Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unmai Oomaiyalla
Unmai Oomaiyalla
Unmai Oomaiyalla
Ebook71 pages27 minutes

Unmai Oomaiyalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஊமையாகப் பிறந்துவிட்ட காரணத்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட ஒரு அவலத்தைப் பிறருக்கு உணர்த்த முடியாமல் உணர்ச்சி கடலில் உழன்று தத்தளிக்கிறாள். அவள் ஊமையே தவிர, உண்மை உண்மையல்ல; அது, சமயம் வரும்போது தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவிடும். உண்மை ஊமையல்ல என்று தெரியவந்ததா? வாசியுங்கள்…

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580155610579
Unmai Oomaiyalla

Read more from Lakshmi

Related to Unmai Oomaiyalla

Related ebooks

Reviews for Unmai Oomaiyalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unmai Oomaiyalla - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உண்மை ஊமையல்ல

    Unmai Oomaiyalla

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    வீட்டுக் கூரைமீது விமானம் இறங்கிவிட்டது போன்ற பேரிரைச்சல். சுரேந்திரன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். சமையலறையில் காஸ் அடுப்பின்மீது வைக்கப்பட்டிருந்த பால்குக்கர் அப்படி கூச்சலிட்டு ஊரைக் கூட்டிக் கொண்டிருந்தது என்று புரிந்து கொண்டான். பூஜையறையிலிருந்து ஊதுவத்தியின் மணம் மெல்ல அவனது அறைக்குள்ளும் பரவியது.

    அம்மா பார்வதி காலை ஸ்நானத்தை முடித்துக் கொண்டு கடவுளை வழிபடத் தொடங்கி விட்டிருந்தாள்.

    பூஜை வேளையில் கரடி போல... பிள்ளையைப் பற்றிய நினைவு தலைதூக்க... அறையிலிருந்தபடியே அவள் உரத்த குரலில் உத்தரவிட்டாள்.

    ஏய்! ஊமச்சி! அந்தக் குக்கரை இறக்கிக் கீழே வை. சத்தம் தலையைப் பிளக்குது... தம்பி தூங்கிறது உனக்கு எங்கே நினைப்பு இருக்கப் போகுது சனியன்!...

    ஜன்னல் திரையை விலக்கிவிட்டு மெல்ல வெளியே பார்த்தான் சுரேந்திரன். பொழுது விடிந்து புதுவெளிச்சம் வேகமாகப் பரவிக் கொண்டு வருவதை உணர்ந்தான். அரை மணிக்கு முன்னதாகவே அலுவலகத்திற்கு வரப்போவதாக அவன் பரிமளாவிடம் சொல்லியிருந்தான். இப்படித் தன்னை மறந்து தூங்கிகிட்டிருக்கானே?

    முதல்நாள் மாலை பம்பாயிலிருந்து வந்த முதலாளியுடன் தொழிற்சாலையை ஊர்வலம் வந்து கால் ஓய்ந்து போய்விட்டிருந்தான். அத்துடன் வீட்டுக்கு கையோடு கொண்டு வந்த ஃபைல்களைப் பார்த்துப் படிப்பதற்குள் இரவு ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. களைப்பும் அசதியுமாக அடித்துப் போட்டது போலப் படுக்கையில் விழுந்தவன் நன்றாகத் தூங்கிப்போனான்.

    கண கணவென்று மணி ஓசை பூஜையறையினின்று எழுந்தது. அம்மா மணியை அசைத்தபடி ஏதோ மந்திரத்தை முணுமுணுப்பதும் கேட்டது. அது அவளது நித்தியப்படி காரியங்கள். சில நாட்கள் பூஜையை வேகமாக முடித்துக் கொண்டு வெளிவந்து விடுவாள். சில நாட்கள் மெல்ல விமரிசையாக சுவற்றில் தொங்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனையை சொல்லி, மெல்லத்தான் வெளிவருவாள். வீட்டை கவனிக்கவும், சமைத்துப் போடவும், பாத்திரங்களைக் கழுவி, துடைத்து வைக்கவும் நாள் முழுவதும் மாடாக உழைக்கவும் வாய் பேச முடியாத ஒரு வேலைக்காரி இருபத்தி நான்கு மணி நேர ஏவலுக்கும் தயாராக இருக்கும்போது அம்மாவின் காரியங்கள் இஷ்டத்திற்கு இழுபடுவது இயல்புதானே?

    கால்மீது கனமாகப் படிந்து கிடந்த போர்வையை உதைத்துத் தள்ளிவிட்டுக் கட்டிலினின்று இறங்கி அவசரமாகக் குளியலறைக்குள் புகுந்தான். பற்பசையை பிரஷ்மீது பிதுக்கிவிட்டபடி தன் முகத்தை வாஷ்பேசின் மேலிருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டபோது பரிமளா சொன்னது நினைவுக்கு வந்தது.

    உங்களோடு கடைத்தெருவில் பார்த்தேனே அவங்களா உங்க அம்மா!

    ஏன்! நாங்கள் இருவரும் அம்மாவும் மகனும்போல உன் கண்களுக்குத் தெரியலையா? சிரித்தான் அவன்.

    வயது வித்தியாசத்தை ஒப்பிடும்போது அப்படித்தான் இருந்தது. ஆனால் உங்களுக்கு உங்கம்மா ஜாடை கொஞ்சமும் இல்லை.

    என்ன அப்படி சொல்லிட்டே? சின்ன வயதில் என்னை மடிமேலே போட்டுக் கொண்டு தட்டித் தூங்க வைக்கும்போது அம்மா என்ன சொல்வாங்க தெரியுமா! என்னை உறிச்சுக் கொண்டு வந்திருக்கிற என் செல்லக்குட்டி மகனே! தூங்குடா கண்ணு... தூங்குன்னு கொஞ்சுவாங்க!

    சிறு வயதில் அம்மாவைப்போல ஒரு சாயல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போ ரொம்ப வித்தியாசமா இருக்கறீங்க.

    என்னை நீ வேணும்னு கிண்டல் பண்றே இல்லையா? போலியான கோபத்துடன் அவளை வெறித்தான்.

    உங்கம்மா இளவயதிலே அழகானவங்களா இருந்திருப்பாங்கன்னு தெரியுது. பெரிய இடத்தைச் சேர்ந்தவங்கண்ணும் புரியுது. இந்த வயதிலும் முகத்திலே என்ன களை? நடையிலே என்ன கம்பீரம்...?

    அதெல்லாம் என்கிட்ட துளியும் இல்லேன்று சொல்றே!

    "உங்க கம்பீரக் குரலும், மிடுக்கான நடையும் ஆபீசையே அலற வைக்குதே. அதைச் சொல்லலை... சட்டுனு பார்த்தா உங்கள் ரெண்டுபேர் கிட்டேயும் ஜாடையில் ஒற்றுமை இல்லை. உங்கம்மாவுக்கு சற்று நிமிர்ந்த மூக்கு. உங்களுக்கு கூரான மூக்கு, உங்கம்மா தலைமுடி சுருட்டையில்லாத வழவழப்பான நேர்முடி. உங்களுக்கு அலைபோல் சுருட்டையில் சரிந்த

    Enjoying the preview?
    Page 1 of 1