Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandha En Nila
Nandha En Nila
Nandha En Nila
Ebook165 pages53 minutes

Nandha En Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்தனா தன்னுடைய குடும்பத்திற்காக மாடாய் உழைப்பவள். தன்னை பெண் பார்க்க வந்தவன் கோகிலன், நிச்சயம் முடிந்த பிறகு தன்னை வேண்டாம் என்றவன். பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய காதலன் ரஞ்சன் தன்னை மறுபடியும் ஏற்றுக் கொள்வானா? புதிரான பல்வேறு திருப்பங்கள் நிறைந்த இந்தக் காதல் கதையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580137109350
Nandha En Nila

Read more from R. Sumathi

Related to Nandha En Nila

Related ebooks

Reviews for Nandha En Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandha En Nila - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    நந்தா என் நிலா

    Nandha En Nila

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    ‘ஒரு நாடு மட்டுமல்ல தனிப்பட்ட மனிதனும் தாழ்ந்த நிலையிலிருந்து உச்சிக்கு உயர வேறு மார்க்கமே இல்லை. கடினமான உழைப்பைத் தவிர

    நந்தனாவை பார்க்கும் போது சுடர்கொடிக்கு அப்படித் தோன்றவில்லை.

    ‘சிலரது உழைப்பு நாட்டை முன்னேற்றவோ,

    வீட்டை முன்னேற்றவோ இல்லை.

    மிகப் பெரிய சோகத்திலிருந்தோ, இழப்பிலிருந்தோ,

    மன அழுத்தத்திலிருந்தோ தப்பிக்கத்தான்

    மாடாய் உழைப்பது பாடாய் படுத்தும்

    எண்ணங்களிலிருந்து விடுபடத்தான்.

    வெற்றிக்காக மட்டுமல்ல!

    வெற்றிடங்களை எதையாவது

    இட்டு நிரப்பவதற்காகத்தான்.

    சிகரம் தொட மட்டுமில்லை…

    மனதின் சித்ரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளத்தான்…!’

    காலையில் அவளை எழுப்பிவிடும் சுப்ரபாதமே அந்த தையல் இயந்திரத்தின் சத்தம்தான். வீணையோடு வீற்றிருக்கும் சரஸ்வதியைப் போல் அக்காவை நினைத்தால்… தையல் இயந்திரத்தோடு உட்கார்ந்திருக்கும் அவள் தோற்றம்தான் கண்ணில் வரும்.

    இதோ… கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழையும் மாலை வேலையிலும் அந்த சத்தம்தான் அவளை வரவேற்றது.

    உள்ளே நுழைந்த சுடரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு ஒரு சிறு புன்னகையை மட்டும் உதட்டில் ஓடவிட்டுவிட்டு மீண்டும் பணியில் தலைக்குனிந்தாள்.

    நந்தனா எந்நேரமும் பிஸி. பழத்துக்காக பழனி மலையில் ஏறிவிட்டு இறங்க மறுக்கும் முருகனைப் போல்தான் அவளும் இந்த தையல் இயந்திரத்தில் அமர்ந்துக் கொண்டு இறங்க மறுப்பவள்.

    உழைப்பு. உழைப்பு. அக்கா… நீ மட்டும் வெளியே கடை வைத்தால்…பெரிய லெவலுக்கு வரலாம் என்பாள் சுடர். அவள் மட்டுமில்ல எல்லோரும் அதைத்தான் சொல்லுவார்கள்.

    நந்தனா சிரித்துக் கொள்வாள்.

    அவள் நாட்டை முன்னேற்றவோ, வீட்டை முன்னேற்றவோ இப்படி இரவு பகலாக இந்த தையல் இயந்திரத்தில் உட்காரவில்லை. சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பறவை இப்படி கூடத்தில் பழைய தையல் இயந்திரத்தை துடைத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்த கதையே வேறு.

    அந்த கதை மனதில் ஓட அதை விலக்க நினைத்தவளாய்;…

    ‘நந்தனா…’ என்றாள்.

    தங்கையின் குரலுக்கு நிமிராமலேயே ம்.. என்றாள் நந்தனா.

    என் ப்ளவுஸை தச்சுட்டியா?

    இல்லை

    என்ன நீ? நாளைக்கு மறுநாள் காலேஜில ஃபேர்வெல் பாரட்டி இருக்குன்னு சொன்னேன்ல. நீ எப்ப தச்சு முடிக்கறது? நான் எப்ப அதுல குந்தன் ஒர்கெல்லாம் பண்றது?

    தத்சு தர்றேன்டி. உன் ப்ளவுஸைத்தான் தைக்கனும்னு இருந்தேன். திடீர்ன்னு அரியம்மா வந்து தைக்க துணி கொடுத்துட்டு போய்ட்டு. உடனே வேணுமாம்.

    ஆமா அது கிழிஞ்சது போனது, பழசு பட்டெல்லாம் அள்ளியாந்து கொடுத்து தைக்க சொல்லும். காசும் கொடுக்காது ஒண்ணும் கொடுக்காது. அதுக்கப் போய் ரொம்ப மெனக்கெட்டு தச்சுக் கொடுப்பே எரிச்சலைக் காட்டியவாறே தன் புத்தகங்களை அதற்குரிய இடத்தில் வைத்தாள்.

    அதுவரைக்கும் தலைநிமிராமல் தைத்துக் கொண்டிருந்த நந்தனா தலை நிமிர்ந்து தங்கையின் கோப முகத்தை பார்த்து சிரித்தாள்.

    காசாடி முக்கியம்? மனுங்கதான் முக்கியம். நான் என்ன காசு சம்பாதிக்கவா தைக்கிறேன்?

    நீ காசு சம்பாதிக்க தைக்கலைன்னா எதுக்கு பொழுது விடிஞ்சதிலேர்ந்து படுக்க போற வரைக்கும் வெறி புடிச்ச மாதிரி தைக்கிறே?

    தங்கையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை நந்தனாவால். அந்த கேள்விக்கு சுடருக்கும் விடை தெரியும். விடை தெரிந்த கேள்வியையே கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தாள்.

    மாடியிலிருந்து காயப் போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே வந்த அம்மா சுகமதி சுடர் காலேஜிலேர்ந்து வந்துட்டாளா? என்றபடியே சோபாவில் துணிகளை குவியலாகப் போட்டாள்.

    வந்துட்டா. வந்துட்டா. ரொம்ப டென்னா இருக்கா. கூலா ஏதாவது கொடு என்று குறும்பாக சிரித்தாள் நந்தனா.

    டென்னா இருக்காளா? ஏன்? பரிட்சையில ஃபெயிலா கியிலா ஆயிட்டாளா?

    பரிட்சையெல்லாம் எழுதினால்தானே ஃபெயிலாக? நமட்டு சிரி;ப்பு சிரித்தாள் நந்தனா.

    ஏன்டி அவ பரிட்சையெல்லாம் எழுதறதே இல்லையா? சட்டென முகத்தில் கவலை படிந்தது அம்மாவிற்கு.

    படிச்சாத்தானே பரிட்சை எழுத?

    ஏன்டி… அவ படிக்கறதே இல்லையா? கவலை மிரட்சியாக மாறியது அம்மா முகத்தில்.

    புத்தகம் எங்க இருக்குன்னு தெரிஞ்சத்தானே படிக்க!

    நந்தனா விடாமல் கிண்டல் செய்துக் கொண்டே போக உடைமாற்றிக் கொண்டிருந்த சுடர் அரைகுறையாக சரி செய்தபடியே சராலென வெளியே வந்தாள்.

    ஆமா. இவதான் படிச்சு பெரிய கலெக்டராயிட்டா

    ஏன்டி… அவளுக்கென்ன? எவ்வளவு படிச்சிருக்கா!

    படிச்சு என்ன? கடைசியில தையல் மெpனை கட்டிக்கிட்டுத்தானே மாராடிக்கிறா

    ஏய்… நீ சும்மாயிருக்க மாட்டே? அம்மா அதற்குமேல் அவளை பேசவிடாமல் அடக்கினாள்.

    ஒரு நல்ல கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தனா இப்படி வேலையை விட்டுவிட்டு வீட்டோடு தையல் மெpனோடு தன் உலகை சுருக்கிக் கொண்டதை எந்த வகையிலும் யாரும் நினைவுபடுத்துவதை விரும்பாத அம்மா நந்தனாவின் முகமாற்றத்தைக் கவனித்தாள்.

    நந்தனா எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து தன் பணியில் மூழ்கினாள்.

    சுடர் ஏடா கூடமாக எதையாவது பேசிவிடக் கூடாதென அம்மா பேச்சை மாற்ற விரும்பினாள்.

    ரெண்டு பேருக்கும் காபி போட்டுக் கொண்டு வரட்டா? என்றாள்.

    இப்ப வேண்டாம். அப்பா வரட்டும். எல்லாரும் ஒண்ணா சேர்ந்து காபி குடிக்கலாம் சொல்லிவிட்டு தன் செல்ஃபோனை எடுத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள் சுடர்.

    கொண்டுவந்து குவித்த துணிகளை ஒவ்வொன்றாக உதறி உதறி மடித்தவாறே அம்மா,

    ம்…உங்கப்பா இப்பவெல்லாம் எங்க நேரா நேரத்துக்கு வர்றார்? அவருக்காக நீங்க ரெண்டு பேரும் காத்துக்கிட்டிருந்தா ராத்திரி சாப்பிடற நேரம் வந்திடும். அப்பறம் நேரடியா சாப்பிட வேண்டியதுதான்

    அம்மா நானே சொல்லனும்னு நினைச்சேன். இப்பவெல்லாம் அப்பா ரொம்ப லேட்டா வர்றார். என்ன ஏதுன்னு கண்காணி. இன்னைக்கு ந்யூஸ் என்ன தெரியுமா? எழுபது வயது கிழவர் இருபது வயது பெண்ணுடன் எஸ்கேப். காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லுவாங்க. இப்பவெல்லாம் வயசும் இல்லை சூழ்நிலையை கலகலப்பாக்க முயன்றாள் சுடர்.

    ஆமா… உங்கப்பாவுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல். பாவம். அந்த மனுன் தினமும் தரகர் வீட்டுக்கு போய்ட்டு இவளுக்கு ஏதாவது வரன் வந்ததான்னு பேசிட்டு வர்றார்

    அம்மா… இப்படி தினமும் தரகர் வீடே அப்பா கதின்னு கிடந்தா ஒரு நாளைக்கு அந்த தரகர் நானே உங்க கொண்ணை கட்டிக்கிறேன்னு வந்து நிக்கப் போறார்

    சொல்லிவிட்டு கொல்லென சிரித்தாள் சுடர்.

    அம்மா அவளை எரித்து விடுவதைப் போல் முறைத்துவிட்டு பாவம் இந்த வார்த்தைகளால் நந்தனா எப்படி தாக்கப்பட்டாளோ என பரிதாபமாகப் பார்க்க நந்தனாவோ கொஞ்சம் கூட தாக்கப்படாதவளாய் தானும் சேர்ந்து சிரித்துவிட்டு சொன்னாள்.

    அம்மா அப்படி வந்து கேட்டா பெரிய பொண்ணை தரமாட்டோம். சின்ன பொண்ணை வேணா கட்டிக்கங்கன்னு சொல்லிடுங்க என்றாள்.

    நந்தனா இளையவளின் பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிந்ததும் அம்மாவும் சேர்ந்து சிரித்தாள்.

    அதானே! அப்படியே சொல்லிடலாம்.

    அதே நேரம் அப்பா சொர்ணமூர்த்தி உள்ளே வந்தார்.

    அப்பா… அப்பா இந்த அம்மாவைப் பாருங்கப்பா. என்னை…என தன்னைப் பற்றி அம்மா சொன்னதற்காக அப்பாவிடம் குற்றம் சொல்ல எழுந்த சுடரை அப்பா சொர்ணமூர்த்தியின் முகம் தடுத்தது.

    கையிலிருந்த பையை எரிச்சலாக தூக்கி அங்கிருந்த மேசையில் எறிந்தார் சொர்ணமூர்த்தி.

    அந்த செய்கையே அவர் மிகவும் கோபமாக இருக்கிறார் என்று சொன்னது.

    இப்பொழுதெல்லாம் அவர் சிரித்த முகத்துடன் வீட்டிற்கு வருவதில்லை என்றாலும் இப்படியெல்லாம் கைப்பையை தூக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1