Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ivala En Magal?
Ivala En Magal?
Ivala En Magal?
Ebook185 pages1 hour

Ivala En Magal?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தட்டெழுத்து நிறுவனத்தின் ஜாப் டைப்பிங் பகுதியில் வேலை பார்க்கும் பார்வதியும், சுதர்சன் அண்ட்கோ செல்வரத்தினத்தின் மகன் ரவிக்குமாறும் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பால் பார்வதியின் வாழ்க்கையில் ஒளி வீசியதா? அல்லது இருசூழ்ந்ததா? என்பதை, ‘லட்சுமி’யின், ‘இவளா என் மகள்’ கதையில் காணலாம்…!

Languageதமிழ்
Release dateJun 5, 2023
ISBN6580155608801
Ivala En Magal?

Read more from Lakshmi

Related to Ivala En Magal?

Related ebooks

Reviews for Ivala En Magal?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ivala En Magal? - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இவளா என் மகள்?

    Ivala En Magal?

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இவளா என் மகள்?

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அம்மா, உனக்கு என்ன ஆச்சு?

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    புதையலைத் தேடி

    இவளா என் மகள்?

    1

    பார்வதி பரபரப்புடன் வெளியே செல்ல ஆயத்தமானாள். அந்த வீட்டின் மற்ற பகுதிகளில்... குடியிருப்பவர்கள் விழித்துக்கொள்ளுமுன் புழக்கடைக் கிணற்றில் இரண்டு வாளித் தண்ணீரை இறைத்துத் தலையில் கொட்டிக்கொண்டு, ஸ்நானத்தை முடித்துக்கொண்டாள். ஈரப் புடவையைப் பிழிந்து சுற்றிக்கொண்டு முன் பக்கத்திலிருந்த தன் குடியிருப்புப் பகுதிக்கு மெல்ல வந்தாள்.

    பெற்றோர்களின் மறைவுக்குப் பிறகு தனியாகிவிட்ட அவள் திருவல்லிக்கேணி நாட்டரசன் தெருவிலிருந்த ஏழாம்எண் ஓட்டுக்கூரை வீட்டின் முன்பகுதியில் ஒண்டுக் குடித்தனக்காரியாக வசித்துக் கொண்டிருந்தாள். பல யுகங்களாக அங்கே வசிப்பது போன்று அவளுள் ஒரு பிரமை.

    கொடியில் கிடந்த காய்ந்த புடவை, ரவிக்கையை அவசரமாக அணிந்துகொண்டு ஈரத்தலையை வேகமாகத் துவட்டத் தொடங்கினாள்.

    அதற்குள் கிழக்கு வெளுக்கத் தொடங்கிவிட்டது. முற்றத்தில் பரவிக்கிடந்த இருள் பிரிந்து வெளிச்சம் படரத் தொடங்கியது.

    தாழ்வாரத்துத் தூண்மீது ஒரு ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபடி வாரிக் கொண்டையிட்டுக்கொண்டாள். சின்னதாக ஒரு குங்குமப் பொட்டை வைத்துக்கொண்டு தன் தோள்பையை எடுத்துத் தயாராகக் கூடத்து மேஜைமீது வைத்தாள். கூடம், தாழ்வாரம், சிறு சமையல் அறை, படுக்கையறை, பொதுமுற்றம் என்ற அந்தப் பகுதிக்கு அவள் ஆரம்ப காலத்தில் ஐம்பது ரூபாய்கள் வாடகை தந்து குடிபுகுந்தாள். சமீபத்தில் வாடகையை மூன்று பங்காக உயர்த்திவிட்டிருந்தார் வீட்டுக்குச் சொந்தக்காரர். வாடகை போக மீதமுள்ள வட்டிப் பணத்தில் அவள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வது சிரமம். அதற்காக வேலையிலிருந்து ஓய்வடைந்த பின்னரும்... அவள் வேலை செய்ய நேரிட்டது. அருகிலிருந்ததொரு தட்டெழுத்து நிறுவனத்தின் ஜாப் டைப்பிங் பகுதியில் வேலைக்கு அமர்ந்து விட்டிருந்தாள். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை வேலை. அங்கிருந்த மற்ற தட்டெழுத்தர்களைவிட அவள் மிகவும் சுத்தமாக, தவறுகள் இன்றி டைப் அடிக்கிறாள் என்ற தகுதியில் நிறுவனத்தின் தலைவர் ஒட்டு மொத்தமாக அவளுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் வழங்கிக் கொண்டிருந்தார்.

    அவள் அப்பா பெரிய வேலையில்தான் இருந்தார். கை நிறைய சம்பாதித்தார். வசதியான பெரிய வீடு, கார் என்று செல்லமாக வாழ்ந்தவள்தான் அவள்.

    அந்த ஒரு தவற்றுக்குப் பின் அவள் வாழ்க்கையிலே சரிந்து போய் விட்டாள். சமையலறையிலிருந்த சில தட்டு முட்டு சாமான்களும், படுக்கையறைக்குள்ளிருந்த பெரிய தகரப் பெட்டியும், பழைய மர பீரோவும்தான் அவளது சொத்துக்கள். அவசரத்துக்கு விற்றுச் சாப்பிட அவள் மேல் நகைகள் ஏதும் அதிகம் கிடையாது. காதில் அணிந்திருந்த முத்துத்தோடுகளும், கழுத்தில் கிடந்த மெல்லிய தங்கச் சங்கிலியையும், வலது கையில் அணிந்திருந்த மெல்லிய இரு தங்க வளையல்களையும், கை கடிகாரத்தையும் அவள் தனது கடைசி காலத் தேவைக்கு ஒரு சமயம் உதவலாம் என்று நம்பிக்கொண்டிருந்தாள். அப்பா பெருங்காயப் பாண்டமாக வாழ்ந்து விட்டுப் போய் விட்டிருந்தார். அவரது கடைசிக் காரியங்களுக்கு வைத்திருந்த சொத்து சரியாகிவிட்டது என்று அண்ணன் கைவிரித்து விட்டார். அம்மாவின் நகைகளை அக்காவும், அண்ணியும் ரகசியமாகப் பங்கிட்டுக் கொண்டுவிட்டனர்.

    பர்சைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தாள். பஸ் போக்குவரத்துச் செலவுக்கும் வழியில் தாகத்துக்கு ஒரு குளிர்பானம் வாங்கிக் குடிக்கவும் தேவையான சில்லறை இருந்தது.

    சோறு இல்லாவிட்டால்கூட அவள் நாள் முழுவதும் பட்டினி கிடப்பாள்.

    காலையில் எழுந்ததும் ஒரு வாய் காப்பி குடிக்காவிடில் அவள் மண்டை வெடித்துச் சிதறிப் போய்விடும்.

    படுக்கப் போகுமுன் பில்டரில் இறக்கி வைத்திருந்த டிகாஷனுடன் பால் பொட்டலத்திலிருந்து சிறிது பாலை விட்டுக் கலக்கி, சர்க்கரை போட்டு காஸ் அடுப்பில் சுட வைத்து... பரபரப்புடன் முதலில் சூடாகக் காப்பியைக் குடித்து முடித்தாள். மீதமிருந்த பாலைக் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்து விட்டுப் புறப்பட்டாள்.

    அந்தப் பெரிய நிறுவனத்திலிருந்து அவள் ஓய்வடைந்ததும் அவள் அன்றாடம் உபயோகித்த குடையும் ஓய்வெடுத்துக்கொண்டு விட்டிருந்தது.

    பிய்த்துக் கொண்டுவிட்ட கம்பிகளைச் சரிப்படுத்த குடை ரிப்பேர்க்காரர் கடைக்குப் போக நேரமின்றி அவளது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. பரவாயில்லை, காலை வேளைதானே என்று அவள் கதவுகளைப் பூட்டி விட்டு செருப்புகளைக் காலில் வேகமாகத் திணித்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டாள்.

    பஸ் நிலையம் தெருவிலிருந்து கொஞ்சம் தொலைவில்தான் இருந்தது.

    முன்னர் போல அவளால் இப்போது வேகமாகவே நடக்க முடியவில்லை. சமீபகாலமாக அவளுக்கு திடீரென்று உடலில் ஒரு அயர்ச்சி. உடம்பு தக்கையாகி விட்டது போன்றதொரு உணர்வு அவசரமாக நடந்தால் மூச்சு நின்றுவிடும் போன்ற ஒரு திணறல். டாக்டர் ரேவதியிடம் தன் உடலை பரிசோதனை செய்துகொண்டு ஏதாவது ஒரு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். டாக்டர் அம்மாளுக்கு அவளது வறுமை நிலை தெரியும். பீஸ் எதுவும் கேட்காமலே அவளுக்கு இனாம் வைத்தியம் செய்வாள். ஆனால் அவள் டாக்டர் ரேவதியிடம் நாடிய உதவி வேறு ஒன்றாக இருந்தது. அவளது உடல் நிலைக்கு சிகிச்சை பெறுவதைவிட அந்த உதவிதான் முக்கியமானதாக இருந்தது.

    சங்கிலித் தொடர்போல அந்த நினைவு மனதில் எழ பாதையோரத்தில் ஒரு கணம் பிரமிப்புடன் நின்றாள். விவரிக்க இயலாத துயரம் நெஞ்சை இறுக்குவதை உணர்ந்தாள். கண்களில் பனித்த கண்ணீரை விழுங்கிக்கொண்டு மெல்ல மேலே நடந்தாள்.

    டாக்டர் ரேவதி அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலமான டாக்டர். அவளது க்ளினிக்குக்கு அம்மா அவளை ஒரு நாள் மாலை அழைத்துக்கொண்டு போனாளே? அது வாழ்விலே மறக்க முடியாத சம்பவமாயிற்றே? பார்வதிக்கு கண்ணாடி வளையல் என்றால் மிகவும் பிரியம். முதல் நாள் மாலை அவள் தன் கல்லூரித் தோழி ஒருத்தியுடன் கடற்கரைக்குக் காலார நடந்து போய்விட்டு வரும் வழியில்தான் ஒரு கடையில் கை நிறையக் கலகலவென்று கண்ணாடி வளைகளை வாங்கிப் போட்டுக்கொண்டு வந்தாள்.

    இதென்ன வேஷம்? அண்ணன் கோபித்துக் கொண்டதைக்கூட அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

    பெண் குழந்தை ஆசைப்பட்டதை அந்தந்த வயதில் அனுபவிக்கிறதில் தவறு என்ன? தங்க வளையல்களா வேணும்னு கேட்டா? வெறும் கண்ணாடி வளையல்கள் அப்பா கொடுத்த காசில் வாங்கியிருக்கா. அம்மா அவளுக்காகப் பரிந்துகொண்டு பேசியபோது அண்ணியின் முகம் சுருங்கிப் போனது.

    ‘உங்களுக்கென்ன?’ என்ற பாவத்தில் கணவனைக் கண்களால் வெட்டினாள்.

    அன்று மாலை ரேவதியின் கிளினிக்கில் அவர்கள் முறை வந்தபோது பெஞ்சியிலிருந்து எழுந்து கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார்கள்.

    டாக்டர் ரேவதியை அப்பொழுதுதான் முதல் முதலாகப் பார்த்தாள். சிவப்பாக, ஒல்லியாக, கூரிய மூக்கும், பளபளத்த கண்களும் உயரத் தூக்கிப் போட்ட கொண்டையுமாக... புடவை மேலே வெள்ளை கோட் அணிந்துகொண்டு நின்ற அவளைப் பார்த்ததுமே பார்வதியின் சப்த நாடியும் ஒடுங்கிப் போயின.

    அவள் மிகப் பிரபலமான பெண் வைத்தியர் பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் பற்றிப் படித்துப் பல பட்டங்களைத் தன் பெயருக்குப் பின்னால் வாலாக்கிக் கொண்டிருப்பவள். அவள் பார்வதியின் நோயின் ரகசியத்தைக் கண்டு பிடித்துவிட்டால்?

    வாயும் உதடுகளும் காய்ந்து போக படபடத்த மார்புடன் அறைக்குள் ஒரு பக்கம் ஒதுங்கி நின்றாள் அவள்.

    குழந்தைக்கு வளைகாப்பு ஆகிவிட்டது போலிருக்கே? பார்வதியின் கையில் அடுக்கப்பட்டிருந்த வளைகளைப் பார்த்துப் புன்முறுவலித்தாள் டாக்டர் ரேவதி.

    அம்மா முகம் சிவந்துபோனாள்.

    பார்வதிக்கு இன்னும் கல்யாணமாகவில்லையே. இவள் என் கடைசிப் பெண். மூத்தவளுக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கு. ஹைதராபாத்தில் இருக்கா, போன வருஷம் இவள் அண்ணனுக்குக் கல்யாணமாச்சு, இவளுக்குத் தான் இனி வரன் தேடணும். அதுக்குள்ளே இந்த வயதில் வியாதி வந்து தொலைஞ்சால்?

    அம்மா மடமடவென்று பேசினாள்.

    பார்க்க ஆரோக்கியமாக இருக்காள். என்ன வியாதின்னு கவலைப்படறீங்க. டாக்டர் ஸ்டெதாஸ் கோப்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு பார்வதியை ஒரு உயரமான பெஞ்சியில் ரப்பர் விரிப்பின் மேல் படுக்கச் சொன்னாள்.

    கதவைச் சாத்தி விட்டு ரேவதி அவள் அருகில் வந்து ஆடைகளை நீக்கிவிட்டுப் பரிசோதிக்கத் தொடங்கினாள்.

    திடீர்னு குழந்தைக்கு வயிற்றில் கட்டி கிளம்பி விட்டது, எனக்கு ரொம்ப பயமா இருக்குஆபரேஷன் பண்ணாம ஏதாவது செய்தா நல்லா இருக்கும் அம்மா சற்று தூரத்தில் நின்றபடி முணுமுணுத்தாள்.

    கட்டியா? யார் சொன்னது? உங்கள் மகள் கர்ப்பமாக அல்லவா இருக்காள்... என்று கூறி விட்டு டாக்டர் பார்வதியின் கையைப் பிடித்துக்கொண்டு அவளை பெஞ்சியினின்று இறக்கி விட்டாள்.

    கர்ப்பமா... என்ன குழப்பறீங்க டாக்டர்... அவளுக்கு இன்னமும் கல்யாணமாகலையே... அம்மா அலறிவிட்டாள்.

    ஆகாட்டால் கர்ப்பமாக முடியாதா?

    உண்மையாகாவா சொல்றீங்க? தப்பா சொல்லி எங்களை வேதனைப்படுத்தாதீங்க. உங்களை நான் கையெடுத்துக் கும்பிடறேன் டாக்டர்... அம்மா தழ தழத்தாள்.

    உங்களுக்கு வீண் சந்தேகம் ஏன்? எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் தெரிஞ்சுவிடும் என்று கூறிவிட்டு... மேஜை மேலிருந்த மணியை அடித்தாள். உள்ளே எட்டிப் பார்த்த நர்ஸ் பெண்ணுடன் பார்வதியை ஒரு சிறு காகிதத் துண்டுடன் க்ளினிக்கின் பக்கத்திலிருந்த அடுத்த கட்டடத்திற்கு அனுப்பி வைத்தாள்.

    சிறிது நேரத்தில் ஈரம் சொட்டியபடி பிரேமில் தொங்கிக்கொண்டிருந்த எக்ஸ்ரே படத்துடன் நர்ஸ் வேகமாக உள்ளே வந்தாள்.

    அம்மாவுக்கு டாக்டர் ரேவதி அந்த எக்ஸ்ரேயைக் காட்டினாள். நல்லாப் பாருங்க. உடம்பைச் சுருட்டித் தெரியும் இந்த எலும்பு உருவம்தான் உங்களுக்கு இன்னும் சில மாதங்களில் பிறக்கப் போகிற பேரனோ அல்லது பேத்தியோ... உங்க பெண் வயிற்றில் கட்டி இல்லை. கர்ப்பம் வளர்ந்துகிட்டிருக்கு... மெலிதாக முறுவலித்தாள்.

    டாக்டர் மேலே பேசுமுன் அம்மா ஆவேசம் வந்தவள் போல பார்வதியின் கூந்தலைப் பிடித்துக்கொண்டு தலையைச் சுவரில் பலமாக மோதினாள்.

    "பாவிப் பெண்ணே சொல்லு. யாரடி அந்த அயோக்கியன்? குடியைக் கெடுத்திட்டியே சண்டாளி. சொல்லு இல்லாட்டா இங்கேயே

    Enjoying the preview?
    Page 1 of 1