Explore 1.5M+ audiobooks & ebooks free for days

From $11.99/month after trial. Cancel anytime.

Ennuyir Kaadhaliye!
Ennuyir Kaadhaliye!
Ennuyir Kaadhaliye!
Ebook151 pages41 minutes

Ennuyir Kaadhaliye!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராஜேஸ்வரியை ஒரு இண்டர்வியூ- வில் சந்திரன் சந்திக்கிறான். பார்த்ததும் கவர்ந்துவிட்ட அவள் அழகு அவனை காதலிக்க வைக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை வீட்டிற்கு வரும்படி செய்கிறான். இருவரும் புத்தகம் வாசிப்பதில் இருக்கும் ஆர்வத்தால் அவள் அவனிடமிருந்து புத்தகம் எடுத்துச்செல்கிறாள். மீண்டும் அவள் கேட்கும் புத்தகத்தை காதல் தூதாக மாற்ற எண்ணுகிறான். அது அவனுக்கு என்ன கொடுத்தது? அவனது காதலை ராஜேஸ்வரி ஏற்று கொண்டளா? இல்லையா? என்ன அறிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!

Languageதமிழ்
PublisherPustaka Digital Media
Release dateJan 4, 2021
ISBN6580137106147
Ennuyir Kaadhaliye!

Read more from R. Sumathi

Related to Ennuyir Kaadhaliye!

Related ebooks

Related categories

Reviews for Ennuyir Kaadhaliye!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennuyir Kaadhaliye! - R. Sumathi

    http://www.pustaka.co.in

    என்னுயிர் காதலியே!

    Ennuyir Kaadhaliye!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    முன்னுரை

    ராஜேஸ்வரியை ஒரு இண்டர்வியூ- வில் சந்திரன் சந்திக்கிறான். பார்த்ததும் கவர்ந்துவிட்ட அவள் அழகு அவனை காதலிக்க வைக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை வீட்டிற்கு வரும்படி செய்கிறான். இருவரும் புத்தகம் வாசிப்பதில் இருக்கும் ஆர்வத்தால் அவள் அவனிடமிருந்து புத்தகம் எடுத்துச்செல்கிறாள். மீண்டும் அவள் கேட்கும் புத்தகத்தை காதல் தூதாக மாற்ற எண்ணுகிறான். அது அவனுக்கு என்ன கொடுத்தது? அவனது காதலை ராஜேஸ்வரி ஏற்று கொண்டளா? இல்லையா? என்ன அறிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!

    *****

    அத்தியாயம் 1

    ஆழ்கடலில் மூழ்கி, ஆழ்ந்து- ஆராய்ந்து எடுத்த முத்துச் சிப்பியை மெல்ல திறப்பதைப் போல் பொழுது விடிந்தது.

    சூரியன் சிவப்பாய்ப் பளிச்சிட்டது.

    தூரத்தில் பறவைகள், கூட்டம் கூட்டமாக ஒலியெழுப்பிப் பறந்தன. அது விடியலின் முதல் பிரவாகம் போலிருந்தது.

    தொடர்ந்து பால்காரனின் சைக்கிள் மணியோசை காற்றோடு கலந்து வந்து காதில் மோதியது.

    கண்ணாடியைக் கழற்றி மேசை மீது விரிந்து கிடந்த புத்தகத்தின் மீது வைத்தான், சந்திரன்.

    விடியலால் மெல்ல மெல்ல உண்டான மஞ்சள் ஒளியில், அறை பளிச்சென காட்சியளித்தது.

    கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்தான். முகத்தில் இன்னும் தூக்கம் தெரிந்தது.

    சந்திரன், கவர்ச்சியான ஆண்மகன், இறுக்கமான வெள்ளை பனியனால் மார்பு, கம்பீரமாகக் காட்சியளித்தது. சுருள்முடி, புற்களாய் பரவிக் கிடந்தது.

    புத்தகம் படிப்பதற்காகவே நிறைய பொழுதுகளை ஒதுக்கிக்கொள்வான். இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் அலமாரியிலிருந்து ஏதாவது புத்தகம் எடுத்துப் படித்து விட்டுத்தான் உறங்குவான்.

    அவனுடைய அலமாரியில் ஏகப்பட்ட புத்தகங்கள், ஒன்றின் முதுகில் ஒன்று ஒய்யாரமாய்ச் சாய்ந்துகொண்டிருந்தன.

    இப்பொழுதெல்லாம் இரவு வெகுநேரம் வரை உறக்கம் வருவதில்லை. பெரும்பாலும் விடியும் முன்பே விழிப்பு வந்து விடுகிறது.

    ஆழ்ந்து படித்ததால் உறக்கம் கலைந்த பிறகும் கண்கள், வலித்தன. சோர்ந்தன.

    சூரியன் பூமிக்கு சோப்புப் போட்டு இருளழுக்கைச் சுத்தமாக்கிக்கொண்டிருந்தான்.

    வாசல் தெளிக்கும் ஓசை கேட்டது. அம்மா எழுந்துவிட்டாள். இல்லமென்னும் வீணையின் முதல் நாதமாக தண்ணீர் ஓசை எழுந்தது.

    இழுத்துக்கொண்டு சென்ற இமைகள், அந்த இசையால் திறந்தன. விருட்டென எழுந்து அம்மா இருந்த வாசலுக்கு வந்தான். பார்வையை வெளியே தந்தான். அம்மா சிரமத்துடன் குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். விழிகளை நிமிர்த்திப் பார்த்தாள்.

    உம்... காலையில் எழுந்திரிக்கவே முடியலை... குனிந்து நிமிர்ந்து பெருக்க முடியலை... இடுப்பைச் சுத்தி பெல்ட்டால இறுக்கின மாதிரி வலி. கீழே காலை வைக்க முடியலை. பாதம் பூரா வலி. என்னால முடியுமா? ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கன்னா கேட்கிறானா? என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினாள்.

    அம்மா... காலையிலேயே தொடங்கிட்டியா? உடம்புக்கு முடியலைன்னா ஒரு வேலைக்காரியை வச்சுக்கயேன். எதுக்கு கஷ்டப்படுறே? என்றான், சந்திரன். கோலம், பாதியிலே நின்றது... நிமிர்ந்தாள்.

    ஆமான்டா... வேலைக்காரி வச்சுக்கத் தெரியாமதான் உன்கிட்டே யோசனை கேட்கிறேன். என்னமோ என் தலையெழுத்து. ரெண்டையும் ஆணாப் பெத்துட்டேன். ஒரு பொண்ணைப் பெத்திருந்தா கை வேலைகளைச் செய்யும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்...

    பொண்ணுங்களை வெறுக்கிற இந்தச் சமூகத்துல பொண்ணு பொறக்கலையேன்னு ஏங்குறியே... உண்மையிலேயே உனக்குப் பெரிய மனசும்மா...

    எதுக்குடா பெண் குழந்தையை வெறுக்கணும். வளர்க்கிற விதத்துல வளர்த்து, படிக்க வைக்கிற விதத்துல படிக்க வச்சா ஆணைவிடப் பெண்தான்டா சிறப்பு. அக்கம் பக்கத்துல பார்க்கிறோமே தெரியலை... ஆம்பளைங்க வேலைக்குப் போய் சம்பாதிச்சுட்டு வர்றதோடு சரி... இந்தப் பொம்பளைங்களைப் பாரு... வேலைக்குப் போய் பணமும் கொண்டு வர்றாங்க... வீட்டையும் பார்த்துக்கிறாங்க...

    அட...டா... பொழுது விடிஞ்சதுமே யார் பெண்ணின் பெருமையைப் பற்றி இப்படியொரு அற்புதமா பேசுறதுன்னு பார்த்தா நீதானாம்மா... என்று கேட்டவாறே வந்தான், இளையவன், பார்த்திபன். சந்திரனின் தம்பி.

    அவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவன். அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கோலத்தை முடித்துவிட்டு படியேறினாள்.

    பார்த்திபா... நம்மை ஏன்டா பெத்தோம்னு அம்மா வருத்தப்படத் தொடங்கிட்டாங்கடா... சந்திரன் கிண்டலாகச் சொன்னான்.

    என்ன? என விழி விரித்து போலியாக அதிர்ச்சி காட்டிய பார்த்திபன், அம்மாவின் பக்கம் திரும்பி, தோள்களைக் குலுக்கி, இடுப்பில் கை பதித்து நின்றான்.

    நாங்கள் சிகரெட்டு பிடித்தோமா? சீட்டாடினோமா? இல்லை... கடைவீதியில் கண்ணியமாக செல்லும் பெண்ணைக் கண்ணடித்தோமா? எதற்காக வெறுக்கிறாய்? உன் சிங்கக் குட்டிகளையா வெறுக்கிறாய்? சொல்லும்மா சொல்! என்று நடிகர் விவேக் பாணியில் புதுமை வசனம் பேசி, அம்மாவின் இரு தோள்களிலும் கை பதித்து அவன் உலுக்க, குபீரெனச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே இருந்தாள்.

    வாய்விட்டுச் சிரிக்கும் அம்மாவையும், சிரிக்க வைத்த தம்பியையும் பெருமையுடன் பார்த்தான், சந்திரன்.

    அம்மா சிரிக்கிறாள். இது அதிசயம். அவள் சிரிக்காத நாட்கள் எத்தனையோ?

    ஐந்து ஆண்டுக்கு முன் அப்பா அகால மரணமடைந்தபோது அம்மாவின் சிரிப்பு திருட்டு போயிற்று. இதோ, இப்பொழுதுதான் திரும்பி வந்திருக்கிறது.

    அம்மா... எப்பொழுதும் நீ இப்படியே சிரிக்கணும்மா... பார்த்திபன், அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டான்.

    அம்மா சட்டென்று சிரிப்பை நிறுத்தினாள்.

    "உம்... நீ மட்டும் என்னைச் சிரிக்க வச்சா போதுமா? இதோ... இருக்கானே இவன் என்னை அழ வைக்கிறானே... சீக்கிரம் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1