள்... பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி. 

வீர்னெறு வண்டியில் பறந்தவளை "பார்த்து பதமாய் போயேன்டி" என்றாள் சந்திரா. 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223142751
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்!

Read more from Sundari Murugan

Related to இதயம் என்றொரு ஏடெடுத்தேன்!

Related ebooks

Reviews for இதயம் என்றொரு ஏடெடுத்தேன்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயம் என்றொரு ஏடெடுத்தேன்! - Sundari Murugan

    1

    தான் நட்டு வைத்திருந்த செடிகளை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு வந்த மந்திரா... பிச்சி செடியை பார்த்ததும்... ம்மா... இங்கே கொஞ்சம் வாயேன் என்று கத்திக் கூப்பிட சமையலறையில் வேலையில் இருந்த சந்திரா, என்னவோ ஏதோ என்று- அடுப்பைக் கூட அணைக்காமல்... அரக்க, பரக்க ஓடிவர... தன் தாயை கண்டவள்... அம்மா இங்கே பாரேன் நான் வைச்ச பிச்சி செடி இரண்டு மொட்டு விட்டிருக்கு பாரேன்

    சப்பென்று ஆனது சந்திராவிற்கு.

    ஏண்டி... இதுக்குதானா இப்படி கூப்பாடு போட்டு கூப்பிட்டே? நானே நேரா நேரத்திலே சமையலை முடிக்கணும்னு அங்கே அல்லாடிக்கிட்டிருக்கேன் உனக்கு இந்த பிச்சி செடி மொட்டு விட்டதுதான் பெரிய அதிசயமா? என்று தன் தலையில் அடித்தபடி சந்திரா நகரந்தாள்.

    ச்சே... இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்ல... என்றவாறு பிச்சி செடியிடம் பேசலானாள்... மந்திரா.

    தன் கணவர் சக்திவேலிடம் வந்த சந்திரா ஏங்க... நீங்க கொடுக்கிற செல்லம்... உங்க மூத்த பெண் அலப்பறை தாங்க முடியல...

    அப்படி என்னடி செஞ்சா...? அவளைக் கரிச்சிக் கொட்டறே...?

    ம்க்கும்... உங்க பெண்களைச் சொன்னா உடனே, வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு மல்லுக்கு வந்திடுவீங்களே

    சரி! சரி! சமையலைக் கவனி அங்கே ஏதோ கருகிய வாசனை வருது...

    ஐய்யய்யோ... சாம்பார் அடிபிடிக்குதுன்னு நெனைக்கிறேன் என்று பதறியபடி சமையலறைக்கு விரைந்தாள் சந்திரா.

    வேகமாக... அடிபிடித்த பாத்திரத்தில் இருந்த சாம்பாரை அடுத்த பாத்திரத்தில் மாற்றினாள்...

    பின்பு அரைத்த தேங்காயை தாளித்தாள்.

    சிறிது நேரத்தில்... இளையவள் அரக்க, பரக்க இரண்டு இட்லியை வாயில் போட்டு, லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு... பஸ்ஸை பிடிக்க ஓடவும்...

    அனைத்தையும் டைனிங் டேபிளில் பரப்பினாள் சந்திரா சாதம், சாம்பார், இட்லி, சட்னி என்று. அவளுக்கு மூன்று பெண்கள் மூத்தவள் மந்திரா, இரண்டாமவள் இந்திரா, மூன்றாவது பெண் சுதந்திரா.

    இரண்டு பெண்கள் போதும் என சந்திரா - சக்திவேல் தம்பதியர் நினைத்திருக்க... சக்திவேலின்... அம்மா... சங்கரியம்மாள் மூன்றாவது குழந்தை ஆண்குழந்தையாம் ஜோதிடர் சொல்கிறார் என்றதால் மூன்றாவது குழந்தையும் வந்தது அதுவும் பெண்ணாய் சுதந்திரத்தினத்தன்று பிறந்ததால் சுதந்திரா எனப் பெயரிட்டனர்.

    ம்ம்... பேரப்பிள்ளை கிடைக்கலையே என்ற ஏக்கத்தோடு சங்கரியம்மாள் தன் மூச்சை விட்டாள்.

    மூன்று பெண்களையும்... தன் சக்திக்கு ஏற்ப படிக்க வைத்து தைரியத்தோடு வளர்த்து வருகிறார் சக்திவேல்.

    சக்திவேலுக்கு ஒரு தனியார் கம்பெனியில் சொற்பமான சம்பளத்தில் வேலை. வாடகை வீடு நடுத்தர குடும்ப வாழ்க்கை முறை.

    சந்திரா இல்லத்தரசிதான் ஆனால், சும்மா இருக்க பிடிக்காமல் தனக்கு தெரிந்த தையல்பயிற்சி மூலம் தன்னிடம் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தரும் ஜாக்கெட் துணிகளை தைத்துக் கொடுத்து தினமும்... முன்னூறு, ஐநூறு என வருமானம் ஈட்டினாள்.

    அம்மா... என்ன இது...? மூன்று இட்லி காலையிலே திங்க முடியாது...

    ஏன்டி மூணே இட்லிதானே

    ம்கூம்... ஒன்று போதும் என்று வேகமாக பிட்டு வாயில் போட்டுக் கொண்டு எழும்பவும்.

    அடியேய்... மந்திரா... என்னடி இது...? ஒரு இட்லியா? இதுக்கு நீ சாப்பிடாமலே போகலாமிலே!

    ஏய்... சந்திரா... என்னடி நீ ஒன்று சாப்பிட்டவளையும்... சாப்பிடாதேன்னு சொல்றே! இதையே சொல்லி நாளையிலிருந்து சாப்பிடாம போயிடப்போறா...?

    ஐய்யே...! அதனால... ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டா போதும்னு சொல்லச் சொல்றீங்களா?

    அவளுக்கு இளைய புள்ளைங்க தானே இந்திராவும், சுதந்திராவும்! நான் வைச்சதை சாப்பிட்டு சமத்தா... நடந்துக்கிறாங்க... ஆனா இந்த மந்திராதான்... என் சொல் பேச்சை கேட்பதேயில்லை

    ம்மா... புலம்பாதே! நான் வர்றேன். என் லஞ்ச் பாக்ஸை கொடு என்றவள்... சந்திரா கொண்டு வந்த பாக்ஸை கையில் இருந்து பறித்துக் கொண்டு வேகமாக வெளியே பாய்ந்தாள்... தன் வண்டியை எடுத்துக் கொண்டு.

    மந்திரா... பி.எஸ்.சி. முடித்து விட்டு... அருகில் இருக்கும்... ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட்., இரண்டாம் வருடம். படிக்கிறாள். ஆறு மாதத்தில் இந்த படிப்பு முடிந்ததும் அடுத்து எம்.எஸ்.சி. படிக்க திட்டமிட்டிருக்கிறாள்.

    இந்திரா... இரண்டாமவள் இவள் பி.டெக் பொறியியல் மூன்றாம் வருடம் படிக்கும் மாணவி.

    சுதந்திரர் இளையவள்... பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி.

    வீர்னெறு வண்டியில் பறந்தவளை பார்த்து பதமாய் போயேன்டி என்றாள் சந்திரா.

    ம்ம்... என்றவாறு அவள் செல்ல...

    கல்லூரி பஸ் வர இந்திரா ஓடிப்போய் அதில் ஏறிக் கொண்டாள். காலை எட்டு மணிக்கே சுதந்திரா... சென்று விடுவாள். ஏனெனில்... அவள் பிளஸ்டூ வகுப்பில் படிக்கிறாளே! சில சமயம் லஞ்சை எடுக்காமலே போய் விடுவாள். அப்போதெல்லாம்... சக்திவேல்... கொண்டு போய் கொடுத்து விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    அவளும் கடைசியாய் சென்றதும்... பம்பரமாய் சுழன்று... வீட்டை கிளீன் செய்து... பாத்திரங்களை துலக்கி, துணிகளை துவைத்து காயப்போட்டு விட்டு, தானும் கொஞ்சம் சாப்பிட்டு

    அக்காடா என்று உட்கார்ந்தாள் சந்திரா.

    அப்போது போன் வர... மேலத் தெரு மேனகா தான்... அட்டே... சாயந்திரம் வாம்மா...

    என்றவள் ‘மறந்தே போனேதே’ என்று ஒரு பையை எடுத்து மேனகாவின் இரண்டு ஜாக்கெட்டையும் அளவெடுக்க தொடங்கினாள்.

    நாளைக்கு திருமண வீட்டிற்கு போகணும் என்று கூறித்தான் கொடுத்தாள். இன்றே இரண்டு சட்டைகளையும் தைக்கும் முனைப்புடன் தன் வேலையை ஆரம்பித்தாள் சந்திரா.

    2

    ஹாய் சபிதா ரெடியா? என்றவாறு தனது இருசக்கர வாகனத்தை விட்டு இறங்காமலே தன்னுடன் படிக்கும் தோழி சபிதாவை வினவினாள் மந்திரா.

    அவள் கல்லூரிக்குச் செல்லும் வழியில்தான் சபிதாவின் வீடு உள்ளது. எனவே இருவரும் சேர்ந்தே, ஆளுக்கொரு வண்டியில் கல்லூரிக்கு போய் வந்தனர்.

    ஹாய் மந்திரா குட்மார்னிங்... போலாம்

    என்றவாறு சபிதா தனது வண்டியில் வர... இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் செல்ல...

    அப்போது ஒருஆள் இரு கண்களும் தெரியாது போலும்... கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்தார் சாலையில் கையை ஆட்டி வண்டியை நிறுத்துமாறு சைகை செய்தார்.

    உடனே, வண்டியை நிறுத்தினாள் மந்திரா.

    அருகில் வந்த சபிதா... ஏய் மந்திரா எதுக்குடி வண்டியை நிறுத்தினே... வா... வா... இந்த மாதிரி... இடையில் யாராவது. மறித்தால் நிறுத்தக்கூடாது. அப்படின்னு... வீட்டில் நம்மை எச்சரிக்கை செய்தார்களே மறந்திட்டியா? வாடி போயிடலாம்

    ஏய்... சபி... இருடி இந்த ஆளுக்கு பாவம் கண் தெரியாது போலத் தெரியுது... பாவம் நாம கொஞ்சம் லிப்ட் கொடுக்கலாமே...

    வேணாம்டி மந்திரா... பின்னாடி ஆண்கள் யாராவது வந்தா அவங்க உதவி பண்ணட்டும். நமக்கு கல்லூரிக்கு நேரமாகுது வாடி... போகலாம்

    "இருடி... பயப்படாதே! அப்படி என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1